ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருபவர்கள் சொந்த வாகனத்தில் வர வேண்டும், வாடகை வாகனங்களில் வரக்கூடாது. மற்றும் பல்வேறு கட்டுபாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உததரவை நீக்க வேண்டும். தேவர் ஜெயந்தி விழாவுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடைகளை அகற்ற கோரி உசிலம்பட்டியில் தொடர் உண்ணாவிரதம் இருக்க அகில இந்திய பார்வர்டு பிளாக்கட்சியினர் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 9 மணி அளவில் தேவர் சிலை அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் தலைமையில் சுமார் 12 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் உசிலம்பட்டி டி.எஸ்.பி. சரவணகுமார், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்று உண்ணாவிரதம் இருந்த மணிகண்டன் உள்பட 12 பேரை கைது செய்தனர்.
No comments:
Post a Comment