Wednesday, December 30, 2015

ACTOR KARTHIK ON BEEP SONG

Sunday, December 13, 2015

வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 🔥 “தீ - கட்சி" 🔥 முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்::

அதன் தலைவர் ராஜாமறவன் - கடையநல்லூர் தொகுதியில் நிற்பதாக அறிவித்துள்ளார்.
மேலும்
🔥கோவை - K.R. தேவர்
🔥திருமங்கலம் - மூர்த்தி
🔥தென்காசி - முத்துராஜ்
🔥ஆலங்குளம் - கண்ணன்
🔥சிவகாசி - பிரதாப்
🔥சாத்தூர் - பசும்பொன் ரமேஷ்
🔥இராஜபாளையம் - சுப்பிரமணி
🔥சிவகங்கை - கண்ணன்
🔥மதுரை - ஆனந்த்
🔥போடி(தேனி) - முத்துக்குமார்

போட்டியிடுவதாக அறிவிக்கபட்டுள்ளது.

Maruthu TV

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகைகளை மற்றும் மிலாதுன் நபி முன்னிட்டு வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23-ல் மிலாதுன் நபி, 25-ல், கிறிஸ்துமஸ் பண்டிகையும் 26-ல், நான்காவது சனிக்கிழமை விடுமுறையும்,  27-ல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. இதற்கிடையே மிலாதுன் நபி, 24ஆம் தேதிக்கு மாற்றுப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அப்படி மாற்றி அறிவித்தால், டிசம்பர் 24 முதல் 27 வரை நான்கு நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது என்றும் கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Saturday, December 12, 2015

புதிய கட்சி துவக்க விழா

நெல்லையில் இன்று ராஜாமறவன் தலைமையில் தீ கட்சி என்ற பெயரில் புதிய கட்சி துவங்கபட்டுள்ளது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த கட்சி சார்பாக 40 தொகுதியில் தனித்து போட்டியிட போவதாக அதன் தலைவர் ராஜாமறவன் அறிவித்துள்ளார்.

மேலும் தீ கட்சியின் கொடி அறிமுகம்படுத்தப்பட்டது. மஞ்சள் வண்ண கொடியில் வில் - அம்பு, புலி, மீன் படங்கள் பொறிக்கபட்டு தீ என்ற எழுத்தும் பதிக்கப்பட்டுள்ளது. திருநெல்லவேலி சொக்கம்பட்டியில் நடைபெற்ற இவ்விழா வில் திரளானோர் கலந்து கொண்டனர்.
 

Maruthu TV

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: தர்மசாலாவில் மோதுகிறது இந்தியா-பாகிஸ்தான்

