Tuesday, July 12, 2016

பட்டா விவகாரத்தில் வழக்கு : சகாயத்திற்கு 'நோட்டீஸ்'

பட்டா விவகாரத்தில் இழப்பீடு கோரிய வழக்கில், மதுரை முன்னாள் கலெக்டர் சகாயத்திற்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பொதுநல வழக்குகள் மைய நிர்வாகி ரமேஷ் தாக்கல் செய்த மனு: மதுரை நிலையூரில், 20 பேருக்கு இலவச பட்டா கோரி, மதுரை கலெக்டரிடம், 2011 ஜூன் 23ல் மனு அளித்தேன்; நடவடிக்கை இல்லை. உயர் நீதிமன்றம், எட்டு வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டது. நடவடிக்கை இல்லாததால் அவமதிப்பு மனு தாக்கல் செய்தேன். அரசு வழக்கறிஞர், 'சகாயம் கலெக்டராக இருந்தபோது, 2012 ஜன., 26ல் பட்டா வழங்கப்பட்டது' என்றார். இதனால், வழக்கு முடிக்கப்பட்டது. பட்டா கோரியவர்கள் வீடு கட்ட சென்றபோது, சிலர் மிரட்டினர். அதே இடம், 2001ல் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டது தெரியவந்தது. சகாயத்திடம் புகார் செய்தோம். மதுரை தெற்கு தாசில்தார், 'மாற்று இடம் வழங்கப்படும்' என்றார்; நடவடிக்கை இல்லை.
சகாயம் உண்மைகளை மறைத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். பட்டா கோரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதில் கலெக்டர் மற்றும் அவரது கூடுதல் நேர்முக
உதவியாளர் (நிலம்) உண்மைகளை மறைத்து, 2014ல் தவறான பதில் மனு செய்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ரமேஷ் மனு செய்திருந்தார். இதையும், இழப்பீடு கோரி, மதுரை மீனாட்சிபுரம் ஷகிலா உட்பட, 17 பேர் தாக்கல் செய்த மனுவையும், நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்தார்.
பின், 'தமிழக அரசின் தலைமைச் செயலர், வருவாய் துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். சகாயத்திற்கு 'நோட்டீஸ்' அனுப்பப்படுகிறது' எனக்கூறி, விசாரணையை ஜூலை, 29க்கு ஒத்திவைத்தார்.

7 comments:

Unknown said...

box office collection
Cinema News
box office
Hindi song lyrics
Bollywood upcoming movies

the health stuff

Latest Jobs said...

Nice website I really like your blogs and posts.

Jobs in Pakistan said...

Nice website I really like your blogs and posts.

Pakistan Jobs 2017 said...

V.good information , your website always post good and informative article.

Dial jordan said...

Dialjordan is India’s one of the emerging online business listing website.Dialjordan Local Internet Search Engine India, Internet Business Directory Provides Information about Companies, Services and products All Indian Cities.Find the local businesses instantly at dialjordan

South Florida wrongful death lawyer said...

I want looking at and I believe this website got some really useful stuff on it! .

On the supplements said...

I want looking at and I believe this website got some really useful stuff on it! .