Sunday, January 24, 2016

காளைகளை அறிவோம் ...

தமிழகத்தில் 6 வகையான மாட்டு இனங்கள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் காங்கேயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் மலைமாடு என்ற இனமும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உம்மபலச்சேரி என்ற இனமும், மதுரை மாவட்டத்தில் புளியகுளம் என்ற இனமும், தேனி மாவட்டத்தில் மலைமாடு என்ற இனமும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் போன்ற இடங்களில் ஆலாம்பாடி என்ற இனமும் இருந்தன. 

இதில் ஆலாம்பாடி என்ற இனம் அழிந்து விடடது. இன்றைய நிலவரப்படி ஒரு லட்சம் காங்கேயம் மாடுகளும், 22 ஆயிரம் பர்கூர் மலைமாடுகளும், 30 ஆயிரம் புளியகுளம் மாடுகளும், 30 ஆயிரம் மலைமாடுகளும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் காங்கேயம் மாடுகள் கடந்த 1990ல் 11 லட்சத்து 94 ஆயிரம் மாடுகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் உள்ள மாட்டு இனங்களை அழிப்பதற்காகவே பீட்டா உள்ளிட்ட சில வனவிலங்கின அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்குகிறார்கள். இவர்களுக்கு எருமைக்கும் மாடுக்கும் வித்தியாசம் தெரியாது.

வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்டை போது கூட மாடுகளுக்கு இந்தளவுக்கு ஆபத்துக்கள் வந்தது இல்லை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டின் போது தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் காளைகள் பங்கேற்றன. தடை விதித்ததால் சுமார் 70 ஆயிரம் ஜல்லிக்கட்டு காளைகள் விற்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும் 50 ஆயிரம் காளைகள் மட்டுமே பங்கேற்கும் நிலை உள்ளது. தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டால் இந்த காளைகளும் விற்கப்பட்டு விடும். இதில் மறைந்திருக்கும் உண்மை என்றால் ஜல்லிக்கட்டில் கிராமங்கள் சார்பில் நிறுத்தப்படும் காளைகள் அதிகம். இந்த காளைகள் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமல்லாமல் அந்த கிராமங்களில் உள்ள மாடுகளின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன.

ஜல்லிக்கட்டு காளைகள் அழிக்கப்பட்டால் தமிழகத்தில் மாட்டு இனமே அழியும் ஆபத்து ஏற்படும். எனவே இதுபோன்ற விபரீதங்கள் நிகழாமல் தடுப்பது ஆட்சியாளர்களின் கடமை. ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற விளையாட்டுக்கள் நடத்தப்படும் போது மாடு வளர்க்கும் ஆர்வம் நிச்சயம் மக்கள் மத்தியில் ஏற்படும்" 

வாக்களிக்க நீங்கள் தயாரா தேவரினமே....!

நடிகர் கார்த்திக் உட்பட நம் இனத்தின் 15 தலைவர்கள் கூட்டணி உருவாக்கி 2016 தேர்தலில் தனித்து களம்கான போவதாக கவல்.


நேதாஜிக்கு "தேசத் தலைவர்' பட்டம்: மம்தா பானர்ஜி கோரிக்கை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு "தேசத்தின் தலைவர்' என்ற பட்டம் கொடுக்கப்பட வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார்.
 இதுதொடர்பாக மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நேதாஜியின் 119ஆவது பிறந்த தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அவர் பேசியது:
 நேதாஜிக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கு நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது. நமது நாட்டை விட்டு நேதாஜி வெளியேறினார். ஆனால், அதன்பிறகு அவர் என்னவானார் என்பது நமக்கு இன்னமும் தெரியாது. நேதாஜிக்கு "தேசத்தின் தலைவர்' பட்டம் அளிக்கப்பட வேண்டும். அந்தப் பட்டத்துக்கு தகுதியான நபர் அவர். நேதாஜி மாயமான விவகாரத்தில் உண்மைகளை இளைஞர்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் தெரிவிக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றார் மம்தா பானர்ஜி.
 சுட்டுரையில் மரியாதை: முன்னதாக, நேதாஜியின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சுட்டுரையில் (டுவிட்டர்) மம்தா பானர்ஜி பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

நேதாஜி ரகசிய ஆவணங்கள்: பிரதமர் மோடி வெளியிட்டார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பொதுமக்கள் பார்வைக்காக பகிரங்கமாக வெளியிட்டார்.
 16,600 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணங்கள், கடந்த 1956ஆம் ஆண்டு முதல் கடந்த 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக்கு உள்பட்டவையாகும். இதில், 36 ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்திடமும், 18 ஆவணங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், 46 ஆவணங்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும் இருந்தவை.
 தில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, பாபுல் சுப்ரியோ ஆகியோர் முன்னிலையில் 100 ஆவணங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பின்னர், தேசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்ட அந்த ஆவணங்களை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் சுமார் அரை மணி நேரம் பார்வையிட்டனர். அப்போது நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
 மாதந்தோறும் 25 ஆவணங்கள் வெளியீடு: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசிடம் இருக்கும் நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களில் 100 ஆவணங்களை வெளியிட்டதையடுத்து, தில்லி தேசிய ஆவணக் காப்பகமும் தன்னிடம் இருக்கும் ஆவணங்களில் மாதந்தோறும் 25 ஆவணங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
 மேலும், நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுவதற்கு என்று பிரத்யேக இணையதளத்தையும் ஆவணக் காப்பகம் தொடங்கியுள்ளது.
 நேதாஜியின் குடும்பத்தினர் வரவேற்பு: நேதாஜி தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டிருப்பதை நேதாஜியின் குடும்பத்தினரும், நேதாஜியால் தொடங்கப்பட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி செயலாளர் ஜி. தேவராஜன், பொதுச் செயலாளர் தேவவிரத விஸ்வாஸ் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.
 இதுகுறித்து நேதாஜியின் பேரனும், அந்தக் குடும்பத்தினரின் செய்தித் தொடர்பாளருமான சந்திரகுமார் போஸ் கூறுகையில், "பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை நாங்கள் இதயப்பூர்வமாக வரவேற்கிறோம். இன்றைய தினம், இந்தியாவின் வெளிப்படைத்தன்மை தினமாகும்' என்றார்.
 நேதாஜியின் மற்றொரு பேரன் சூர்யகுமார் போஸ் கூறுகையில், "நேதாஜி தொடர்பான மர்மம் விலகுவதற்கு இந்தியாவிடம் இருக்கும் உளவுத் துறை கோப்புகளும், ரஷியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருக்கும் உளவுத் துறை கோப்புகளும் வெளியிடப்பட வேண்டும்' என்றார்.
 நேதாஜியின் உறவினர் சுகதா போஸ் கூறுகையில், "ஜப்பானிடம் இருக்கும் ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக அந்நாட்டுப் பிரதமர் ஷின்úஸா அபேயுடன் பிரதமர் மோடி பேச வேண்டும்' என்றார்.
 காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு: முன்னதாக, தில்லியில் சந்திரகுமார் போஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, காங்கிரஸ் ஆட்சியின்போது முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டினார்.
 100 ரகசிய ஆவணங்களையும் படித்துப் பார்த்து, நாட்டு மக்களிடம் நேதாஜி குறித்து தெரிவிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் நேதாஜியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தகவலை சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
 பிரதமர் மோடி மரியாதை: முன்னதாக, நேதாஜியின் 119ஆவது பிறந்த தினத்தையொட்டி, சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவுகள் மூலம் அவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக அவர் அந்த பதிவுகளில், "நேதாஜியின் பிறந்த தினமான இன்றைய தினத்தில், அவரை நினைவுகூர்கிறோம். அவரது தைரியம் மற்றும் தேச பக்தியை இந்தியர்கள் பல தலைமுறைக்கும் நினைவு கூர்வார்கள். நேதாஜி தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் இன்றைய தினம், இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பான தினமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
1995-இல் நேதாஜியின் மரணத்தை ஒப்புக்கொண்ட மத்திய அரசு
 கடந்த 1945ஆம் ஆண்டு நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்தார் என்பதை அதற்கு 50 ஆண்டுகள் கழித்து அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு ஒப்புக்கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.
 இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்களில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
 விமான விபத்து நிகழ்ந்ததற்கு 5 நாள்களுக்குப் பிறகு, நேதாஜியைப் போர் குற்றவாளி என்று அறிவித்தால் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகள் பற்றி பிரிட்டன் அரசு விவாதித்தது. எனினும், நேதாஜி வெளிநாட்டில் இருக்கும் பட்சத்தில் அவரை ஒப்படைக்குமாறு கோர வேண்டாம் என்று முடிவு செய்தது.
 இதுதொடர்பாக, அப்போதைய இங்கிலாந்து பிரதமர் அட்லீயின் அமைச்சரவையில் இந்தியாவுக்கான உள்துறை அமைச்சராக இடம்பெற்றிருந்த சர் ஆர்.எஃப்.மூடி என்பவர் உள்துறைச் செயலருக்கு எழுதிய கடிதத்தில், "நேதாஜி ரஷியாவில் இருந்தால், அதனால் இங்கிலாந்துக்கு அபாயகரமான விளைவுகள் ஏற்படும்' என்று கூறியிருந்தார்.
 நேதாஜியின் மரணம் குறித்து, கடந்த 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி நரசிம்மராவ் தலைமையிலான அப்போதைய மத்திய அரசு வெளியிட்ட குறிப்பில், விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்தார் என்பதை ஒப்புக் கொள்வதாகவும், இதில் சர்ச்சைகள் எழுவதற்கு முகாந்திரம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
 ஜப்பான் நாட்டுத் தலைநகர் டோக்கியோவில் உள்ள ரெங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டுவர நரசிம்மராவ் அரசு முதலில் திட்டமிட்டபோதிலும், பிறகு அந்த யோசனையைக் கைவிட்டதாக ரகசிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
 மேலும், கடந்த 1966ஆம் ஆண்டு ரஷியாவில் உள்ள தாஷ்கண்டில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முகமது அயூப் கானும் ஒப்பந்தம் செய்து கொண்டபோது, அதுபற்றி மாஸ்கோ வானொலியில் நேதாஜி உரையாற்றினார் என்று அவரது நண்பரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மறைந்த எம்.பி.யுமான சமர் குஹா ஒருமுறை தெரிவித்தார் என்று மற்றொரு ஆவணம் கூறுகிறது.

Saturday, January 23, 2016

நாடாளும் மக்கள் கட்சி தலைவர் மு.கார்த்திக்

நாடு முழுவதும் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 119 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள நேதாஜி திருவுருவ சிலைக்கு நாடாளும் மக்கள் கட்சி தலைவர் மு.கார்த்திக் மரியாதை செலுத்தினார்.

Kathick and Gautham Karthick come together

Gautham Karthick and Catherine Tresa play the lead pair in Isaigniani Illayaraja’s 1001st film ‘Muthuramalingam’ produced by Global Media Works and directed by Rajadurai
Veterans Prabhu, Suman, Radha Ravi, Vivekh, Suganya and Rekha are already in the cast and now comes an exciting news that Navarasa Nayagan Karthick is also playing a pivotal role in the film and will be sharing the screes space with his son Gautham for the first time. Stay tuned for official confirmation on this.

சீவலப்பேரி பாண்டி-2வில் கார்த்திக்?

1994-ல் பிரதாப்போத்தன் இயக்கத்தில் நெப்போலியன் நடித்த படம் 'சீவலப்பேரி பாண்டி'. நெல்லை மாவட்டத்தைச்சேர்ந்த சீவலப்பேரி என்ற ஊரில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவானது. நெப்போலியனுக்கு அப்படம் திருப்புமுனையாகவும் அமைந்தது. இந்த படத்திற்கு கதை எழுதியவர் ராஜேஷ்வர். இவர்தான் கார்த்திக்கை வைத்து அமரன் என்ற படத்தை இயக்கியவர், அந்த படமும் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில், அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் கார்த்திக்கை வைத்து இயக்கப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டார் ராஜேஷ்வர். ஆனால் அந்த படம் இப்போதுவரை தொடங்கப்படவில்லை. இதையடுத்து விசாரித்தபோது, அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை தள்ளி வைத்து விட்டு, தான் கதை எழுதிய சீவலப்பேரி பாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கும் முயற்சியில் ராஜேஷ்வர் இறங்கியிருப்பதாக தெரிய வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த நெப்போலியனுக்கு பதிலாக நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறாராம்.
மேலும், சீவலப்பேரி பாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தை கெளதம்மேனன் இயக்க, கமல்ஹாசன் நாயகனாக நடிக்கயிருப்பதாகவும் கடந்த ஆண்டில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் பின்னர் அதுபற்றி எந்த செய்தியும் வெளியாகவில்லை. இப்போது மறுபடியும் கார்த்திக் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Karthik Fans

Explained: In Jallikattu, questions of tradition and cruelty to animals

Why is the Supreme Court hearing a petition on Jallikattu, the traditional bull-taming sport of Tamil Nadu? - See more at: http://indianexpress.com/article/explained/simply-put-in-bull-taming-sport-questions-of-tradition-and-cruelty-to-animals/#sthash.aAUpSDMq.dpuf

SJ Surya's Tribute To Karthik Subbaraj!

Awaiting his upcoming release Iraivi, actor-director SJ Surya seems to be pumped about his role in the movie. In an interview to Times of India, the Isai film-maker has spoken about his passion and why Iraivi is an important film to him. As his desire was to become an actor before entering the land of cinema, SJ Surya is apparently proud that a director like Karthik Subbaraj offered him a meaty role. SJ Surya In Iraivi Calling him "a modern-day Mani Ratnam" because of the way he thinks about cinema, Surya has also given the credit for restoring the confidence in the actor in him. Meanwhile, the director in SJ Surya is all set to return with a bang as he has also revealed that he is planning to revive his long shelved project, titled Ezhumalai Chitra. Calling it a "very beautiful concept", the maverick director has said he is planning to direct and act in the movie and that if everything works in favour of him, he might start the project by the end of this year.

Sunday, January 10, 2016

Jallikattu symbolises manliness

Senior BJP leader L Ganesan on Sunday justified the Centre's notification allowing the conduct of jallikattu - the traditional bull-taming sport in Tamil Nadu -- as "it symbolises manliness." 

Speaking to TOI, Ganesan said, "Jallikattu is a rustic sport that symbolises the spirit of 'kshatriyata' or manliness."

He said, "The BJP government at the Centre decided to allow jallikattu because without it, the Pongal festival will not be complete."

He appealed to those opposing jallikattu to understand that bulls were not tortured for the sport. "In fact, participants trying to tame the bull or holding its horns are in more danger of injury than the animal. In the name of ahimsa, we cannot become cowards," he said.


"Swami Vivekananda, Bharathiar (Subramanya Bharathi) and Muthuramalinga Thevar had all spoken about the need to have manliness. Jallikattu is a sport to develop that quality," he added.

 

 

 

 

மோடியைத் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள்: வைரமுத்து அறிக்கை

தமிழகத்தில் காளைகளைக் கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியும் கலாசார நிகழ்வுமான ஜல்லிக்கட்டை, சில நிபந்தனைகளுடன் நடத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வழியேற்பட்டுள்ளது.
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த உரிமைக்காகப் போராடியவர்களுக்கும் மீட்டுத் தந்த பெருமக்களுக்கும் மகிழ்ச்சியோடு நன்றி சொல்கிறேன். இது நிரந்தரமான உரிமையாக வேண்டுமென்றால் முறைப்படியான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுத்த மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனையும் அனுமதி அளித்த பாரதப் பிரதமர் மோடியையும் தமிழ் இன உணர்வாளர்கள் பாராட்டுகிறார்கள்.

"நாடாா் சமூகத்தின் பெருமைக்கு வித்திட்டவா் பசும்பொன் தேவா்"

"நாடாா் சமூகத்தின் பெருமைக்கு வித்திட்டவா் பசும்பொன் தேவா்"
சாத்தான்குளம் வி. சொக்கப்பழ நாடாா்
சென்னை முதலமைச்சராக இருக்கும் திரு. காமராஜ் நாடாரைக் கண்டு நாடாா் சமூகத்தினராகிய நாம் பெருமையடைகிறோம் - பெருமையடையத்தக்க காரணமும் உண்டு!
ஆனால் நாடாா் சமூகத்தைச் சாா்ந்த ஒரு சாதாரண ஊழியரை ஒரு மாகாணத்தின முதன் மந்திாியாக்குவதற்கு அடிப்படையில் வழிவகுத்துக் கொடுத்தவா் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவா் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
தன் இனமல்லாத மற்றொரு இனத்தைச் சோ்ந்த காமராஜ் நாடாா் முதன்மந்திாி ஆவதற்கு முதல் உதவி செய்த பசும்பொன் தேவரவா்கள் எந்த வகையிலும் ஜாதியவாதியாக இருக்க முடியுமா? தேசியத்தில் ஜாதி பேதம் கிடையாது - கூடாது என்பதுதான் தேவரவா்களின் தீா்மானம்.
நமது சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் முதன்மந்திாியாக இருப்பதற்கு நாம் எவ்வளவு பெருமைப்படுகிறமோ, அந்தப் பெருமைக்குக் காரணகா்த்தாவானவா் பசும்பொன் தேவா் தான் என்பதை நம்மில் யாரும் மறுக்கவோ - மறைக்கவோ கூடாது, முடியாது!
தேவரவா்களை எனக்குப் பல காலமாகத் தொியும். அவா் தேசிய லட்சியத்திற்கு விரோதம் புாிகிற எவருக்கும் விரோதிதான். ஆனால் நாடாா் சமூகத்திற்கு விரோதி என்று நம்மில் சிலா் கூறுவது அடாது! அவ்வாறு கூறுவது பச்சைப் பித்தலாட்டம் - உண்மையே அல்ல!

ஆம் நண்பா்களே!
தேவரவா்கள் கள்ளநோட்டுப் போ்வழிக்காரா்களுக்கும், பிளாக் மாா்க்கெட்காரா்களுக்கும் தான் விரோதியே தவிர ஏழை எளிய நாடாா் சமூக மக்களுக்கு விரோதியல்ல. அதனால் தான் காமராசாின் கடுமையான அடாவடித்தனங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் மீறி 1957 நாடாளுமன்றத் தோ்தலில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெருவெற்றி பெறுகிறாா். இத்தனைக்கும் அவா் போட்டியிட்ட தொகுதியில் நாடாா் மக்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள சாத்தூா்,சிவகாசி, விருதுநகா், கோவில்பட்டி பகுதிகளும் அடங்கியிருந்தன. வரலாறு உண்மைகளால் கட்டமைக்கப்பட வேண்டும்.

Saturday, January 9, 2016

ஐயா.பி.ராஜசேகர்

அரசியலுக்காக ஜல்லிகட்டில் விளம்பரம் தேடியவர்கள் மத்தியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களத்தில் 2 வருடமாக உழைத்த ஐயா.பி.ராஜசேகர் அவர்களுக்கு முக்குலத்தோர் எழுச்சி கழகத்தின் வாழ்த்துகளை சமர்பிக்கிறோம்

சகாயம் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்

1. மதுரையில் பொதும்பு என்ற ஊரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமி என்ற காம வெறியன் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்த போது, கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனது குடுமபத்திற்கு அடைக்கலம் கொடுத்து , மேலும் அந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பெரு முயற்சி எடுத்தது யார் ????? இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண் குழந்தைக்கு இன்று வரை நஷ்ட ஈடு பொய் சேரவில்லை .
2. முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் கோவில் அர்ச்சர்கர் மீது பாலியல் புகார் வந்த போது , அதனை கோவிலுக்குள் செல்லவே கூடாத கிறிஸ்தவ அதிகாரியை வைத்து விசாரணை நடத்தியது ஏன் ?????????
3.மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையம் அமைந்திருந்த பழைய கட்டிடம் இடித்து புதிய கட்டிடம் அமைக்க முயற்சி செய்த போது , அதனை தடுத்தி நிறுத்தியவர் சகாயம். மேலும் சர்வ வல்லமை படைத்த மீனாட்சிக்கு பாதுகாப்பு எதற்கு என எகத்தாளமாக நக்கல் செய்தவர்.
4. உத்தப்புரத்தில் பிள்ளை மார் சமுதாயமும் , ஹரிஜனங்களும் பகை மறந்து ஒன்றாகிய போது ஏன் நீங்கள் இணைய வேண்டும் என இரு சமுதாயத்தையும் தனியாக வர சொல்லி ஜாதி வெறியை தூண்டிய புண்ணியவான் சகாயம். மேலும் மாவட்டத்தில் பல ஊராட்சிகள் இருக்கும் போது வேண்டுமென்றே, உத்தப்புரம் ஊராட்சி தலைவரை மட்டும் தணிக்கைக்கு உட்படுத்தியது ஏன் ???? அவர் சகாயத்தின் மத பிரச்சாரத்திற்கு துணை போகாததன் காரணமாகவா ????
5. சகாயம் மதுரை ஆட்சி தலைவராக இருந்த போது , மதுரை மாவட்டத்தில் மட்டும் 14 சர்ச்சுகள் கட்ட அனுமதி வழங்கியது ஏன் ???
6.அணைகளுக்கு சென்று ஆய்வு செய்யும் போது , காவல் தெய்வமான அய்யனார் சிலை ஏன் இங்கே தேவையில்லாமல் இருக்கிறது . அந்த ஆக்கிரமிப்பினை அகற்றுங்கள் என நேர்மையாக ?? நின்றவர் இந்த சகாயம்
ஏற்கனவே இப்படி தான் உமா சங்கர் என்ற கிறிஸ்தவ பாதிரியார் ?? நேர்மையாளர் என பெயர் வாங்கி, பின்னர் பகிரங்க மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .
அதே போல் சகாயம் என்று மாறுவாரோ ???
இவர்களுக்கு நேர்மை என்பது ஒரு முகமூடி.
உள்ளே கிறிஸ்தவ மத வெறி கொழுந்து விட்டு எரியும்
வழக்கம் போல ஹிந்துக்கள் இளிச்சவாயர்களாக வேடிக்கை பார்ப்போம்....

அளவிட முடியாத மகிழ்ச்சி: நடிகர் சூரி அறிக்கை

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது என்று நடிகர் சூரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த வருடமும் நடக்காமல் போய்விடுமோ பரிதவித்தவர்களில் நானும் ஒருவன். ஒரு மாடுபிடி வீரனாகவும், பலநூறு மாடுகளை எங்கள் வீட்டில் வளர்த்தவனாகவும் ஜல்லிக்கட்டு விளையாட்டின்மீது நான் கொண்டிருந்த நேசம் அளவிட முடியாதது.
ஆனால், காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளைச் சேர்த்ததால் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த முடியாமல் போனது என்னைப் போன்றவர்களுக்கு தாங்க முடியாத வேதனையை உண்டாக்கியது. தமிழ் மக்களின் வீர விளையாட்டு இந்த வருடமும் நடக்காமல் போனால், நமது பாரம்பரியப் பெருமையும் சிறப்பும் மீட்க முடியாத அளவுக்குப் போய்விடுமே என தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் வேதனையின் விளிம்பில் இருந்தனர்.
இந்த நிலையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் போராட்டத்தாலும் தமிழ் மக்களின் இடைவிடாத கோரிக்கையாளும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைத்திருப்பது அளவிட முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
எந்தக் கொம்பனாக இருந்தாலும் நெஞ்சுக்கு நேராக எதிர்க்கிறவன் தமிழன். அதற்கான அடையாளம்தான் ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு. மொத்தத்தில் தமிழர்களின் வாழ்க்கையில் மனிதர்கள் தனி மாடுகள் தனி எனப் பிரிக்க முடியாது. இத்தகைய அன்புக்கும் வீரத்துக்கும் அடையாளமான ஜல்லிக் கட்டு நிகழ்வு இந்தவருடம் நடக்க இருப்பது ஒவ்வொரு தமிழர்களுக்குமான வெற்றித் திருவிழா என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி

தமிழகத்தில் காளைகளைக் கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டியும் கலாசார நிகழ்வுமான ஜல்லிக்கட்டை, சில நிபந்தனைகளுடன் நடத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வழியேற்பட்டுள்ளது.
 இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம், ஜனவரி 7-ஆம் தேதியிட்டு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
 "விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின்கீழ், கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகிய விலங்குகளைக் காட்சிப்படுத்தவோ, பயிற்சி அளிக்கவோ, பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தவோ கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்து காளை தற்போது நீக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் "ஜல்லிக்கட்டு', மகாராஷ்டிரம், கர்நாடகம், பஞ்சாப், ஹரியாணா, கேரளம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காளைகளை வைத்து நடத்தப்படும் ரேக்ளா பந்தயம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக பல்வேறு சமுதாயத்தினரால் அவரவர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்படுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு இப்போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விலங்குகள் வதைத் தடுப்பு அமைப்பினர், மாநில விலங்குகள் நல வாரியம், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் கண்காணிப்பின்படி இந்தப் போட்டிகளை நடத்த வேண்டும். காளைகள் எவ்வித துன்புறுத்தலுக்கும் வலிகளுக்கும் ஆளாகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 போட்டியும் எதிர்ப்பும்: தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி (தற்போது மத்திய அமைச்சர்) உள்ளிட்ட விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் பங்கேற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
 இந்நிலையில், 2008-ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஏதுவாக ஒழுங்குமுறைச் சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. பின்னர் 2011-இல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது.
 இந்நிலையில், காளைகள், சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குகளை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில், காளையை மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகம், கடந்த 2011-இல் புதிதாகச் சேர்த்து அரசாணை வெளியிட்டது. இதனால், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இது தொடர்பாக விலங்குகள் நல வாரியமும், ஜல்லிக்கட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதித்து கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.
 மத்திய அரசுக்கு அழுத்தம்: இந்நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த
 2014}ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்ததும், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் தில்லிக்கு பல முறை வந்து மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். அவர் மூலம் மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுத்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த அழுத்தங்களின் தொடர்ச்சியாக மேற்கண்ட அரசாணையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
 
நான்கு நிபந்தனைகள்
 1. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டியை மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.
 2. காளைகள் பந்தயத்தை சரியான ஓடுபாதையில் நடத்த வேண்டும். இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு மிகாமல் அந்தப் பந்தயம் நடத்தப்பட வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டியின் போது, மைதானத்துக்குள் மாடு நுழைந்ததும் 15 மீட்டர் சுற்றளவுக்குள்ளாக மாடு பிடித்தலை நடத்த வேண்டும்.
 3. விளையாட்டுப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் காளைகளை, கால்நடைத் துறை அதிகாரிகள் மூலம் முறையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் ரீதியாக காளைகள் தகுதியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திய பிறகே, போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அந்த விலங்குகளுக்கு போதை ஏற்படுத்தும் எவ்வித ஊக்க மருந்தும் அளிக்கப்படக் கூடாது.
 4. விலங்குகள் வதை தடுப்புச் சட்டப் பிரிவுகளின்படி காளைகளின் உரிமைகளைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
 
மேல்முறையீடு செய்வோம் - பீட்டா
 ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய விலங்குகள் நல ஆர்வலர் அமைப்பான "பீட்டா' முடிவு செய்துள்ளது.
 இது குறித்து அதன் சட்டப் பிரிவு அலுவலர் நிகுஞ்ச் சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "விலங்குகள் உரிமைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது. காளைகளை துன்புறுத்தாமல் ஜல்லிக்கட்டே நடத்த முடியாது. இதைக் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டுள்ள மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்' என்றார்.
 விலங்குகள் நல வாரியத் தலைவர் ஆர்.எம். கார்ப் கூறுகையில் "மத்திய அரசின் அரசாணை நகலை, வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி அவர்களின் கருத்துகளைப் பெற்று வருகிறோம். மேல்முறையீட்டுக்கான சட்ட நடைமுறைகளையும் ஆராய்ந்து வருகிறோம்' என்றார்.

Sunday, January 3, 2016

கௌதம் கார்த்திக் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இப்படம் சரியான வெற்றி பெறாத நிலையில், அடுத்தடுத்து ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’ அகிய படங்கள் வெளியாகி தோல்வியை தழுவியது. தற்போது ‘இந்திரஜித்’, ‘ரங்கூன்’, ‘சிப்பாய்’ ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இவர் அடுத்ததாக ‘முத்துராமலிங்கம்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார். இவர் இசையமைக்கப்போகும் 1001-வது படமாகும். இளையராஜாவின் 1000-மாவது படமான ‘தாரைதப்பட்டை’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

‘முத்துராமலிங்கம்’ படத்தை குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கிறார். ராஜதுரை என்பவர் இயக்க இருக்கிறார்.

ஆ‌ண்மையை அ‌திக‌ரி‌க்கும் எளிய இயற்கை வைத்தியம்

குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள்.

இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது. உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (சுத்தமான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள். பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள்.

அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.

Gautham Karthik In Muthuramalingam!

“Muthuramalingam,” which will be ‘ Ilayaraja’s 1001st movie. Rajadurai helms the movie, and Global Media works produce the movie.


Yesterday, the trailer of director Bala's 'Tharai Thappattai' starring Sasikumar and Varalakshmi Sarathkumar in lead roles was released on account. We all know it is the landmark 1000th film of Isaignani Ilaiyaraja.
Interestingly on the same day which was the first day of the New Year 2016, the first look poster of the 1001th film of the maestro was released. The film has been titled as 'Muthuramalingam' The film has been written and directed by Rajadurai and produced by D.Vijaya Prakash under the Global Media Works banner.
U.K.Senthilkumar is handling the cinematography and the National awardee N.B.Srikanth is taking care of Editing the film.


சனவாி 23 சனிக்கிழமை மதுரையில் முழுநாள் கருத்தரங்கம்

நண்பா்களே!
சனவாி 23 சனிக்கிழமை மதுரையில் முழுநாள் கருத்தரங்கம். " முதுகுளத்தூா் அரசியல்" என்ற மையப் பொருளில் நடைபெற உள்ளது. பல்வேறு தலைப்புகளில் அறிஞா் பெருமக்கள் உரை நிகழ்த்துகிறாா்கள்.
தோழா் தியாகு - தமிழ்த்தேசியமும் பசும்பொன் தேவாின் விடுதலை அரசியலும்
தோழா் செந்தில் - முதுகுளத்தூா் கலவரம்: சமகாலச் சூழலில் ஒரு மீளாய்வு
தோழா் பாலன் - முதுகுளத்தூா் கலவரம் - ஒடுக்கப்பட்டோா் விடுதலையும் சமூக ஒற்றுமையும்
தோழா் இராமன் - முதுகுளத்தூா் கலவரமும் ஊடக அரசியலும்
மருதுபாண்டியன் - முதுகுளத்தூா் அரசியல் மறைக்கப்பட்ட உண்மைகளும் மறுக்கப்பட்ட நீதியும்
தோழா் ஜீவபாரதி - பசும்பொன் தேவா் சந்தித்த வழக்குகளும் அரசியல் பின்னணியும்
தோழா் வி எஸ் நவமணி - பசும்பொன் தேவாின் அரசியல் - வரலாறும் வக்கிரங்களும்
தோழா் கருப்பசாமி மள்ளா் - முதுகுளத்தூா் கலவரமும் அரசியல் இயக்கங்களும்
தோழா் பால்ராஜ் - மறக்கப்பட்ட சூத்திரப் பட்டமும் சாதிக் கலவரங்களும்
தோழா்கள் கண குறிஞ்சி, பா செயப்பிரகாசம், அரங்க குணசேகரன், முகில் நிலவன் ஆகியோரும் பங்கேற்கிறாா்கள்.
பங்கேற்பாளா்கள் அனைவரும் கட்டுரை அளிக்கிறாா்கள். இரண்டு அமா்வாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு அமா்வின் முடிவிலும் கேள்வி பதில் நிகழ்வும் உண்டு.
தோழா்களே!
நிகழ்விற்கு அனைவரும் வருக! உங்களுடைய ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.
தொடா்புக்கு
மருதுபாண்டியன்
8012635706

‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’

"Kalkandu" Tamilvaanan.eluthiya nool

கடந்த சனவரி 2011 அன்று சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன் அதில் மூன்று புத்தகங்களை வாங்கினேன் அதில் ஒன்று தமிழ்வாணன் எழுதிய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ என்ற நூலாகும்.
அந்நூலில் உள்ள பல செய்திகள் நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்கு மாறாக இருந்தன எனவே அதனைத் தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
முதலில் என்னை வியப்பில் ஆழ்த்தியது கட்டபொம்மனின் தாய் மொழி தெலுங்கு என்பதாகும். பலபேர் இன்று வரை கட்டபொம்மனை பச்சைத் தமிழன் என்றே போற்றிப் பரப்புரை செய்து வருகிறார்கள். ஒரு தெலுங்கனைத் தமிழன் என்று காட்டிக்கொள்வதில் தமிழர்களுக்கு என்ன பெருமையோ அல்லது தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களுக்குத் தான் என்ன சிறுமையோ தெரியவில்லை. ஆகமொத்தத்தில் கட்டபொம்மன் தெலுங்கன் என்பதில் தெளிவு கொள்வோம்.
கட்டபொம்மனின் பரம்பரையில் முதலாமவன் கட்ட பிரமையா ஆவான் இவன் மகன் கட்டபிரமையா என்ற முதலாம் ஜெகவீரப் பாண்டிய கட்டபொம்மன் என்பவனே முதல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாவான் (1709-1736) இவரே வீரபாண்டியக் கட்டபொம்மனின் கொள்ளுப் பாட்டனும் ஆவார்.
வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கும் வெள்ளையன் கலெக்டர் ஜாக்சனுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை தமிழ்வாணன் அவர்கள் தன்னுடைய ‘கட்டபொம்மன் கொள்ளைக்காரன்!’ நூலில் குறிப்பிட்டுள்ளதை மிகச் சுருக்கமாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி வீரபாண்டியக் கட்டபொம்மனுக்கு கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். வீரபாண்டியக் கட்டபொம்மனோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக்கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் (பேட்டி) தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.
ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்மன் குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்மன் தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பிவிடுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்கு செல்கிறார் அங்கும் கட்டபெம்மனை பார்க்க ஜாக்சன் மறுத்துவிடுகிறான். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்மனும் ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்டபொம்மனை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.
இறுதியில் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம் கொடுத்தான், வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டுவந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாக கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்மன் மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்கவேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்மன் அஞ்சி அங்கிருந்து தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளையன் கொலை செய்யபடுகிறான். கட்டபொம்மனின் அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளை கைது செய்யப்படுகிறார்.
இந்த நிகழ்வு கட்டபொம்மனை வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார். அப்படி என்றால் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அந்நூலில் குறிப்பிட்டுள்ள மற்றுமொரு நிகழ்வைக் குறிப்பிட வேண்டும் அதாவது கட்டபொம்மனைத் தூக்கில் போடுவதற்கு கூறப்பட்ட காரணங்களும் நிகழ்வுகளும் ஆகும்.
கட்டபொம்மனை பற்றிக் கூற ஆரம்பித்ததில் இருந்தே கட்டபொம்மன் தன்னுடைய பாளையத்தை விடுத்து மற்றைய பாளையங்களில் அவ்வப் போது கொள்ளையடித்து வந்துள்ளான் என்று கூறிப்பிட்டுள்ளார். அதில் ஊற்று மலைப் பாளையத்தார் தங்கள் பாளையத்தில் கட்டபொம்மன் கொள்ளையடித்ததை வெள்ளையனிடம் புகார் தெரிவித்துள்ளார். அடுத்து சிவகிரி பாளையத்தில் தந்தைக்கும் மகனுக்கும் ஆட்சியைப் பிடிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கட்டபொம்மன் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தியது மற்றுமொன்று தனது தம்பி மற்றும் தனது அமைச்சன் தானாபதிப் பிள்ளையின் மகன் திருமணத்திற்காக வெள்ளையனின் நெற் களஞ்சியத்தைத் தன் ஆட்களை விட்டுக் கொள்ளையடித்தது. இது போன்ற புகார்களை அடுத்து கட்டபொம்மனை மேஜர் பானர்மென் தன்னை சந்தித்து விளக்கம் தரக் கூறுகிறார். கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க அஞ்சு நாட்களைக் கடத்துகிறார். தன்னை சந்திக்காமல் காலம் கடத்தியதால் பானர்மென் பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுக்கிறார். சண்டை நடக்கும் போதே கட்டபொம்மன் தனது பாளையத்தில் இருந்து தப்பிவிடுகிறார். (இந்த இடத்தில் தமிழ்வாணன் ஒன்றைக் குறிப்பிடுகிறார் அதாவது கட்டபொம்மன் தப்பித்ததே திருச்சியில் உள்ள வெள்ளைகார மேல் அதிகாரியிடம் சென்று மன்னிப்புக்கேட்டு தப்பிவிடலாம் என்பதற்காகவே தப்பினான் என்கிறார்).
கட்டபொம்மனைப் பிடிப்பதற்காக பானர்மேன் எட்டயபுர பாளையத்திடம் இருந்து நன்கு வழிகளைத் தெரிந்த சில வீரர்களை கேட்டுப் பெற்றுக் கொண்டு கட்டபொம்மனைத் தேடலானான். அதன் பிறகு கட்டபொம்மன் புதுக்கோட்டைப் பாளையத்தில் உள்ள ஒரு காட்டில் மறைந்திருப்பதை அறிந்ததும் பானர்மேன் கட்டபொம்மனைப் பிடித்துத் தரும்படி கேட்கப் புதுக்கோட்டைப் பாளையத் தளபதி அம்பலக்காரன் தலைமையிலான குழு கட்டபொம்மனைப் பிடித்து பானர்மேனிடம் ஒப்படைத்தார்கள். மேற்கண்ட பத்தியில் குறிப்பிட்டுள்ள காரணங்களைக் காட்டி தூக்கில் போடுகிறார்கள்.