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மார்ச் 19-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.
 அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை இந்தியாவின் 8 நகரங்களில் நடைபெறுகின்றன.
 சூப்பர் 10 சுற்று: தரவரிசை அடிப்படையில் நேரடித்தகுதி பெற்றுள்ள 8 அணிகளும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது சூப்பர் 10 சுற்று என அழைக்கப்படுகிறது. இந்தச் சுற்றுக்கு மேலும் இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் தகுதிபெறும்.
 முதல் சுற்று என அழைக்கப்படும் தகுதிச்சுற்றில் 8 அணிகள் விளையாடுகின்றன. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தகுதிச்சுற்று போட்டிகள் மார்ச் 8 முதல் 13 வரை தர்மசாலா, நாகபுரி ஆகிய நகரங்களில் நடைபெறுகின்றன.
 ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 10 சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் பங்கேற்க தகுதி பெறும்.
 இந்தியா-நியூஸிலாந்து மோதல்: சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டம் மார்ச் 15-ம் தேதி நாகபுரியில் நடைபெறுகிறது. அதில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதுகின்றன.
 அரையிறுதிக்கு பாகிஸ்தான் முன்னேறும்பட்சத்தில், அதன் அரையிறுதி ஆட்டம் தில்லியில் நடத்தப்படும். மும்பையில் பாகிஸ்தான் அணிக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் அங்கு பாகிஸ்தான் விளையாடுவதைத் தவிர்க்கும் வகையில் மேற்கண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 மகளிர் பிரிவு: மகளிர் பிரிவு போட்டி மார்ச் 15-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் இந்தியா, வங்கதேசத்துடனும், நியூஸிலாந்து, இலங்கையுடனும் மோதுகின்றன.
 மகளிர் பிரிவில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகள் "ஏ' பிரிவிலும், இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவை "பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி மற்றும் மும்பையிலும், இறுதிப் போட்டி ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகின்றன.
 அனல் பறக்கும் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை நடத்துவதற்கு குளுமையான சூழல் தேவை. அது தர்மசாலாவில் கிடைக்கும்.
 -அனுராக் தாக்குர்,
 பிசிசிஐ செயலாளர்.
சென்னையில் மகளிர் போட்டி மட்டுமே! ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்
 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறப்படும் 3 கேலரிகளை பயன்படுத்த முடியாத நிலை இருப்பதைக் காரணம் காட்டி சென்னையில் ஆடவர் பிரிவு உலக கோப்பை போட்டி எதுவும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மகளிர் பிரிவு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 மகளிர் பிரிவிலும் 4 ஆட்டங்கள் சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் இந்திய அணி மோதும் ஆட்டம் எதுவும் கிடையாது. இந்தியாவில் பெருவாரியான கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றான சென்னைக்கு ஆடவர் பிரிவு போட்டி ஒதுக்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள்...
 *ஆடவர், மகளிர் பிரிவினருக்கான இறுதி ஆட்டங்கள் ஏப்ரல் 3-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகின்றன.
 * அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் தில்லி மற்றும் மும்பையில் நடைபெறுகின்றன.
 *கேலரி பிரச்சினையை காரணம் காட்டி சென்னைக்கு ஆடவர் பிரிவு ஆட்டங்கள் ஒதுக்கப்படவில்லை. மகளிர் பிரிவில் 4 ஆட்டங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
 * சூப்பர் 10 சுற்றின் முதல் ஆட்டம் மார்ச் 15-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா.
 * பாகிஸ்தான் அணி, அரையிறுதிக்கு முன்னேறும்பட்சத்தில் அந்த அணி மோதும் அரையிறுதி ஆட்டம் பாதுகாப்புக் கருதி தில்லியில்தான் நடத்தப்படும்.
 * பெங்களூரு, மும்பை, சென்னை, நாகபுரி, தில்லி, தர்மசாலா, கொல்கத்தா, மொஹாலி ஆகிய 8 நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.
 * ஆடவர் பிரிவில் 35 ஆட்டங்கள், மகளிர் பிரிவில் 23 ஆட்டங்கள் என மொத்தம் 58 ஆட்டங்கள் நடக்கின்றன.
 *ஆடவர் பிரிவு போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.37 கோடியே 48 லட்சம் ஆகும். இது 2014-ம் ஆண்டைவிட 86 சதவீதம் அதிகமாகும்.
 *இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் மார்ச் 19-ம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.
 * மகளிர் உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.2 கோடியே 67 லட்சம் ஆகும். இது கடந்த முறையைவிட 122 சதவீதம் அதிகமாகும்.
 * முதல் சுற்று என அழைக்கப்படும் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மார்ச் 8 முதல் 13 வரை தர்மசாலா மற்றும் நாகபுரியில் நடைபெறுகின்றன.
 * டி20 உலகக் கோப்பை போட்டி 27 நாட்கள் நடைபெறுகிறது.
 11 நாடுகளுக்கு பயணிக்கும் கோப்பை
 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படவுள்ள கோப்பை மும்பையில் வெள்ளிக்கிழமை பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த கோப்பை வரும் 13-ம் தேதி ஸ்காட்லாந்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. 11 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும் இந்த கோப்பை பிப்ரவரி 1-ம் தேதி தில்லியை வந்தடையும்.
முதல் சுற்று (தகுதிச்சுற்று)
 குரூப் "ஏ'
 வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன்.
 குரூப் "பி'
 ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஹாங்காங், ஆப்கானிஸ்தான்.
 சூப்பர் 10 சுற்று
 குரூப்-1
 தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து,
 மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, தகுதிபெறும் அணி.
 குரூப்-2
 இந்தியா, பாகிஸ்தான்,
 நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, தகுதிபெறும் அணி.
 

நேதாஜியின் இறுதி நாள்கள் குறித்த இணையதளம் லண்டனில் தொடக்கம்

நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் இறுதி நாள்கள் குறித்த ஆவண ஆதாரங்களை அளிக்கும் புதிய இணையதளம், லண்டனில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
 பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளரும், போஸின் பேரனுமான ஆஷிஸ் ரே, தன் வசமுள்ள ஆவணங்களை வெளியிடும் வகையில், www.bosefiles.info என்ற அந்த இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்.
 இதுகுறித்து, அவர் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், சுபாஷ் சந்திர போஸுக்கு உண்மையிலேயே என்ன நேர்ந்தது? என்பதை வெளிக்கொணரும் நோக்குடன், இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் ஆஷிஸ் ரே.

#செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து.....

 

பக்கத்தில் இருக்கும் இந்த தகவல் அதி முக்கியமானது. அரசாங்கத்தின் மெத்தனம், அலட்சியம், நிர்வாக சீர்கேடு, இயலாமை, ஆணவம் என ஒட்டுமொத்த Governance failure க்கான அத்தாட்சி.

Narain Rajagopalan 

Sunday, December 6, 2015

மக்கள் வரிப் பணம் என்ன ஆனது? தமிழக அரசுக்கு கமல் கேள்வி

மக்கள் செலுத்திய வரிப் பணம் என்ன ஆனது என, தமிழக அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து "ஃபர்ஸ்ட்போஸ்ட்' என்ற இணைய தளத்திற்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டி:
""தமிழகத்தில் தலைநகரான சென்னைக்கே இந்த நிலை என்றால் (கடுமையான வெள்ளப் பாதிப்பு), மற்ற ஊர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பிறர் படும் துன்பத்தை எண்ணி பணக்காரர்கள் வெட்கப்பட வேண்டும்; நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்ப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.
பலத்த மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்துள்ளது. அரசு நிர்வாகம் முழுமையாகச் செயலிழந்துள்ளது. இதிலிருந்து மீண்டுவர இன்னும் பல மாதங்கள் ஆகும். மக்கள் வரிப் பணம் என்ன ஆனது எனத் தெரியவில்லை. என்னிடம் கருப்புப் பணம் இல்லை. உழைத்துச் சம்பாதித்தப் பணத்துக்கு முறைப்படி வரி செலுத்தி வருகிறேன். இதையெல்லாம் (வெள்ளப் பாதிப்பு) பார்க்கும்போது வரிப் பணம் உரியவர்களுக்குப் போய் சேரவில்லை என்று தெரிகிறது.
மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது, என்னைப் போன்றவர்களிடம் நிதியுதவியை அரசு எதிர்பார்க்கிறது.
நான் மக்களை நேசிப்பதால் அத்தகைய உதவியை வழங்குவது என் கடமை'' என்றார் நடிகர் கமல்ஹாசன்.

Friday, December 4, 2015

Malaysian Mukkulathors

Malaysian based Klang Valley Mukkulathor Association (KVMA) is raising funds for Chennai Flood Relief purpose. The collected funds will be transfered directly to one Mr.Pra Deep RaJan. He and his circle of friends are in need of funds to prepare food for approximately 600 people.
Here is what you need to do:
1. Send an email to kvmukkulathor@gmail.com.
2. We will reply to your email with the local banking details.
3. You can then transfer the funds.
4. Attach a screenshot of the transfer receipt and send it to kvmukkulathor@gmail.com
5. We will record it and announce it in this FB wall so that everybody knows how much we are receiving.
6. Collected funds will be transfered to Mr.Pradeep in Chennai most probably on Monday 7 Dec or latest by Wednesday 9 Dec 2015.
7. A copy of fund transfer receipt will be shared in FB as proof.
We are not going through any political parties or agents because we want to make sure the funds reach the right person. There are rumours that some are politicising this issue for their own benefit as Tamil Nadu elections will be held in 2016.
All funds will only be used for Chennai Flood Relief purpose. KVMA will not use the funds for its own purpose.
If you are worried that it will only reach people of a particular community, let us assure you that such things will not happen. Most people in Chennai are not from our community and the recipients of your donation are from various communities. KVMA is doing this as a humanitarian effort.
This fund raiser will stop after the said date. Do not forward our banking details to anyone without our consent as we do not want to unnecessarily receive any additional money. Our target is minimum Rs10,000 (approx RM700).
Thank you
-Team KVMA-