‘‘இனிமேல் கதாநாயகனாகத்தான் நடிப்பேன். காமெடி பண்ண மாட்டேன்’’ என்று கருணாஸ் முடிவு செய்திருப்பதாக, அவருக்கு எதிராக யாரோ வதந்தியை பரப்பி இருக்கிறார்களாம்.
‘‘கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. நகைச்சுவை நடிகராக அறிமுகமானேன். இடையில் கதாநாயகனாக சில வாய்ப்புகள் வந்தன. நடித்தேன். தொடர்ந்து நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறேன். வி.சேகரின் சரவணப்பொய்கை, சகுந்தலாவின் காதலன், பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய படங்களில் எனக்கு நகைச்சுவை வேடங்கள்தான். அதில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை’’ என்கிறார், கருணாஸ்!
No comments:
Post a Comment