அக்.30இல் குருபூஜை விழா நடைபெற உள்ளதையொட்டி பசும்பொன் தேவர் நினைவாலயம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பசும்பொன் தேவர் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்.30இல் ராமநாதபுரம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பசும்பொன் தேவர் மணி மண்டப பொறுப்பாளராக தேவரின் மருமகன் நடராஜ தேவர் பல ஆண்டுகள் இருந்து ஆண்டு தோறும் தேவர் குருபூஜை விழாவை நடத்தி வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு டிசம்பரில் நடராஜ தேவர் இறந்த பின்பு அவரது மனைவி காந்தி மீனாள் நடராஜன், பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளராக இருந்து விழாவை நடத்தி வருகிறார்.
இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிட மணி மண்டபம், மற்றும் தேவர் வசித்த இல்லம் உள்ளிட்ட இடங்களைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment