Thursday, October 31, 2013

Pasumpon Muthuramalinga Thevar: Procession highlight of celebrations in Trichy

The leaders of various political parties paid tribute to Pasumpon Muthuramalinga Thevar on his 106th birth anniversary celebrations held here on Wednesday. The city and nearby areas reported no untoward incident, though a large number of people had gathered for the anniversary functions. Though police were on their toes, their efforts to ensure peaceful conduct of the event and management of crowds were effective. In Trichy, the highlight of the celebrations was a procession in which around 200 people carried 'Mulaippari' from Khadi Craft junction to the statue near the Central bus stand. Unlike last year, the police allowed 'mulaippari' procession to commence from Khadi Craft junction, instead of the usual starting point at Gandhi Market. The participants carried pots carrying sprouted nine grains (navadhanyam). A group of 100 women also took out another 'mulaippari' procession at Thuvakudi on the outskirts of the city to mark Thevar Jeyanthi. Their procession ended at the Karuppu temple. Police had set time limits for functions held near the statue in the morning. The members of the All-India Forward Bloc Thevar Statue Maintenance Group, All-India Mukkulathor Paasarai and Thevar Welfare Trust garlanded the statue. The representatives of AIADMK, DMK, Congress, BJP and PMK also paid tributes at the Thevar statue. The first session of garlanding the statue was over by 12 noon and the second session started from 3pm and continued till evening. As curfew was imposed in Pasumpon, people were not keen on going there, police said. Police here had received one one application for vehicle entry into Pasumpon.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை

தேவர் வாழ்ந்த வீட்டில் அனைத்துக்கட்சியினர் மரியாதை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை,106 வது ஜயந்தி விழாவினை முன்னிட்டு, மதுரையில் அவர் வாழ்ந்து மறைந்த வீட்டில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினை சேர்ந்தவர்கள் மரியாதை செய்தனர். திருநகர் பசும்பொன் தெருவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் வாழ்ந்து மறைந்த இல்லம் உள்ளது. அங்கு திருநகர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் ஆர்.கண்ணன், இணை இயக்குநர் எஸ்.ஜெயக்கொடி, செயலர் முத்துராமலிங்கம், பொருளாளர் கணபதி உள்ளிட்டோர் தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.தர்மராஜா தலைமையில் திட்டக்குழு உறுப்பினர் முத்துகுமார், சுகாதாரக் குழுத்தலைவர் முனியாண்டி, ஒன்றியச் செயலர் சுப்பிரமணியன், நகரச் செயலர்கள் பாலமுருகன்,பன்னீர்செல்வம், ஜெ. பேரவை முன்னாள் மாவட்டச் செயலர் மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்தியாபலராமன், நாகலெட்சுமி பாண்டுரங்கன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் நிர்மலா தேவி, துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றியக்கவுன்சிலர் இந்திராபாண்டி உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். திமுக சார்பில் மாவட்டச் செயலர் பி.மூர்த்தி தலைமையில், துணைச் செயலர் எம்.எல்ராஜ், தேர்தல் பணிக்குழு செயலர் சேடபட்டி முத்தையா, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார்.கோபி, முன்னாள் பேரூராட்சித் தலைவர் இந்திராகாந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தேமுதிக சார்பில் திருப்பரங்குன்றம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.டி.ராஜா தலைமை யில் ஒன்றிய பொருளாளர் விருமாண்டி, மாணவரணி செயலர் ரமேஷ், பகுதி செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் சார்பில் காங்கிரஸ் வட்டாரத்தலைவர் ரா.சுப்பிரமணியன் தலைமையில் இளைஞரணி தொகுதி தலைவர் காசிநாதன், வட்டாரதலைவர் மலைராஜன் ஆகியோரும், நகர் காங்கிரஸ் சார்பில் 98ஆவது வார்டு காங்கிரஸ் தலைவர் துரைநாகராஜன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். . தே.கல்லுப்பட்டியில் தேவர் ஜயந்தி. மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் புதன்கிழமை தேவர் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. தே.கல்லுப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள தேவர்சிலைக்கு காலையில் பெண்கள் பொங்கல் வைத்து, ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பின்பு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அன்று மாலை காரண மறவர் சேவா சங்கம் சார்பாக தேவர் ஜயந்தி சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சேதுராமலிங்க பாண்டியன், அய்யாவு, முருகன், வீமராஜ், ராசய்யா ஆகியோர் சிறப்புரையாற்றினார். சங்கப் பொருளாளர் முத்தையா நன்றியுரை கூறினார் பசும்பொன்னில் அமைச்சர்கள், தி.மு.க.வினர் கார்கள் மீது கல்வீச்சு சுதந்திரப் போராட்டத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106-வது ஜயந்தி விழாவுக்கு பசும்பொன்னுக்கு புதன்கிழமை வந்த அமைச்சர்கள் மற்றும் தி.மு.க.வினர் மீது கூட்டத்தினர் கல்வீசித் தாக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா நடைபெற்றது. இதையடுத்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. பசும்பொன்னுக்குச் செல்லும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.வைத்திலிங்கம், காமராஜ் ஆகியோர் கட்சியினருடன் அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினர். அப்போது அங்கிருந்தவர்கள், திடீரென அமைச்சர்களின் கார்களை நோக்கி சேற்றையும், கற்களையும் வீசினர். சேறானது அமைச்சர் வைத்திலிங்கத்தின் கார் மற்றும் பாதுகாவலர்கள் மீது விழுந்தது. மேலும், அதிமுக முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் முருகனின் கார் கண்ணாடி உடைந்தது. அதிமுக கொடிகள் சேதப்படுத்தப்பட்டன. போலீஸார் கூட்டத்தினரை விரட்டியடித்தனர். நினைவிடத்துக்கு வந்த தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவேற்க கட்சிக் கொடி கட்டிய கார்களில் தி.மு.க. பிரமுகர்கள் வந்தனர். அவர்களை நோக்கி திடீரென கூட்டத்திலிருந்தோர் கல் வீசியதில், வழக்குரைஞர் முனியசாமி, கீழக்குளம் ஊராட்சித் தலைவர் சண்முகம் உள்ளிட்ட 6 பேரின் கார் கண்ணாடிகள் சேதமடைந்தன. போலீஸார் கல் வீசியவர்களை விரட்டியடித்தனர். கமுதி அருகே உள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்திலிருந்து ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் எஸ்.பி. ரவி மற்றும் வெள்ளைப்பாண்டி, கந்தவேல், செல்லப்பெருமாள், முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் பசும்பொன்னுக்கு தேவர் ஜோதி கொண்டு வரப்பட்டது. பசும்பொன், தீóர்த்தம்மாள் ஆகிய பெண்கள் ஜோதியை ஏந்தி வந்தனர். ஆனால், ஜோதியை போலீஸார் அனுமதிக்க மறுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின், ஜோதியை போலீஸார் அனுமதித்தனர். தேவர் நினைவிடத்துக்கு கூட்டம் கூட்டமாக வந்தவர்கள் அரசு 144 தடை உத்தரவை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும், தடுப்புகளை மீறி கூட்டமாக சிலர் வந்ததால் அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்தினர். கூட்டத்தினர் போலீஸாரை நோக்கி கல் வீசினர். இதில் பட்டாலியன் போலீஸ்காரர் முனியாண்டியின் மூக்கில் காயமேற்பட்டது. பாரா மோட்டரிங்க் மூலம் கூட்டம் கண்காணிக்கப்பட்டது. கல்வீச்சு சம்பவத்தால் மாலையில் நடந்த அரசு விழாவுக்கு வந்த அமைச்சர்களுக்கு மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பழனியில் தேவர் குருபூஜை பழனியில் பசும்பொன் தேவரின் 106 ஆவது ஜயந்தி மற்றும் குருபூஜை புதன்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அடிவாரம் பாளையம் அருகே உள்ள தேவர் உருவச் சிலைக்கு, அகில இந்திய தேவர் பேரவை, தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞரணி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அபிஷேகம் செய்து, மாலைகள் அணிவித்து தீபாராதனைக் காண்பித்து வழிபட்டனர். முன்னதாக ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு, சிலைக்கு படையல் வைத்து வழிபாடு நடத்தினர். இதில், அகில இந்திய தேவர் பேரவை மாவட்டப் பொருளாளர் சோலைத் தேவர், நகரச் செயலர் ரத்தினம், பொருளாளர் முருகானந்தம், மகளிரணி ராஜேஸ்வரி, பத்மா, தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி, கெüரவ ஆலோசகர் பாஸ்கரன், நகரத் தலைவர் கோபி, வழக்குரைஞர் கார்த்திக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரையில் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம். தேவர் ஜயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஆயிரக்கணக்கானோர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலை பகுதி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மதுரை காமராஜர் சாலை, வாழைத்தோப்பு, கீரைத்துறை மற்றும் செல்லூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் முளைப்பாரி, பால்குடம் ஏந்திவந்து தேவர் திருவுருவச் சிலையை வணங்கினர். செல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் தேவர் சிலை முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து கீரைத்துறை பிள்ளையார் கோயில், நாகுமுத்துப்பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், முளைப்பாரி, பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோரிப்பாளையத்துக்கு வந்தனர். அங்கு முளைப்பாரியை தேவர் சிலை முன்பு வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பால்குடத்திலிருந்த பாலை தேவர் சிலைமீது ஊற்றி பாலாபிஷேகம் செய்து வணங்கினர். இதேபோல, திமுக பிரமுகர் அட்டாக்பாண்டி ஆதரவாளர்கள் மற்றும் தேசிய பார்வர்டு பிளாக் முருகன்ஜி, பார்வர்டு பிளாக் பசும்பொன்முத்தையா உள்ளிட்டோரும் ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், பாலாபிஷேகம் செய்தும் வணங்கினர். ஊர்வலமாக வந்த ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை வைகை ஆற்றில் கரைத்துவிட்டுச்சென்றனர். தேவர் சிலைக்கு மாலை அணிவிப்போர் பின்பக்கம் ஏறிவந்து முன்பக்கமாக இறங்கும் வகையில் கம்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சிலை முன்பு வஜ்ரா பாதுகாப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. தேவர் அனைவருக்கும் பொதுவான தேசியத் தலைவர். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான தேசியத் தலைவர் என பசும்பொன்னில் அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டினர். சுதந்திரப் போராட்டத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 106-வது ஜயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அவரது நினைவிடத்தில் புதன்கிழமை அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச் செயலர் வைகோ: நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் தேவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தென் மண்டலத் தளபதியாக வலது கரமாகத் திகழ்ந்தவர். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடி பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தீரர். தேவர் சாதித் தலைவர் அல்லர். அனைவரும் ஏற்கத்தக்க தலைவராவார். தலித்துகள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்லும் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாதய்யர் நடத்தியபோது, அதற்குப் பாதுகாப்பாகத் திகழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர். தேவர் இன்று இருந்திருந்தால் ஈழத் தமிழர் போராட்டத்துக்கு ஆதரவளித்திருப்பார் என்றார். பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராஜாகிருஷ்ணன்: பசும்பொன் தேவர் வலிமை மிக்க பாரதம் உருவாகவே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். நரேந்திர மோடி பிரதமராவது தேவரிóன் நினைவை நனவாக்கும். மோடி பிரதமரானதும் தேவர் ஜயந்திக்கு நிச்சயம் அழைத்து வருவோம். தேசியத் திருவிழாவாக தேவர் ஜயந்தி எதிர்காலத்தில் நடத்தப்படும் என்றார். காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன்: பசும்பொன்னில் உள்ள பஸ் நிறுத்தத்துக்கு எனது மக்களவை உறுப்பினர் நிதியை அளித்துள்ளேன். தேசியத் தலைவரான தேவர் ஜயந்திக்கு அளித்த பாதுகாப்பு வரவேற்புக்குரியது என்றார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்: இந்துத் தாய் வயிற்றில் பிறந்து, இஸ்லாமியத் தாயால் வளர்க்கப்பட்டு, கிறிஸ்தவ ஆசிரியரிடம் பாடம் பயின்றவர் தேவர். அதனால் சமூக ஒற்றுமைக்குப் போராடிய மாவீரர். அவர் புகழைப் போற்றும் வகையிலே திமுக ஆட்சியில் 3 கல்லூரிகளுக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. நினைவிடம் அமைத்து அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அவரது விழாவுக்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது சரியல்ல. மாநிலத்தில் எழுத்து, பேச்சு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூட அனுமதி மறுப்பது சரியல்ல என்றார். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி: தேவர் ஜயந்தியை தென் மாவட்ட மக்கள் தெய்வ வழிபாடாகவே நடத்தி வருகின்றனர். தேசியத் தலைவரான தேவர் விழாவுக்கு 144 தடை உத்தரவு சரியல்ல. தேவரின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்றார். நடிகர் கருணாஸ்: பாபா, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் போலவே தேவர் நினைவிடமும் திகழ்கிறது. சித்தராக வாழ்ந்து மறைந்த தேவரை தெய்வமாகவே கருதுகிறோம். அவரது விழா எப்போதும் போல நடக்க அரசு உதவ வேண்டும் என்றார். . சிதம்பரத்தில் தேவர் ஜெயந்தி விழா. சிதம்பரம் மந்தகரையில் நரேந்திர மோடி எழுச்சி பேரவை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 106வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பேரவைத் தலைவர் ஜி.தண்டபாணி முன்னிலை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில், அனைத்து இளைஞர்களும் கட்டாயம் தேவர் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். செயலாளர் ரவி வரவேற்றார். அலங்கரிக்கப்பட்ட தேவர் படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பாரத யுவ பரிஷத் அமைப்பு பொருளாளர் குருமூர்த்தி, மநத்கரை மணி, சிவக்குமார், கண்ணன், முருகன், சொக்கநாதன், சுரேஷ், புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சுதேசி பொருள்களை வாங்க வேண்டும், ரத்ததானம் செய்ய வேண்டும் என இளைஞர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரவை செயலாளர் ரவி நன்றி கூறினார். . மானாமதுரையில் தேவர் சிலைக்கு அஞ்சலி சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள தேவர்சிலைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். தேவர் ஜயந்தியையொட்டி சுந்தரபுரம் வீதியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலை அலங்கரிப்பட்டிருந்தது. விளாக்குளம், கீழமேல்குடி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடத்தி வழிபட்டனர். பசும்பொன் கிராமத்துக்கு தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மானாமதுரை சுந்தரபுரம் வீதியை கடந்து சென்றவர்கள் தேவர்சிலைக்கு மாலைகள் அணிவித்து வணங்கிச் சென்றனர். . தேவர் ஜயந்தி: நெல்லையில் மாலை அணிவிப்பு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. முதலாவதாக அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர துணை மேயர் ஜெகநாதன் தலைமையில் கட்சியினர் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். பாஜக சார்பில், மாவட்டத் தலைவர் கட்டளை எஸ். ஜோதி தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேமுதிக சார்பில் மாநகர் மாவட்டச் செயலர் ஏ. முகமது அலி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், மாநகர் மாவட்டச் செயலர் சுந்தர்ராஜ பண்ணையார் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் மாவட்டச் செயலர் எம். கண்ணன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற மறுமலர்ச்சிக் கழகத்தின் சார்பில் ஏ.வேல்முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். . கோவில்பட்டி, சாத்தான்குளம், திருச்செந்தூர், எட்டயபுரம் ஆகிய பகுதிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது. கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நகரச் செயலர் சங்கரபாண்டியன் தலைமையில், தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில், நகர்மன்ற துணைத் தலைவர் ராமர், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ராஜேஷ்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெமினி என்ற அருணாசலசாமி, இருளப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயலர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னதாக, சங்கரலிங்கபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அன்னதானத்தை தொடங்கிவைத்தார். திமுக சார்பில் மாவட்டச் செயலர் பெரியசாமி தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில்பட்டி நகரச் செயலர் ராமர், ஒன்றியச் செயலர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், முன்னாள் ஊராட்சித் தலைவர் பச்சமால், முன்னாள் நகரச் செயலர் கருணாநிதி, முன்னாள் ஒன்றியச் செயலர் பா.மு.பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் தலைவர் ராஜகோபால் தலைமையில், நகர காங்கிரஸ் துணைத் தலைவர் பால்ராஜ் மாலை அணிவித்தார். தேமுதிக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் பொன்ராஜ் தலைமையில், தேமுதிகவினர் மாலை அணிவித்தனர். மதிமுக சார்பில் மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ஜி.ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்தனர். அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டச் செயலர் சிவந்திநாராயணன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இனாம்மணியாச்சியிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக வந்து தேவர் சிலை முன் வைக்கப்பட்டிருந்த சிறிய தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர். வீரவாஞ்சி நகர் முக்குலத்தோர் சமுதாய சங்கம் சார்பில் நடைபெற்ற பால்குட ஊர்வலத்துக்கு சங்கத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனர் எஸ்.செல்வம் பால்குட ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். அகில இந்திய தேவர் இன மக்கள் கூட்டமைப்பு சார்பில் இலுப்பையூரணியில் 501 முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. கயத்தாறு, கழுகுமலை ஆகிய பகுதிகளிலும் தேவர் ஜயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர்: காருகுறிச்சி தேவர் மகாஜன சங்கம் சார்பில் நடைபெற்ற தேவர் ஜயந்தி விழாவுக்கு, சங்க துணைத் தலைவர் ஆர்.சின்னத்துரைபாண்டியன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முருகன், பி.சங்கரலிங்கம், கே.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், தொழிலதிபர் எம்.கதிரேசப்பாண்டியன், வி.ராஜபாண்டியன் உள்ளிட்டோர் முத்துராமலிங்கத்தேவரின் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சங்க மேலாளர் எ.கந்தன் நன்றி கூறினார். சாத்தான்குளம்: சாத்தான்குளம் நகர தேவர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக் பேரவை, நேதாஜி கிரிக்கெட் கிளப், வேலுநாச்சியார் பேரவை, கௌதம்கார்த்திக் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் ஏ. முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய ஜெயலலிதா பேரவைத் தலைவர் எஸ். தங்கபாண்டி, முன்னாள் தேவர் பேரவைச் செயலர் சின்னத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பார்வர்டு பிளாக் கட்சி ஒன்றியச் செயலர் ஏ. முருகன் வரவேற்றார். வட்டார மனிதநேய நல்லிணக்க பெருமன்றத் தலைவர் கணபதி கொடியேற்றினார். பின்னர் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவர் உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேவர் பேரவை நகரத் தலைவர் வி. முருகன், பார்வர்டு பிளாக் கட்சி நகரச் செயலர் சுடலை, பிரதிநிதி ரமேஷ் மற்றும் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். எட்டயபுரம்: தெற்குத்தெரு மறவர் சங்கத் தலைவர் திலகாருண்யம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு, பேரூராட்சித் தலைவர் கோவிந்தராஜபெருமாள் முன்னிலை வகித்தார். எராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால்குடங்கள் எடுத்துக்கொண்டு நகரின் நான்கு ரதவீதி வழியாக ஊர்வலமாக வந்து அவரது சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில் நகர முக்குலத்தோர் சங்கம் சார்பில் மாயவன் மற்றும் அனைத்துக்கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். .

Wednesday, October 30, 2013

THEVAR GURUPOOJAI 2013 in Penang , Malaysia

ஓம் முருக !!! பினாங்கு முக்குலத்தோர் சங்கத்தின் இளைஞர்கள் ஏற்பாட்டில் பசும்பொன் உ. முத்து ராமலிங்கத் தேவர் அய்யாவின் 106-ம் தேவர் ஜெயந்தி / குரு பூஜை எதிர்வரும் 30 அக்டோபர் 2013 இரவு மணி 7.30 அளவில் நமது சங்கம் அலுவகத்தில் நடைபெறுவதால் அனைவரும் இப்பூஜையில் கலந்து சிறப்பிக்கும்படி கேட்டுகொள்கிறோம் . நன்றி வணக்கம் . Om Muruga !!! Penang Mukkulathor Sangam youth’s cordially invites all of you to 106th annual commemoration of the birthday of the Indian freedom fighter, politician & ardent devotee of Lord Murugan , Pasumpon U.Muthuramalingam Thevar (Thevar Jayanthi /Guru Poojai) on 30th October 2013 at our Sangam premises from 7.30 p.m onwards . A special prayers and talk followed by light refreshment will be held on this event. May “Thevar Ayya “bless us with good health, wealth and prosperity. Valgha Mukkulam !!!

Tuesday, October 29, 2013

Seeman slams Patna serial blasts

Naam Thamizhar Party supremo Seeman has come down heavily on the Patna serial blasta, stating that the government had failed to provide adequate security. In a statement, he said that it is the duty of the government to ensure the safety of the peope and security of leaders who are under threat. It seems that adequate security measures were taken for Gujarat Chief Minister Narendra Modi's meeting in Patna. In another statement, he said that the statue of thespian Sivaji Ganesan should not be removed from the Marina. Stating that Sivaji was a symbol of Tamil culture and film industry, Seeman said the statue should remain at the same location. It is to be noted that a petition was filed in the court against the statue's location, stating that it was disrupting traffic movement

தேவர் ஜயந்தி: நாளை நகரில் லாரிகளுக்கு தடை.

மதுரை நகரில் தேவர் ஜயந்தியை முன்னிட்டு 30-ஆம் தேதி (புதன்கிழமை) லாரிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து வழியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகச் செய்திக்குறிப்பு விவரம்: புதன்கிழமை தேவர் ஜயந்தியை முன்னிட்டு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 30-ஆம் தேதி காலை 4 மணி முதல் அன்று மாலையில் நடைபெறும் ஊர்வலங்கள் முடியும் வரை நகருக்குள் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. விழாவுக்கு வரும் வாகனங்களைத் தவிர்த்து மற்ற வாகனங்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்ல அனுமதி இல்லை. புதுநத்தம் சாலை, அழகர்கோயில் சாலை வழியாக வரும் வாகனங்கள் பெரியார் சிலையில் இருந்து திரும்பி மாற்றுப்பாதை வழியாக ராஜாமுத்தையா மன்றம், கே.கே.நகர், ஆவின்சந்திப்பு, அண்ணாநகர் பிரதான சாலை, பி.டி.ஆர்.பாலம், காமராஜர் சாலை வழியாகச் செல்லவேண்டும். மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பிலிருந்து நத்தம் சாலைக்கு வரும் வாகனங்கள், ராஜாமுத்தையா மன்றம், இளைஞர் விடுதி, ரேஸ்கோர்ஸ் சாலை, தாமரைத் தொட்டி, புதுநத்தம் சாலை வழியாகச் செல்லவேண்டும். வடக்குவெளிவீதியிலிருந்து யானைக்கல் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள், பாலம் ஸ்டேசன் சாலை, எம்.எம்.லாட்ஜ் சந்திப்பிலிருந்து கான்சாபுரம் சாலையில் திரும்பி, இ2இ2 சாலை, அரசன் ஸ்வீட்ஸ் சந்திப்பு வழியாகச் செல்லவேண்டும். திண்டுக்கல் சாலை-தத்தனேரி வழியாக வரும் வாகனங்கள் பாலம் ஸ்டேஷன் சாலை-குலமங்கலம் சாலை சந்திப்பில் திரும்பி குலமங்கலம் சாலை வழியாக மாற்றுப்பாதைகளில் செல்லவேண்டும். ஊர்வலங்கள் செல்லும் சாலைகளான அண்ணாசிலை சந்திப்பு, கீழமாசி வீதி, விளக்குத்தூண், தெற்குமாசி வீதி, அழகர்கோயில் பிரதான சாலை, பாலம் ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை. மேற்படி சாலைகளில் உள்ள இணைப்பு சாலைகளில் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். ஆகவே, 30-ம் தேதி தேவர்ஜயந்தியை முன்னிட்டு வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் நலன்கருதி மாற்றுப்பாதையை தாற்காலிகமாக பயன்படுத்தவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. .

பசும்பொன் தேவர் குரு பூஜை விழா 2-ம் நாள் நிகழ்ச்சி: தேவருக்கு பூஜை வழிபாடு பக்தி பரவசம்

பசும்பொன் தேவரின் 51-வது குருபூஜை, 106-வது ஜெயந்தி முப்பெரும் விழா முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன் னிற்கு இன்று(செவ்வாய்க்கிழமை) காலை முதல் தேவரின மக்கள் பல ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் தேவரின மக்கள் வெள்ளமாக பசும்பொன் காட்சி அளித்தது. தேவர் நினைவாலயத்தில் மக்கள் பக்தி பரவசத்துடன் பூஜைகள் நடத்தி, வழிபட்டுச் செல்கின்றனர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் மறைந்த உ.முத்துராமலிங்க தேவர் என்னும் பசும்பொன் தேவரின் 106-வது ஜெயந்தி விழாவும், 51-வது குரு பூஜை முப்பெரும் விழாவும் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் நேற்று(திங்கள் கிழமை) காலை மங்கள இசையுடன் தொடங்கியது. கோவை-காமாட்சிபுரி ஆதீனம், குரு மகா சன்னிதானம், மவுனகுரு சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் லட்சார்ச்சனை நடத்தி தேவர் விழா வைத் துவக்கி வைத்தார். கோவை-காமாட்சிபுரி உதவி ஆதீனம் தம்பிரான் மூர்த்தி சுவாமிகள் மற்றும் ஆதீன குழுவி னர் தொடர்ந்து இன்றும்(செவ்வாய்க்கிழமை) 2-ம் நாள் காலையில் லட்சார்ச்சனையை தொடர்ந்து நடத்தினார்கள். பகலில் லட்சார்ச்சனை தேவர் நினைவாலய பொறுப்பாளர் த.காந்தி மீனாள் நடராஜன் முன்னிலையில் நிறைவு பெற் றது. காலை முதல் தமிழ் நாடு முழுவதும் இருந்து குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேவரின மக்கள் பல ஆயிரக்ணக்கானோர் பசும்பொன்னிற்கு வந்த வண்ணம் உள்ளனர். பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் தொடர்ந்து தீப ஆராதனை பூஜையை கணக்கி தென்னந்தோப்பு புற்றுக்கோவில் சாமியார் நீ,ராமச்சந்திரன், சு.ராமநாதன் நடத்தினர். தேவரின மக்கள் ஆயிரக்கணக்கானோர் தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டுச் சென்றார்கள். பெண்கள் பலரும் குடும் பத்தினருடன் வந்து பொங்கல் வைத்து சாமி கும்பிட்டார்கள். ஆயிரக்ணக்கானோர் மொட்டை போட்டு, முடி காணிக்கை செலுத்தினர். சில ஊர்களைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பால் குடம், முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக தேவர் நினைவாலயத்திற்கு வந்து செலுத்தினர். அக்கினி சட்டி எடுத்து வந்தும், வேல் குத்தி வந்தும் பக்தியுடன் சாமி கும்பி ட்டு வருகிறார்கள். தேவர் சிலைக்கு பால் அபிசேகம் செய்து பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை முதல் தேவரின மக்கள் வெள்ளமாய் பசும்பொன் காட்சி அளிக்கிறது. தேவர் நினைவாலயத்தில் பக்தி பரவசமாய் வணங்கிச செல்கிறா ர்கள். முப்பெரும் விழா முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவாலய வளாகம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக் கப்பட்டுள்ளது. பசும்பொன் தெருக்களிலும், பசும்பொன் விலக்கு சாலையிலும் வண்ண மின் அலங்கார விளக்குகள், தே வர் உருவ வண்ண மின் விளக்குகளுடன் கூடிய கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கமுதி-கோட்டைமேட்டிலும், தேவர் சிலை வளாகத்திலும் பசும்பொன் தேவர் குரு பூஜை விழாவை பல்வேறு அமைப்புகள் சார்பில் கொண்டாடப் படுகிறது. இதே போன்று கமுதி பஸ் நிலையம் முன்பாக உள்ள பசும்பொன் தேவர் சிலை மின் விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு, தேவர் விழா நடைபெற்று வருகிறது. பல இடங்களிலும் தேவர் புகழ் பாடல்கள் ஒலிபரப்பப்ட்டு வருகிற து. இதனால் பசும்பொன், கோட்டை மேடு, கமுதி ஆகிய இடங்கள் தேவர் திருவிழா கோலமாக காட்சி அளிக்கிறது. கமுதி பஸ் நிலையம் முன்பாக உள்ள தேவர் சிலை வளாக்தில் இருந்து தேவரின இளைஞர்கள் மேள,தாளத்துட ன் தேவர் ஜோதியை ஊர்வலமாக பசும்பொன் தேவர் நினைவாலயத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.மேலும் பால் குடம் பவனியும், முளைப்பாரி பவனியும் புறப்பட்டுச் செல்கின்றன.. இன்று பகல் முதல் தேவரின அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பசும்பொன் தேவர் நினைவாலய த்திற்கு வந்து வணங்கிச் சென்றார்கள். இவர்களில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவரும், தமிழக பொது்சசெயலாளருமான பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ, மற்றொரு அணி பொது செயலாளர் எல்.சந்தானம்(முன்னாள் எம்.எல்.ஏ), மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.. ஆண்டி தேவர் அணியின் நிர்வாகிகள், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர், மருத்துவர் மு.சேதுராமன், தமிழ் நாடு மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஜி. எம்.ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் முருகன்ஜி, சண்முகையா பாண்டியன், உள்பட பலரும் முக்கியமானவர்கள் ஆவர். நாளை(புதன் கிழமை) காலை 6 மணியளவில் பசும்பொன் தேவர் நினைவாலயத்தில் 51-வது குருபூஜை நடைபெறு கிறது. கோவை-காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள், உதவி ஆதீனம் மூர்த்தி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தங்களது ஆதீன குழுவினருடன் குரு பூஜையை நடத்துகிறார்கள். 31 அபிசேகங்களுடன் நடைபெறும் குரு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். நாளையும் காலை முதல் மாலை வரையிலும் தேவரின மக்கள் அலை,அலையாக பசும்பொன்னிற்கு வந்து சாமி கும்பிட்டுச் செல்கிறார்கள். இது தவிர பல்வேறு அரசியல் கட்சிகளை ச் சேர்ந்த தலைவர்கள் பலரும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தி்ல் பசும்பொன் தேவர் நினைவாலயத்திற்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள். இவர்களில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின், ம.தி.மு.க. பொது செயலர் வை.கோ. போன்றவர் கள் முக்கியமானவர்கள் ஆவர். முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர், பிரபல சிரிப்பு நடிகர் கருணாஸ் தனது ஆதரவாளர்களுடன் வருகிறார். தி.மு.க.. சார்பில் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் பசும்பொன் தேவர் நினைவாலயத்திற்கு வந்து வணங்குகிறார்கள். பின்னர் மாலையில் மாவட்ட ஆட்சியர் க,.ந்தகுமார் தலைமையில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் பசும்பொன் தேவரின் 106-வது ஜெயந்தி விழாவிலும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். அப்போது தேவர் உருவப்படத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை அப்போது அமைச்சர்கள் வழங்குகிறார்கள். .

அரசியலுக்கு சத்தியமா வரமாட்டேன்: கௌதம் கார்த்திக்

அப்பா மாதிரி அரசியலுக்கெல்லாம் வருவதற்கில்லை என்று கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். கடல் படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக் நடிக்கும் படம் ‘என்னமோ ஏதோ’. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அலா மொதலயிந்தி’ என் படத்தின் ரீமேக்தான் இந்த படம். ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரவி தியாகராஜன் இயக்குகிறார். இதில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும் பிரபு, நிகிஷா பட்டேல், அழகம் பெருமாள், மதன் பாப், மனோபாலா, அனுபமா குமார், சுரேகா வாணி, புதுமுகம் சுரேஷ் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைப்பில் மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். இன்னும் 2 பாடல்கள் மட்டுமே பாக்கி. அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. இப்பாடல் காட்சிகள் பாங்காங்கில் படமாக்கப்பட உள்ளன. இந்நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ரவி பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. அதில் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு கௌதம் கார்த்திக் பின்வருமாறு பதிலளித்தார். உங்க அப்பா மாதிரி நீங்களூம் அரசியலுக்கு வருவீங்களா...!? சத்தியமா வரமாட்டேன். நம்மல சுத்தி இருக்குறவங்களுக்கு உதவி செஞ்சாலே போதும் இந்த அரசியல் பொது சேவை இதெல்லாம் எனக்கு வேண்டாம் சார்... நடிகைகள் கூட எப்படி நடிக்கனும்னு கார்த்தி சொல்லியிருக்காரா? ஒரே ஒரு விஷயம் சொன்னார், எதுக்கும் பயப்படாத தைரியமா க்ளோசா நடிக்கனும்னு சொன்னாரு. படப்பிடிப்புக்கு உங்க ப்ரண்ட்ஸ் 4 பேரை கூட்டிட்டு வந்து தயாரிப்பாளர்க்கு அதிக செலவு வைக்கிறதா சொல்றாங்களே? இந்த கேள்விக்கு தயாரிப்பாளர் ரவிபிரசாத் பதிலளித்தார். படப்பிடிப்பு அவர் கூட்டிட்டு வர்றது ஒரே ஒரு நண்பரை தான், அவரும் இவருக்கு உதவி செய்ய அடுத்த ஷாட்டுக்கு யூனிட்டில் ஹெல்ப் பண்ணதான் வர்றாரு. மற்றபடி நீங்க சொல்ற மாதிரி எதுவும் இல்ல. கடல் படத்துக்கும் இந்த படத்துக்கும் உங்க எதிர்பார்ப்பு எப்படி இருக்கு? கடல் படத்துக்கு எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருந்திச்சோ அந்த அளவுக்கு இந்த படத்திலும் இருக்கு, ஆனா கடல் படம் ஓடலன்னு சொல்றாங்க எனக்கு அந்த படம் ரொம்ப புடிச்சது நான் விரும்பின மாதிரி படம் இருந்திச்சு...என்றார். .

Saturday, October 26, 2013

DESIYA FORWARD BLOC


Sivagiri Ilaya Zamindar


Industry appeals to preserve Sivaji Ganesan statue


The grand bronze statue of the late Sivaji Ganesan which was erected in 2006 has been in the news lately for other reasons. Seven years ago a petition was filed seeking the court’s intervention to relocate the statue as it was claimed to be affecting the vision of motorists coming from a certain direction. The case has now come to life once again with the High Court requesting the city’s Traffic department to study if there was indeed any obstruction or discomfort to motorists turning right from Kamarajar Salai towards Radhakrishnan Salai. The Tamil Nadu Director’s Union (TANTIS) has issued a statement today, addressed to the Police department, stating the laurels Sivaji has brought to the State and urged them not to relocate the statue from its present position.

பசும்பொன்னுக்கு செல்வோர் வாகன அனுமதி பெற நாளை கடைசி

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜைக்கு செல்வோர் வாகன அனுமதி பெற ஞாயிற்றுக்கிழமை (அக்.27) கடைசி நாளாகும். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் இப்போது 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் தேவர் குருபூஜைக்கு செல்வோர் கண்டிப்பாக வாகன அனுமதிச் சீட்டு பெற்றுச் செல்ல வேண்டும். அவ்வாறு சொந்த வாகனத்தில் செல்லும் நபர்கள் அவர்களது சரகத்தில் உள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமை (அக்.27)-க்குள் வாகன அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. .

மருதுபாண்டியர் குருபூஜை:ரத்ததான முகாம்

பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் 212-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மருதுபாண்டியர் மக்கள் நலச் சங்கம் சார்பில் வியாழக்கிழமை தன்னார்வ ரத்ததான முகாம் நடைபெற்றது. அகமுடையார் மஹாலில் நடைபெற்ற இம்முகாமுக்கு ஆறுமுகம்சேர்வை தலைமை வகித்தார். மருதுபாண்டியர் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் ஐ.கண்ணன், எல்.சரவணன், விக்னேஷ்வரன், துளசிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். ரத்ததானத்தின் அவசியம் குறித்து முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் பேசினார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் ரத்த சேகரிப்புப்பணி நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் நிர்வாகிகள் 50 பேர் ரத்ததானம் செய்தனர். .

பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அறிவிப்பு

கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் இம் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி முடிய நடைபெறவுள்ள தேவர் குருபூஜை விழாவுக்கு வருவோர், ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வருவதற்கான வழித்தடங்கள் பற்றிய அறிவிப்புகளை ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். செய்திக்குறிப்பு விவரம்: ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள்: 1. ராமேசுவரம், ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர், அபிராமம், பசும்பொன். 2. கீழக்கரை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர், அபிராமம், பசும்பொன். 3. சிக்கல், சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி, பசும்பொன். 4. செவல்பட்டி, சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி, பசும்பொன். 5. கடலாடி, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி, பசும்பொன். 6. கன்னிராஜபுரம், சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி, பசும்பொன். 7. காத்தாகுளம், எம்.சாலை-துளுக்கன்குறிச்சி, கடம்பன்குளம், மறவர் தெரு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி. 8. பொசுக்குடி, வெங்கலக்குறிச்சி, வெண்ணீர் வாய்க்கால், முதுகுளத்தூர், பேரையூர், கமுதி, பசும்பொன். 9. இளஞ்செம்பூர், முனியன்கோவில் விலக்கு, முதுகுளத்தூர், பேரையூர், கமுதி, பசும்பொன். 10. காக்கூர், புளியங்குடி, கீழப்பனையடியேந்தல், வெண்ணீர் வாய்க்கால், முதுகுளத்தூர், பேரையூர், கமுதி, பசும்பொன். 11. மேலத்தூவல், ஆனைசேரி, அபிராமம், பசும்பொன். 12. முஷ்டக்குறிச்சி, கமுதி, பசும்பொன். 13. க.விலக்கு, கிளாமரத்துப்பட்டி, கமுதி, பசும்பொன். 14. மண்டலமாணிக்கம், கமுதி, பசும்பொன். 15. பெருநாழி, கோவிலாங்குளம், கமுதி, பசும்பொன். 16. நயினார்கோவில், எமனேசுவரம், பரமக்குடி, பார்த்திபனூர், அபிராமம், பசும்பொன். 17. ஆர்.எஸ்.மங்கலம், சீ.கே.மங்கலம், சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம், பசும்பொன். 18. திருப்பாலைக்குடி, தொண்டி, எஸ்.பி.பட்டணம், திருவாடானை, சி.கே.மங்கலம், சருகனி, காளையார்கோவில், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம், பசும்பொன். 19. தேவிபட்டினம், கோப்பேரிமடம், சித்தார்கோட்டை, தாமரையூரணி, பனைக்குளம், நதிப்பாலம், ராமநாதபுரம், பரமக்குடி, பார்த்திபனூர், அபிராமம், பசும்பொன். மாவட்டத்துக்குள் தடை செய்யப்பட்ட வழித்தடங்கள்: 1. எம்.புதூர், மண்டலமாணிக்கம். 2. முதுகுளத்தூர், தேரிருவேலி (கிழக்குத்தெரு, தேவர்புரம், காக்கூர் ஆர்ச்). 3. கீழத்தூவல், வெண்ணீர்வாய்க்கால். 4.கடலாடி-மலட்டாறு சந்திப்பு. 5.முதுகுளத்தூர், அபிராமம் (வழி-நல்லூர், மணிப்புரம், ஆரபத்தி) 6.சிக்கல்-இளஞ்செம்பூர் (வழி-கீரந்தை) 7.பார்த்திபனூர் சந்திப்பு-அழகன்பச்சேரி. 8.மேலக்கொடுமலூர் விலக்கு- மேலக்கொடுமலூர் 9.வெங்காளூர் சந்திப்பு- வெங்காளூர் 10.பரமக்குடி 5 முனை சந்திப்பு, கீழத்தூவல் (வழி:பொன்னையாபுரம்,பாம்பூர்) 11.காந்தி நகர், எமனேசுவரம் (இளையான்குடி சாலை) 12.ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம் 13.தொண்டி-ú தவிபட்டினம் 14.கோப்பேரி மடம்-ராமநாதபுரம் (வழி:பேராவூர்) 15.கீழக்கரை-சிக்கல் (வழி-புல்லந்தை, ஏர்வாடி, இதம்பாடல்) 16.இதம்பாடல், உத்தரகோசமங்கை சந்திப்பு (வழி:நல்லாங்குடி, உத்தரகோசமங்கை). .

