மெரினா கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்றலாம் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று தமிழக அரசு பதில் மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில், காமராஜர் சாலையில் இருந்து ராதாகிருஷ்ணன் சாலைக்கு திரும்பும் போது, மற்ற மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்களை இந்த சிலை மறைப்பதால், இந்த பகுதியில் அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன என்றும், இதனால் அநதச் சிலையை அகற்றலாம் என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
.
No comments:
Post a Comment