பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் 212-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மருதுபாண்டியர் மக்கள் நலச் சங்கம் சார்பில் வியாழக்கிழமை தன்னார்வ ரத்ததான முகாம் நடைபெற்றது.
அகமுடையார் மஹாலில் நடைபெற்ற இம்முகாமுக்கு ஆறுமுகம்சேர்வை தலைமை வகித்தார். மருதுபாண்டியர் மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் ஐ.கண்ணன், எல்.சரவணன், விக்னேஷ்வரன், துளசிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார். ரத்ததானத்தின் அவசியம் குறித்து முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் பேசினார். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர் விஜயராகவன் தலைமையில் ரத்த சேகரிப்புப்பணி நடைபெற்றது.
இதில் அச்சங்கத்தின் நிர்வாகிகள் 50 பேர் ரத்ததானம் செய்தனர்.
.
No comments:
Post a Comment