உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதல் சந்திப்புக் கூட்டம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
கல்லூரியில் 1970-71ஆம் ஆண்டு பியுசி படித்த 60 மாணவர்கள் மற்றும் 15 கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். சங்கத்தின் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சு.ஜவகர்லால்நேரு முயற்சியில் இந்த கூட்டம் 42 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது படித்த முன்னாள் மாணவர்களான முன்னாள் எம்எல்ஏக்கள் ஆசையன், தவசி ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களது கல்லூரி நாள்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
No comments:
Post a Comment