Friday, January 24, 2014

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எஸ்.எஸ்.ஆர்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை வீடு திரும்பினார். சளி அதிகமானதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த எஸ்.எஸ்.ஆர்., கடந்த 15-ஆம் தேதி கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறல் அதிகரித்துக் கொண்டே இருந்ததால், மருத்துவமனையிலேயே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உடல் நலம் தேறி இயல்பான நிலைக்கு அவர் வந்ததால் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தனது இல்லத்துக்கு வியாழக்கிழமை மாலை திரும்பினார். மூட்டு வலி இருப்பதால் இன்னும் சில வாரங்களில் அதற்கான அறுவைச் சிசிச்சையை எஸ்.எஸ்.ராஜேந்திரன் செய்து கொள்ள இருப்பதாக அவரது மனைவி தாமரைச்செல்வி தெரிவித்தார். .

No comments:

Post a Comment