நமக்குள்ள வருத்தங்கள் எவையென்றால்
ஒரு தெலுங்கனைத் தமிழன் என்று பரப்புரை செய்வது,
வெள்ளைக்காரனுக்கு அவ்வப்போது பணிந்து சென்ற ஒருவரை முழுக்க முழுக்க வெள்ளையனை எதிர்த்தான் என்று பரப்புரை செய்வது.
எட்டப்பன் என்ற ஒருவனைத் தமிழ்வாணன் அவர்கள் குறிப்பிடவேயில்லை. ஆனால் திரைபடத்தில், காட்டிக் கொடுத்தான் என்று எட்டப்பன் என்ற ஒருவனைக் காட்டியுள்ளது.
ஆக, கட்டபொம்மன் என்று எடுக்கப்பட்ட திரைப்படம் பாதிக்கு மேல் வரலாற்றுப் பிழையாகவே இருக்கும் என்று கருதுகிறேன். அதில் “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் தரவேண்டும் கிஸ்தி (வரி)” போன்ற நீண்ட வசனத்தைப் பேசியிருக்க மாட்டான். அப்படியே பேசியிருந்தாலும் தெலுங்கில் தான் பேசியிருக்க வேண்டும்.
ஆக, தெலுங்கனுக்குத் தமிழன் அடிமை, வெள்ளையனுக்குத் தெலுங்கன் அடிமை அப்படியென்றால் அன்றைக்குத் தமிழகத்தை ஆண்ட தெலுங்கனுக்கு தமிழன், அடிமைக்கு அடிமையாகத் தான் இருந்துள்ளான்.
தமிழர்களே அவசியம் இந்நூலை வாங்கிப் படித்து தமிழ்நாட்டின் உண்மை வரலாற்றை அறிந்துக் கொள்ளுங்கள்.
“வெள்ளையனுக்கு அடிமைப்படாத ஒரு சுதந்திர அரசுக்கு அதிபதியாக இருந்திருந்தால், கட்டபொம்மன் கலெக்டரைக் காணப் போயிருக்க வேண்டியதில்லை. கலெக்டரின் ஆணையை அவன் ஆண்மையுடன் மறுத்து நின்றிருக்கலாம். அவன் என்றுமே கும்பினிக்கு வரி செலுத்தாதவனாக இருந்தால், புதிதாக வந்து வரி கேட்பவர்களிடன் கொடுக்க முடியாது என்று உறுதியுடன் கூறியிருக்கலாம். அவன் எழுதியுள்ள எந்த ஒரு கடிதத்திலும், கட்டபொம்மன் ஆங்கிலக் கும்பினியின் மேலாதிக்கத்தை எதிர்க்கவில்லை. வரி கொடுக்க முடியாது என்றும் சொல்லவில்லை. அதற்கு மாறாக, வரி செலுத்துவதற்கு தவணைகள் தாம் கேட்டிருக்கிறான் அல்லது சாக்குப்போக்குகள் சொல்லி வந்திருக்கிறான்” (பக்கம் 159, கட்டபெம்மன் கொள்ளைக் காரன்)
வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் தெலுங்கர்கள் என்ற தகவலும் இருக்கிறது.
கட்டபொம்மு மட்டுமல்ல எட்டப்பரும் தெலுங்கரே,இருவரும் இராசகம்பள நாயக்கர் வகை,உறவுக்கார்ர்களே...எட்டையபுர சமஸ்தானத்திற்கு 20கிமீ அருகிலிருப்பது பாஞ்சாலங்குறிச்சி.
எட்டப்பனின் தானியங்களையும் கட்டபொம்மு கொள்ளையடித்துள்ளான்,ஆனால் இதை அவர்களால் தடுக்க முடியவில்லை.
கட்டபெம்மு பற்றி வெள்ளையர்களிடம் புகார் கொடுத்தவர்களில் எட்டப்பரும் ஒருவர்
நன்றி
நான்காம் தமிழ்ச் சங்கம்

நேதாஜி குறித்த புதிய ஆவணங்கள்:வெளியிட்டது லண்டன் இணையதளம்

லண்டனில் இருந்து இயங்கிவரும் இணையதளமான "போஸ்ஃபைல்ஸ்.இன்ஃபோ' (www.bosefiles.info), நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 1952-ஆம் ஆண்டில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நேதாஜி வாழ்ந்தார் எனக் கூறப்பட்டு வரும் தகவல் தவறானது என்பதை நிரூபிக்கவே இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளதாக அந்த இணையதள நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 1945-ஆம் ஆண்டு, தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பலியானதாக, அவரது மரணம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது தீவிர ஆதரவாளரான எஸ்.எம்.கோஸ்வாமி, "நேதாஜி குறித்த மர்மம் விலகியது' என்ற தலைப்பில், கடந்த 1955-ஆம் ஆண்டு நாடு முழுவதும் துண்டுப் பிரசுரம் ஒன்றை விநியோகித்தார்.
அதில், மங்கோலிய நாட்டைச் சேர்ந்த வர்த்தகப் பிரதிநிதிகளுடன் சீன அதிகாரிகள் சந்திக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. "கடந்த 1952-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் சுபாஷ் சந்திரபோஸூம் இடம் பெற்றுள்ளார்; எனவே அவர், சீனாவில் வாழ்ந்து வருகிறார்' என்று கோஸ்வாமி தெரிவித்திருந்தார். மேலும் அந்த புகைப்படத்தை அவர், நேதாஜி குறித்து விசாரணை நடத்திய குழுவிடம் 1956-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கவும் செய்தார். நேதாஜி தொடர்பாக அவர் தெரிவித்த தகவல்களும், அவரது மரணம் தொடர்பாக 1945-ஆம் ஆண்டு அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய அரசுகக்கு அனுப்பிய தந்தியில் இடம்பெற்றிருந்த தகவலை, போஸ்ஃபைல்ஸ்.இன்ஃபோ இணையதளம் சனிக்கிழமை வெளியிட்டது.
அதில், "சுபாஷ் சந்திரபோஸ் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் புகைப்படத்தில் இருப்பவர், பிகிங் மருத்துவக் கல்லூரியின் கண்காணிப்பாளராக இருந்த லீ கி ஹுங் ஆவார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளரும்,போஸ்ஃபைல்ஸ்.இன்ஃபோ' இணையதள நிறுவனருமான ஆசிஷ் ராய் கூறுகையில் "எங்கள் இணையதளம் தற்போது வெளியிட்டுள்ள ஆவணத்தின் மூலம், கடந்த 70 ஆண்டுகளாக நேதாஜி குறித்து நிலவிய வந்த தகவல் தவறானது என்பது வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது' என்று தெரிவித்தார்.
கடந்த 1945-இல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரஷியாவுக்குத் தப்பியோடினார் என்று கூறப்பட்டு வரும் தகவலும் தவறானது என்பதை நிரூபிக்கும் விதத்தில், கடந்த மாதம் 7-ஆம் தேதி, இந்த இணையதளத்தில் ஆவணங்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்க

அழைக்கிறார் மக்களின் முதல்வர் மு.கார்த்திக்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு மீது தடை நீக்க கோரி வரும் ஜனவரி 10 அன்று நாடாளும் மக்கள் கட்சி தலைவர் மு.கார்த்திக் தலைமையில் மாபெரும் ஆர்பாட்டம் மதுரையில் நடைபெறுகிறது. அழைக்கிறார் மக்களின் முதல்வர் மு.கார்த்திக்

Saturday, January 2, 2016

கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு வெளிநாட்டு பயணிகளுக்கு வேட்டி கிடைக்கும்

தமிழக கோயில்களில் நாளை முதல் ஆடைக்கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது.

கடந்த டிசம்பர் 2ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட உத்தரவில், 'கோயில்களில் வழிபட செல்பவர்கள் ஆன்மிக நெறிகளுக்கு உட்பட்டு ஆடைக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அரைக்கால் டவுசர், மினி ஸ்கர்ட், மிடி, ஸ்லீவ்லெஸ் டாப்ஸ், குட்டை ஜீன்ஸ் அணியக்கூடாது. ஆண்கள் பாரம்பரிய வேஷ்டி, பைஜாமா, துண்டு, பேண்ட், சட்டை, அணியலாம். அரைகுறை ஆடையுடன் வரும் பயணிகளை போலீசார் கண்காணித்து அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவை வரும் ஜனவரி முதல் தேதி முதல் இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்த வேண்டும்' என கூறியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த உத்தரவு நாளை முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடைக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டு பயணிகள் மட்டும் அரைகுறை ஆடையுடன் வருகின்றனர். அவர்களுக்கு நாளை முதல் கோயில் நிர்வாகம் சார்பில் பூஜை பொருட்கள் வழங்கும் இடத்தில் வேட்டி வழங்கப்படுகிறது.
இந்த வேட்டிகளை அணிந்து வழிபாடு முடிந்த பின்னர், திரும்ப ஒப்படைக்க வேண்டும், என்றார்.

எதிர்காலத்தை பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லை: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சேதுபதி’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். அருண் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

மதுரை பின்னணியில் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிக்கு வெளியேயும், வீட்டிற்குள்ளேயும் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக வைத்து ஆக்‌ஷன் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

இப்படம் குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “இப்படத்தில் நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறேன். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் உருவாகும் போதே இயக்குனர் என்னிடம் இந்த கதையை கூறியிருந்தார். யதார்த்தமான கதை. போலீஸ்காரனின் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை உருவாக்கியிருக்கிறோம். எனக்கு மனைவியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு என் பெயரிலேயே இருப்பதால் முதலில் தலைப்பு வைக்க தயங்கினேன். பின்னர் கதைக்கு பொருத்தமாக இருப்பதால் சம்மதித்தேன்” என்றார்.

இனிமேல் ஆக்‌ஷன் படத்தில் தான் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, எதிர்காலத்தைப் பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை, நல்ல கதைகள் அமைந்தால் எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பேன் என்றார்.

Friday, January 1, 2016

2016 மக்களுக்கு நலமான மற்றும் வளமான ஆண்டாக மாறட்டும்- நடிகர் கார்த்திக்

நடிகரும், நாடாளும் மக்கள் கட்சியின் தலைவருமான கார்த்திக் இன்று பிறந்திருக்கும் புத்தாண்டு தினம் மக்களுக்கு நன்மையை வழங்க வேண்டும் என்று தனது வாழ்த்துக்களைக் கூறியிருக்கிறார். இன்று பிறந்திருக்கும் புத்தாண்டு தினத்திற்கு தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்திக்கும் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். Karthik said his New Year Wishes 2015 ம் ஆண்டு போல இல்லாமல் இந்த 2016 ம் நல்லதொரு ஆண்டாக இருக்கட்டும் என்று கூறியிருக்கும் கார்த்திக் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் பேசியிருக்கிறார். எத்தனை பிரச்சினைகள் 2015ம் ஆண்டில் மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை, சகிப்புத்தன்மை விவகாரம், நாட்டில் ஊடுருவும் பிரிவினைவாதிகள் என்று எவ்வளவோ பிரச்சினைகளை மக்கள் சந்தித்தனர். 21ம் நூற்றாண்டில் விஞ்ஞானம் வளர்ந்தும் நமது மக்கள் என்றும் கண்டிராத ஒரு துயரத்தை சுமக்க நேர்ந்திருக்கிறது.இயற்கை என்றுமே மனித குலத்திற்கு ஒரு விந்தையாகவும், படிப்பினையாகவும் இருக்கின்றது. பொறுப்பில் இருப்பவர்களுக்கு சமீபத்தில் பெய்த பெருமழையின் போது மக்கள் சாதி, மதம் பாராமல் ஒருவருக்கொருவர் உதவிகள் புரிந்தனர். மக்கள் புரிந்த இந்த சேவை, பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது.இந்த அவல நிலை தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் மக்கள் கொதித்து எழுவர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வரும் தேர்தல் வரும் சட்டமன்றத் தேர்தல் ஒரு பாடமாக அமையும். அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆண்டில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதே உண்மை.இந்தப் புத்தாண்டில் மக்கள் புதிய உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டும். இந்தப் புத்தாண்டில் இன்று பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டில் பொதுமக்கள் தங்கள் வாழ்வில் எழுச்சிமிக்க ஒரு சரித்திரம் படைக்க வேண்டும். மேலும் விழிப்புடன் செயல்பட்டு மக்கள் இந்த ஆண்டில் வெற்றிகளைப் பெற்றிட வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று கார்த்திக் தெரிவித்து இருக்கிறார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karthik-said-his-new-year-wishes-243566.html

Thevar Cabs

Thevar Cabs

Services : Car And Bus Rental Services Bus Rental Services, , , , ,
Address : No 87,Thamarai Periyanayagam Street,Ramanathapuram, Coimbatore, TAMIL NADU, 641045 , Coimbatore, India
Location : Coimbatore