Monday, August 25, 2014

‎திருமணப்_பதிவு‬ - பற்றி தெரிந்துகொள்வோம்

“ ‪#‎தமிழ்நாடு_திருமணப்_பதிவுச்_சட்டம்‬ ’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது. ‪#‎எங்கே_பதிவு_செய்ய_வேண்டும்‬ ? கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்ட், வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட பான்கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும். ‪#‎எப்படி_விண்ணப்பிக்க_வேண்டும்‬ ? சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த சில நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய். ‪#‎அப்போதும்_பதிவு_செய்யவில்லை_என்றால்‬ ? திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம். ‪#‎இத்தனை_நாட்களாக_இல்லாத_இப்படி_ஒரு_கட்டாயச்_சட்டம்_இப்போது_என்ன_அவசியம்‬ ? பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. ‪#‎இந்தச்_சட்டத்தால்_என்ன_பலன்‬ ? ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில்கூட அந்த ஆசாமி நாலு திருமணங்களையுமே பதிவு செய்திருந்தாலும்கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும். ‪#‎இந்தச்_சட்டம்_எல்லா_ஜாதியினருக்கும்_மதத்தினருக்கும்_பொதுவானதா‬ ? ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம். அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

Yuvan to score music for Bharathi Raja's next


Bharathi Raja's last release 'Annakodi' received lukewarm response at the box-office and didn't went well among critics. But the ace actor bounced backa s an actor with his rollicking performance in Suseendran's 'Paandiyanaadu'. Now, Bharathi Raja is all set to make his next movie which is based on an Indian family settled in London. The story deals about the relationship between a grandfather and grandson in the family. Yuvan shankar raja has been roped in to compose the music. The other details about the cast and crew are yet to be revealed. This movie is expected a lot as this is hoping to be a comeback by the legend.

Sunday, August 24, 2014

மதுரை ‪#‎பாண்டிகோவில்‬ வரலாறு :


"மேரியோ, மாரியோ, பத்மாவோ, பாத்திமாவோ... யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு வருகிறார்கள். கர்ப்பக்கிரகம் வரை சென்று பாண்டியைத் தரிசிக்கிறார்கள் " பல வருடங்களுக்கு முன்னால் இந்த இடம் பழைய மதுரைனு சொல்லப் பட்டது. கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார். வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பெருசா எடுத்துக்கல. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள் கிட்ட.இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட.மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்திலேயே கோவில் பிரபலமாகிவிட, வெள்ளைக்கார அரசாங்கம் கோவிலுக்கு சில சட்ட திட்டங்களைப் போட்டது. இதேபோல் எல்லா கோவில்களுக்கும் சட்டங்கள் போட்டது. ஆனால் வள்ளியம்மை நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக 1930-களில் ‘"அரசு சட்டங்களிலிருந்து விலக்கு அளிக் கப்பட்ட கோவில்' என்ற பெருமை யைப் பெற்றது. இப்போதும் தமிழக அரசின் அறநிலையத்துறையின் ‘"அன்ன தானம்' உள்ளிட்ட சில சலுகை களைப் பெற்றாலும், இது விலக்கு அளிக்கப்பட்ட கோவில்தான். வள்ளியம்மையின் வம்சாவழியினர் தொடர்ந்து கோவில் பூசாரிகளாக இருந்து வந்தனர். எனது தாத்தா பாண்டி இந்தக் கோவிலில் பூசாரி யாக இருந்தபோது "பாண்டி பூசாரி கோவில்' என.அழைக்கப்பட்டு, நாளடைவில் ஜடாமுனீஸ்வரர் என்பது மாறி பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனது. பக்தர்கள் கோரிக்கை யில் நியாயம் இருந்தா... அதை உடனே நிறை வேத்தி வைப்பார் பாண்டி முனி. பில்லி, சூன்ய, ஏவல்களில் பாதிக்கப்பட்ட வங்க பாண்டிகிட்ட முறை யிட்டா உடனே சரி பண்ணுவார். குழந்தையில்லாதவர்கள் தூளிகட்டி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்'' என பாண்டி கோவில் வரலாற்றைச் சொன்னார் சிவாஜி பூசாரி. பொதுவாக இந்துக்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்தான் கோவிலுக்குப் போவது வழக்கம். ஆனால் "நல்லவருக்கு ஏது நாளும் கிழமையும்' என்பதுபோல... செவ்வாய், வெள்ளியோடு ஞயிற்றுக்கிழமை ரொம்ப விசேஷமாக இருக்கிறது. அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மேரியோ, மாரியோ, பத்மாவோ, பாத்திமாவோ... யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு வருகிறார்கள். கர்ப்பக்கிரகம் வரை சென்று பாண்டியைத் தரிசிக்கிறார்கள். இப்படி சமயங்களைக் கடந்த சாமியாக இருக்கிறார் பாண்டி. பொதுவாக வீடுகளில் வெள்ளி, செவ்வாயில் அசைவம் சமைக்காத- உண்ணாத இந்துக்கள்கூட குடும்பம் குடும்பமாக வந்து ஆட்டுக் கெடா வெட்டி அங்கே சமைத்து உண்ணு கிறார்கள். செவ்வாய்க் கிழமையில் 200 கெடா வெட்டு, வெள்ளிக் கிழமையில் 400 கெடா வெட்டு, ஞாயிற்றுக் கிழமையில் 500 கெடா வெட்டு நடக்கிறது. அந்த சுற்றுப் பகுதியெங்கும் கறிக்குழம்பு வாசம் கமகமக்கிறது. ஆனாலும் பாண்டிமுனி சைவச்சாமி என்கிறார் சிவாஜி பூசாரி. நமக்கு திகைப்பாகத்தான் இருக்கிறது. ""பாண்டி- ஆண்டி- சமயன் என மூன்று தெய்வங்கள் இங்கே இருக்கு. பாண்டிக்குக் கட்டுப் பட்டவர் ஆண்டி. அவருக்கு சுருட்டு வைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஆண்டிக்கு விருப்பமானது மாம்பழ பூஜை. பாண்டிக்குக் காவலாக இருப்பது சமய கருப்பு சாமி. பாண்டி நிறைவேற்றிய கோரிக்கைகளுக்குப் பிரதிபலனாக மக்கள் கெடா வெட்டுவது கருப்புக்குத்தான். பாண்டி சைவச்சாமி. பொங்கல் படையல், நெய், பால், பன்னீர், சந்தன அபிஷேகம்தான் பாண்டிக்கு இஷ்டம். அதை மீறி பாண்டிக்கு எது கொடுத்தாலும் பக்தர்களின் இஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார் பாண்டி''’என்கிறார் சிவாஜி பூசாரி. லாரிகளில், டிராக்டர்களில், பஸ்களில், வேன்களில் கூட்டம் கூட்டமாக வந்தபடியே இருக்கிறார்கள் மக்கள். நிறைவேறின கோரிக்கைக்காக நேர்த்திக்.கடன் செய்ய வரும் பழைய பக்தர்கள், கோரிக்கை வைப்பதற்காக வரும் புதிய பக்தர்கள் என எல்லா நாளும் திருவிழாவாக இருக்கிறது பாண்டி கோவிலில். சமய பேதங்களைக் கடந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் இந்த சைவ முனி.

Gowtham Karthik


Voting lines are still open. Keep your votes coming friends. Follow the link http://siima.in/nominations/ ‪#‎GauthamKarthik‬ ‪#‎BestDebutMale‬ ‪#‎Siima‬

ஒரு நிமிடம் வாசித்து பாருங்கள்!!! - ஆனந்த் தேவன்


முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திய முதல்வருக்கு 5மாவட்ட விவசாயிகள் சார்பில் மதுரையில் பாராட்டு விழா எடுக்கிறார்கள் இந்த பாராட்டு விழாவிற்கு சொந்தமான விழா நாயகன் ஒருவர் இருக்கிறார் யார் என்று ஆவலோடு வரலாற்றின் பக்கங்களை சற்று பின்னோக்கி புரட்டிபார்க்கலாம் 2002ம் ஆண்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவேண்டும் என்று கேரள அரசிற்கு எதிராக ஒரு நபரால் வழக்கு தொடங்கபடுகிறது அந்த நபர் தான் தொடங்கிய பொதுநல வழக்கிற்காக தனது பல லட்சம் சொத்துகளை விற்று விவசாய நலன் ஒன்றே தனது குறிக்கோளாக கொண்டு இறுதி வரை போராடுகிறார் அதன் விளைவு 2006ம் ஆண்டு முல்லைபெரியாற்று அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என தீர்ப்பு அளித்தது உச்சநீதிமன்றம் இதை ஏற்க கேரள அரசு தயராகவில்லை பின்பு 2011ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி கேரள அரசை கண்டித்து மதுரையில் ஒரே நாளில் பல லட்சம் மக்களை திரட்டி பிரம்மாண்ட பேரணியை நடத்தி காட்டினார் அந்த சரித்திர நாயகன் திரு.சீமான் என்கிற மீனாட்சி சுந்தர அம்பலம் இவர் தான் இன்றைய மதுரை பாராட்டுவிழாவின் ஆணிவேர் இன்றைக்கு நம்முடன் இவர் இல்லை என்றாலும் இந்த தியாக உள்ளத்தை மறந்துவிடாமல் கெளரவ படுத்தினால் நலம் வரலாற்றை மறக்காதே!மறவாதே!

#‎உங்களுக்கான_அபராதம்‬


1.உரிமம் இல்லதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது/section 180. Rs.50 fine 2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் section 181. Rs.500 fine 3.உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழ்ந்தவர்கள் வண்டி ஓட்டுதல் section 182(1). Rs.500 fine 4.அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் section 183(1) Rs.400 fine 5..மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல் .முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) section 183(2).Rs.300 fine 6..அபாயகரமாக ஓட்டுதல் section 184. Rs.1000 fine மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) section 177.RS.100 fine 7..குடிப் போதையில் வண்டி ஓட்டுதல் section 185 .Rs.court 8. மன நிலை ,உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .section 186. Rs.200 fine 9..போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் section 189. Rs 500 fine 10..அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது section 190(2) .Rs.50 fine 11..அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் section 190(2).Rs.50 fine . 12..காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் section 190 (2) .Rs.50 fine 13..பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் section 192. Rs.500 fine 14..அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் section 194.Rs.100 fine 15..காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) section 196 .Rs.1000 fine 16..வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் section 198 .Rs.100 fine 17..போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் section 201 .Rs.50 fine

Friday, August 22, 2014

அரிசி தண்ணீர் ஃபேஸ் வாஸ்


நம் ஒவ்வொருவரின் சருமம் பொலிவடைந்து நீண்ட காலத்திற்கு புத்துணர்வு பெற்று விளங்க அரிசி பெரிதும் உதவுகிறது. வளுவளுவென பொலிவடைந்த வெண்ணிற சருமத்தை பெறுவதற்கு தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்களின் சருமம் வளுவளுவென வெண்ணிறத்தில் பொலிவடைந்து காணப்படும். சருமத்தை பொழிவடையச் செய்யும் வழிகள்: வேக வைக்காத அரிசியை சரியாக இரண்டு டீஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்தில் போடவும். அரிசியில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கற்களை நீக்கி நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். சுத்தப்படுத்திய அரிசியில் சுத்தமான நீரை ஊற்றி அந்த பாத்திரத்தை மூடி விடவும். அரிசி அனைத்தும் பாத்திரத்தின் அடி பாகத்தில் வந்தடைய, அதை 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். இப்போது பழுப்பு அல்லது பாலின் நிறத்திலான அந்த நீரை தனியாக வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். இந்த நீரை கொண்டு உங்கள் முகத்தை நன்றாக தேய்த்து கழுவுங்கள். பின் உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் வரை அப்படியே இருங்கள். காய்ந்த பிறகு அந்த அரிசி நீரை கொண்டு மீண்டும் ஒரு முறை முகத்தை கழுவுங்கள். உங்கள் முகத்தில் உள்ள ஈரப்பதம் காயும் போது, அரிசி நீரில் இருக்கும் அனைத்து வைட்டமின் மற்றும் கனிமங்களும் உங்கள் சரும துவாரங்கள் வழியாக உள்ளேறும். முகத்தை கழுவிய பின்பு, உங்கள் சருமத்தை கையால் வருடும் போது அதிலுள்ள மென்மையை நீங்கள் உணரலாம். இதனால் ஆர்கானிக் மேக்-அப் வகையாக கருதப்படும் இதனை பின்பற்றி பொலிவடைந்து ஜொலிஜொலிக்கும் சருமத்தை பெறலாம். நாம் பயன்படுத்தும் அரிசி ஒரே தரத்தில் இருப்பதில்லை. அதனால் உங்கள் மேனியின் பளபளப்பு அதிகரிக்க விதவிதமான அரிசி வகைகளை பயன்படுத்தி பாருங்கள்.

மாமன்னர் புலி தேவர் வரலாறு:


இந்திய விடுதலை போரின் முதல் சுதந்திரமுழக்கம் செய்த மாவீரன் நெல்கட்டும்செவல் மன்னர் 'காத்தப்பப் பூலித்தேவர்' என்ற பூலிதேவரின் பிறந்தநாள் விழா. மாமன்னர் புலி தேவர் வரலாறு: இயற்பெயர்: ,'காத்தப்பப் பூலித்தேவர்' 'பூலித்தேவர்'என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர். பெற்றோர்கள்:சித்திரபுத்திரத் தேவர் - சிவஞான நாச்சியார் பிறப்பு: 1-9-1715 இறப்பு: "பூலிசிவஞானம்" இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டவர் மாமன்னர் புலி தேவர், வாள் வீச்சில் வல்லவர், மிக பெரிய யானை படையும், குதிரை படையும் கொண்டிருந்தர். மறவர் இனத்தை சார்ந்தவரான புலி தேவர் நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கு(1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார் விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்பு: 1755ஆம் ஆண்டு கர்னல் எரோன் தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்யைனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார். அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல்கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார். 1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல்கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1767 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார். நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார பிறப்பு: மதுரையின் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்றுநெற்கட்டான் செவ்வல் பாளையம் ஆகும். பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர்,'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்'என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர். சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய குல தெய்வமான (பூலுடையார் கோயில்)உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்தார். பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார். பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. வாழ்கை: அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர். பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டத அன்னியர் எதிர்ப்பு: பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது. ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள். இத்கு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர். பாளையக் காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது. மாபூஸ்கான், கர்னல்ஹெரானுக்குச் செய்தி அனுப்டபி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார். ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள். இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான். 1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது. 1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடிம் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவரால் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார். ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர், இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச் சென்றார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர். மறைவு: பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும் , அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது. Thanks :Vallambar Vamsam

Thursday, August 21, 2014

Vijay Sethupathi


Vijay Sethupathi was recently seen in an impactful cameo in Jigarthanda and also for a little while in Kathai Thiraikathai Vasanam Iyakkam. Fans loved him in these parts, particularly in Jigarthanda where Siddharth would visualize Vijay Sethupathi as A.Kumar in his movie. In the upcoming Thirudan Police too, Sethupathi would be seen in an extended cameo comprising couple of scenes and the 'Kuthaattam Podu' song. The director Caarthick Raju believes that the audiences would go mad in delight while seeing Vijay Sethupathi in such a 'massy' number on screen for the first time. To add to the fun, 'Naan Kadavul' Rajendran would be sporting a lady's makeover in this song. It sure promises to be riotous fun. Thirudan Police is set for release in the second week of September. It definitely wasn’t a cake walk for Vijay Sethupathi to reach the level he is at, today and his story is well known. In 2012, when he was still on his rise, Vijay Sethupathi had worked on a Kannada Movie Akhada. He played the lead villain in the movie and soon the dubbed version of the film is set to release in Tamil Nadu, with him being the face of the film in the state. Titled Edakku in Tamil, the film is an S Shivan directorial, also starring Vasanth, Nayana Krishna, Avinash and Dharma in major roles. Ulagesh Kumar has worked on the dialogues and Shaman Mithru has wielded the lens.

Tuesday, August 19, 2014

மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை சீர்குலைக்கும் விதமாக


மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவை சீர்குலைக்கும் விதமாக அரசு திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு.