விஜய்சேதுபதியின் வன்மம் படத்துக்கு தமன் இசையமைக்க இருக்கிறார்.
’பீட்சா’, ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூதுகவ்வும்’ போன்ற படங்களில் தன்னுடைய மாறுபட்ட நடிப்பின் மூலம் பேசப்பட்டவர் விஜய்சேதுபதி. தற்போது இவர் ‘சங்குதேவன்’ என்ற படத்தில் ரொம்பவும் வித்தியாசமான ஒரு கெட்-அப்பில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து ‘வன்மம்’ என்ற படத்திலும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை ஜெய் கிருஷ்ணா இயக்குகிறார். முதலில் இந்தப் படத்திற்கு ரகுநந்தன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இப்போது அவர் கிடையாது. அவருக்கு பதிலாக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
தமன், தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான இசை அமைப்பாளராக இயங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment