Saturday, March 31, 2012

சிவாஜி ரசிகர்களுக்கு அடுத்த விருந்து

பழைய படங்களை விரும்பி பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்த விருந்தாக வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தயாராக உள்ளது.

சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போதும் பல திரையரங்குகளில் கர்ணன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த புதிய முயற்சி இன்னும் பல பழைய காலப் படங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் என்று அப்போதே ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கு பலனாக, வீரபாண்டிய கட்டபொம்மன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளது.

கர்ணன் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கி ஸ்ரீ திவ்யா பில்ம்ஸின் ஷாந்தி சொக்கலிங்கம் இந்த தகவலை உறுதி செய்தார். சிவாஜி ரசிகர்களை கருத்தில் கொண்டுதான் கர்ணன் படத்தை வெளியிட்டோம். அது தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனால், கர்ணன் படத்தைப் பார்த்தவர்களின் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் கூட்டம் தான் என்பதும், நகரப் பகுதிகளில் கர்ணன் படத்திற்கு அமோக வரவேற்பு இருப்பதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கட்டபொம்மன் படத்தின் திரையரங்கு உரிமையை வைத்துள்ள ராஜ் டிவியிடம் இது குறித்து பேசி வருகிறோம் என்றார் ஷாந்தி சொக்கலிங்கம்.

MEK PARTY

விளக்கத்தை ஏற்று சசிகலா மீதான நடவடிக்கை ரத்து: ஜெயலலிதா அறிவிப்பு

முதல் - அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த டிசம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். போயஸ்கார்டனில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். அவருடன் கணவர் நடராஜன், உறவினர்கள் ராவணன், திவாகரன் உள்பட 14 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடராஜன், ராவணன், திவாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி சசிகலா பரபரப்பு அறிக்கை வெளியிட்டார். என் பெயரை பயன்படுத்தி எனது உறவினர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு சதித் திட்டங்களில் ஈடுபட்டனர் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன்.

இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தது. நான் ஒரு போதும் முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய வில்லை. துரோகம் செய்தவர்களுடனான தொடர்பை துண்டித்து விட்டேன். அவர்களுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. “அக்கா”வுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். இனி அவருக்கு உதவியாக இருக்கவே விரும்புகிறேன் என்று சசிகலா கூறியிருந்தார்.

இதையடுத்து சசிகலா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருமதி. வி.கே.சசிகலா எனக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதே பொருள் கொண்ட ஒரு அறிக்கையினையும் அவர் வெளியிட்டுள்ளார். திருமதி வி.கே.சசிகலா அளித்துள்ள விளக்கத்தினை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

19.12.2011 அன்று திருமதி வி.கே.சசிகலா மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அதே சமயத்தில் 19.12.2011 அன்று எம்.நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி. பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ். வெங்கடேஷன், எம்.ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி.மகாதேவன், தங்கமணி ஆகியோர் மீதும், 22.12.2011 அன்று கலியபெருமாள், எம்.பழனிவேல் ஆகியோர் மீதும், 26.1.2012 அன்று தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சந்தான லட்சுமி சுந்தரவதனம், சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் மீதும் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.

அந்த நடவடிக்கை அப்படியே தொடரும். எனவே கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Friday, March 30, 2012

Kadal to rise on Deepavali?

Ace director Mani Ratnam’s ongoing project Kadal is progressing at a great pace, as the director wants the film to be completed before the festival of lights. Post the Manappad schedule, the film’s crew is presently on the coasts of Thiruchendur and Tuticorin. We hear that the crew will move on to Munnar and parts of Kerala for their upcoming schedules.

We also hear that the director has roped in technicians from Hong Kong to create some special effects for a song sequence in the film.

The film revolves around the lives of fishermen in the coastal areas of south Tamil Nadu where there’s a lot tension due to people going missing. Gautham, son of veteran actor Karthik and Samantha feature as the leads of the film. Aravind Swamy is doing a power role. Rajiv Menon is handling the camera and AR Rahman is composing the tunes.

வீடுகளுக்கான மின்கட்டண அறிவிப்பு

தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயருகிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.மின்கட்டண உயர்வின்படி, வீடுகளின் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 100 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.10 எனவும், 101 முதல் 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டிற்கு ரூ.1.80எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 201 முதல் 250 வரை யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் ரூ.3 எனவும், 251 முதல் 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3.50 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் 4 பிரிவுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களில், 200 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3 எனவும், 201 - 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ரூ. 4 எனவும், 501 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட் 5.75 எனவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு 37 சதவீதம் வரை இருக்கும் எனவும், இந்த உயர்வு ஓராண்டு வரை அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலா படத்தில் நடிக்கிறேன் : வேதிகா

பாலாவின் பரதேசி படத்தில் இருந்து வேதிகாவை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக பூஜா நடிக்கிறார் என்று கிளம்பியது செய்தியல்லவாம்.. புரளியாம். அதனை வேதிகாவேச் சொல்கிறார்.

ஏன் இப்படி ஒரு புரளி கிளம்பியது என்று தெரியவில்லை. ஆனால் நான் பாலா சாரின் பரதேசி படத்தில் நடிக்கிறேன். பூஜாவும் நடிக்கிறார். இப்படத்தில், பாலா சார் இயக்கத்தில் நடிப்பது குறித்து மிகவும் பெருமைப் படுகிறேன் என்கிறார் தனது அழகான புன்னகையுடன்.

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவமாக படப்பிடிப்பு இருக்கிறது. தனது படக்குழுவினரிடம் பாலா சார் வேலை வாங்கும் விதமே அற்புதமாக உள்ளது. படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்கிறார் வேதிகா.

எரியும் தணல் என்று பெயரிடப்பட்டு பின்பு பரதேசி என மாற்றப்பட்ட இப்படத்தில் முரளி மகன் அதர்வா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, படப்பிடிப்புகள் அனைத்தும் தமிழகத்தின் தென் கடற்கரை பகுதிகளில் நடந்து வருகிறது.

Wednesday, March 28, 2012

இந்தியாவுக்கு எதிராக பேசியதாக வழக்கு: டைரக்டர் சீமான் விடுதலை

இலங்கை இறுதி கட்ட போர் காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் போராட்டங்கள் நடந்தன. அப்போது புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது புதுவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

புதுவை ஜெயிலில் 80 நாட்கள் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு கோர்ட்டில் ஜாமீன் கிடைத்தது. இதனால் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுவை முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி இன்று சீமானை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார். அவர் தனது தீர்ப்பில், சீமான் இந்தியா இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. இலங்கைக்கு எதிராகதான் பேசி இருக்கிறார். இது உணர்வு பூர்வமான பேச்சு. எனவே அவரை விடுதலை செய்கிறேன் என்று கூறினார்.

Friday, March 23, 2012

The progress of Paradesi

Bala has titled his new film Paradesi and we hear a lot of exciting things about the film. The film’s first schedule was completed at the director’s fav location at Theni. The visuals for the two songs were the highlight of the shoot. GV Prakash is scoring the music for the film and Na Muthukumar has penned the lyrics. Another highlight is that GV has done the composing after the visuals were ready and it has come out extremely good.

Veteran actress hospitalised

Veteran actress Achi Manorama was hospitalised at St. Isabel hospital, Chennai due to chronic breathing disability yesterday. She was immediately put in the ICU by the doctors. She was later diagnosed of having kidney stones too apart from her breathing problem. A doctor from Australia will be coming down to Chennai today to treat her.

When contacted Mr. Bhupathi, son of Achi Manorama, said, “She had severe knee pain and later at the hospital she was diagnosed with a kidney stone too. Apart from that she is fine. Doctor says she will be alright soon. She just needs a couple of days’ treatment.”

Wishing Achi Manorama a speedy recovery!

Wednesday, March 21, 2012

Mani Ratnam and AR Rahman on a song

Mani Ratnam’s Kadal is progressing well and actors are beaming about the scenic beauty of the location, Manapad, the sea village in Thoothukudi. Isai Puyal Rahman is scoring the music for the film and the musician has shared a rare picture, featuring him along with the ace director Mani Ratnam. AR Rahman has updated about the picture, “While brainstorming with Mani Ratnam in the middle of the sea, down in the south of India.” In the same manner actor Arvind Swamy who is also part of the cast has updated, “On location for Kadal…the sea looks beautiful.” Hope the magic of Roja continues in Kadal too as it marks the coming together of Mani Ratnam, AR Rahman and Arvind Swamy.

The film’s shooting started on March 5 and has Gautham, son of Karthik and actress Samantha in the lead. The film also has Lakshmi Manchu, veteran Telugu actor Mohan Babu’s daughter, who is making her Tamil debut. Arjun and Thambi Ramiah are also part of the cast.

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து சீமான் தலைமையில் உண்ணாவிரதம்

திருச்சி ஜங்சன் காதி கிராப்ட் அலுவலகம் முன்பு நாம் தமிழர் இயக்கம் சார்பில் தொடர் முழுக்க பட்டினி போராட்டம் இன்று நடைபெற்றது. இலங்கைக்கு எதிரான போர் குற்றவிசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்து நாம் தமிழர் இயக்க தலைவர் டைரக்டர் சீமான் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்ற சீமான் பேசியதாவது:-

இலங்கை ராணுவத்தால் ஈழதமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சேனல்-4 தொலைக்காட்சி ஒளி பரப்பி உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. ஜெனீவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பது போல ஏமாற்றும் அறிவிப்பை பிரதமர் வெளியிட்டு உள்ளார்.

அதில் என்ன எழுதப்பட்டு உள்ளது என்பது கூட பிரதமருக்கு தெரியாது. இவர்கள் ஓட்டெப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள். இலங்கையில் தமிழர்கள் வசித்த பகுதி முழுக்க சிங்களர் பகுதியாக மாறிவிட்டது.

முல்லை தீவு 'முல்லிதூவி' என்று மாறிவிட்டது. தமிழர்கள் அங்கு இல்லை. சிங்களர் வாழும் இலங்கை, தமிழர் வாழும் ஈழம் என்று வாக்கெடுப்பு நடத்த கோரி போராட்டம் நடத்தப் போகிறோம்.

முல்லை பெரியாறில் கேரள அரசு அணை கட்ட போவதாக கூறியுள்ளது. அந்த அணை கட்டினால் தமிழ் நாட்டில் ஒரு கேரள காரர் கூட இருக்க முடியாது.

கூடங்குளம் பிரச்சினையில் ஜெயலலிதா நம்பி வந்தவர்களை ஏமாற்றி விட்டார். திட்டமிட்டு மின் வெட்டை ஏற்படுத்தி அணு உலையை திறக்க போகிறார்கள். இதை கண்டித்து 23-ந்தேதி சென்னையில் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த போராட்டத்தில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன், மாநில தலைமை கழக பேச்சாளர் கல்யாணசுந்தரம், திலீபன், ஜெயசிங், பாலமுரளி, கோட்டை குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஏராளமான இலங்கை தமிழர்களும் இதில் பங்கேற்றனர்.

சங்கரன் கோவிலில் தேவரின பாதுகாப்பு பேரவை

சங்கரன்கோவில் தேவரின பாதுகாப்பு பேரவைத் தலைவர் திரு .ந .பசும்பொன்பாண்டியன் அவர்களின் பூர்வீகம் என்பதாலும் இடைதேர்தலில் அப்பகுதி மக்களின் எண்ணங்கள் என என்பதனை அறிய வேண்டியும் ,இந்த இடை தேர்தல் நேரத்தில் இரட்டை மலை சீனிவாசனுக்கு ம் வைகுண்டருக்கும்
அரசு விழா பொதுவிடுமுறை அறிவித்த அ.தி .மு .க .அரசினை, இந்திய சுதந்திர போரில் வீர முழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட முதல் சுதந்திர போரட்ட வீரர் நெற்கட்டான் பாளையக்காரன் பூலித்தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்படவேண்டும்,மேலும் அவருக்கு சென்னையில் பிரமாண்டமான சிலை நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை வைப்பது என்ற மதுரை செயற்குழுவின் முடிவின்படி கடந்த மூன்றாம் தேதி சங்கரன் கோவிலில் கலந்தாய்வு கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மற்றும் தேர்தல் கமிசன் அனுமதி ஆகியவற்றை முன்னரே வாங்கியும் காவல் துறை மேற்படி கூட்டம் நடத்துவதற்கு மிகுந்த தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது .


தேவரின பாதுகாப்பு பேரவையினர் தங்கிஇருந்த வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட இருமங்குளம் கோவில் மண்டபத்திற்கு கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி காலை வந்த காவல் துறை அதிகாரிகள் அமைப்பு நிர்வாகிகள் மூன்று நபர்களை கைது செய்திருக்கின்றனர் ,மேலும் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களை "மரியாதையாக மண்டபத்தை காலி செய்துவிட்டு ஓடிவிடுங்கள் இல்லாவிட்டால் நடப்பதே வேறு " என்று அப்பட்டமாக மிரட்டியுள்ளார்கள். " தொகுதிக்கு வெளியே தங்கி இருக்கும் எங்களை மிரட்டுகிறீர்கள்,சங்கரன்கோவிலில் தங்கி இருப்பவர்கள் அனைவரும் உள்ளூர் ஆட்களா? என்று தேவரின பாதுகாப்பு பேரவையினர் கேட்டவுடன் நிர்வாகிகள் மூன்று பேர் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். பின்பு மறுநாள் பெரியகொவிலான்குளம் என்ற ஊரில் தேவரின மக்களை சந்தித்தபோது அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவர்கள் கார்கள் இரண்டை பறிமுதல் செய்துள்ளனர். தேவரின பாதுகாப்பு பேரவையினர் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை என்று கூறியும் அதனை ஏற்க மறுத்திருக்கின்றனர் ,இருந்தாலும் அவர்கள் மனம்தளராமல் பல கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்திருக்கின்றனர் . அதிகாரிகள் அனைவரும் "நீங்கள் யாருக்கு ஆதரவு தரபோகிறீர்கள் என்பதனை சொல்லுங்கள் என்று கட்டயாபடுத்தியும் , கலந்தாய்வு கூட்டத்தில் எமது மக்களின் கருத்துகளை கேட்டுத்தான்,முடிவினை,அறிவிப்போம் என்று உறுதியாக கூறியுள்ளனர். இறுதியில் மூன்றாம் தேதி காலை பதினோரு மணியளவில் மாலை கூட்டத்தை ரத்து செய்தார்கள் ,ஆனால் அவர்கள் திட்டமிட்டபடி இடத்தை மாற்றி வேறு இடத்தில் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அதன்பிறகு தேவரின பாதுகாப்பு பேரவை அ.இ.அ.தி.மு.க விற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. அ .தி .மு .க அரசினை வலியுறுத்தி இந்திய சுதந்திர போரில் வீர முழக்கமிட்டு வாளேந்தி போரிட்ட முதல் சுதந்திர போரட்ட வீரர் நெற்கட்டான் பாளையக்காரன் பூலித்தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்படவேண்டும் , அவருக்கு சென்னையில் பிரமாண்டமான சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து களப்பணியும் செய்துள்ளது. இந்த ஆதரவு நிலைக்கு, கோரிக்கைக்கு அ .தி .மு .க அரசு எப்போது பதிலளிக்கப் போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-

Tuesday, March 20, 2012

Bala goes with Paradesi

Post Avan Ivan, director Bala has started off his next film with veteran actor Murali’s son Atharva and Vedika in the lead. The film is an adaptation of a Malayalam novel by the name Eriyum Thanal, and it was earlier reported that the film might go with the same name. However, now the film has been officially titled “Paradesi”.

The first schedule of the film has been successfully completed. The second schedule is expected to be shot in the deep forest of Ooty and surroundings. It has to be recalled that Atharva has lost about 10kg as a preparation for the character.

The film also features Pooja and Uma Riaz Khan. G V Prakash has scored the music for the film. Chezhian is handling the camera and Kishore T E is the editor.

HC dismisses petition by Pasumpon Thevar’s kin

The Madras High Court Bench here today dismissed a writ petition filed by only surviving legal heir of freedom fighter U Muthuramalinga Thevar seeking to hand over management of a college named after him at Kamuthi in Ramanathapuram district to a private trust formed by her.

Justice K Chandru dismissing the petitioner Indurani's plea, said there was not even a casual connection between her and the institution. Being a legal heir would not give the right to manage an institution. The college was now managed by a Special Officer of the government after its original management had failed to administer it properly.

The breakdown of the earlier Management also would not give the right over the Insititution to the Petitioner. The government was empowered to take temporary charge of the college or even nationalise it, the judge said.

The petitioner said Pasumpon Thiru U Muthuramalinga Thevar Memorial College was started by a registered trust in June 1969.

After the death of its founder Valliyoor Pandian, the trust became defunct. Then the government took over the management by appointing a Special Officer. Now it contemplated a permanent take over.

The Petitioner said Claiming that the college building and the surrounding land were inherited by her from the properties left behind by Muthuramalinga Thevar. She made a representation to the government to hand over the management to Pasumpon Thiru U Muthuramalinga Thever Educational Trust, a private trust floated by her by appointing herself as the Chairperson-cum-Managing Trustee. The government did not reply to her plea.

Then the Government on Oct27,2010 rejected her plea on the ground that the college was started on the basis of land and cash gifted by the general public.

Monday, March 19, 2012

Vikram Prabhu, Karthika & Piaa come together?

Kollywood grapevine is abuzz that ace Prabhu's son Vikram Prabhu and the 'Ko' girls, Karthika and Piaa Bajpai will coming together for a flick! The movie is touted to be produced by Ilayathalapathy Vijay's home banner Ghilli Films.

The movie is a remake of Captain Vijaykanth's 'Sattam Oru Iruttarai', a 1981 super hit. Incidentally, the original was directed by Vijay's father, SA Chandrasekhar. This remake will be helmed by Ramesh. Meena has been approached to don a pivotal role in the film.

'Kumki' will mark the foray of Vikram Prabhu in Tamil cinema as an actor and the film by Prabhu Solomon will see a summer release. Meanwhile Karthika who received much critical acclaim for her performance in 'Ko' is busy with her Telugu project 'Dammu' with Junior NTR and Trisha and 'Annakodiyum Kodiveeranum'. Piaa Bajpai on the other hand is working on a promising Malayalam flick, 'Masters'.

An official announcement from Vijay's Ghilli Films listing the other cast and crew is expected shortly.

இலங்கை போர்குற்றம்: நடராஜன் கருத்து

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையில் தமிழ்நாடு தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் அதற்கு மத்திய அரசு ஆதரவளித்திருக்க வேண்டும் என்று (சசிகலா)நடராஜன் கூறியுள்ளார். திருச்சி ரியல் எஸ்டேட் வரதராஜன் தொடுத்த பணமோசடி குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடராஜனின் சிறைக்காவல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதற்காக, நடராஜன் இன்று திருச்சி ஜே எம் 4 நீதிபதி புஷ்பராணி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, நடராஜனின் சிறைக்காவலை ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். தீர்ப்பிற்கு பிறகு கோர்ட்டிற்கு வெளியே பத்திரிகையாளர்களை சந்தித்த நடராஜன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

எஸ்.எஸ்.ஆரின் பெருமூச்சு!

‘எத்தன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.- நடையில தடுமாற்றம் இருந்தாலும் நாக்குல அதே கம்பீரம். ‘இப்பல்லாம் ஒரு ஷாட் முடிஞ்சதும் கேரவனுக்குள்ளே போய் படுத்துக்குறாங்க ஹீரோக்கள். எங்க காலத்துல சிவாஜி, எம்.ஜி.ஆரெல்லாம் கூட அடுத்தவங்க நடிக்கிறப்போ அவங்க எப்படி நடிக்கிறாங்கன்னு ஆர்வமா கவனிப்போம். ஹ்ம்ம்... அதெல்லாம் அந்த காலம்’ என்று சொல்லி பெருமூச்சுவிட்டார்.

வரிப்புலி வைகோவுக்கு அழைப்பு: ‘‘கலைஞர் அழைத்தால் சொரிப்புலிகூட வராது!’’ சீமான் பாய்ச்சல்

அ.தி.மு.க. அணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேற்றத்துக்குப் பிறகு தமிழுணர்-வாளர்கள் மத்தியில் சலசலப்பும் பரபரப்பும் பற்றிக் கொண்டுள்ளது. ஏற்கனவே கருணாநிதியை மட்டும் எதிர்த்து வந்தவர்கள் இப்போது ஜெயலலிதாவையும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் களத்தையே ம.தி.மு.க. புறக்-கணித்து-விட்ட நிலையில்... ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தலைவர் சீமானின் வியூகத்தில், வேகத்தில் ஏதும் மாற்றம் இருக்குமா என்பதுதான் தமிழுணர்-வாளர்களின் கேள்வி. இந்நிலையில் சீமானை சந்தித்தோம்.

வைகோவை முதன்முதலில் சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்குமாறு நீங்கள்தான் நேரில் சென்று அழைத்தீர்கள். இன்று ம.தி.மு.க.வின் முடிவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மிகுந்த மன வருத்தத்தையும், மனக் காயத்தையும் தருகிற முடிவாக இருக்கிறது. அண்ணன் வைகோ போன்ற நேர்மையாளர், தூய்மையாளருக்கு இந்த அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிற நிலையைப் பார்த்தால், ஒருவகையில் அச்சமாகக் கூட இருக்கிறது. ஐந்து வருடம் கூட்டணியில் இருந்தவரை ஜெயலலிதா வஞ்சித்துவிட்டார்.

வைகோ மீது நடுநிலையாளர்-களும், பொதுப் பிள்ளைகளும் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் இப்போது அவரை எதிர்ப்பவர்-களுக்குக்கூட தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும், அண்ணன் எடுத்த இந்த முடிவு தற்காலிகமானதுதான். அவருடைய ஆற்றலையும் வீச்சையும் நாங்கள் அறிவோம். அவர் இந்தத் தேர்தலை மட்டும்தான் புறக்கணித்திருக்கிறார். மீண்டும் மெருகேறி வருவார்.

ம.தி.மு.க.வின் முடிவால் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் தேர்தல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இருக்குமா?

மாற்று அரசியலுக்கான லட்சியப் பயணத்தோடு செல்லும் இயக்கம் நாம் தமிழர் இயக்கம். அண்ணன் வைகோ களத்தில் இருந்திருந்தால் அவரோடு சேர்ந்து போராடியிருப்போம். அவர் இல்லாததால் வருத்தமே தவிர, அதையே நினைத்து கவலைப்பட்டு களத்திலிருந்து பின்வாங்க முடியாது.

என் தமிழினத்தை அழித்த காங்கிரஸை கருவறுக்கும் பணியிலிருந்து எக்காலத்திலும் என்னால் மாற முடியாது. தமிழகத்து உறவுகளும், உலகத்து உறவுகளும், தமிழ்நாட்டில் காங்கி-ரஸை அழிக்கவேண்டியதன் அவசியத்தை எனக்கு தினம்தினம் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் காங்கிரஸை தோற்-கடிக்கவில்லையென்றால் தமிழ்நாட்டில் தமிழனே இல்லையென்றுதான் அர்த்தம். அதனால் காங்கிரஸை எதிர்க்கும் வலுவான அணியை ஆதரிக்கும் முடிவில் மாற்றம் இல்லை. அந்த ஆதரவு இரட்டை இலைக்கா, வேறு யாருக்குமா என்பதி-லெல்லாம் என் கவனம் இல்லை.

காங்கிரஸை தோற்கடிக்க சிறப்பு வியூகங்கள் வகுத்திருக்கிறீர்களாமே?

களத்தில் புகும் முன் வியூகங்கள் வகுக்காமல் இருக்க முடியுமா? எங்களது ஆன்றோர் பேரவையை கூட்டி, அதில் சில சிறப்பு வியூகங்கள் பற்றி விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம். காங்கிரஸ் வேட்பாளர்களை குறிப்பாக, சோனியாவின் மகன் ராகுலின் சிறப்பு அக்கறையின் பேரில் நிறுத்தப்படும் இளைஞர் காங்கிரஸ் வேட்பாளர்களை ஒட்டுமொத்தமாக தோற்கடிக்க உறுதி பூண்டுள்ளோம்.

‘போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர்’ என்று அடிக்கடி சொல்வார் அண்ணன் பிரபாகரன். அந்த வகையில் இது வெறும் தேர்தல் அல்ல. பிரபாகரனின் தம்பிகளுக்கும், சோனியாவின் மகனுக்கும் நடக்கும் ரத்தம் சிந்தாத யுத்தம். தமிழனை கருவறுத்த அந்தக் கட்சியை கருவறுக்க என் தம்பிகள் உறுதிபூண்டுள்ளனர். களத்திலும், கருத்திலும் வலிமையாக செயல்பட்டு கொலைகார காங்கிரஸை ஓட ஓட விரட்டியடிப்போம்.

எதிரணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தை-களும், பா.ம.க.வினரும் உங்கள் நண்பர்கள்-தானே?

அவர்களெல்லாம் என் உடன் பிறந்தோர். இன்று காங்கிரஸை ஆதரிக்கும் அணியில் இருக்கிறார்கள். அவர்களை என்ன செய்யவேண்டும் என்பது என் தம்பிகளுக்குத் தெரியும்.

தமிழின உணர்வாளர்களை ஒன்றி-ணைக்க நீங்கள் திட்டம் தீட்டுவதாக செய்திகள் வருகிறதே...

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய சக்திகளின் பக்கம் தமிழ் உணர்வாளர்கள் பிரிந்து கிடப்பதும், ஐந்து இடங்கள், பத்து இடங்களுக்காக அவர்கள் பின் நிற்கும் இழிநிலையும் 2011 தேர்தலோடு முடிந்துவிடும். இந்த இரு கழகங்களுக்கும் மாற்றாக தமிழ் உணர்வாளர்களை ஒருங்கிணைத்து, கட்டமைத்து பெரும் மாற்று சக்தியாக உருவாக்கும் முயற்சிகளை இந்தத் தேர்தலுக்குப் பிறகு தொடங்க இருக்கிறேன். 2016 தேர்தலில் தமிழர் சக்தி தனிபெரும் சக்தியாக உருவாக்கம் பெற்று, தமிழர் விரோத சக்திகளை வீட்டுக்கு அனுப்பும் நிலைமை உருவாகும். அதற்கான பணியை அயராது ஆற்றுவோம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் பற்றி...

தமிழன் இத்தனை காலமாக கிரைண்டர், மிக்ஸி வாங்க வக்கில்லாதவ-னாகவா இருக்கிறான்? அப்படி இருக்-கிறான் என்றால் அவனை அப்படிப்பட்ட வக்கற்ற நிலைக்கு தள்ளியது இந்த ஆட்சிதானே? தமிழனின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வழியேதும் செய்யாமல் இலவசம், இலவசம் என்று கூறி அவனை திண்ணைச் சோம்பேறியாக்கி தாங்கள் கொழுப்பதற்கான தந்திரம் இது. இலவசம் என்று சொல்லியே ஒரு லட்சம் கோடிக்கு மேலான கடனை தமிழன் தலையில் சுமத்தியிருக்கிறார் கருணாநிதி. எனவே, இதைத் திட்டம் என்று சொல்லக் கூடாது. தமிழனுக்கு நட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வரிப்புலியே வருக என்று வைகோவை கலைஞர் அழைத்திருக்கிறாரே?

எதற்கு? அந்த வரிப்புலியை அழைத்து மீண்டும் புழலிலோ, வேலூரிலோ போடவா? கருணாநிதி அழைத்தால் ஒரு சொரிப்புலி கூட வராது.

Sunday, March 18, 2012

SJ Surya: I'm introducing a promising newbie in 'Isai'

It is no longer news that SJ Surya will be coming up with 'Isai' that he is directing and also composing tunes for. He has now opened up that he will be paired opposite a newbie, a talent from the north in this entertainer.

It was widely reported earlier that Lakshmi Rai who wowed audience in 'Mankatha' will be paired opposite SJ Surya in this film but sources close to the actor squash them as mere rumours.

Speaking , SJ Surya says, "I will make a formal announcement about Isai on April first week. We have zeroed in on a new girl whom we finalized upon after doing a screen test of over 120 girls in Bombay! We stayed there for two and a half months, I'm sure she'll go a long way".

It is said that the screen test wasn't just about looks but the actor did an extensive screen test to check on the candidates' performance as well. It's known to all that all his films have ample importance to heroines as much as the heroes.

Surya also took six months of training in music for composing tunes of 'Isai'. He has delivered several hits in the past as a director, namely, 'Vaali', 'Khusi', 'New' and 'Anbe Aaruyire'.

SACHIN TENDULKAR



Friday, March 16, 2012

Karthi is Kushboo's 'Paiyaa'

"If there is one actor whom I feel I had missed to share the screen space with, it is Karthi Sivakumar. I would fondly call him 'Paiyaa'. With his gestures and body language, he reminds me Karthik (yesteryear hero)," says Kushboo.

Heaping laurels on the young actor, the actress said in an interview to a Tamil magazine, "I started liking Karthi right from his first film 'Paruthi Veeran'. After watching 'Siruthai', I called him up and said, 'Paiyaa, I have become a big fan of yours'."

Stating that she was also an ardent fan of Aravind Samy, Kushboo said, "I chased Aravind Samy for almost two years to get an autograph of his. He would refuse to pay heed to my request, assuming I was making fun of him."

On Rajinikanth and Kamal Haasan, the two top stars of Tamil cinema, Kushboo said, "Rajini sir is like Mount Everest. He is standing tall in all aspects. While Kamal sir, is my good friend. Even his children are so close to my kids."

Wednesday, March 14, 2012

பாலாஜி சக்திவேலின் 'வழக்கு எண் 18/9' ஏப்ரலில் ரிலீஸ்!

Vazhakku Enn 18/9
Ads by Google
Samsung Galaxy Note
1.4 GHz Dual Core Processor 8 MP Camera, Wi-Fi, GPS and More!
www.samsung.com/in/galaxynote
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வழக்கு எண் 18/9 அடுத்த மாதம் வெளியாகிறது.

சாமுராய், காதல், கல்லூரி என ரசிகர்களால் மறக்க முடியாத படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல்.

கல்லூரி படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் புதிய படம் வருகிறது.

இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களே நடித்துள்ளனர். ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மிதுன் முரளி, மனீஷா யாதவ், முத்துராமன் என பலரும் புதிய முகங்களே.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியாவும் யுடிவியும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீடு இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

விழாவில் பேசிய இயக்குநர் பாலாஜி சக்திவேல், "இந்தப் படத்தின் கதையை பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கி விட்டாலும், முதல் காட்சி எது என்பதை தீர்மானிக்க முடியாமல் இருந்தேன். ஆனால் அதைப் பற்றி யோசிக்காமல், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து படத்தை எடுக்க அனுமதித்தார் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு நன்றி," என்றார்.

"நான் எடுக்கவிரும்பிய படம் இதுதான்," என்றார் பின்னர் பேசிய லிங்குசாமி.

TAMILNADU NEW TRAINS

கோவை-பிகானீர் ஏசி எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

சென்னை-பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்(தினசரி)

திருச்சி-திருநெல்வேலி(தினசரி)

தாதர்(டி)-திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

விசாகப்பட்டினம்-சென்னை எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

கச்சேகுடா-மதுரை எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

ஷாலிமார்-சென்னை எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

சென்னை-புரி எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

அசன்சோல்-சென்னை எக்ஸ்பிரஸ்(வாராந்திர ரயில்)

மன்னார்குடி-திருப்பதி எக்ஸ்பிரஸ்(3 வாரத்துக்கு ஒருமுறை)

விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில்(தினசரி)

விழுப்பரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்(தினசரி)

ரயில் கட்டண உயர்வு விவரம்

ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் சாதாரண 2-ம் வகுப்புக் கட்டணம் கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2-ம் வகுப்புக் கட்டணம் கிலோமீட்டருக்கு 3 பைசாவும், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கிலோமீட்டருக்கு 5 பைசாவும், ஏசி சேர் கார், ஏசி 3 டயர் மற்றும் முதல் வகுப்பு கட்டணம் கிலோமீட்டருக்கு 10 பைசாவும், ஏசி 2 டயரில் கிலோமீட்டருக்கு 15 பைசாவும் ஏசி பெட்டிக்கு கிலோமீட்டருக்கு 30 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளன.

பிளாட்பார்ம் டிக்கெட் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tuesday, March 13, 2012

READ BEFORE U DRIVE

குடிசை நகரங்களில் சென்னைக்கு 4ம் இடம் : யுனிசெப் அறிக்கையில் தகவல்

தமிழக நகரங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் கிராமப்புற குழந்தைகளை விட மோசமான நிலையில் உள்ளதாக, ஐ.நா.,வின் அங்கமான, "யூனிசெப்'பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிசெப் சார்பில், உலக குழந்தைகளின் நிலை குறித்த அறிக்கை, சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள்:
* ஆறு வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, நகரங்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவே, கிராமப்புறங்களில், 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
* தமிழகத்தில், 48 சதவீத குழந்தைகள் நகரங்களில் வாழ்கின்றனர்.
* இந்தியாவில், 50 ஆயிரம் பகுதிகளில் குடிசைகள் நிறைந்துள்ளன. இதில், மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு, 35 சதவீதமும், ஆந்திராவில் 11 சதவீதம், மேற்குவங்கத்தில் 10 சதவீதம், தமிழகம் மற்றும் குஜராத்தில் 7 சதவீதம் குடிசைப் பகுதிகள் உள்ளன.
* இந்தியாவில், குடிசைகள் எண்ணிக்கையில், சென்னை நான்காம் இடம் வகிக்கிறது. 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி, சென்னையில் நான்கில் ஒரு பங்கினர், குடிசைப் பகுதிகளில் வாழ்கின்றனர். சென்னையில், 12 லட்சம் மக்கள் குடிசையில் வாழ்கின்றனர்.
* கிராமப்புறத்தில் வாழும் குழந்தைகளை விட, நகர குழந்தைகளின் நிலை வறுமை காரணமாக மோசமாக உள்ளது. பள்ளிகள், மருத்துவமனை, நீர் நிலைகள் ஆகியவற்றுக்கு அருகில், குடிசைப் பகுதி குழந்தைகள் வாழ்ந்தாலும், வறுமை மற்றும் பாகுபாடான தன்மையால், அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.
* கிராமத்து தாய்களை விட, நகரத்து பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பின்தங்கியுள்ளனர். இவர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை அதிகம் விரும்புவதில்லை.
* தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், குழந்தைகளின் இறப்பு விகிதம், 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க., செயலாளர் கடத்தலில் அதிரடி : திண்டுக்கல் லாட்ஜில் "என்கவுன்டர்' :ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய செயலாளர் கதிரவன் (தி.மு.க.,) கடத்தல் வழக்கில் தொடர்புடைய கேரள நபர், திண்டுக்கல்லில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டார்.மதுரை நடராஜ் நகரில் வசிப்பவர் கதிரவன். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் தி.மு.க., செயலாளரான இவரை, பிப்.,12ல் விரகனூர் அருகே, "சி.பி.ஐ., அதிகாரிகள்' என்றுக்கூறி, சிலர் அவரை கடத்தி, ரூ.2 கோடி கேட்டனர். அவர்களிடமிருந்து தப்பிய கதிரவன், பிப்.,15ல், மதுரை எஸ்.பி., ஆஸ்ராகர்க்கிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, ரித்தீஷ் எம்.பி.,யிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைமையிலான கும்பல், கதிரவனை கடத்தியதாகவும், திண்டுக்கல்லில் பதுங்கியிருப்பதாகவும், மதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று இரவு 7.15 மணிக்கு, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே சுகன்யா லாட்ஜில், இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், சேதுமணி மாதவன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர்.கேரள முகவரியில், இரு அறைகளில் தங்கியிருந்த ஐந்து நபர்கள் குறித்து விசாரித்தனர். இதில் ஒருவன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனை தாக்கி விட்டு தப்ப முயன்றான். அந்த நபரை போலீசார் சுட்டனர். இடது தோள்பட்டையில் குண்டு பாய்ந்து அவன் பலியானான். மற்றொருவன் தப்பி ஓடினான். அறையில் பதுங்கியிருந்த ரவுடி வரிச்சியூர் செல்வம், கேரளாவை சேர்ந்த பிஜூ உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

Monday, March 12, 2012

KUSHBOO ON KARTHIK

இன்ஸ்பெக்டர் புகழ்மாறனாக' சீமான்!

அரசியல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தாலும், சினிமாவை மறக்கவில்லை சீமான். அவரது நடிப்பில் அடுத்து ஒரு படம் வரவிருக்கிறது. பெயர் கண்டுபிடி கண்டுபிடி.

மாயாண்டி குடும்பத்தார் படத்தைத் தந்த மூவி பஜார் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ்மாறன் என்ற வேடத்தில் நடித்துள்ளார் சீமான்.

அவருடன் தருண் சத்ரியா, முரளி, ஐஸ்வர்யா தேவன், ஜெகன்ஜி என பலர் நடித்துள்ளனர். அகத்தியன், பாலசேகரன், பிரபு சாலமன் போன்றோரிடம் உதவி இயக்குநராக இருந்த ராம சுப்பராமன் இயக்கியுள்ளார்.

கண்டுபிடி கண்டுபிடி படம் பற்றி அவர் கூறுகையில், "இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படம். ஒரு திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு கதைமுடிகின்றது. ஒரு திருமணம் இப்படிதான் நடக்க வேண்டும். அதே சமயம் இப்படி ஒரு பிரச்னை நடந்துவிடக் கூடாது என்று படம்பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் படம் இது.

கேரளாவிலிருந்து ஐஸ்வர்யா தேவன் என்பவரை நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ்மாறன் என்ற கேரக்டரில் சீமான் நடித்துள்ளார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். அவரது நடிப்புத் திறனை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைக்கும்," என்றார்.

J.V ARTICLE



மார்ச் 16ல் கர்ணன் மறுவெளியீடு

சிவாஜி கணேசன் நடித்த மிகப்பிரம்மாண்டமான படம் கர்ணன், டிஜிட்டல் திரைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டு மார்ச் 16ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு மார்ச் 14ம் தேதியே துவங்குகிறது.

சென்னையில் சத்யம் சினிமாஸ், சாந்தி காம்ப்ளெக்ஸ், அபிராமி காம்ப்ளெக்ஸ், ஏவிஎம் ராஜேஸ்வரி, பாரதி போன்ற மிக முக்கிய திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட உள்ளது.

இதிகாசக் கதையான கர்ணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம், அந்த காலத்திலேயே மிக அதிகமான பொருட்செலவிலும், பிரம்மாண்டமான செட்களும் போடப்பட்டு எடுக்கப்பட்ட படமாகும்.

இப்படத்தில் சிவாஜியுடன் என்.டி. ராமாராவ், சாவித்ரி, முத்துராமன் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். குந்தி தேவிக்கும், சூரியனுக்கும் பிறக்கும் பிள்ளையான கர்ணன் பிறக்கும் போதே காதில் குண்டலங்களும், உடலில் கவசமும் தரித்து பிறக்கிறான். இவனது வாழ்க்கை முழுவதும் சந்திக்கும் போராட்டங்களும், சூட்சுமங்களும், பெறும் வெற்றிகளும் மிக அழகாக காட்சிகளாக்கப்பட்ட விதம், நமக்கு கர்ணன் என்றாலே சிவாஜியின் முகமும், கிருஷ்ணர் என்றாலே என்.டி.ஆரும் நினைவுக்கு வரும் அளவிற்கு நெஞ்சில் நின்றுவிட்டனர்.

நெஞ்சில் நின்று நினைவான விஷயங்களை மீண்டும் கண் முன் கொண்டு வரும் பணி முடிந்து திரைக்கு வர உள்ளது.

இதுபோன்ற முயற்சிகளுக்கு தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு அளித்து படத்தை வெற்றி பெற வைத்தால், இதுபோன்ற பல வரலாற்றுச் சிறப்பு மிக்க படங்களை மீண்டும் திரையில் காணலாம். நாமும் குடும்பத்தோடு சென்று திரையரங்கில் காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

திரைப்படத்தை அனைவரும் திரையரங்கிற்குச் சென்று பார்த்து நம் குழந்தைகளுக்கும் இந்த இதிகாசங்களை அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.

பிரபாகரனின் இளைய மகன் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சி: இங்கிலாந்து டி.வி.யில் 14-ந் தேதி ஒளிபரப்பாகிறது


இலங்கையில் இறுதிக் கட்ட இனப்போரின் போது சரண் அடைந்தவர்களையும், கைதானவர்களையும் இலங்கை ராணுவம் திட்டமிட்டு சுட்டுக் கொலை செய்யும் வீடியோ காட்சியை இங்கிலாந்து செய்தி நிறுவனம் நாளை மறுநாள் வெளியிட உள்ளது. இது சர்வதேச அளவில் இலங்கைக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் பல ஆண்டுகளாக நடந்து வந்த இனப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்ட சண்டையின் போது நிறைய போர்க் குற்றங்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

போர் விதிகளை மீறி சரண் அடைந்தவர்களையும், கைது செய்யப்பட்டவர்களையும், சிறுவர்களையும் போர் நீதிக்குப் புறம்பாக அவர்களின் கைகளையும், கண்களையும் கட்டி சுட்டுக் கொன்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு ஆதாரமாக இங்கிலாந்தை சேர்ந்த 'சேனல் 4' செய்தி நிறுவனம் சரணடைந்த விடுதலைப் புலிகளை சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியை இலங்கை அரசு மறுத்தது.

பொய்யான, நவீன முறையில் தயாரிக்கப்பட்ட போலியான வீடியோ காட்சி அது என்று இலங்கை அரசு கூறியது. சேனல் 4 செய்தி நிறுவனம் தவிர, இறுதிக்கட்ட போரின்போது போர்ப்பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உதவச்சென்ற சர்வதேச குழுக்களும் போர்க்குற்றம் நடந்ததை ஒப்புக் கொண்டன.

எனினும் இந்தியா போன்ற அண்டை நாடுகளின் நெருக்கடி இல்லாததால் அதிபர் ராஜபக்சே சர்வதேச அமைப்பின் விசாரணையில் இருந்து தப்பி வந்தார். இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரிலும், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 19-வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் கடந்த 7-ந்தேதி 'நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்த பரிந்துரைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டும்' என்று வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

போர்க்குற்றங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் தீர்மானத்தின் ஒரு அம்சம் ஆகும். வரும் 23-ந்தேதி இந்த தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடக்கிறது. இந்த தீர்மானம் வெற்றி பெற்றால், சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த தீர்மானத்துக்கு எதிராக நாடுகளை தனது அணியில் திரட்டும் வேலையில் இலங்கை அரசு முழு வீச்சில் இறங்கி உள்ளது.

அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் குரல் கொடுத்துள்ளன. ஆனால் தீர்மானம் குறித்த இந்தியாவின் நிலை பற்றி இதுவரை தெளிவுபடுத்தப் படவில்லை.

இலங்கை நடத்திய போர்க் குற்றங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய 'சேனல் 4' செய்தி நிறுவனம் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் மற்றொரு வீடியோ தொகுப்பை நாளை மறுநாள் (14-ந்தேதி) வெளியிட உள்ளது.

இதுபற்றி லண்டனில் இருந்து வெளிவரும் 'தி இன்டிபென்டென்ட்' பத்திரிகையில் ஆவணப்படத்தை தயாரிக்கும் கேல்லம் மெக்ரே என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் நீதிக்குப் புறம்பான வகையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 12 வயதே நிறைந்த அந்த சிறுவன் இடுப்பில் சுடப்பட்டுள்ளது. அவரது மார்பில் 5 துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்ட துவாரங்கள் காணப்படுகின்றன.

பாலச்சந்திரனோடு மேலும் 5 ஆண்களின் சடலங்கள் கிடக்கின்றன. அவர்கள் அவரது மெய்க்காவலர்களாக இருக்கலாம். அவர்கள் அனைவரும் உடைகள் கழற்றப்பட்டு, பின்புறத்தில் கைகள் கட்டப்பட்டு, கண்களும் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய ஆடைகள் அருகிலேயே தரையில் கிடந்தன. சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னணி தலைவர்களும், சிறுவர்களும் இலங்கை அரசுப் படைகளால் முறைப்படியான கொள்கையின் அடிப்படையின் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாகிறது.

அந்த வீடியோவில் மே 18-ந்தேதி என்று குறிப்பிடப் பட்டுள்ளது. 12 வயதான பாலச்சந்திரன் மரணம் தொடர்பான புதிய ஆதாரங்கள் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தங்களை அதிகரிக்க செய்யும். பாலச்சந்திரன் மற்றும் அவரது மெய்க்காவலர்களின் சடலங்கள் கிடக்கும் மிகத் தெளிவான உயர்துல்லியம் கொண்ட ஒளிப்படங்களை 'சேனல்-4' பெற்றுள்ளது.

இவை பிரபல தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெர்ரிக் பவுண்டர் மூலம் ஆராயப்பட்டது. அவரது மெய்க்காப்பாளர்கள் பார்க்கும்படியாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. சிறுவனின் நெஞ்சில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்கு குறைவான தூரத்திலேயே சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது.

இறுதிக்கட்ட போரில் பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கானதற்கு அதிபர் ராஜபக்சே, பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்சே, ராணுவ தளபதி சரத்பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம்.

இந்த வீடியோ ஆதாரங்கள் வரும் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது. இலங்கையின் கொலைக் களங்கள்- தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

கடந்த ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட இலங்கையின போர்க் குற்றங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

அந்த வீடியோ காட்சி இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை மெய்ப்பிக்கும் மற்றொரு ஆதாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதுபற்றி உலக தமிழர் கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறுகையில், 'சேனல்-4' வெளியிட உள்ள புதிய வீடியோ காட்சிகள், மனிதாபிமானமற்ற முறையில் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களை நிரூபிக்கும் கூடுதல் ஆதாரமாக அமையும்.

குறிப்பாக அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் பங்கு இதன்மூலம் தெளிவாகும். எனவே அமெரிக்கா கொண்டு வந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா மற்றும் உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

Sunday, March 11, 2012

லட்சுமிராயை தேர்வு செய்த எஸ்.ஜே.சூர்யா!

டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோயினாக லட்சுமிராயை தேர்வு செய்து ‌இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா படம் என்றாலே இஞைர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். வாலி, குஷி, நியூ என்று தொடர் ஹிட் படங்களாக கொடுத்து வந்த எஸ்.ஜே.சூர்யா திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாக வலம் வந்தார். சமீபத்தில் ஷங்கரின் நண்பன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். இப்போது மீண்டும் டைரக்ஷ்ன் பொறுப்பு ஏற்று இருக்கிறார்.

விரைவில் இசை என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை இயக்கி நடிப்பதுடன் படத்தின் இசையமைப்பு பொறுப்பையும் முதன்முறையாக ஏற்று இருக்கிறார். இந்நிலையில் படத்திற்கு ஏற்ற கதாநாயகியை தேடிவந்தார் எஸ்.ஜே.சூர்யா. இதற்காக பல்வேறு மாநிலங்களில் சுற்றி திரிந்த அவருக்கு கடைசியாக பளிச்சிட்ட முகம் லட்சுமிராய் தான். உடனே அவரையே ஹீரோயின் ஆக்கிவிட்டார்.

சமீபத்தில் தமிழில், லட்சுமிராய் நடித்த காஞ்சனா மற்றும் மங்காத்தா படங்கள் இரண்டும் சூப்பர் ஹிட்டாகின. ஆனாலும் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இப்போது எஸ்.ஜே.சூர்யா பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொதுவாக எஸ்.ஜே.சூர்யா பட ஹீரோயின்கள் அனைவரும் முன்னணி ஹீரோயின்களாக (சிம்ரன், ஜோதிகா) வலம் வந்தவர்கள். அந்த அதிர்ஷ்டம் லட்சுமிராய்க்கும் தொடருமா...? பொறுத்திருந்து பார்ப்போம்!!

Saturday, March 10, 2012

ரெயிலில் பயணம் செய்ய 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி- இன்று நடைமுறைக்கு வருகிறது

ரெயிலில் முன்பதிவு செய்யும் வசதி 90 நாட்களில் இருந்து 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. ரெயில்களில் பயணம் செய்ய 90 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி இருந்து வந்தது. ரெயில் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இதனால் காத்திருப்போர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. பயணம் செய்யும் தேதியை முன்னதாக திட்டமிட்டு அதற்கேற்றவாறு முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் செல்ல முடிகிறது.

முன்பதிவு செய்யும் காலத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று பயணிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததையடுத்து அதை பரிசீலித்து 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை இன்று (10-ந்தேதி) முதல் ரெயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் மேலும் 30 நாட்களுக்கு முன்னதாக பயணத்தை வகுத்து கொண்டு முன்பதிவு செய்து பயணம் செய்ய முடியும்.

முன்பதிவு காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ரெயில்வே துறையின் வருவாய் அதிகரிப்பது மட்டுமின்றி பொது மக்களும் அதிகம் பயன் அடைவார்கள். 120 நாட்களாக நீட்டிப்பு செய்ததன் மூலம் ஜூன் மாதம் 8-ந்தேதி புறப்படும் ரெயில்களுக்கு இன்று முன்பதிவு செய்யலாம். இன்று மொத்தமாக முன் பதிவு செய்ய அனுமதி இல்லை. நாளை முதல் மொத்தமாக டிக்கெட் முன் பதிவு செய்யலாம்.

காமெடி படங்களே ஜெயிக்கும் - நடிகர் விவேக்

புதுமுகங்களை வைத்து டி.எஸ். திவாகர் இயக்கும் கஞ்சா கூட்டம் படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. காமெடி நடிகர் விவேக் இதில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழ் பேசும் தமிழச்சிகள் கஞ்சா கூட்டம் படத்தில் நாயகிகளாக நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கு. கதாநாயகர்களும் நம்ம மண்ணுக்காரங்கதான். அவர்களை எல்லோரும் உற்சாகப்படுத்தனும். சின்னதா ஆரம்பிச்ச படங்கள் பெரிய லெவலுக்கு போய் வசூலை கொட்டி இருக்கு. நிறைய செலவு செய்து எடுத்த படங்கள் கீழே விழுந்திருக்கு.

எனவே புதுமுகங்கள் நடிச்ச படம்னு எதையும் ஒதுக்க முடியாது. திறமை எங்கிருந்தாலும் வரவேற்பது தமிழன் பண்பு. எந்த மொழி, எந்த இனம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் பாராட்டுவான். முன்பெல்லாம் ஒரு படத்தை 4 தியேட்டரில் திரையிட்டு 100 நாட்கள் ஓட்டுவார்கள். இப்ப ஒரு படத்தை 100 தியேட்டரில் திரையிட்டு 4 நாட்கள் ஓட்டுறாங்க.

சினிமா ரேஸ்மாதிரி அது சுத்திக்கிட்டே இருக்கனும் 50-வது நாள் வெள்ளி விழா 100-வது நாள் விழா என்றெல்லாம் போஸ்டர் ஒட்டி கொண்டாடனும் அப்ப தான் சினிமா செழிப்பா இருக்கும். இன்றைக்கு பெரிய ஹீரோக்கள் படங்கள் ஹிட்டாகும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சிறு பட்ஜெட் படங்கள் வெற்றி பெறாது என்றும் சொல்ல முடியாது.

நல்ல கதையும், காமெடியும் இருந்தால் படம் ஜெயிச் சிடும். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி அதுபோல் இன்னொரு மறைமுக சூப்பர் ஸ்டாரும் இருக்கார். அதுதான் திருவாளர். நகைச்சுவை, காமெடி படத்தில் இருந்தால் கண்டிப்பாக ஹிட்டாகும். சினிமாவில் கஷ்டப்பட்டா நிச்சயம் ஜெயிக்கலாம். ஏ.வி.எம். ஸ்டூடியோ வாசலில் சுற்றிக் கொண்டிருக்கிற உருண்டையை பார்த்து நாம் இந்த ஸ்டூடியோவுக்குள் நுழைய முடியுமா என்று ஏங்கியவர் பாலச்சந்தர் அவர்தான் தாதா சாகேப் பால்கே அவார்டை பெற்றார். எனவே எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தளராமல் தொடர்ந்து போராடினால் சினிமாவில் ஜெயிக்கலாம். இ

வ்வாறு அவர் பேசினார்.

தேவர் சிலை அவமதிப்பு - கடப்பாரையால் தாக்கப்பட்டுள்ளது-பதற்றம்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகாமையில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் ஐம்பது ஆண்டு பழமை வாய்ந்த தேவர் சிலை கடப்பாரையால் தாக்கப்பட்டு சேதமாகி உள்ளது.


இதை கண்டித்தும் விசமிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் தேவர் பேரவை இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக நமது செய்தியாளர் அளித்த செய்தி " ஒரே கல்லிலான பழமையான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை சில விசமிகளால் கடப்பாரை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. கால்பகுதியில் இடிக்கப்பட்டுள்ளதால் சிலையை சீரமைப்பது சாத்தியம் இல்லாமல் இருக்கின்றது . தேவர் பேரவை இளைஞர் அணியினரும் பொதுமக்களும் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு அதே இடத்தில் உடனே சிலை வைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கோசங்கள் எழுப்பப் படுகின்றது" இது தொடர்பாக தேவர் பேரவை இளைஞர் அணியின் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளரை தொடர்பு கொண்டபோது " தேவர் சமூக மக்களுக்கு பலதரப்பட்ட சாதகமான உதவிகளை செய்துவரும் அ தி மு க அரசுக்கு கேடு விளைவிக்கும் விசமிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் , அரசு உடனே தலையிட்டு சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Thursday, March 8, 2012

Consider Forward Bloc plea for public meet: HC

The Madurai bench of the Madras high court on Wednesday directed the general secretary of the Tamil Nadu Forward Bloc to make an application before the police inspector, Sankarankoil, to hold a public meeting campaigning for its policies. After making such an application, the inspector should consider it and pass order in accordance with law.

Justice K K Sasidharan gave the order following a petition by R Jayachandra Thevar, general secretary of the Tamil Nadu Forward Block alleging that the authority had denied permission to his party to hold a public meeting to campaign for its policies. In the petition, his party decided to convene a public meeting at Sankarankoil to canvass for the forthcoming by elections scheduled for March 18.

Initially, when he approached the deputy superintendent of police, Sankarankoil, for permission to conduct the public meeting on January 8, 2012, he granted permission orally. Believing the officer, he arranged for everything such as stage, mike set, flags, banners and wall notices. He also communicated the message to the public. Thevar said while the public was anxious to watch his party's role, all of a sudden the DSP issued an order prohibiting the public meeting. Hence he filed the petition in court.

The petitioner contended that the party had the fundamental right to express his party stand to the public, through a public meeting. It was also planned to ask the public to exercise the option of 49-O in case no suitable political candidate was found.

Wednesday, March 7, 2012

ஹோலி பண்டிகை: பங்குச்சந்தைகளுக்கு நாளை விடுமுறை

ஹோலி பண்டிகையை முன்னிட்டு பங்குச்சந்தைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தையில் நாளை வர்த்தகம் நடைபெறாது.

மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸின் தோல்வி எதிரொலிக்கும்: சீமான்

காங்கிரஸ் கட்சியின் தோல்வி மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என்று கூறி, பெரும் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உதவிடும் மக்கள் விரோத கொள்கைகளை நடை முறைப்படுத்தி வந்த காங்கிரஸ் கட்சியை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முற்றிலுமாக நிராகரித்து விட்டதையே 5 மாநிலங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குக் காரணமாகும்.

2014-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிற்கான முன்னோட்டம் என்று கருதப்பட்ட இத் தேர்தலில், உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியைச் சந்தித்துள்ளது.

2014-ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ நடைபெறப் போகும் மக்களவைத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் மாநில மக்களின் உணர்வுகளை புறக்கணித்து ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி ஏற்படும் என்பது உறுதி.

மாநில மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கும் எந்தக் கட்சியானாலும் இப்படிப்பட்ட முடிவையே எதிர்காலத்திலும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதும் நிச்சயம் என சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய விருது அறிவிப்பு

59-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகையாக வித்யாபாலன் தேர்வு செய்யப்பட்டார். “தி டர்டி பிச்சர்ஸ்” என்ற இந்தி படத்தில் நடித்ததற்காக இந்த தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிரிஷ்குல் கர்னிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது வாகை சூடவா என்ற படத்துக்கு கிடைத்துள்ளது.

இந்த படத்தை சற்குணம் இயக்கி உள்ளார். சிறந்த பொழுது போக்கு படத்துக்கான தேசிய விருது அழகர்சாமியின் குதிரை என்ற தமிழ் படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது இப்படத்தில் நடித்த அப்புகுட்டிக்கு கிடைத்துள்ளது. சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருது ஆரண்ய காண்டம் என்ற தமிழ் படத்தொகுப்பாளர் பிரவீணுக்கு கிடைத்துள்ளது.


Best Feature Film: 'Devur' (Marathi) & 'Byari' (Kannada)

Best Director: Gurvinder Singh, 'Anhe Ghorey Da Daan'

Best Actor: Girish Kulkarni, 'Deool'

Best Actress: Vidya Balan, 'The Dirty Picture'

Best Supporting Actor: Appu Kutty, 'Azhagar Samiyin Kuthirai' (Tamil)

Best Supporting Actress: Leishangthem Tonthoingambi Devi, 'Phijigee Mani' (Manipuri)

Best Editing: Praveen KL, 'Aranyaa Kandam'

Best Child Artist: Partho Gupte, 'Stanley Ka Dabba' and 'Chillar Party' cast

Best Film on Social Issues: 'Inshallah' (Ashvin Kumar) and 'Mindscape' (Arun Chadha)

Best Non Feature Film: 'And We Play On'

Best Debut Film of a Director: 'The Silent Poet' (Manipuri)

Best Children's Film: 'Chillar Party'

Best Music Direction: Neel Dutt, 'Ranjana Ami Ar Ashbona'

Best Background Score: 'Laptop', Mayookh Bhaumik

Best Singer (Female): Rupa Ganguly

Best Singer (Male): Anand Bhate

Best Lyrics: 'I Am', Amitabh Bhattacharya

Best Screenplay (Adapted): 'Shala', Avinash Deshpande

Best Screenplay (Original): 'Chillar Party', Vikas Behl & Nitish Tiwari

Best Dialogue: Girish Kulkarni, 'Deool'

Best Make Up Artist: Vijram Gaekwad, 'The Dirty Picture' and 'Bal Gandharva'

Best Special Effects: 'Ra.One'

Best Costume Design: Niharika Khan, 'The Dirty Picture' and Neeta Lulla, 'Bal Gandharva'

Best Choreography: Bosco-Caeser for "Senorita..." from 'Zindagi Na Milegi Dobara'

Best Hindi Film: 'I Am'

Best Marathi Film: 'Shaala'

Best Kannada Film: 'Kurmavatara'

Best Bengali Film: 'Ranjana Ami Aar Ashbona'

Best Malayalam Film: 'Indian Rupee'

Best Tamil Film: 'Vaagai Sooda Vaa'

Best Dogri Film: 'Dille Ch Vasya Koi'

Best Manipuri film: 'Phijigee Mani'

Best Punjabi Film: 'Anne Gode Da Daan'

Special Mention: Director Shari for 'Adi Madhyantam' (Malayalam Film) and Mallika for 'Byari' (Kannada Film)

Best film critic: Manoj P Pujari

Best Book Award: Anirudha Bhattacharjee and Balaji Vittal for 'R.D. Burman The Man, The Music'

Indira Gandhi award for debut film director: Thiagarajan Kumararaja for 'Aaranya Kaandam'

Special Jury Award: Anjan Dutta for 'Ranjana Ami Aar Ashbo Na'

எல்.இ.டி. பல்பு மூலம் 10 மடங்கு மின்சாரம் மிச்சம்

வீடுகளில் குண்டு பல்புகளுக்குப் பதில் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் 10 மடங்கு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய தொழில் வர்த்தக சபை (அசோசம்) நடத்திய ஆய்வில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இதன் மூலம் வாடிக்கையாளருக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 16 பைசா மிச்சமாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது, வீடுகளில் 60 வாட் கொண்ட குண்டு பல்பை 16 மணி நேரம் எரித்தால், 1 யூனிட் மின்சாரம் செலவாகும். இதே இடத்தில் 6 வாட்களைக் கொண்ட எல்.இ.டி. பல்பை பயன்படுத்தினாலே, குண்டு பல்புகளுக்கு இணையான வெளிச்சத்தைத் தரும். அதேநேரம், 6 வாட் எல்.இ.டி பல்பை 166 மணி நேரம் பயன்படுத்தினால்தான் 1 யூனிட் மின்சாரம் செலவாகும்.

இதன்படி, எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதன் மூலம் 10 மடங்கு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.

இதுபோல் சி.எஃப்.எல். பல்புகளும் 20 சதவீத மின் சக்தியை பயன்படுத்தி, குண்டு பல்புகளுக்கு இணையான வெளிச்சத்தைக் கொடுக்கும்.

இதை நாடு முழுவதும் உள்ள மக்கள் பின்பற்றுவதன் மூலம், ஆண்டுக்கு 35 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டுக்கு ரூ. 4.7 லட்சம்

கோடி மிச்சமாகும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விலையைப் பொருத்தவரை குண்டு பல்புகளைக் காட்டிலும் சி.எஃப்.எல். பல்புகள் 10 மடங்கும், எல்.இ.டி. பல்புகள் 16 மடங்கும் அதிகமுடையவை. 60 வாட் கொண்ட குண்டு பல்பின் விலை ரூ. 15. ஆனால், 6 வாட் கொண்ட எல்.இ.டி. பல்பு ரூ. 250 வரை விற்பனை செய்யப்படும். இதனால், ஏழை மக்களால் இதை வாங்குவது கடினம்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியது: எல்.இ.டி. பல்புகளும், சி.எஃப்.எல். பல்புகளும் மின்சாரத்தை பன்மடங்கு மிச்சப்படுத்தும் என்றபோதும், வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அவற்றை பயன்படுத்த முடியாது. படிக்கும் அறைகளில் இவற்றை பயன்படுத்த முடியாது.

மேலும், சி.எஃப்.எல். பல்புகளில் பயன்படுத்தப்படும் பாதரசம் பெரும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தக்கூடியது. பயனற்று போகும் சி.எஃப்.எல். பல்புகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. பல வெளி நாடுகளில் இந்தப் பல்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் வீட்டில் படிக்கும் அறைகளைத் தவிர பிற பகுதிகளில் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தலாம். ஆனால் அதன் விலை, குண்டு பல்புகள் மற்றும் டியூப் லைட்டுகளைப் விட பல மடங்கு அதிகம். எனவே, எல்.இ.டி. பல்புகளை மானிய விலையில் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் : அ.தி .மு.க விற்கு ஆதரவு -பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி அறிவிப்பு

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் சிறப்பு செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் திரு முருகன்ஜி "வரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலை சங்கரன் கோவில் தொகுதி மக்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சங்கரன் கோவில் பகுதியில் அ.தி .மு.க விற்கு நல்லதொரு வெற்றிச் சிறப்பை தர மக்கள் காத்திருக்கின்றனர். தேவரினத்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைப்பார் என்ற நம்பிக்கையில் எங்களது முழு ஆதரவும் அ.தி .மு.க விற்கே!" என்றார்.

Mani Ratnam’s Kadal

Veteran actor Karthik’s son Gautham is playing the lead role in Mani Ratnam’s Kadal. Interestingly he plays plays the son of a fisherman from Rameswaram.

Apparently, to essay the role, the director had instructed Gautham to shed a few kilos and get a toned physique.Gautham is fair and tall and has got smiling eyes, which are exactly similar to that of his dad’s. He is complete hero material, says a source.

However, Mani and his team are taking care that none of Gautham’s pictures are out until they make an official announcement! Meanwhile, Mani has started shooting at a coastal village near Tuticorin.

Tuesday, March 6, 2012

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் : அ.தி.மு.க விற்கு அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை ஆதரவு.

எதிர்வரும் 18-3-2012 அன்று நடைபெறவுள்ள சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.குருவிக்குளம் சங்கரன்கோவில் ஒன்றியம் மேலிடநல்லூர் தேவர் சமூக மக்கள் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க விற்கு ஆதரவாக உள்ளார்கள் என்று எமது சங்கரன் கோவில் தேர்தல் சிறப்பு செய்தியாளர் கூறியுள்ளார்.


மேலிட நல்லூர் , பெரிய கோவிலாங்குளம் சின்ன கோவிலாங்குளம், குருக்கள் பட்டி , அய்யாபுரம் , கருப்பனத்தூர் , முத்தையாபுரம் , தேவர் குளம் , பனவடலி சத்திரம், கொக்ககுலம் , ஆராயச்சிபட்டி உள்ளிட்ட நாற்பத்து ஒன்பது கிராமங்களில் ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க விற்கு ஆதரவாக உள்ளார்கள் என்பது அ.தி.மு.க வினரை குசிப்படுத்தி உள்ளது.


சங்கரன் கோவில் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தேவர் சமூக கிராமங்களிலும் அகில இந்திய தேவர் இளைஞர் பேரவை நிர்வாகிகள் மாநிலத்தலைவர் கணேச தேவர் ,நெல்லை மாவட்ட செயலாளர் எஸ் கே ராமசாமித்தேவர் , மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் , ராமநாதபுரம் மாவட்ட தலைவர் , எஸ். எம் .எ .சரவணன் , மாவட்ட செயலாளர் முரசொலி ,புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுந்தர், ராமநாதபுரம் மாவட்ட துணைத் தலைவர் காந்தி , மாநில துணைத்தலைவர் பிரவின்குமார் , மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாண்டிய ராஜன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் அ.தி.மு.க விற்கு ஆதரவாக மேற்கொண்டு வருகிறார்கள்.

அ.தி.மு.க விற்கு தேவரின பாதுகாப்பு பேரவை ஆதரவு

சங்கரன் கோவில் இடைத்தேர்தல் : அ.தி.மு.க விற்கு தேவரின பாதுகாப்பு பேரவை ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேவரின பாதுகாப்பு பேரவை தலைவர் திரு நா.பசும்பொன் பாண்டியன் அவர்கள் கூறியது.

" எதிர்வரும் 18-3-2012 அன்று நடைபெறவுள்ள சங்கரன்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. சங்கரன் கோவில் தொகுதியில் ஒட்டுமொத்த மக்களும் அ.தி.மு.க விற்கு ஆதரவான நிலையை கொண்டுள்ளனர். தற்போதைய சூழலில் அ.தி.மு.க விற்கு எங்களது முழு ஆதரவையும் வழங்க வேண்டுமென்று எங்களது கலந்தாய்வு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Mani Ratnam's Kadal takes off

ce filmmaker Mani Ratnam's Kadal took off without much hype yesterday. He had started the shooting of the upcoming Tamil film in Manapad, a fishery coast between Tuticorin and Tiruchendur.

Kadal, as the title suggests, is set at the backdrop of a sea. Keeping the fishermen issue as the subject, Mani Ratnam has penned a romantic tale set in the coastal region. He has roped in veteran actor Karthik's son Gautham and hot and happening Samantha to play the leads. Arjun Sarja, Arvind Swamy and Lakshmi Manchu are also doing some important roles in the forthcoming Tamil movie.

Talking about the shoots, actress Lakshmi Manchu said, “Cuts, bruises, sprains, scratches and sun burn... Yep, I am shooting for a Mani Ratnam film :) life is delicious.”

Mani Ratnam's trusted men AR Rahman and Rajeev Menon are handling the music and cinematography department respectively in Kadal.

Trichy Ambedkar statue 'slippered'

TRICHY: Tension was palpable in the city on Monday morning after a statue of Dr Ambedkar near the central bus stand was found garlanded with slippers. In wake of the issue, members of a few political parties attempted to stage a road blockade. However, the police arrested and released them later.

The statue is situated in the Aristo roundabout and is a busy area as it connects the roads from Madurai and Dindigul. Police said they received information early on Monday morning about the incident. A photojournalist first informed the Cantonment police with photographs of the statue garlanded with two slippers. The police team led by assistant commissioner of police CK Gandhi rushed to the spot and removed the slippers from the statue. Meanwhile, the news spread across the city and members of Viduthalai Chiruthaikal Katchi (VCK), Puthiya Tamizhagam (PT) and Tamilaga Makkal Munnetra Kazhagam (TMMK) thronged the area. The police were put on high alert to avoid any untoward incident.

Meanwhile, about 50 persons belonged to VCK, PT and TMMK argued with the police to immediately arrest the culprits and tried to stage a road-blockade near the roundabout. The police acted swiftly and arrested about 30 persons. However, they were released in the evening. A group of lawyers also staged a demonstration in front of the district court.

Following the arrest, about 100 policemen were deployed near the statue. As a precautionary measure, police also secured a statue of Pasumpon Muthuramalinga Thevar statue near the central bus stand.

Police have registered a case under section 153 (a) of IPC and an investigation is on to nab the culprits. Footage from a surveillance camera near the roundabout is also being examined. Police said this was the second time such an incident had occurred in the past 15 years to the same statue of Ambedkar.

Monday, March 5, 2012

JUNIOR VIKATAN ARTICLE - NAVAMANI AYYA , KATHIRAVAN SIR





கார்த்திக் மகனுக்கு பயிற்சி அளிக்கும் அர்ஜுன்

பொதுவாக ஒரு நடிகரின் படத்தில் மற்றொரு நடிகர் குணச்சித்திர வேடத்தில் நடிப்பதற்கே அதிகமாக அலட்டிக் கொள்ளும் இந்த காலத்தில், நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதமிற்கு உடற் பயிற்சி அளித்து வருகிறார் அர்ஜுன்.
மணி ரத்னம் இயக்கும் கடல் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் கௌதம். இவருக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கான அனைத்து பயிற்சிகளையும் அளித்து, தனக்கு அடுத்தபடியாக, கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் கூடிய அடுத்த ஹீரோவை உருவாக்கித் தந்துள்ளார் நடிகர் அர்ஜுன். அர்ஜுனும் கடல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனக்குக் கீழ் பயிற்சி எடுத்துக் கொள்ளும்படி நான் கௌதமை அறிவுறுத்தினேன். அதற்கான பலன் கிடைத்துவிட்டது. தற்போது நல்ல எடை போட்டு, கட்டுக்கோப்பான உடலமைப்புடன் படங்களில் நடிக்க தயாராகிவிட்டார் என்கிறார் அர்ஜுன் பெருமையுடன்.

இலங்கை தமிழர் பிரச்னை; சிறையில் உண்ணாவிரதம் : நடராஜன்

திருச்சி : இலங்கை தமிழர்கள் படும் பிரச்னைகளை கண்டித்து சிறையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார். பணமோசடி தொடர்பாக, இன்று திருச்சி சிறையில் நடராஜன் ஆஜர்படுத்தப்பட்டார். பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடராஜன் கூறியதாவது, குண்டாசில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தாலும் அதனை சந்திக்கத் தயார் என்றும், இலங்கை தமிழர் பிரச்னைக்காக, சிறையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Arjun's get-ups in 'Kadal'

Arjun is all thrilled. For he is appearing in three different get-ups in Mani Ratnam's forthcoming film 'Kadal'. "Mani sir has finalised two looks and is currently working on the third one," says the 'Action King'.

"Though I received an opportunity to work with him only after completing 150 films, I should say he has given me a satisfying role. And no, I am not supposed to say anything beyond this," says Arjun.

The actor, who is quick to add that there were no such restrictions from Mani Ratnam not to speak to anyone about his character in 'Kadal', adds: "But it will be no right on my part to reveal about the film. Mani sir should talk about it."

Mani shooting for 'Kadal'

True to the title, Mani Ratnam has been shooting in coastal areas for his much expected movie 'Kadal', which has Gautham (son of yesteryear hero Karthik) and Samantha in lead roles. We have specific details about it.

At present, Mani and his team have camped in Manapad, a coastal village in southern Tamil Nadu, 60 kilometers from Tuticorin and 18 kilometers south of Tiruchendur.

"Mani Ratnam has been shooting in the seaside and other breathtaking locations of Manapad. The local residents have been providing great help to the director. The team members are having a whale of time," informed sources say.

Arjun, Lakshmi Manchu and Aravind Samy are playing crucial roles in 'Kadal', which has music by A R Rahman. Recently, a couple of songs were recorded by the Oscar-Grammy winner, which had lyrics from one of the books penned by Vairamuthu.

சீமான் நடிக்கும் மாறுபட்ட கதைக்களத்தைக்கொண்ட புலனாய்வு படம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ புலனாய்வுப் படங்கள் வந்திருந்தாலும் ஒரு யதார்த்தமான அதே நேரம் புலனாய்வு அதிகாரிகளின் புலனாய்வுத் தந்திரங்கள், அதற்காக அவர்கள் மெனக்கெடுதல்கள் என புதிதாகச் சொல்லும் படமாக KPKP இருக்கும்.

சீமான், முரளி, ஐஸ்வர்யா தேவன் நடிக்கும் படம் கண்டுபிடி கண்டுபிடி.முரளி- ஐஸ்வர்யா தேவன் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை அடுத்த ஏற்படும் திகில் நிறைந்த புதிர்கள் அதனை சிபிசிஐடி யாக வரும் சீமான் புலனாய்வு செய்வது தான் படத்தின் விறு விறுப்பான திரைக்கதை.

Bala's 'Eriyum Thanal': First schedule wrapped

Known for taking at least two years to make a movie, Bala seems to be on a fast track as far as his forthcoming film, which is tentatively titled 'Eriyum Thanal', is concerned. For, the director has already completed its first schedule of shooting.

With Atharva and Vedhika playing the lead roles, the film is reportedly about the lives of fishermen in the southern districts of Tamil Nadu. Script is by popular writer Jeyamohan, who earlier worked with Bala in 'Naan Kadavul'.

Though the National Award winning director has been closely safeguarding the details about the film, we learn that Atharva has shed 10 kilos for his character in 'Eriyum Thanal'! Also, Vedhika is appearing in a tanned look.

Also, buzz is that Pooja, who was part of Bala's 'Naan Kadavul' earlier, is doing a crucial role in this film. Music is by GV Prakash Kumar, who is all excited about working for the first time with Bala.

உலகின் மிகப்பெரிய இந்துக்கோவில் பீகார் மாநிலத்தில் கட்டப்பட உள்ளது

உலகின் மிகப்பெரிய இந்துக்கோவிலை பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் கட்டப்போவதாக மகாவீர் மந்திர் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

மேலும், இந்த கோவில் 100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது என்றும் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 5 மாடிகளை கொண்ட இக்கோவிலின் உயரம் சுமார் 222 அடி உயரம் இருக்கும் எனவும் அது அறிவித்துள்ளது.

கோவில் கட்டுவதற்கு தேவையான நிலம் 30 கோடி ரூபாய் செலவில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது, கம்போடியா நாட்டில் உள்ள அங்கர்வாட் கோவில் உலகின் மிகப்பெரிய இந்துக்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு

சென்னையில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரத்தை போலீசாருக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெயிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது


சென்னை பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வாடகை தாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருந்து வருவதாகவும், அவர்களால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இங்கு தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளும் புகலிடம் தேடி குடியேற வாய்ப்பிருப்பதும் தகவல்களில் தெரியவந்துள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருப்போர் குறித்த விவரம் அல்லது வேறு நபருக்கு தங்குவதற்காக அனுமதி வழங்கியிருந்தால் அது தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு வாடகைதாரர் புகைப்படத்துடன் கூடிய உரிய படிவம் வாயிலாக வீட்டு உரிமையாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் போலீசாரின் தண்டணைக்குள்ளாவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, March 4, 2012

AINMK

மொழி, இனம் காக்க குரல் கொடுங்கள் இயக்குனர் பாரதிராஜா அழைப்பு!

""இலங்கையில் இரண்டு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ,நாம் வாய் மூடிய ஊமையாக இருந்து விட்டோம். இனியாவது நாம் ,தமிழ் மொழி, இனம் காக்க நாம் குரம் கொடுக்க வேண்டும், என, இயக்குனர் பாரதிராஜா கூறினார்.விருதுநகர் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில் நடந்த 50 வது ஆண்டு விழா, நிறுவனர் விழாவில் அவர் பேசியதாவது: இன்டர்நெட், கணினியில் வளர்ச்சியடைந்திருந்தாலும், கல்லூரி வாசல் முதல் ஆடிட்டோரியம் வரை கோலங்கள் வரையப்பட்டிருப்பதை பார்க்கும் போது ,எம் தமிழ் பெண்கள் கலாசாரத்தை மறக்க வில்லை என்பதை காணமுடிகிறது .

எல்லோருக்கும் எல்லா சக்தியையும் ஆண்டவன் கொடுத்துள்ளான். அதை வேண்டிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும். பிள்ளையை பெற்றெடுக்கும் பெண்ணாக மட்டுமில்லாமல், நீ செல்ல வேண்டிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்க்கையும், வகுப்பறையும் படியுங்கள் வெற்றி பெறலாம். ஒன்று கிடைக்கவில்லையா மற்றொன்றை தேடு, நிச்சயம் கிடைக்கும். மண் ,மொழி, கலாசாரம், இனம், தாய், தந்தை, குருவை மனதில் வைத்தாலே ,நீ உலகம் முழுக்க சுற்றி வரலாம். இலங்கையில் இரண்டு லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தபோது ,தமிழர்களாகிய நாம், வாய் மூடிய ஊமையாகவும், கண் மூடிய குருடர்களாகவும் இருந்து விட்டோம். நம் மொழி, இனத்தை பாதுகாக்க வேண்டுமானால், தமிழர்களாகிய நாம் குரல் கொடுக்க வேண்டும், என்றார்.