சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு வருகிற 9–ந்தேதி தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தங்க கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
‘‘ஏற்கனவே அது பதட்டம் நிறைந்த பகுதி என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்தனர். ‘‘இந்த நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் கலந்து கொள்வதால் தகுந்த போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment