மதிமுக சார்பில் மதுரை வில்லாபுரத்தில் வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் வெள்ளிக்கிழமை (ஜன.17) நடைபெறுகிறது. ஜெகஜோதி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ தலைமை வகிக்கிறார். மாவட்டச் செயலர் மு.பூமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். மணிமேகலை சர்மா குழுவினர் வழங்கும் இதில் சின்னத்திரை, திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment