Sunday, May 12, 2013

கார் கவிழ்ந்து முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் தம்பி உள்பட 4 பேர் படுகாயம்: டிரைவர் பலி

முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசரின் குடும்ப திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அவரது தம்பி செல்வரத்தினம், உறவினர்கள் முத்து, மாரியப்பன், சண்முகம் ஆகியோர் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இருந்து ஒரு காரில் பாபநாசம் புறப்பட்டு வந்தனர். 

பாளை கே.டி.சி.நகர் பகுதியில் கார் வந்தபோது குறுக்கே மாடு சென்றதால் அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் ராமநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். திருநாவுக்கரசரின் தம்பி செல்வரத்தினம் உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். 

அவர்கள் வண்ணார்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திருநாவுக்கரசர், ராமசுப்பு எம்.பி., மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து நலம் விசாரித்தனர்.

No comments:

Post a Comment