காளையார்கோவிலில் நாளை மருதுபாண்டியர் நினைவு தினம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) தேதி நடைபெற உள்ள மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி 3 எஸ்.பிக்கள் தலைமையில் 2,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். சிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் கூறியதாவது: மருதுபாண்டியர் நினைவு தினத்தையொட்டி மாவட்டம் முழுவதிலும் 15 இடங்களில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச் சாவடிகளில் விடியோ கேமராக்கள், ஆன்லைன் முறையில் வாகனங்களின் பதிவுகளை சரிபார்த்தல், விடியோ கிராபர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணிக்காக 2,600 போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதைத் தவிர பாதுகாப்புப் பணி மற்றும் போக்குவரத்தினை கண்காணிப்பதற்காக 3 எஸ்.பி.க்கள், 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 17 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 57 காவல் ஆய்வாளர்கள், 260 சார்பு ஆய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு காவல் ரோந்து வாகனம் என்ற வகையில் மொத்தம் 40 ரோந்து வாகனங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள்: ராமநாதபுரத்திலிருந்து வரும் வாகனங்கள் திருவாடானை, சருகனி வழியாகவும், பார்த்திபனூர்,மானாமதுரை, சிவகங்கை வழியாகவும் காளையார்கோவிலுக்குள் வரவேண்டும். புதுக்கோட்டையிலிருந்து வரும் வாகனங்கள் திருமயம், கீழச்செவல்பட்டி, திருப்பத்தூர், சிவகங்கை வழியாகவும், அறந்தாங்கி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை வழியாகவும் காளையார்கோவிலுக்கு வரவேண்டும். மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் மேலூர், மலம்பட்டி, சிவகங்கை வழியாகவும், வரிச்சியூர், பூவந்தி, சிவகங்கை வழியாகவும் காளையார்கோவிலுக்கு வரவேண்டும். தடைசெய்யப்பட்ட வழித்தடம் : ராமநாதபுரத்திலிருந்து பரமக்குடி, காந்திநகர், குமரக்குறிச்சி, இந்திரா நகர், இளையான்குடி வழியாக காளையார்கோவிலுக்கு வரும் வழித்தடம் தடை செய்யப்பட்டுள்ளது. பொட்டப்பாளையத்திலிருந்து திருப்புவனம் வழியாக வரும் வாகனங்கள் கொந்தகை, பசியாபுரம், சிலைமான் வழியாக வர அனுமதி இல்லை. குமரக்குறிச்சியிலிருந்து வரும் வாகனங்கள் காந்திநகர், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை வழியாக வருவதற்கு அனுமதி உண்டு. எனவே இவ்வழியில் வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். .

தேவர் ஜயந்தி: பாதயாத்திரை செல்ல அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு.

பசும்பொன்னில் நடைபெறும் தேவர் ஜயந்தி விழாவுக்கு பாதயாத்திரையாகச் செல்ல அனுமதி வழங்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீ தேவர் குருபூஜை பக்தர்கள் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, கமிட்டி தலைவர் எம். மகேஸ்வரன், துணைத் தலைவர் கே.சி. திருமாறன் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினர். அந்த மனுவில், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு ஆண்டுதோறும் பாதயாத்திரையாகச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறோம். இப்போது, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், குருபூஜை பக்தர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். குரு பூஜைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. .

Friday, October 25, 2013

Row over Sivaji Ganesan statue

The statue of late cine actor, Sivaji Ganesan, at the junction of Kamarajar Salai and Radhakrishnan Salai, is in the news again. A petitioner had gone to the Madras High Court opposing the erection of the statue at that junction. He said the structure obstructed the vision of motorists who wished to turn into Radhakrishnan Salai from Kamarajar Salai. On Wednesday, the First Bench, comprising acting Chief Justice R.K. Agrawal and Justice M. Sathyanarayanan, directed the jurisdictional assistant commissioner of police (Traffic) to file an affidavit in this regard. It posted the matter for further hearing on November 13. The eight-feet-tall bronze statue was unveiled on July 21, 2006. The petition was filed by P.N. Srinivasan in 2006 seeking to restrain the authorities from permitting the erection of the statue at the Kamarajar Salai-Radhakrishnan Salai intersection, opposite Gandhi Statue, and consequently direct the authorities to provide an alternative place for the statue. When the matter came up seven years ago, the court declined to restrain the State government from unveiling the statue. Adjourning the matter, the court however said it was giving time to enable the government to approach the Supreme Court for appropriate orders, directions or clarifications with regard to an undertaking given by the government in 2002 that no permanent or temporary traffic hindrance would be created on any road. Now, when the matter came up before the First Bench, advocate-general A.L. Somayaji said, on account of installation of the statue, there was no obstruction to the free flow of traffic. The petitioner’s counsel R. Gandhi said there could not be a statue on the road. The statue hindered the vision of motorists who wanted to take a right turn from Kamarajar Salai to go on Radhakrishnan Salai. Following this, the Bench issued the direction to the assistant commissioner of police, traffic.

Taking the road less travelled

Author and advocate R. Sundaravandhiya Thevan talks about his book in which he has documented the life and history of Tamil folk clans. ‘Captain Rumley and his troops marched into Vellalore village near Melur and brutally killed over 5,000 Kallars in a single day as they vehemently refused to pay tax to the British Company Raj’ – (Page 516, Piramalai Kallar Vazhvum Varalarum). “The carnage that happened in 1767 is recorded in the year’s gazette,” notes R. Sundaravandhiya Thevan. “See how history hails king Kattabomman and the Marudhu brothers as heroes who fought the tax system. But we have comfortably forgotten those 5,000 martyrs — simply because they are no kings. They are just common people!” Sitting under the neem tree in his modest home at Usilampatti, Sundaravandhiya Thevan discusses Communism, Antonio Gramsci’s Marxist writings and correlates socialist theories and populist ideas to native Indian communities and their ways of life. “In India, classical literature has always glorified kings and their kingdoms. The people who lived on the fringes of society never found a mention in these. Even Tamil Sangam literature bears only minimum references to those who lived outside the royal fold,” alleges Sundar. “But, folk history,” he asserts, “can never perish. The tales are still alive among the farmers and workers in the villages. And I have documented and scrutinised these stories in my book.” Sundar’s book Piramalai Kallar Vazhvum Varalarum, released two years ago by Sandhya Pathipagam, is a result of extensive research spanning eight years. It takes a holistic look at the life and socio-economic structure of all the classes of the subaltern. The first part records the numerous oral stories that are in circulation even today and the second half analyses rare documents and historical evidences. “I travelled to nearly 500 villages all over southern Tamil Nadu and ended up with a dozen notebooks of hints and famous tales,” beams Sundar. Nearly 2,000 copies of the book have already been sold. Living beyond generations: It was at a roadside tea stall that Sundar found his calling. “I heard a school boy narrate a story about his ancestors. And it struck me that I had read the same story in Louis Dumont’s A South Indian Subcaste that was written in 1947. That’s when I realised that these stories live beyond generations and centuries.” In the course of his research, there were times when Sundar encountered discouraging statements from family, friends and strangers. American-Indian anthropologist Ananda Pandian who was doing a study on the Cumbum Valley Kallars, played a major role in inspiring Sundar to continue his research. “He encouraged me to write about the sufferings and struggles of the folk communities. Caste histories have always been promoted. I wanted to present plain truth,” he says. “Every caste group claims a royal lineage today. Unfortunately, they are unaware of the fact that aristocracy can easily be uprooted and overthrown. But it’s the working clans that survive time and the onslaught of invasions and wars.” An anthropological thesis “Caste should be seen as a system and not a sentiment. The deciding factors of caste have differed during various time periods. Once, it was based on clothes and food. Then, occupation demarcated the various castes. And today, political and economical status translates into caste which everyone clings to,” observes the Economics graduate. “My book is not a casteist creation. It’s an anthropological thesis that brings to the fore the realistic issues our society faced at a time,” he asserts. According to Sundar, geographical divisions of the erstwhile Tamil land had a great impact on the behavioural and cultural patterns of the communities that lived in the regions. “Those who lived in the fertile plains and rich forests naturally had a better socio-economic condition, as we were largely an agrarian society in the past,” he notes. “But the clans that lived in dry regions were oppressed and relegated by the successive ruling classes. And till date, economic policies of the Government remain biased.” Sundar cites the example of the Periyar and Sirumalai irrigation channels that were laid during the British Raj. Wherever the water reached, the farmers became a rich clan. And where it didn’t, the community continued to struggle and their behaviour remained rugged and they were called ‘uncivilised’. “When they resisted the tax system, they were branded ‘criminals’ and that’s how the Criminal Tribes Act came into being,” says Sundar, showing copies of related documents from 1871 onwards. The latter chapters of Sundar’s book give an in-depth idea of the Act. Sundar is currently involved in a research on the folk religion of native Tamil people. “My desire is not to preserve history but to properly document it,” he says.

மானாமதுரை, திருப்புவனம் சோதனைச் சாவடிகளில் குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்க ஏற்பாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அமைக்கப்படும் போலீஸ் சோதனைச் சாவடிகளில் தேவர் குருபூஜைக்கு செல்லும் சொந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதிச் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அவரது குருபூஜை நடைபெறுகிறது. குருபூஜையில் கலந்து கொள்ள சென்னை, திருச்சி, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் வருபவர்கள் திருப்புவனம், மானாமதுரையை கடந்துதான் செல்ல வேண்டும். குருபூஜைக்கு சொந்த வாகனத்தில் மட்டுமே வர வேண்டும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது. வாடகை வாகனம் வந்தால் அது பறிமுதல் செய்யப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் சொந்த வாகனங்களில் வருபவர்கள் தாங்கள் புறப்படும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வாகனங்களின் ஆவணங்களைக் காட்டி அனுமதிச்சீட்டு பெற்று வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குருபூஜைக்கு வரும் வாகனங்களை கண்காணிக்க மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் சிறப்பு போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. குருபூஜை விழாவுக்கு திடீரென சொந்த வாகனங்களில் புறப்பட்டு வருபவர்கள் இந்தச் சோதனைச் சாவடிகளில் வாகனங்களின் ஆவணங்களை காண்பித்து அங்கேயே அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு பசும்பொன் செல்ல போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. .

மருதுபாண்டியர் நினைவு நாள் அனுசரிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 212ஆவது நினைவுநாள் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலர் வைகோ அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் விடுதலைக்கு முதல் போர் பிரகடணம் செய்து, நாட்டிற்காக இன்னுயிர் நீத்தவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள். இவர்களின் 212ஆவது நினைவுநாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவர்களின் நினைவு மணி மண்டபத்தில் வாரிசுதாரர்கள் சார்பில் குருபூஜை நடைபெற்றது. குடிசை மாற்று வாரியத் தலைவர் கு.தங்கமுத்து, வீட்டுவசதி வாரியத் தலைவர் முருகையா பாண்டியன், கூட்டுறவு சங்கங்களின் மாநிலத் தலைவர் கே.கே.உமாதேவன்,பேரூராட்சித் தலைவர் ஆர்.சோமசுந்தரம், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஏ.வி.என்.கஸ்தூரிநாகராஜன், வட்டாட்சியர் ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வைகோ அஞ்சலி: அதன்பிறகு,மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலர் வைகோ, மாவட்டச் செயலர் செவந்தியப்பன், மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் கார்கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். தி.மு.க. சார்பில் ஒன்றியச் செயலர் செழியன், நகரச் செயலர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சாக்ளா, இளைஞரணி கே.எஸ்.நாராயணன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுப்புராம், ராமஅருணகிரி, வட்டாரத் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கூத்தகுடி சண்முகம், மாநிலச் செயலர் ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் சார்பில் மாவட்டத் தலைவர் ஹைதர்அலியும் மேலும், அகமுடையார் சங்கத்தினர், பாஜக, நாம்தமிழர் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்

Thursday, October 24, 2013

தேவர் குருபூஜை: பசும்பொன் பகுதியில் 2 தாற்காலிக பேருந்து நிலையம்

தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் பகுதியி்ல் 2 தாற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அக்.30-ந் தேதி பசும்பொன் தேவரின் 51-வது குருபூஜையும், தமிழக அரசு சார்பில் 106-வது ஜெயந்தி விழாவும் நடைபெற உள்ளன. இந்த விழாக்களுக்கு வாடகை பஸ். மினி பஸ், வேன், கார், ஜீப் போன்ற வாகனம் மற்றும் லாரி, மினி லாரி, டிராக்டர் ஆட்டோ, பைக் எதிலும் பசும்பொன்னுக்கு வரவே கூடாது என்று மாவட்ட நிர்வாகம் கடும் கட்டு்ப்பாடு விதித்துள்ளது. அதே சமயம் அரசு பஸ்களில் அந்தந்த மாவட்டங்களில் இருந்து பசும்பொன்னுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பசும்பொன்னுக்கு மேற்கு மற்றும் தெற்குப் பகுதி ஊர்களில் இருந்து கமுதி, மற்றும் கமுதி-கோட்டைமேடு வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் கோட்டைமேட்டில் உப மின் நிலையம் எதிர்ப்பகுதி மைதானத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்டுகிறது. இதே போன்று பசும்பொன்னுக்கு கிழக்கு, வடக்கு பகுதி ஊர்களில் இருந்து அபிராமம் வழியாக வரும் பஸ்கள் அனைத்தும், நந்திசேரி விலக்கு சாலை எதிரே உள்ள மைதானத்தி்ல் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. கமுதி வழியாக வரும் அனுமதிக்கப்பட்ட சொந்த வாகனங்களை, பசும்பொன் பகுதி நுழைவு வாயி்ல் அருகே எதிர்ப்புற மைதானத்திலும், அபிராமம் வழியாக வரும் அனுமதிக்கப்பட்ட சொந்த வாகனங்களை பசும்பொன் கிழக்கு நுழைவு வாயி்ல் அருகே எதிர்ப்புற மைதானத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த அடிப்படையி்ல் அனுமதிக்கப்பட்ட எந்த வாகனத்தில் பசும்பொன்னுக்கு வந்தாலும், குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்துதான் பசும்பொன் தேவர் நினைவிடத்திற்குச் செல்ல வேண்டும். அதேநேரம் அனுமதிக்கப்பட்ட வி.ஐ.பி.களின் குறைந்தபட்சம் 3 கார்கள் தான் பசும்பொன்னுக்குள் கிழக்குப் பகுதி நுழைவு வாயி்ல் வழியாகச் சென்று, மேற்கு நுழைவு வாயில் வழியாக வெளியேற வேண்டும். தற்காலிக பஸ் நிலையங்கள், அனுமதிக்கப்பட்ட சொந்த வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஏறபாடு பணிகளில் மாவட்ட ஆட்சியர் கந்தகுமார் ஆலோசனையில் பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஏ.தனபால் (கமுதி), ஆர்.ராஜாராம் (அபிராமம்) மற்றும் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் முத்து இளங்கோவன் (வ.ஊ), வீரராகவன் (கி.ஊ) உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். .

