கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர் போன்ற, ஹிட் படங்களைஇயக்கியவர், வசந்த். சமீபத்தில், இவர் இயக்கிய, மூன்று பேர் மூன்று காதல் படம் வெளியானது. இப்போது, இயக்குனர் ரூட்டிலிருந்து சற்று, திசைமாறி, நடிக்க வந்து விட்டார். அமீர், சேரன் போன்ற இயக்குனர்களை தொடர்ந்து, வசந்துக்கும், நடிப்பு ஆசை வந்துள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், கவுதம் கார்த்திக் - ப்ரியா ஆனந்த் நடிக்கும், வை ராஜா வை படத்தில், கவுதமுக்கு அப்பாவாக நடிக்கிறாராம், வசந்த். சமீபத்தில்,இவர் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்துக்கு பின், தொடர்ந்து, முழு நேரநடிகராக, அவர் மாறினாலும், ஆச்சர்யம் இல்லை என்கிறது, கோலிவுட் வட்டாரங்கள்.
No comments:
Post a Comment