கமுதியில் பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள், வியாழக்கிழ மை, ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ராமேசுவரத்தில் பசும்பொன் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கமுதி-கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வகுப்புகளை இவர்கள் புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்திருந்தனர்.
சிலை அவமதிப்பு கண்டன கோஷங்களை மாணவர்கள் முழங்கினர்.
சிலையை சேதப்படுத்தியவர்களை துரிதமாக கைது செய்து, காவல் துறையினர் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றினர்.
No comments:
Post a Comment