தேவர் குருபூஜை: விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை

தேவர் குருபூஜைக்கு வரும் வாகனங்கள் விதிமுறைகளை மீறினால் அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாருக்கு மானாமதுரை டி.எஸ்.பி. மங்களேஸ்வரன் உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் தேவர் குருபூஜை விழாவுக்கு போலீஸார் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மானாமதுரை, சிப்காட், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், பழையனூர், பூவந்தி ஆகிய காவல் நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், உளவுப் பிரிவு போலீஸார் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மானாமதுரை டி.எஸ்.பி. (பொறுப்பு) மங்களேஸ்வரன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: தேவர் குருபூஜைக்கு வரும் வாகனங்களை கண்காணிக்க மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும். இங்கு குருபூஜைக்கு செல்லும் அனைத்து வாகனங்களின் ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் அனுப்ப வேண்டும். வாடகை வாகனங்கள் வந்தால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். சொந்த வாகனங்களில் வருபவர்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களின் அனுமதிச் சீóட்டு வாங்காமல் வந்தாலும் அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டிக்கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றார். மேலும் அவர் குருபூஜைக்கு மானாமதுரை போலீஸ் துணைக் கோட்டத்தில் போலீஸார் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு வழிமுறைகளை விளக்கினார். .

தேவர் குருபூஜை: பசும்பொன்னில் ஏற்பாடுகள் தீவிரம்

தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் அடிப்படை வசதி பணிகளை செய்வதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பசும்பொன் தேவரின் 51-வது குருபூஜையும், தமிழக அரசு சார்பில் 106-வது ஜெயந்தி விழாவும் அக். 30 ஆம் தேதி நடைபெறுகின்றன. இதற்காக பசும்பொன்னில் சாலைகள் சீரமைப்பு, தியான மண்டபம், மொட்டை போடுமிடம், கழிப்பறைகள், காவல் துறையினரின் தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அறை, உயர் அலுவலர்கள் இருக்குமிடம் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் அனைத்தும் தீவிரமாக மராமத்து செய்யப்பட்டு வருகின்றன. பசும்பொன்னிற்குள் செல்லும் சாலைகள் ஓரம் உள்ள முள் செடிகள், மரங்களை வெட்டியும், குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் கல், மண் போட்டு நிரப்பியும் சீரமைக்கப்படுகின்றன. பணிகளில் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் முத்து இளங்கோவன், வீரராகவன், பொறியாளர்கள் சங்கிலி, கணபதி சுப்பிரமணியன் மற்றும் ஓவர்சீயர்கள், சாலைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். தினசரி பசும் பொன்னிற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் த. பாலு சென்று பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். மழை தீவிரமடைவதற்குள் பசும்பொன்னில் அடிப்படை வசதிகளை செய்து முடிமாறு ஆட்சியர் க. நந்த குமார் அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார். .

பொதுக்கூட்டம் நடத்த தடை


மதுரை போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் அறிவிப்பு: அனுமதியின்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த இன்று (அக்.,23) முதல் நவ., 6 வரை தடை விதிக்கப்படுகிறது. தவிர்க்க இயலாத காரணமாக இருந்தால், 5 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். பரிசீலனைக்கு பின் முடிவு தெரிவிக்கப்படும், என அறிவித்துள்ளார்.

Wednesday, October 23, 2013

Thevar guru puja: permit slips from today

Those who want to take part in the Thevar guru puja to be held at Pasumpon in Ramanathapuram district on October 30 could submit photocopies of the documents of vehicles, driving licence and the details of persons intending to travel to the nearest police station from Wednesday onwards (October 23) and obtain the permission slip. The police have made it mandatory for those taking part in the guru puja to obtain the permission slip from the police and paste the same on the windscreen of the vehicle.

தேவர் ஜயந்தி: சொந்த வாகனங்களில் செல்வோர் கவனத்துக்கு...

தேவர் ஜயந்தி விழாவுக்குச் செல்வோர், தங்களது வாகனத்தின் ஆவண நகல்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஒவ்வோர் ஆண்டும் அக்.30 ஆம் தேதி, தேவர் ஜயந்தி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவுக்கு மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் பசும்பொன் சென்று ஏராளமானோர் நினைவஞ்சலி செலுத்துவர். இதன்படி, வரும் அக்.30 ஆம் தேதி பசும்பொன் கிராமத்துக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்குச் செல்ல விரும்புவோர், கோரிக்கை மனுவுடன் தங்களது வாகனப் பதிவுச்சான்று, ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் காப்பீட்டு உரிமம் ஆகியவற்றின் நகல்களுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொடுத்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.

தேவர் ஜயந்தி: உண்ணாவிரதம் இருக்க முயன்றோர் கைது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதை விலக்கவேண்டும் எனக்கோரி உசிலம்பட்டி, மதுரையில் உண்ணாவிரதம் இருக்க முயன்றவர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் மணிகண்டன் உள்ளிட்டோர் பஸ் நிலையம் அருகே உள்ள தேவர் சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்கமுயன்றனர். உடனே உசிலம்பட்டி போலீஸார் அவர்களைக் கைது செய்து அழைத்துச்சென்றனர். மதுரையில் தேவர் தேசியப் பேரவை சார்பில் கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து பேரவைத் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் 16 பேர் கோரிப்பாளையம் பகுதியில் திரண்டனர். உடனே அவர்களை அங்கிருந்த போலீஸார் வேனில் ஏற்றி அழைத்துச்சென்றனர். கைதானவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மறியல்: மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு தேவர்குல மாணவர் கூட்டமைப்பினர் பழனிவேல் தலைமையில் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி, மதுரையில் கைதான பார்வர்டு பிளாக் மற்றும் தேவர் தேசியப் பேரவையினரை விடுவிக்கக் கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர். அண்ணாநகர் போலீஸார் சமரசம் செய்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. .

Tuesday, October 22, 2013

சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு


மருதுபாண்டியர் குருபூஜைக்காக, பாதுகாப்பு கருதி, 144 தடை உத்தரவு பிறப்பித்து, கலெக்டர் ராஜாராமன் உத்தரவிட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் மருதுபாண்டியர் அரசு நினைவு இல்லத்தில், அவர்களது சிலைகளுக்கு, அக்.,24ல் அஞ்சலி செலுத்தப்படும். அக்.,27ல் காளையார் கோவிலில் உள்ள, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவர். இவ்விரு தினங்களில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில்,வாடகை வாகனங்களில் வரக்கூடாது. அரசியல் கட்சியினர் 3 வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. நினைவிடத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரம் மட்டுமே ஜோதி எடுத்துச் செல்ல வேண்டும். ஊர்வலமாக செல்லக்கூடாது. மாவட்ட நிர்வாகம் விதித்த, விதிமுறைகளுக்கு மேல் நடந்து கொள்ள, அரசியல் கட்சிகள், நினைவிடம் செல்வோருக்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்குமாறு,எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் ராஜாராமன், உத்தரவிட்டார். இந்த உத்தரவு இம்மாத இறுதி வரை அமலில் இருக்கும்.

தேவர் ஐயாவின் ஜெயந்தி தடை


தென்னாடு எங்கும் மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர் - தேவர் ஐயாவின் ஜெயந்தி தடைப்பற்றி! அன்று தேவர் உயிரோடு இருக்கையில் அவரை சிறையில் அடைத்து நம் தெய்வத்தின் உயிரை பறித்த காரணத்தால் அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் காமராஜரே மண்ணை கவ்வினார் அன்று இன்று ஜீவசமாதி அடைந்த அவரை தோண்டியெடுத்து இந்த முதல்வர் அவரை மீண்டும் கொலை செய்ய துடிக்கிறார் ... இவர் வரும் தேர்தலில் என்னாக காத்திருக்கிறாரோ??? தேவருக்கே வெளிச்சம்!!!

144 தடை உத்தரவு ரத்து வலியுறுத்தி அக்.24-ல் மறவர் சங்கம் முக்கிய முடிவு


போலீஸ் 144 தடை உத்தரவை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்.24-ந்தேதி(வியாழக்கிழ மை) ஆப்பநாடு மறவர்கள் சங்கம் முக்கிய முடிவு எடுப்பதாக அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அக்.31 வரையிலும் போலீஸ் 144 தடை உத்தரவு அமல்படுத்துவதை ரத்து செய்தல், அக்.30-ல் பசும்பொன்னிற்கு வாடகை வாகனங்களில் தேவர் குருபூஜைக்கு செல்லவும், அவரவர் ஊர்களில் இருந்து தாள,வாத்தியத்துடன் தேவர் ஜோதியை தொடர் ஓட்டமாக கொண்டு வரவும் தடை விதிப்பதை ரத்து செய்தல் உள்பட பல கோரிக்கைளை சமீப நாள்களாக தேவரின சமூக அமைப்புகளும், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த 448 ஊர்கள் அடங்கிய ஆப்பநாடு மறவர் சங்கமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதையொட்டி சில ஊர்களில் சாலை மறியலும், உண்ணாவிரதமும் நடைபெற்றன. இதற்கிடையில் அக்.24-ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேவர் குருபூஜை பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு குறித்து நடைபெறும் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஆப்ப நாடு மறவர்கள் சங்கம் சார்பில் பங்கேற்பது என்றும், சுமுகமான தீ்ர்வு கிடைக்கவில்லையானால் போராட்டங்கள் நடத்துவது என்றும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்டுகிறது.

உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் உண்ணாவிரதம் இருந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கைது


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருபவர்கள் சொந்த வாகனத்தில் வர வேண்டும், வாடகை வாகனங்களில் வரக்கூடாது. மற்றும் பல்வேறு கட்டுபாடுகளை போலீசார் விதித்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உததரவை நீக்க வேண்டும். தேவர் ஜெயந்தி விழாவுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடைகளை அகற்ற கோரி உசிலம்பட்டியில் தொடர் உண்ணாவிரதம் இருக்க அகில இந்திய பார்வர்டு பிளாக்கட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 9 மணி அளவில் தேவர் சிலை அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 12 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. சரவணகுமார், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று உண்ணாவிரதம் இருந்த மணிகண்டன் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

கட்டுப்பாடுகளை தளர்த்தாவிட்டால் பசும்பொன்னுக்கு 10 லட்சம் பேருடன் நடைபயணம்: ஸ்ரீதர் வாண்டையார்


மதுரையில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பை–பாஸ் ரோட்டில் உள்ள சந்திரிகா பழனியப்பன் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கட்சியின் நிறுவனத்தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆண்டாண்டு காலம் தொடர்ந்து நடந்து வரும் தேவர் ஜெயந்தி அஞ்சலி நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையும், புதிய விதிமுறைகளின் கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும். சாதிவாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவை வெளியிட்டு அந்தந்த சாதி சதவீத அடிப்படையில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஸ்ரீதர் வாண்டையார் நிருபர்களிடம் கூறியதாவது:– பசும்பொன் நகரில் பல ஆண்டுகளாக தேவர் ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்கள் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பசும் பொன்னுக்கு அஞ்சலி செலுத்த செல்வோருக்கு புதிய விதிமுறைகளும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இதனால் பசும் பொன்னுக்கு சென்று தேவர் ஜெயந்தியை அனைவராலும் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஒரு தேசிய தலைவர் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாதபடி தடை விதித்திருப்பது வேதனையாக உள்ளது. எனவே 144 தடை உத்தரவை ரத்து செய்து வழக்கம்போல் நடைபெறும் முளைப்பாரி, ஊர்வலம், தொடர்ஜோதி ஓட்டம், பேரணி, வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்க வேண்டும். இல்லை என்றால் முக்குலத்தோர், மூவேந்தர் முன்னேற்ற கழக தொண்டர்கள் என 10 லட்சம் பேரை திரட்டி வருகிற 30–ந்தேதி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு எனது தலைமையில் அங்கிருந்து பசும்பொன்னுக்கு நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம். நாங்கள் வழக்கமாக நடத்தி வரும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளர் செல்வராஜ், இணை தலைவர்கள் ரவி வாண்டையார், ஆறுமுக நாட்டார், இணை பொது செயலாளர் ரவீந்திரன், துணைத்தலைவர் வக்கீல் சுரேஷ், மதுரை மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டன

Gautham Karthik Takes on More


The young actor debuted in Kollywood through Mani Ratnam's 'Kadal', and has been a busy man ever since light was shone on his acting prowess. Gautam Karthik already has 'Sippai', 'Yennamo Yedho' and 'Vai Raja Vai' in his schedule, but the actor has willingly nodded for one more responsibility. The latest is a project yet to be titled, and directed by Kala Prabhu of 'Sakkarakatti' fame. The film is to be produced by Thanu, and is touted to be an action comedy. Speaking on the film, Prabhu said "We will start shooting in Chennai, and the tale will be carried to Goa and the exotics of Arunachal Pradesh, where major portions of the film are to be shot. The story has generous dosage of comedy, and will be a good entertainment for the youth. We will go on the floors by the end of this year."

23ந் தேதி முதல் ஒளிபரப்பை துவங்குகிறது புதுயுகம்

எஸ்.ஆர்.எம் குழுமத்திருந்து தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சேனல் புதிய தலைமுறை. இது 24 மணிநேர செய்தி சேனல். தற்போது இந்த சேனலில் இருந்து புதுயுகம் என்ற புதிய சேனல் வருகிறது. இது பொழுதுபோக்கு சேனலாக அறிமுகப்படுத்தப்படுகிறது. சீரியல், சினிமா, விளையாட்டு, லைவ் ஷோக்கள் இந்த சேனலில் இடம் பெறுகிறது. குஷ்பு, சமுத்திரக்கனி உள்பட சினிமா வி.ஐ.பி.க்கள் இந்த சேனலுக்காக சீரியல் தயாரிக்கிறார்கள். நிகழ்ச்சிகளும் தயாரிக்கிறார்கள். வருகிற 23ந் தேதி முதல் ஒளிபரப்பை துவங்குகிறது புதுயுகம். ...

Subhas Chandra Bose: Can a Chinese angle solve Netaji mystry?

Kolkata: Deepening the mystery surrounding the disappearance of Netaji Subhas Chandra Bose, a new book claims the nationalist leader went to China after escaping into Russia. In his new book 'No Secrets' researcher Anuj Dhar says Netaji's elder brother and his closest associate Sarat Chandra Bose had written a front-page article in his newspaper 'The Nation' proclaiming that Netaji was in Red China in October 1949. A copy of the newspaper clipping is there in the book, which would be released next week in Kolkata, to support the claim. "It goes without saying that Sarat would not have published this in such a manner without being sure about it. The story quoted him claiming "that the Government of India was in possession of definite information that Netaji Subhas Chandra Bose was in Red China of Mao Tse-Tung". When asked why Subhas was not coming to India, Sarat Bose replied, "I don't think the time is ripe for his coming back home"," says the book. "It is a truth that in 1949 rumours began doing the rounds in India and elsewhere that Subhas Bose was in China. So much so that when pro-Soviet Bombay tabloid 'The Blitz' carried sensational news headlined "British report Bose alive in Red continent" on 26 March 1949, the American Consul there transmitted its text to the Secretary of State under the subject "Ghost of Subhas Chandra Bose". Written with the help of declassified and still secret records, the book says in 1956 Bose's associate Muthuramalingam Thevar had told newspapers such as 'Hindustan Standard' that he had secretly visited China on Sarat Bose's instruction.

தடை உத்தரவை நீக்கக்கோரி கிராமங்களில் கறுப்புக்கொடி

முதுகுளத்தூர்,கடலாடி பகுதிகளில் 144 தடை உத்தரவை நீக்கக்கோரி கிராமங்களில் கறுப்புக்கொடி கட்டியுள்ளனர். பசும்பொன்னில் அக்.30இல் தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் இருந்து ஜோதி எடுத்துவரக்கூடாது, வாடகை வாகனங்களில் வரக்கூடாது, வெடிபோடக்கூடாது என பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைக்கண்டித்து முதுகுளத்தூர் தாலுகாவில் ஒருவானேந்தல், பொசுக்குடி ஆகிய கிராமங்களிலும், கடலாடி தாலுகாவில் சாத்தங்குடி கிராமத்திலும் வீடுகள்தோறும் கறுப்புக்கொடி கட்டியுள்ளனர். .

வாகனங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் சோதனைச்சாவடிகள்

மருதுபாண்டியர், தேவர் குருபூஜை விழாக்களுக்கு வரும் வாகனங்களை கண்காணித்து ஆவணங்களை ஆய்வு செய்ய மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் சிறப்பு போலீஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது வரும் 27ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழாவும், 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவும் நடைபெற உள்ளன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அந்தந்த காவல்நிலையங்களில் வாடகை வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் பங்கேற்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. இந்நிலையில் மருதுபாண்டியர், தேவர் குருபூஜை விழாவுக்களுக்கு வரும் வாகனங்களை கண்காணிக்கவும் அவற்றை சோதனையிடவும் மானாமதுரை அருகே மேலப்பசலை, திருப்புவனம் அருகே மணலூர் ஆகிய இரு இடங்களில் போலீஸ் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த எஸ்.பி, டி.எஸ்.பி.க்கள் கண்காணிப்பில் இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட உள்ளனர். இந்த சோதனைச் சாவடிகளில் இணைய தள இணைப்புடன் கம்ப்யூட்டர் வசதி செய்யப்பட்டு வாகன ஆவணங்களை சரிபார்க்க வட்டார போக்குவரத்து அலுவலங்களைச் சேர்ந்த அலுவலர்களும் பணியமர்த்தப்படவுள்ளனர். மருதுபாண்டியர், தேவர் குருபூஜை விழாவுக்களுக்கு வரும் வாகனங்கள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களின் அடையாள கடிதம் இருந்தால் தான் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படும். போலி ஆவணங்கள் தயாரித்து வரும் வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களை பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களை கைது செய்யவும் மானாமதுரை, திருப்புவனம் பகுதி காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. .

பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது.

மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 50 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் கோச்சடைப் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து வெற்றிக்குமரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டதாக எஸ்.எஸ்.காலனி போலீஸார் தெரிவித்தனர். முன்னதாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. .

64 ரகசிய ஆவணங்கள் வேண்டும்:மம்தா அரசிடம் நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை

சுபாஷ் சந்திரேபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை எங்களிடம் தர வேண்டும் என நேதாஜியின் உறவினர்கள் மேற்கு வங்க அரசிடம் கோரிக்கை கடிதம் எழுதி அனுபபினர்.இது குறி்த்து மம்தா பானர்ஜி பதில் கடிதம் ஏதும் எழுதி அனுப்பவில்லை. நேதாஜி, தற்போதைய மேற்கு வங்கம் மாநிலத்தில் பிறந்தவர் என்பதால், அவரது மரணம் தொடர்பான தகவல்களை பெற்றுத்தரும்படி அவரது உறவினர்கள் அம்மாநில முதல்வர் மம்தாவை கடந்த ஆண்டே கேட்டுக்கொண்டனர்.ஆனால், இவ்விவகாரத்தில் உதவிட அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.கொல்கட்டாவில்இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி வீரமரணம் அடைந்த தியாகிகள் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் நேற்று வீரவணக்கம் செலுத்தினர். நேதாஜியின் உறவினர்களில் ஒருவரான சந்திரகுமார் போஸ், விழாவில் கலந்துகொண்டபின் பத்திரிகையாளர்களிடம் பேசினார்.அவர் கூறுகையில்,சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 ரகசிய கோப்புகளை மேற்கு வங்காள அரசிடம் உள்ளது. அவை நமக்கு கிடைத்தால் அவரைப் பற்றிய ஏராளமான தகவல்களை அறிய முடியும். ஆனால், இதுதொடர்பாக முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு நாங்கள் பலமுறை கடிதங்கள் எழுதி விட்டோம்.ஒரு கடிதத்திற்கு கூட அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை. மாநில அரசே நேதாஜியின் வாழ்க்கை பற்றிய தகவல்களை அளிக்க மறுத்து விட்டால்.. மத்திய அரசிடம் இருந்து நாங்கள் எவ்வாறு பெற முடியும்? மாநில அரசும், மத்திய அரசும் நேதாஜி தொடர்பாக தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் கொடுத்துவிடவேண்டும் என்றார்.

No permission for hired vehicles for Thevar Jayanthi

Those who want to take part in the Thevar Jayanthi celebrations at Pasumpon in Ramanathapuram district on October 30 were asked to use their own vehicles and not to hire any vehicle to go there. Even ‘padayatra’ would not be allowed. Chairing a special meeting convened here on Saturday to brief those intending to participate in the ‘guru puja’ about the guidelines evolved by the Ramanathapuram Collector, K.Nandhakumar, Virudhunagar Collector T. N. Hariharan said that vehicle owners should obtain permission from the local police by registering the name of the vehicle owner and driver, the registration number and the number of travellers, and paste the permit slip on the windscreen of the vehicle.

Two more awards for 'Paradesi' at LIFF

Director Bala's critically acclaimed 'Paradesi' has landed two awards at the prestigious London International Filmmaker Festival (LIFF). The movie, which was nominated in eight categories, won the award for best costume designer (Poornima) and best cinematographer (Chezhiyan). Set in the pre-independence period, 'Paradesi' was based on the book 'Red Tea' by Paul Harris and is about the plight of tea plantation workers in south India. The film featured Atharva, Vedhika and Dhansika in lead roles. It may be recalled that 'Paradesi' won an award for best costume design for Poornima at the 60th National film awards.

ADGP reviews security for Thevar Jayanthi

5,000 police personnel to be deployed in Ramanathapuram district Additional Director General of Police (Law and Order) T.K. Rajendran on Saturday discussed with senior police officials the security arrangements for the Thevar Jayanthi on October 30. The ADGP held discussions with Inspector General (IG) of Police (South zone) Abhay Kumar Singh, six Deputy Inspectors General of Police (DIGs) and five Superintendents of Police (SPs) at the Police Recruit School in Kamudhi in the morning. “It was a general discussion on bandobust arrangement,” Ramanathapuram SP N.M. Mylvahanan said. A total of 5,000 police personnel would be deployed at various places in the district on October 28, he told The Hindu. As the deployment of Unmanned Aerial Vehicle (UAV) was very helpful to the police, it had been proposed to deploy it for the Thevar Jayanthi too. The UAV, developed by the Department of Aerospace Engineering’s Division of Avionics, Madras Institute of Technology (MIT), Anna University, could fly up to a height of 300 feet to 1,500 ft continuously for about 40 minutes. It could cover a radius of five to seven kilometres, and its high resolution camera could zoom 20 times and record all the events. DIGs M.C. Sarangan (Chennai), A. Amalraj (Tiruchi), M.T. Ganesamoorthy (Coimbatore) Sumit Sharan (Tirunelveli), Anand Kumar Somani (Madurai) and K. Periaiah (Chennai), and SPs Ashwin M. Kotnis (Sivaganga), V. Balakrishnan (Madurai), S. Maheswaran (Virudhunagar) and S.V. Karuppasamy (STF) apart from the Ramanathapuram SP attended the meeting. Later in the evening, Mr.Rajendran discussed the bandobust arrangements to be made in all southern districts with officers in Madurai. IGP (South zone) Abhay Kumar Singh, Madurai Commissioner of Police Sanjay Mathur, DIGs Anand Kumar Somani (Madurai Range), Arivuselvam (Dindigul range), and Madurai Superintendent of Police V. Balakrishnan participated in the meeting.

Thursday, October 17, 2013

144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி தேவர் நினைவிடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம்.

144 தடை உத்தரவை ரத்துசெய்யக் கோரி, பசும்பொன் தேவர் நினைவிடத்தில், தேவரின சமூகத்தினர் திடீரென சாகும் வரை உண்ணாவிரதத்தை, புதன்கிழமை தொடங்கினர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 30இல் நடைபெறும் பசும்பொன் தேவர் 106ஆவது ஜயந்தி விழா மற்றும் 51ஆவது குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் வரக் கூடாது என பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்று தேவரின கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த தேவரினக் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட மணிமண்டபத்துக்கு வந்தனர். தடை உத்தரவு நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியிருப்பதாக அவர்கள் அறிவித்து அங்கு அமர்ந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன், வட்டாட்சியர் சி.இந்திரவள்ளி, காவல் ஆய்வாளர் வை.ஆனந்தன் மற்றும் போலீஸார் பசும்பொன்னுக்கு விரைந்தனர். உண்ணாவிரதம் இருப்போரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் கைவிட மறுத்துவிட்டனர். . NOTE : WE SHOULD NOT ALLOW ANY POLITICAL OUTFITS ESPECIALLY ADMK AND DMK TO ENTER INTO PASUMPON ON JEYANTHI...ONLY OUR COMMUINNTY LEADERS SHOULD BE ALLOWED...THIS WILL TEACH THEM A BIG LESSON.

Caste, regional grouping to support BJP in Lok Sabha poll

In a sign of the political churning ahead of the upcoming Lok Sabha election, a handful of caste and regional outfits have announced the formation of a federation, which, its leaders said, will support the BJP. Though these groups on their own lack the heft to critically influence election results, their coming together in favour of BJP may help the saffron party in western Tamil Nadu, where it already has a presence. Desiya Samuga Kuttamaipu (DSK), as the federation has called itself, is an apex body of nearly 50 social and political outfits including Kongu Vellala Goundergal Peravai, Kongu Nadu Munnetra Kazhagam, Ariya Vaisya Munnetra Peravai, Indu Makkal Katchi and Tamil Desiya Katchi, with considerable presence in the districts of Salem, Erode, Coimbatore, the Nilgiris and Namakkal. DSK leaders added they will transform the federation into a political party ahead of the Lok Sabha election. At a press meet in Salem on Wednesday, leaders of DSK said Congress has failed the nation and announced their support for BJP. They plan to meet BJP's prime ministerial candidate Narendra Modi to declare their support. However, DSK will support AIADMK in the Yercaud assembly byelection slated for December 4. At the press meet, the designated state president of the federation, 'Pongalur' R Manikandan, claimed that people have lost faith in the UPA government. "The Congress government is totally corrupt and the politicians are working for money and not for public welfare," he claimed. Striking a nationalistic tone echoing the BJP national leadership, Manikandan alleged that the Union government had failed to stop Chinese incursion in Arunachal Pradesh and had failed to any initiation to end attacks (by Sri Lankan navy) on fishermen from Tamil Nadu. "So, all the caste and region-based political parties and various organizations have formed the federation to fight the Congress," Manikandan added. Manikandan said 'Best' S Ramasamy, president of Kongunadu Munnetra Kazhagam (KMK), will be the founder president of DSK while S Ganesa Thevar (president, All India Thevar Youth Peravai), Kangeyam M Thangavel (state general secretary, KMK), KC Thiru Maran (president, Thevar Desiya Peravai) and Arumugam Pillai (president, Ananthu Pillaimar Maha Sabai) will work as general secretaries and R K Jayakumar (president, Ananthu Nayudu Naicker Mahajana Peravai) will be the state treasurer. 'Auditor' M Balasubramaniam (president, Tamil Desiya Katchi) and Arjun Sampath (president, Hindu Makkal Katchi) will be the national coordinators of DSK, Manikandan added. Manikandan claimed that more than 10,000 persons have joined the federation as members. He said a large number of the party members were young. A state meet of the federation will be held in January, 2014 in Trichy. "We will announce our party agenda in that meeting. Also, we will decide our plan for Parliament election in that meeting," Manikandan said. Most of the groups in DSK have influence within their caste in western Tamil Nadu. Mostly representing the land-owning middle castes of western Tamil Nadu, these groups have been in recent times sided with PMK in espousing its anti-dalit politics. Some of the leaders also have a strong pro-Hindutva tilt in their politics. For the BJP, the development is a shot in the arm since the party had been struggling to find partners ahead of the Lok Sabha election in the state. The aggregation of these caste groups could help the party to build a momentum in its favour, especially in western Tamil Nadu, where they had won two Lok Sabha seats in 1998 and 1999. The political development is a setback to PMK which had planned to build a platform of various non-dalit castes to take on both DMK and AIADMK.

Wednesday, October 16, 2013

பசும்பொன்னுக்கு_செல்லுங்கள்


தேவர்ஜெயந்தி தடையை எதிர்த்து பசும்பொன் கோவிலில் உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளுக்கு, ஆதரவாகவும் - உறுதுணையாக உடனிருக்கவும், அருகிலுள்ள தேவரின உணர்வாளர்கள் பசும்பொன் சென்று அவர்களோடு பங்குகெடுத்து, தொடர் உண்ணாவிரதமாக்கி உலகுக்கு உரக்க சொல்லுவோம் தேவரின பலத்தை!

தேவர் ஜயந்தி விழா: புதிய கட்டுப்பாடுகள், தடை உத்தரவை நீக்க மூமுக வேண்டுகோள்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெற்ற தேவர் ஜயந்தி விழாவுக்கு மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (மூமுக) வலியுறுத்தியுள்ளது. மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு மூமுக தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழும் முக்குலத்தோர், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பசும்பொன்னில் அஞ்சலி செலுத்த மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகியோரை தேவரினம் என ஒரே பெயரில் அழைக்க தமிழக அரசு 1995 இல் வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தி, முக்குலத்தோர் அனைவரையும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வோர் ஆண்டும் தேவர் ஜயந்தி விழாவின்போது சிவகங்கை, மானாமதுரையில் இருந்து பசும்பொன் கிராமத்துக்கு முமூக சார்பில் ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, பசும்பொன் கிராமத்துக்கு நடைப்பயணமாக செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. .

Tuesday, October 15, 2013

KEELATHOOVAL il amainthulla Pasumpon Thevar alayam !!!


தென்னகத்தின் தெய்வமையா தேவர் என்னும் தெய்வமையா தேசியத்தின் தலைவர் என்று தேசம் உன்னை வாழ்த்துது ஐயாயாயாயாயாயா.,,, தென்னகத்தின் தெய்வமையாயாயாயாயாய.,,, மண்ணுலகம் போற்றுகின்ற மனித குல மாணிக்கமே., வின்னுலம் உன்னை அழைக்க வேதனை தான் தீரவில்லை.!! வெந்த புன்னும் ஆரவில்லை.!! நெற்றியிலே திருநீறு நேர்த்தியான வரலாறு .,, பத்தரைமாத்து தங்கம் பசும்பொன் முத்துராமலிங்கம்.,, தேவரையாயாயாயாயாயாயாயாயாயா.,, .

ஷீரடி சாய்பாபா கோவில் பிரசாதத்திற்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ்


ஷீரடி சாய்பாபா கோவிலில், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்திற்கு, உணவு பாதுகாப்புக்காக வழங்கப்படும், தர நிர்ணய சான்றிதழான, ஐ.எஸ்.ஓ.,- 2000 - 2005 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள, ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில், உலக பிரசித்தி பெற்றது. இங்கு வரும் பக்தருக்கு, ஒரு லட்டு இலவசமாக, பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்திற்கு, ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சாய்பாபா அறக்கட்டளை தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜெயந்த் குல்கர்னியிடம், இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

.....ICC launches world championship to preserve Tests

Cricket's governing body launched the World Test Championship 2017 on Saturday aimed at preserving the primacy of the longer format of the game. The International Cricket Council (ICC) said the inaugural championship will be hosted by England and will feature the top four teams in the ICC Test rankings, with a total prize money of $10 million at stake. "The objective of the championship is to preserve the primacy of Tests and to preserve the future of all formats of the game," ICC chief executive David Richardson said at the launch on the sidelines of the Pakistan-South Africa two-Test series starting on Monday. The championship, originally planned for 2013 but delayed because broadcasters wanted a limited overs event, will replace the Champions Trophy, the last edition of which was hosted by England earlier this year. The attractions of Test cricket have faced serious competition in recent years from the Twenty20 phenomenon. Richardson, a former South African wicketkeeper/batsman, said the qualifying phase for the Test championship runs from May 2013 and will end in December 2016. "The qualification pathway for the ICC World Test Championship will be through the ICC Test team rankings and the top four teams at the conclusion of the qualification period will qualify for the event in 2017." South Africa captain Graeme Smith said: "It's fantastic to have a pathway clearly identified for the ICC World Test Championship and to know that the top four teams will have a chance to battle it out to be crowned the ultimate champions. "It adds a new meaning for all the Test teams when it comes to the rankings and the context of all Test series," said Smith, whose team currently sits atop the Test rankings. Ashes winners England are number two, India are at three, Australia are fourth and the West Indies fifth. Pakistan and Sri Lanka are ranked sixth and seventh respectively. Pakistan captain Misbah-ul-Haq added: "Test cricket is a journey and it's the pinnacle of our game. It will add even more context to all the bi-lateral series that the Test sides play and ultimately gives each team a chance to be world champions in Test cricket." "The championship will add value to Test cricket, interest in which is dying because of Twenty20." Richardson said the format of the World Test championship will be discussed at ICC cricket committee meetings. ..

Madras HC stays police show cause notice to DFB leader

The Madras High Court Bench here has stayed a show cause notice issued by police sub-inspector to Desiya Forward Bloc founder leader for initiating action under CrPC section 107 (apprehension of breach of peace) ahead of anniversary of freedom fighter Pon Muthuramalinga Thevar. Hearing a petition by B T Arasakumar, Justice T Raja ordered the interim stay and issued notice to the SI of Abiramam police station. Petitioner sought to set aside the notice on the ground that the SI did not have the authority to issue it. Arasakumar submitted that he had challenged an order issued by the District Collector on September 8 prohibiting entry of hired and tourist vehicles ferrying people to take part in the Thevar Guru Pooja slated later this month by invoking section 144 (1) of CrPC. His statutory appeal against the order on the ground that it violated the fundamental rights under Art 19 (1) (d) of the Constitution was pending before the Collector, he said. Against this background, the sub-inspector had issued the show cause notice on Oct 10 seeking an explanation from the petitioner as to why proceedings should not be initiated him for trying to breach the peace and tranquility of the area. Arasukumar contended that as per Section 20 of the CrPc, the Revenue Divisional Officer only had the authority to issue such show cause notice. Hence he sought to set aside the notice issued by the sub-inspector. The police had banned entry of people from other districts by hired vehicles for the guru pooja (birth and death anniversaries both falling on October 30) of Thevar, a highly revered leader among the backward class Thevar community, in view of past violence during the event.

Vikram Prabhu's 'Ivan Vera Maathiri' Trailer Released

The official trailer of Tamil film "Ivan Vera Maathiri" ("He is Different") has been released on the video-sharing site YouTube. [To watch the video, click here] Directed by Saravanan of "Engeyum Eppodhum" fame, "Ivan Vera Maathiri" is a romantic-thriller flick with Vikram Prabhu in the lead. Unlike his character in his debut film "Kumki", Vikram plays a city-bred youth in his upcoming project. Actress Surabhi is in the female lead, while Vamsi Krishna plays the bad guy. "Ivan Vera Maathiri", touted to be an action-packed entertainer, also features Ganesh Venkatraman in a pivotal role. The film is co produced by UTV Motion Pictures and director N Lingusamy's Thirrupathi brothers. Its music is composed by Sathya, who worked in Saravanan's directorial debut. The audio launch of the film is expected to take place next week. The trailer of the Vikram Prabhu starrer, which was released on 12 October, gives us a glimpse of what to expect from the film. The two-minute, three-second-long video looks promising and is sure to impress the audience. Director Saravanan's first film "Engeyum Eppodhum" was not just critically-acclaimed, but also commercially successful. The filmmaker's directorial skills came in for appreciation from the critics and the audience alike. On the other hand, Vikram Prabhu's debut flick "Kumki" was also a big hit. The actor won accolades for his wonderful performance as a mahout. The combination of Saravanan and Vikram has raised the expectations among their fans. Initially, it was reported that the film will release during Diwali this year. But the festive season is already clogged with three films including Ajith's "Arrambam", Karthi's "All in All Azhaguraja" and Vishal's "Pandiyanadu". "Ivan Vera Maathiri" is confirmed to release in November. However, the exact release date is yet to be announced.

Ayngaran gets Ajith’s Arrambam!

Thala Ajith's Arrambam with Vishnuvardhan has been wrapped up and is set to hit screens for Diwali. This multistarrer having Arya, Nayantara and Taapsee alongside Ajith has been creating quite a buzz right from the day it started rolling! Now, the latest we hear is that the one of the biggest movie houses Ayngaran has gotten the distribution rights of Arrambam for the biggest area in TN - the North and South Arcot and Chengalpet area. This movie, produced by AM Rathnam and Sri Satya Sai Movies will be going to the Censor Board in the third week of September, with its' release date scheduled to be October 31. Yuvan has handled the music for this movie which will compete with Karthi's Azhaguraja - All in All and Vishal's Paandiya Naadu.

Monday, October 14, 2013

நடிகர் பிரபுவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்


நடிகர் பிரபுவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை, பல்லாவரத்தில் உள்ள அப்பல்கலைக்ழகத்தின் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளிகளில் சிறப்பாக பணியாற்றமைக்காக பலருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்படி திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் நடிகர் பிரபுவுக்கு D.Litt கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டத்தினை பிரபுவுக்கு, வேல்ஸ் பகலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் வழங்கினார். ஏற்கெனவே பிரபுவுக்கு சத்யபாமா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி படத்துக்கு தமன் இசை


விஜய்சேதுபதியின் வன்மம் படத்துக்கு தமன் இசையமைக்க இருக்கிறார். ’பீட்சா’, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூதுகவ்வும்’ போன்ற படங்களில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பின் மூலம் பேசப்பட்டவர் விஜய்சேதுபதி. தற்போது இவர் ‘சங்குதேவன்’ என்ற படத்தில் ரொம்பவும் வித்தியாசமான ஒரு கெட்-அப்பில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து ‘வன்மம்’ என்ற படத்திலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ஜெய் கிருஷ்ணா இயக்குகிறார். முதலில் இந்தப் படத்திற்கு ரகுநந்தன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இப்போது அவர் கிடையாது. அவருக்கு பதிலாக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தமன், தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான இசை அமைப்பாளராக இயங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறக்க வேண்டாம் மறக்க வேண்டாம்


மறக்க வேண்டாம் மறக்க வேண்டாம் கடந்த ஆண்டு அக்டோபர் 30 2012 தேவர் ஜெயந்தி குரு பூஜை படுகொலைகளை மறக்க வேண்டாம். *இனமான 10 சகோதரர்களை பறிகொடுத்த படுபாதக நிகழ்வினை மறக்க வேண்டாம். *இந்த அட்டூழியங்களை அமுக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்த ஆளும்கட்சியை மறக்க வேண்டாம். * ஏன் என்று கேட்காமல் ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளையும் மறக்க வேண்டாம். *நடந்தது சாதி கலவரம் போல் சித்தரித்து சாதி கலவரம் வேண்டாம் சமாதனம் வேண்டும் என்று உண்ண விரத நாடகம் நடத்திய கம்முநிஸ்ட் கம்முனாட்டிகளை மறக்க வேண்டாம். *தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து திரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் காவுவாங்கிகளை மறக்க வேண்டாம். *நீதி மன்றம் தீர்ப்பு சொல்வதற்கு முன் சகோதரர்கள் பிரபு பாரதி குமார் ஆகிய மூவரையும் போலி என்கௌன்டேரில் சுட்டு கொன்ற கோமாளிகளை மறக்க வேண்டாம். *144 தடை என்பாங்களாம்.பரமக்குடியில் இருந்து தூவலுக்கு வருவதற்கு தடை என்பாங்களாம்.ராம் விலாஸ் பாஸ்வான் என்ற வடநாட்டு காரர் பரமக்குடிக்கு வந்துவிட்டு போவாராம்.கோமாளி காவல் துறை கூட்டத்தை துணிந்து எதிர்போம். *நம்மை சாதி வெறியர்களாகவும்,திருடர்களாகவும்,ரொவ்டீகளாகவும்,தொடர்ந்து காண்பித்து கொண்டு,நமது கடவுள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பூக்களுக்கு கலங்கம் ஏற்படுவதுபோல தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் சமூக விரோத தீவிரவாத கோமாளி ஊடக கூட்டமான சானா வெறியன் தினத்தந்தியையும்,தொந்தி டிவியையும்,விபசார சானல் சன் ந்யூஸ்,பிரிவினை வாத சானல்கள் கலைங்கர்,ஜெயா டிவியும்,தலித்துககளுக்காக உண்மை வரலாறுகளை கூட மறைக்க துடிக்கும் சத்தியம்,ஜி டிவி,புண் நாக்கு தலைமுறையையும் நாம் மறக்க வேண்டாம்.மன்னிக்கவும் கூடாது.புறக்கணிக்க வேண்டும் *வருகிற தேவர் ஜெயந்தி குரு பூஜைக்கு போஸ்டர் அதிகமாக ஒட்டுங்கள்.அதில் தேவர் அவர்களின் அறிய புகைப்படங்களை இடம்பெற செய்யுங்கள்.கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் அதுதான் உண்மை வரலாற்றை அனைவருக்கும் எடுத்து கூறுவதாக இருக்கும்.உதாரணமாக தேவர் அவர்கள் நேதாஜியோடு இருப்பது போல்,ராங்கூனிலே ஆன்மீக ஊரை ஆற்றுவது போல் உள்ள புகைப்படம் இப்படி தேவர் அவர்களுடய உண்மை புகைப்படங்களை போஸ்தேராக ஒட்டுங்கள். *இளைங்கர் எழுச்சி தேவர் சமுதாய வளர்ச்சி. *வெற்றி வேல் வீர வேல்.... Arivazhagath Thevar Keelathooval

ராமனாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவை நீக்ககோரி ஆர்பாட்டம் : 156 பேர் கைது


அக்டோபர் 30-ல் தேசிய தலைவர் ஐயா ”பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்” அவர்களின் குருபூஜை விழாவிற்கு செல்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தளர்த்தக்கூறியும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய 144 தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் ”ஒருங்கினைந்த தேவர் சமுதாய அமைப்புகள்” சார்பாக, இன்று சிவகாசி ரிசர்வ்லையனில் உள்ள தேசிய தலைவர் ஐயா ”பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்” அவர்களின் திரு உருவச்சிலை முன்பு ஆர்பாட்டம் நடக்கிறது. இதில் பெருந்திரலானோர் கலந்துகொண்டனர். இந்த உத்திரவை வாபஸ் பெறக்கோரி சிவகாசியில் தேவர் அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்பாட்டம் நடத்தினார்கள்.ஆர்பாட்டம் நடத்துவதற்கு காவல்துரையிடம் அனுமதி வாங்கவில்லையாம். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லயன் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு செந்தூர்பாண்டி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அனுதிபெறாமல் ஆர்பாட்டம் நடத்தியதாக 156 பேரைசிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

It’s going to be Vijay Sethupathi, Vishnu and Yuvan!


ishnu Vishal, who debuted with Vennila Kabaddi Kuzhu under Suseendhiran’s direction, was last seen in Seenu Ramasamy’s Neer Paravai where his performance was received with good response. The latest is that he will once again be teaming up with Seenu Ramasamy in Idam Porul Eval (IPE) which is all set to be produced by Lingusamy under the Thirrupathi Brothers banner. An interesting information about IPE is that Vishnu will be teaming up with the latest sensation of Tamil films, Vijay Sethupathi. Currently Vishnu Vishal is shooting for Suseendhiran’s Veera Dheera Sooran and it has been learnt that the Drohi star will start IPE once he is done with Veera Dheera Sooran. Meanwhile Yuvan Shankar Raja for the first time will be doing music for a Seenu Ramasamy’s film. With such a combination of talented artists on board, Idam Porul Eval is sure raising a lot of expectations. Good luck team!

கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் தமிழக அரசின் முத்திரைச் சின்னம்


தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவடபத்ரசாயி கோயில் கோபுரத் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது. தமிழ்நாடு அரசு சின்னத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் இருக்கும் ஆண்டாள் கோயிலின் கோபுரம்தான் இடம் பெற்றுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமைக்குக் குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்லாக விளங்குவது ஸ்ரீ வடபத்ரசாயி பெருமாளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 11 அடுக்குகளைக் கொண்ட கோபுரம் கொண்ட கோவில் ஆகும். இந்த கோவில் கோபுரம் 192 அடி உயரமானது. இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆகும். இந்த சீர்மிகு கோவில் பெரியாழ்வார் என்னும் பெருமாளின் அடியாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்று கூறுவர். அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் நம்பப்படுகிறது. 2000-ம் ஆண்டில் இக் கோபுரத்திற்கு இறுதியாக திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இக் கோயில்களின் திருப்பணிகள் தொடங்கியது. இங்குள்ள உள்ள பெரியாழ்வார் சன்னதி, வடபத்ரசாயி கோயில்களில் தங்க கொடி மரம் அமைக்கும் பணி மற்றும் கோபுரம் புனரமைக்கும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது சுமார் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 2014 ஜனவரி மாதத்தில் இக் கோயிலுக்கான கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கோயில் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை கூறியதாவது: இக் கோபுரம் தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக உள்ளதால், கோபுரத் திருப்பணிக்கு ரூ.45 லட்சம் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.25 லட்சம் வரவேண்டியுள்ளது. கோபுரத்தை கிடுகு தட்டி கொண்டு மறைத்து வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. தற்போது கோயில் பாதுகாப்பு காரணங்களுக்காக கோபுரத்தை மறைத்துள்ள தட்டிகளை எடுக்கக் கூறிவிட்டார்கள். அதனால் கிடுகு தட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. வர்ணம் பூச அமைக்கப்பட்ட சாரம் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. கோபுரத்தின் கீழ் தட்டுப் பகுதியில் வேலைகள் உள்ளது. முதலில் இக் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பின்னர் ஸ்ரீஆண்டாள் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார் அவர்.

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி


அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி, தலைவர் முக்குலத்து முதல்வர் "மு. கார்த்திக்" ஆனைக்கினங்க தெய்வ திரு.S.v "பூபாலன்" அன்போடு தொண்டர்கள் சார்பாக ஆக்டோபர். 27,30.மருது பாண்டியர், தேவர் ஜெயந்திக்கு, அரசு அறிவித்த தடையை நீக்கி வாடகை வாகனத்தில் செல்ல அனுமதி தர வழியுறுத்தி வருகிற 21.10.2013. அன்று இராமநாதபுரம் கலெக்டரிடம் கோரிக்கை மணு அழிக்க வரும். தமிழ்நாடு அ.இ.நா.ம.க மாநில கமிட்டி உறுப்பினர்,மாவட்ட செயலாளர் தொண்டர்கள், அனைத்து முக்குலத்து சமுதாய கட்சிகள் மற்றும் மக்கள், அனைவரும் வருக! வருக ! என அழைக்கிறோம்! இராமநாதபுரம் மாவட்ட அ.இ.நா.ம. கட்சி தலைமை மாவட்ட செயலாளர் Bk.காளிதாஸ், மாவட்ட தலைவர் ராமதாஸ்,துணைதலைவர் துரைபாண்டி, மாவட்ட பொருளாளர் மகாதேவன், மாவட்ட இளைஞர் அணி ராஜ்குமார், நகர் செயலாளர் சதிஸ், ஒன்றிய செயலாளர் ராஜகம்,ஒன்றிய இளைஞர்அணி செயலாளர் சேதுபதி,கமுதி முனியாண்டி சாயல்குடி கார்த்திக், இவண், மாவட்ட மாணவர் அணி செயலாளர் H."தல ஓம் பிரகாஷ்"

Saturday, October 12, 2013

Pasumpon Muthuramalingam Thevar


அஞ்சலி செலுத்த செல்வோருக்கான விதிமுறைகள் காவல்துறை அறிவிப்


சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டத்தில் மருதுபாண்டியர் நினைவு நாள் விழா அக். 27 ஆம் தேதி நடைபெறவிருப்பதால், காளையார்கோயிலுக்கு அஞ்சலி செலுத்த வாகனங்களில் செல்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை காவல்துறையினர் அறிவித்துள்ளனர். சிவகங்கை நகர் காவல்நிலையத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமை வகித்தார். கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விளக்கினார். நினைவஞ்சலி செலுத்தச் செல்பவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில்தான் செல்லவேண்டும். வாடகை வாகனம் அமைத்துச் செல்ல அனுமதி கிடையாது. இரண்டு சக்கரம், டிராக்டர், மினிவேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது. நடைபயணமாக செல்லவும் அனுமதியில்லை. திறந்தநிலை வாகனங்களில் செல்லக்கூடாது. வாகனங்களின் கேரியர்கள் மற்றும் ஏணிப்படிகள் கழற்றப்பட்டிருக்க வேண்டும், வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து செல்லக்கூடாது. வாகனங்களில் ஆயுதங்களையோ, வெடிக்கக்கூடிய பொருள்களையோ எடுத்துச்செல்லக்கூடாது. வாகனங்களில் இருக்கைகள் தவிர மற்ற இடங்களில் அமர்ந்து கொண்டோ தொங்கிக்கொண்டோ செல்லக்கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் செல்லவேண்டும். அனைத்து வாகனங்களும் காவல்துறையினர் சொல்லும் இடத்தில் ஒன்று கூடி காவல் துறையின் வழிக் காவலுடன் மட்டுமே சென்று திரும்பவேண்டும். நினைவு நாளுக்குச் செல்லும் வாகனங்களின் பதிவு எண், முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை 3 நாள்களுக்கு முன்பாகவே அந்தந்த காவல்நிலையத்தில் பதிவு செய்யவேண்டும். காவல்துறை வழங்கும் அனுமதி அட்டை ஒவ்வொரு வாகனத்திலும் ஒட்டப்பட்டிருக்கவேண்டும். அனுமதி அட்டை ஒட்டப்படாத வாகனங்கள் சோதனை சாவடியில் நிறுத்தி திருப்பி அனுப்பப்படும். விழாவுக்குச் செல்லும் வாகனங்களில் செல்பவர் பெயர், முகவரி பட்டியல் சம்மந்தப் பட்ட காவல்நிலையத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. பிளக்ஸ் போர்டுகள், தட்டி போர்டுகள்,பேனர்கள் இவற்றை காவல்துறை அனுமதி யின்றி வைக்கக்கூடாது. காவல்துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் அந்த பேனர்களில் எழுதப்படும் வாசகங்களை முன்கூட்டியே காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும். பேனர் களை வைப்பவரே பாதுகாப்பு பொறுப்பையும் ஏற்கவேண்டும். வாகன வழித்தடத்தில் அமைந்துள்ள ஊர்களைக் கடந்து செல்லும்போது டிரம்செட் போடுவது, கோஷம் போடுவது கூடாது. பட்டாசு கண்டிப்பாக வெடிக்கக்கூடாது. வாகனங்களில் கண்டிப்பாக ஒலி பெருக்கி அமைத்துச் செல்லக்கூடாது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் வாகனங்களில் செல்லவேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை காவல்துறை அறிவித்துள்ளது.

தேவர் குரு பூஜை ஆலோசனை கூட்டம்


ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அக்., 30ல் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை நடக்கவுள்ளது. இதையொட்டி, கலெக்டர் நந்தகுமார் தலைமையில் அனைத்து சமுதாய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்டத்தில் தற்போது, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், அக்., 25 முதல் 31ம் தேதி வரை வாடகை வாகனங்கள், டிராக்டர், டூவீலர்கள், ஆட்டோக்களில் செல்ல அனுமதி கிடையாது. பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் வரவேண்டும்.இதுபோன்ற வாகனங்களுக்கு, அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனில் முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி சான்று வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே வந்து, செல்ல வேண்டும். வரம்பு மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என வலியுறுத்தப்பட்டது. எஸ்.பி., மயில்வாகனன், டி.ஆர்.ஓ., விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


கமுதியில் பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள், வியாழக்கிழ மை, ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ராமேசுவரத்தில் பசும்பொன் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கமுதி-கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை இவர்கள் புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்திருந்தனர். சிலை அவமதிப்பு கண்டன கோஷங்களை மாணவர்கள் முழங்கினர். சிலையை சேதப்படுத்தியவர்களை துரிதமாக கைது செய்து, காவல் துறையினர் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.