Monday, May 30, 2016

தேவரின சிறப்பு செய்திகள்

மே 31 உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநிலக்குழு கூட்டம். .
அழைக்கின்றார் பொதுச்செயலாளர் டாக்டர் பி.வி.கதிரவன்..
‪#‎தேவர்பவன்‬ ...
கட்டுமானம்
‪#‎பார்வர்ட்பிளாக்‬ மீள்கட்டமைப்பு குறித்து...

Wednesday, May 25, 2016

‎வாலாந்தூர்_உழவன்_மகன்‬!!!


’பூவனம்’ திரைப்படத் தயாரிப்பாளர் சுப்பையாவுக்கு துபாய் நாட்டில் உள்ள ‘ஈரோப்பியன் கான்டினென்டல் பல்கலைக் கழகம்’ டாக்டர் பட்டம் வழங்...கி கவுரவித்துள்ளது.

படவுலகில் படத் தயாரிப்பாளராக, நடிகராக இப்போது காலடி எடுத்து வைத்திருப்பவர் என். சுப்பையா. இவர் ‘பூவனம்’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர, வேறு இரண்டு புதிய படங்களையும் இவர் தயாரிக்கிறார். அவற்றில் ஒரு படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னொரு படம் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இரண்டு படங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘பூவனம்’ படத்தைத் தயாரிக்கும் சுப்பையா அதில் படம் முழுக்க எஸ்டேட் உரிமையாளராக வருகிறார். தான் தயாரிக்கும் மற்ற படங்களிலும் இவர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார். ‘மதுரை மீனாட்சி என்.சி.எஸ். பிரசென்ட்ஸ்’ என்பது இவரின் பட நிறுவனத்தின் பெயர்.

உசிலம்பட்டி வட்டார செய்திகள்'s photo.

அடிப்படையில் இவர் ஒரு விவசாயி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்காவில் உள்ள வாலாந்தூர் இவரின் சொந்த ஊர். இவரின் தாத்தா முத்துச்சாமி தேவர், தந்தை நல்லிவீரத் தேவர், தாயார் சின்னம்மா அனைவரும் விவசாயிகள். தன் தாத்தா, தந்தை வழியில் தீவிரமான விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சுப்பையா தன்னை ‘வாலாந்தூர் உழவன் மகன்’ என்று பெருமையாக கூறிக் கொள்கிறார். அங்கு இவர் நெல், கரும்பு, வாழை, பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.
‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ‘ராஜகுமாரி’ என்ற கிராமத்திலும் நிலம் இருக்கிறது. அங்கு ஏலம், மிளகு, காபி, ஜாதிக்காய், வாழை ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.
இவை தவிர, பொதுப் பணித் துறையின் கான்ட்ராக்டராகவும் இவர் செயல்பட்டிருக்கிறார். சாலை, நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் இவர் பல வருடங்கள் கான்ட்ராக்ட் ஒப்பந்தம் எடுத்து தன் பங்களிப்பை நன்கு ஆற்றியிருக்கிறார்.

மதுரையில் இவருக்கு சொந்தத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்கிறது.
விவசாயம், தொழில் துறை, கலையுலகம் ஆகியவற்றில் ஆழமாக கால் பதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு துபாயில் உள்ள ‘ஈரோப்பியன் கான்டினென்டல் பல்கலைக் கழகம்’ (European Continental University) சமீபத்தில் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்திருக்கிறது. அதற்காக துபாயில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சுப்பையா டாக்டர் பட்டத்துடன் திரும்பி வந்திருக்கிறார்.

‘வாலாந்தூர் உழவன் மகன் சுப்பையா நல்லித் தேவர்’ என்ற பெயரில்தான் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
படத்துறையில் தயாரிப்பாளராக பவனி வந்து கொண்டிருக்கும் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் ஒரு விவசாயிக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பது என்பது அனைவரும் சந்தோஷப்படக் கூடிய ஒரு விஷயம்தானே!

Friday, May 20, 2016

பாலத்தின் கல்வெட்டு

மதுரை நகரின் மைய பகுதியான பெரியார் நிலையம் மற்றும் ஆண்டள்புரத்தை இனைக்கும் மேம்பாலமான #பசும்பொன்_முத்துராமலிங்கதேவர் மேம்பாலத்தின் அவலநிலை தெய்வத்திருமகனாரின் பெயர் பொறித்த பாலத்தின் கல்வெட்டு குப்பையில் கிடைக்கும் அவலம்

தேவர் பெயர் பொறித்ததாளே சில சமூக விரோதிகள் இதை பிடுங்கி குப்பை தோட்டியில் போட்டு உள்ளனர்

சுரேஷ் தேவர்

----தேவர் துணை----
முக்குலத்து மக்களுக்கு
( சுரேஷ் தேவர்)
அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார் காரணம் ஒவ்வொரு வேட்பாளர்கள் தாங்கள் பணம் கொடுத்து வெற்றியை பெற்று இருப்பார்கள், பெற நினைப்பார்கள், ஆனால் என்னுடைய இனம் எனக்கு மூலதனம்.பொருள், பணம்,பாசம்,சொந்தம் குடும்பம் எல்லாமே இனமே என்று உருக்கமாக அவரது வீட்டில் இன்று மாலை கூறினார்....
எனக்கு ஒன்று என்றால் 14634 என்னோட ரத்த சொந்தம் பார்த்து கொள்ளும்.
உயிர் எனக்கு மயிர் என்னோட இனத்துக்கு எதுவும் செய்ய தயாராக இருக்கிறேன்.
உருக்கமாக கூறினார்.
(சுரேஷ்)அண்ணனோட பிறந்த நாள் ஜூன் மாதம் 6 நாள் அதே நாள் (கிட்டப்பா) அண்ணன் என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்யபட்டார்.அந்த நாளில்
100 வாகனங்களில் சென்று கிட்டப்பா அவர்களில் மகனின் படிப்புக்காக ஒரு பெருந்தொகை அண்ணன் கொடுக்க உள்ளார்.
மேலும் வாகனத்திற்கு 5பேர் வீதம் 500 பேர் 50000 கொடுக்க வழி செய்கிறார்.
அதுமட்டுமல்ல அண்ணன் பிறந்தநாளை கொண்டாடவும்.மற்றும் நாங்குநேரியில் மாபெரும் மாநாடு நடத்தப்படுகிறது. ஜுன் 6 தேதி
((வீதிக்கு வீதி புலி கொடி))
((வீட்டுக்கு வீடு தேவர் படம் ))
என்பதை வலியுறுத்தி நம்முடைய விழிப்புணர்வுக்காக மாநாடு நடைபெற உள்ளன. அதுமட்டுமல்ல இன்னும் பல சுவாரஸ்யமான தகவலை கலந்துகொண்டு தெறிந்து கொள்ளவும்.
----ஜூன் 6 ஜூன் 6---- நினைவில் சொந்தங்களே....!!!

Wednesday, May 18, 2016

‎சிவகாசி_இந்து_தேவமார்_மேல்நிலைப்பள்ளி‬ சாதனை

தொடர்ந்து 5வது ஆண்டாக, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற சிவகாசி இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளி,
ஏற்கனவே, இப்பள்ளி, 10 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் கடந்தாண்டுவரை தொடர்ந்து 11 ஆண்டுகளாக 100% தேர்ச்சி பெற்று வந்துள்ளது குறிப்பிடத் தக்கது,
...
அப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் , அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் , நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவிப்போம்

வீடியோ: கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட ஐந்து முக்கிய கார்கள் தோல்வி

லண்டனில் நடத்தப்பட்ட கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட இந்தியாவை சேர்ந்த ஐந்து முக்கிய கார்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ: கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட ஐந்து முக்கிய கார்கள் தோல்வி
லண்டன்:

லண்டனில் நடத்தப்பட்ட கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட இந்தியாவை சேர்ந்த ஐந்து முக்கிய கார்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று ‘உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம்’ என்ற பெயரில் பொதுமக்கள் பயன்படுத்தும் கார்களின் பாதுகாப்பு வசதிகளை சோதனை நடத்தி மதிப்பீடு செய்து வருகிறது. தற்போது இந்த அமைப்பு உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் 17 கார்களை விபத்து பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.



இதில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 5 கார்கள் உட்பட மொத்தம் 7 கார்கள் ஐந்துக்கு ஒரு ஸ்டார் கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் க்விட், மாருதி சுசூகி சேலேரியோ, மாருதி சுசூகி ஈகோ, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹூண்டாய் இயான் ஆகியவை விபத்து சோதனையில் பூஜ்யம் மதிப்பெண்கள் பெற்றுள்ளன.

இந்தியா உலகின் 6-வது மிகப்பெரிய வாகனச் சந்தையாக உள்ளது. 2020-ம் ஆண்டில் 4-வது இடத்திற்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய நிறுவனங்களின் கார்கள் விபத்து பாதுகாப்பு சோதனையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

Tuesday, May 17, 2016

மாணவன் கிரிஷ் தேவருக்கு வாழ்த்துக்கள்

திருநெல்வேலி FX பள்ளியில் முதல் இடம் பிடித்த தேவரின மாணவன் கிரிஷ் தேவருக்கு வாழ்த்துக்கள் (1174) மதிப்பெண் ....!


KRISHNA RATHNA KUMAR P ( 57224 )
Subject Total
LANGUAGE 195...
ENGLISH 186
PHYSICS. 146 050 196
CHEMISTRY 149 050 199
BIOLOGY 148 050 198
MATHEMATICS 200 200

TOTAL 1174
RESULT PASS

 

Friday, May 13, 2016

தூத்துக்குடி மணிகண்டன் தேவர் தீ கட்சி

இந்த தேர்தலில்
ஜெயலலிதா முதலமைச்சரா வரனும்னு இரட்டைஇலைக்கு ஓட்டு போட சொல்றாங்கே...
அந்தபக்கம் கலைஞர் முதலமைச்சரா வரனும்னு உதயசூரியனுக்கு ஓட்டு கேக்குறாங்கே....
இன்னொரு பக்கம் இவங்க ரெண்டு பேரும் ஊழல் பன்றாங்க அதுணாண்டி. விஜயகாந்தை முதலைமைச்சராக்கனும்னு வைகோ, திருமாவளவன் ,கம்யூனிஸ்ட் கட்சிகாரன், தமாகா வாசன் எல்லாரும் முரசு சின்னம் பம்பரம் சின்னம் கதிர் அரிவாள் மோதிரம் தென்னந்தோப்பு சின்னத்துல ஓட்டு கேக்குறானுக
இதுபோதாதுனு போலிவேசம் போட்டுகிட்டு தமிழ்நாட்டுல தமிழன் முதலமைச்சரா... வரனும் அதுக்காக ரெட்டைமெழுகுவர்த்தி ல ஓட்டு போடுங்கனு சீமான் வந்து நிக்குறான்
.
.
.
.
.
.
.
. ஆணால் உங்களது சகோதரன் நான் கேட்கிறேன் நமது கட்சி நாட்டின் முதலமைச்சர் பதவிக்காக அல்ல
நமது தொகுதியில் நாம் தன்மானத்தோடும் மான மரியாதையோடும் வாழ வேண்டும் என்பதற்காக
நேதாஜி சுபாஸ்சந்திர போஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு
பசும்பொன்னார் தேவர் அவர்களால் வளர்க்கப்பட்ட
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் கட்சியின்
வெற்றி சின்னமான சிங்கம் சின்னத்தில் வாங்களியுங்கள்..
மறந்துவிடாதீங்க தன்மானத்தோடு வாழ சிங்கம் சின்னத்தில் வாக்களியுங்கள்...
இவண்.
தூத்துக்குடி மணிகண்டன் தேவர் தீ கட்சி

Wednesday, May 11, 2016

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு

சிவகாசி சட்டப்பேரவை தொகுதி அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர், அதிமுக வேட்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
சிவகாசி தொகுதியில் நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் விருதுநகர் மாவட்ட முன்னாள் தலைவர் கா.ச.வைரமுத்து, கட்சிக்கு என தனி சின்னம் இல்லாததால் சுயேச்சையாக ,வில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டார்.
வைரமுத்துவை ஆதரித்து நடிகர் கார்த்திக் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் செய்வார் எனஅறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் வைரமுத்து, தான் தேர்தலில் வில் அம்பு சின்னத்திற்கு பிரச்சாரம் செய்யப்போவதில்லை எனவும், எனது ஆதரவு அதிமுக வேட்பாளர் கே.டிராஜேந்திரபாலாஜிக்கு என தெரிவித்தார்.
 
மேலும் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து வைரமுத்துகே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சால்வை அணிவித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.
 
NOTE :  ADMK TRYING TO DUMP KARTHIK ... SUPPORT KARTHIK

நவரசம் மாத இதழ்

12.05.2016 முதல் தமிழகம் எங்கும் நமது நவரசம் மாத இதழ்!!
வாங்கி படியுங்கள்! நவரசம் மாத இதழ்

சிங்கம் கூட்டணி - வேட்பாளர்

சிங்கம் கூட்டணியில் களம் காணும் அனைத்து வேட்பாளர்களும் வெற்றிபெற மூவேந்தர் முன்னேற்ற கழகம் வாழ்த்துகிறது.

 

சிங்கம் சின்னம் வரலாறு!

1948 ஆம் ஆண்டு பார்வர்ட் பிளாக் கட்சி இரண்டாக உடைந்தது பார்வர்ட் பிளாக் (சுபாசிஸ்ட்) என்றும் பார்வர்ட் பிளாக்(மார்க்ஸ்சிட்) என்றும் பிரிந்தார்கள், ஆனால் தென்னிந்தியாவில் பார்வர்ட் பிளாக் கட்சி உடையவில்லை.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் இந்தநேரத்தில் கருத்துவேறுபாடுக்கொண்ட இரு பிரிவினரையும் அனுசரித்து சுபாசிஸ்ட் பிரிவின் கொடியையும் மார்க்ஸ்சிட் பிரிவின் சிங்கம் சின்னத்தையும் வைத்துக்கொண்டார்.
...
1952ல் நடந்த தேர்தலில் சிங்கம் சின்னத்தில் 6 பேர் பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டனர். அதில் பசும்பொன் தேவர் மட்டுமே முதன்முதலாக சிங்கம் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். விடுதலை இந்தியாவில் முதல் வெற்றியை தேவருக்கு பெற்று தந்த சிங்கம் சின்னமே பார்வர்ட் பிளாக்கின் நிரந்தர சின்னமானது.
தேசத்திற்காக உயிர் உடைமை என அனைத்தையும் இழந்த தலைவர்களின் ஆத்மா மகிழ.. உங்கள் ஓட்டு சிங்கம் சின்னத்திற்கே விழட்டும்!

தேவரின சிறப்பு செய்திகள்

தேவர் ஓட்டு தேவருக்கே…

 
12974430_1531413723831389_8097407308310288026_n
சிந்தித்து பாருங்கள்…!
தேவரய்யா வெற்றி பெற்ற சின்னம்..!
உங்கள் ஓட்டு நமது சின்னம் சிங்கத்துக்கு
தேவர் ஓட்டு தேவருக்கே…

Thursday, May 5, 2016

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்

மற்றவரகளுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்க...ளோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு
இஞ்சி ஒத்தடம்:
=============
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்:
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
============
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

தோல்வி பயத்தில் உசிலம்பட்டியில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு கயவர்களின் சூழ்ச்சி.

 
 
உசிலம்பட்டி தொகுதியின் வெற்றி வேட்பாளரும் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக்கின் மாநில பொது செயலாளருமான அண்ணன் பிவி.கதிரவன் அவர்களின் பிரசார வாகனம் தாக்கப்பபட்டது.

Voter List -ல உங்க பெயர் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

Voter List -ல உங்க பெயர் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna…


என்னுடைய பெயர் இருக்கு....
இந்த நல்ல தகவலை உடனே கண்டிப்பாக ஷேர் செய்து. உங்க நண்பர்களுக்கு தெரியபடுதவும்!

Monday, May 2, 2016

அதிமுக அரசுக்கு ஆதரவு தந்துள்ள முக்குலத்தோர் அமைப்புக்கள்.

அகில இந்திய முக்குலத்தோர் பாசறை (சிற்றரசுதேவர்) பசும்பொன் தேசிய கழகம் ( ஜோதிமுத்துராமலிங்கத்தேவர்) முக்குலத்தோர் புலிப்படை ( கருணாஸ்) இவங்களா பத்தி கண்டிப்பா சொல்லி ஆகனும் . அதிமுக சீட் கொடுத்தவுடன் முக்குலத்தோர் புலிப்படை வெறும் புலிப்படையா மாறிடுச்சு . தேவர்குல கூட்டமைப்பு (சண்முகயாபாண்டியன்) பசும்பொன் மக்கள் இயக்கம் ( இசக்கிமுத்து) தென்னாட்டு மக்கள் கட்சி ( கணேஸ்தேவர்)
குறிப்பு:
ஓரு சீட் கூட தற முடியாது என்று சொன்...னவர்களுக்கு ஆதரவு தருவதற்கு பதில் நம் இனத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாமே . இதில் இருந்து என்ன தெரியுது நம்ம இனத்தை அழிக்க அடுத்தவன் கிட்ட போவோமே ஒழிய ஒன்று சேர மாட்டோம் .எப்போதும் இந்த பிளைப்பு தேவையா நமக்கு.
" 2016 - சட்டமன்ற தேர்தல் தேவர் இனத்துக்கு ஏழுச்சியாக இருக்கட்டும்"

முகப்புத்தகத்தில் பதிவிட்டவர் நண்பர்
பொன் வேல்

நாடாளும் மக்கள் கட்சி

நாடாளும் மக்கள் கட்சி பொது செயலாளர் A.M.மூர்த்தி தேவர் அவர்கள் வேட்பமனுவை திரும்ப பெற்றார் அண்ணன் ஸ்ரீவை சுரேஷ் தேவரை ஆதரித்து இன்னும் சில தினங்களில் நவரசநாயகன் கார்த்திக் அவர்கள் ஸ்ரீவை சுரேஷ் தேவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருகிறார்...!