முதுகுளத்தூர்,கடலாடி பகுதிகளில் 144 தடை உத்தரவை நீக்கக்கோரி கிராமங்களில் கறுப்புக்கொடி கட்டியுள்ளனர்.
பசும்பொன்னில் அக்.30இல் தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களில் இருந்து ஜோதி எடுத்துவரக்கூடாது, வாடகை வாகனங்களில் வரக்கூடாது, வெடிபோடக்கூடாது என பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைக்கண்டித்து முதுகுளத்தூர் தாலுகாவில் ஒருவானேந்தல், பொசுக்குடி ஆகிய கிராமங்களிலும், கடலாடி தாலுகாவில் சாத்தங்குடி கிராமத்திலும் வீடுகள்தோறும் கறுப்புக்கொடி கட்டியுள்ளனர்.
.
No comments:
Post a Comment