ஜாதி பேரணிக்கு தடை விதித்திருப்பது தேச வளர்ச்சிக்கு நல்லது என அகில இந்திய மூமுக நிறுவனத்தலைவர் மருத்துவர் என். சேதுராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
ஜாதியின் பெயரில், அப்பாவி மக்களை ஏமாற்றி, அதில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் உள்ள தலைவர்களுக்கு அலாகாபாத் நீதிமன்றம் சவுக்கடி தந்திருக்கிறது. எங்களது இயக்கம் இந்த உத்தரவை முழுமனதோடு வரவேற்கிறது. ஜாதி அடிப்படையிலான பேரணி மட்டுமல்ல, ஜாதி அடிப்படையில் லட்சம் பேர் கூடும் மாநாடுகளுக்கும் தடைவிதிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள்தான் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்லும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment