Tuesday, March 19, 2013

60-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ‘வழக்கு எண் 18/9’ தேர்வு

மத்திய அரசு ஆண்டு தோறும் திரைப்பட துறையைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்து எடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. 60-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.




தேர்வுக் குழுவின் தலைவர் பாசு சாட்டர்ஜி விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களை அறிவித்தார்.



இந்த ஆண்டில் தமிழ் திரைப்பட துறைக்கு 5 விருதுகள் கிடைத்து உள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படமாக டைரக்டர் பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9' தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய ஒப்பனையாளர் ராஜா தேசிய அளவில் சிறந்த ஒப்பனையாளராக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.



கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' படத்துக்கு நடனம் அமைத்த பிர்ஜூ மகாராஜ் தேசிய அளவில் சிறந்த நடன இயக்குனருக்கான விருதை பெற்று இருக்கிறார். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய லால்குடி என்.இளையராஜா சிறந்த ஆர்ட் டைரக்டருக்கான விருதை பெற்று உள்ளார்.



டைரக்டர் பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் பணியாற்றிய பூர்ணிமா ராமசாமி சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை பெற்று உள்ளார்.



தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக திக்மான்சு துலியா இயக்கிய 'பான்சிங் தோமர்' என்ற படம் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கு தங்க தாமரை விருதும், ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.



சிறந்த ஜனரஞ்சக படத்துக்கான விருது சூஜித் சர்க்கார் இயக்கிய 'விக்கி டோனர்' என்ற இந்தி படத்துக்கு கிடைத்து இருக்கிறது. இந்த படத்துக்கு தங்க தாமரை விருதும் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். சிறந்த நடிகர் இர்பான் கான் 'பான்சிங் தோமர்' படத்தில் கதாநாயகனாக நடித்த இர்பான் கான், 'அனுமாதி' என்ற மராத்தி படத்தில் நடித்த விக்ரம் கோகலே ஆகிய இருவரும் இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருதை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.



‘தக்‘ என்ற மராத்தி படத்தில் நடித்துள்ள உஷா ஜாதவ் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்து இருக்கிறது. இந்த படத்தை இயக்கிய சிவராஜ் லோடன் பட்டீல் தேசிய அளவில் சிறந்த இயக்குனராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு அனு கபூர் (படம்: விக்கி டோனர்) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை நடிகைக்கான விருதை ‘விக்கி டோனர்’ படத்தில் நடித்த டோலி அலுவாலியா, ‘தணிச்சாலஞ்சன்’ மலையாள படத்தில் நடித்த கல்பனா ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். ‘தணிச்சாலஞ்சன்’ படத்துக்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ்தத் விருதும் கிடைத்து உள்ளது.



சிறந்த பின்னணி பாடகருக்கான விருது சங்கர் மகாதேவனுக்கும் (இந்தி படம்: சிட்டகாங்), சிறந்த பின்னணி பாடகிக்கான விருது சம்தாவுக்கும் (மராத்தி படம்: ஆர்த்தி அங்லேகார்டிகேகர்) கிடைத்து உள்ளது.



'சம்தா' படத்துக்கு இசை அமைத்த சைலேந்தர் பார்வேயும், ‘காளியச்சன்’ மலையாள படத்துக்கு இசையமைத்த பிஜி பாலும் சிறந்த இசையமைப்பாளர் விருதை பகிர்ந்து கொண்டு உள்ளனர்.



சிறந்த பாடலாசிரியருக்கான விருது பரசூன் ஜோஷிக்கு (படம்: சிட்டகாங்) கிடைத்து இருக்கிறது. சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதை மாஸ்டர் வீரேந்திர பிரதாப் (இந்தி படம்: தேக் இந்தியன் சர்க்கஸ்), மாஸ்டர் மினான் (மலையாள படம்: 101 சோடியங்கள்) ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.



சிறந்த தெலுங்கு படத்துக்கான விருது ‘ஈகா’ என்ற படத்துக்கு கிடைத்து உள்ளது. சிறந்த ஸ்பெஷல் எபெக்டுக்கான விருதும் இந்த படத்துக்கு கிடைத்து இருக்கிறது. இந்த படம்தான் தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் வெளியானது.



தேர்ந்து எடுக்கப்பட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பின்னர் நடைபெறும். விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குவார்.

தியேட்டர்களில் எழுந்து நின்று ரசிகர்கள் கைதட்டியபோதே விருது உறுதியாகி விட்டது: டைரக்டர் லிங்குசாமி பேட்டி

டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து, பாலாஜி சக்திவேல் டைரக்டு செய்த 'வழக்கு எண் 18/9'. இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது கிடைத்து இருக்கிறது. இதுபற்றி டைரக்டர் லிங்குசாமி கூறியதாவது:-




‘வழக்கு எண் 18/9’ படத்தை பார்த்து விட்டு, படம் முடிந்ததும் தியேட்டர்களில் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினார்கள். அப்போதே அந்த படத்துக்கு விருது உறுதியாகிவிட்டது. பத்திரிகைகள் மற்றும் அனைத்து தரப்பை சேர்ந்த பொதுமக்களின் பாராட்டுகள், மேலும் எனக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தின.



ஏற்கனவே இந்த படத்துக்கு, தமிழ்நாட்டில் நடந்த சர்வதேச படவிழாவில் விருது கிடைத்தது. பிரான்சு திரைப்பட விழாவிலும் விருது கிடைத்தது. இதற்கெல்லாம் மேலாக, ‘வழக்கு எண் 18/9’ படத்துக்கு இப்போது தேசிய விருது கிடைத்திருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்துக்கு முதலில் ஆதரவு தந்த ரசிகர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.



‘வழக்கு எண் 18/9’ படத்தின் டைரக்டர் பாலாஜி சக்திவேல், என் நண்பர். அவர் மூலம் இந்த படத்துக்கு விருது கிடைத்திருப்பது எனக்கு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறினார்.



டைரக்டர் பாலாஜி சக்திவேல் கூறும்போது, ஒரு தரமான படத்துக்கு கிடைத்த மிக சிறந்த விருதாக இதை கருதுகிறேன். தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய நண்பர்களின் சந்தோஷத்தை என் சந்தோஷமாக நினைக்கிறேன். ‘வழக்கு எண்’ படத்துக்கான ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் பாராட்டுகளை அங்கீகரித்த மத்திய அரசுக்கு என் நன்றி. இந்த விருது எனக்கு இன்னும் நல்ல சமூக படைப்புகளை கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்து இருக்கிறது என்று கூறினார்.



‘வழக்கு எண் 18/9’ படத்துக்காக, மேக்கப்மேனுக்கான தேசிய விருது பெறும் ராஜா கூறும்போது, நான் எதிர்பாராத விருது இது. இந்த விருது கிடைப்பதற்கு காரணமான தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ், டைரக்டர் பாலாஜி சக்திவேல் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.



கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் ஆர்ட் டைரக்டராக பணியாற்றியதற்காக, தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இளையராஜா கூறும்போது, எனக்கு மிக மிக சந்தோஷமாக இருக்கிறது. கடுமையான உழைப்புக்கு கிடைத்த விருதாக இதை கருதுகிறேன். ‘விஸ்வரூபம்’ படத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கொடுத்த கமல்ஹாசனுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 4 முறை கலை இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சாபுசிரிலிடம் பணிபுரிந்தவன், நான். இந்த நேரத்தில், அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.



பாலா இயக்கி ‘பரதேசி’ படத்தில் பணிபுரிந்ததற்காக தேசிய விருது பெற்றுள்ள உடை அலங்கார நிபுணர் பூர்ணிமா ராமசாமி கூறும்பாது, நம்பவே முடியவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. டைரக்டர் பாலாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என் குரு செல்வமன்னாவுக்கும் நன்றி. பரதேசி படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதையே குறியாக வைத்து அனைவரும் வேலை செய்தோம். அதற்கு கிடைத்த விருதாக இதை கருதுகிறேன் என்றார்.

ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க சீமான் ஜெனீவா போய்ச்சேர்ந்தார்: சுவிஸ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். சினிமா வாய்ப்புகளை உதறிவிட்டு தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்காக போராடி வருகிறார்.


தற்போது ஜெனீவா நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோரி பேசுவதற்காக சீமான் சுவிஸ் சென்றார். அவருடன் கட்சியின் சட்ட ஆலோசகர் தடா சந்திரசேகரும் சென்றுள்ளார்.





அங்கிருந்து சீமான் இன்று பிற்பகல் ஜெனீவா போய்ச்சேர்ந்தார். ஜெனீவா விமான நிலையத்தில் அவரை அங்கு திரண்டு இருந்த நூற்றுக்கணக்கான சுவிஸ் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் மலர்ச் செண்டு தமிழ் ஈழ தேசியகொடி வழங்கி வரவேற்றார்கள்.



அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கோரி தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் சீமான் சுவிஸ் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.





22-ந்தேதி பிற்பகல் 2.30 மணிக்கு ஜெனீவா நகரில் நடைபெறும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியிலும் சீமான் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.







மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: வைகோ கண்டனம்.

மதுரையில் மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.




இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர்களுக்காக நீதி கேட்டு தமிழக மாணவர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மூலக்கரை என்ற இடத்திலிருந்து பேரணியாக வந்த மாணவர்கள் பெரியார் பஸ் நிலையம் அருகில் அமைதியாக அமர்ந்து இலங்கை அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார் மதுரை சட்டக் கல்லூரி மாணவர் அய்யாத்துரையை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸாரின் இந்தச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.



மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை உனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். 1965 ஜனவரி 25-ம் தேதி மதுரை மாசி வீதியில் மாணவர்கள் தாக்கப்பட்டதால்தான் புரட்சி வெடித்தது. ராணுவத்தையும் மாணவர்கள் எதிர்கொண்டனர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

.

ஈழ தமிழர் நம்பிக்கையை பெற இந்தியா செயல்பட வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.,

இந்தியா மீது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், அவர்களின் நல்வாழ்வுக்கு மத்திய அரசு செயல்படவேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தென் மாநிலங்களின் செயலர் ராஜேந்திரன் கூறினார்.


ஜெய்ப்பூரில் முடிந்த ஆர்.எஸ்.எஸ்., பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில், இந்துக்களை அழிக்கும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது. இரு நாடுகளிலும் கடந்த 65 ஆண்டுகளில், இந்துக்களின் மக்கள்தொகை வெகுவாக குறைந்துள்ளது. இந்துக்களை காப்பாற்ற, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு, அந்நாடுகளிடம் நஷ்ட ஈட்டைப் பெறவேண்டும். இலங்கை பிரச்னையில், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் போது, இந்திய அரசு உதவவில்லை. இந்தியா உதவும் என, நம்பியிருந்த ஈழத் தமிழர்கள் ஏமாந்து உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு இனி நடந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் மறுவாழ்வு, இழந்த உரிமைகளை மீட்டல் போன்றவற்றில், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, ராஜேந்திரன் கூறினார்.





சிங்கபூர் தேவர் அமைப்பினர்

பற்றுமிகுந்த உறவுகளுக்கு,




அய்யா திரு நவமணி அவர்களுக்கு நமது வரலாற்றை மீட்கும் பணிக்கு ஆதரவாக நமது சிங்கபூர் தேவர் அமைப்பினர் சார்பாக வழங்கியது.




என்றும் அன்புடன்,

செந்தூர் பாண்டி



Subhash Chandra Bose's bodyguard dead

Bachittar Singh, a former bodyguard of Netaji Subhash Chander Bose, died on Monday at the age of 94 following brief illness.




Singh, a freedom fighter, breathed his last at his native village Myondh Khurd in Fatehabad district in Haryana.



He was cremated with full state honours.



Haryana Chief Minister Bhupinder Singh Hooda condoled his death.



Bala, Director

While admitting that he was surprised by the comments made by those in the film industry, Bala said, “Cinema is a world of make-believe. It's sad that even people in the business of film-making have misunderstood what's depicted in the trailer. Nevertheless, I am touched by the people’s sensitivity when confronted with violence. But, where was this sensitivity when thousands of people were killed in Sri Lanka? Sometimes, silence can be the biggest form of violence!”




Monday, March 18, 2013

19 held for bid to lock up Bodhi Centre

In the latest wave of anti-Lankan protests in the city, members of Naam Tamilar Katchi attempted to lock the Maha Bodhi Society, Chennai Centre, located on Kenneth Lane, in Egmore, around noon on Sunday. Nineteen activists were later arrested.




Police said about 30 activists marched into Kenneth Lane from Gandhi Irwin Road shouting slogans. The contingent of policemen stationed in the lane stopped them a few metres away from the Maha Bodhi Society. As many as 19 of them were held while the rest escaped. Barricades were put up on either side blocking the otherwise busy lane. Police said about 150 Sri Lankans, including 20 Buddhist monks, were at the society.



Security was beefed up at all Sri Lankan establishments in the city, including the Sri Lankan Airlines office, Bank of Ceylone and Sri Lankan Deputy High Commission in Nungambakkam.



The attempt to besiege the Maha Bodhi Society comes after a Buddhist monk from Sri Lanka was reportedly attacked by members of pro-Tamil outfits when he visited the Thanjavur’s Big Temple on Saturday.



In Mylapore, about 50 residents of Visalakshi Thottam burnt an effigy of Rajapaksa, police said.

Naam Tamilar activists held for attempting to show black flags to Pc

Police detained 19 activists of Naam Tamilar Movement, a pro-Srilankan Tamil outfit for attempting to show "black flags" to Union Finance Minister P.Chidambaram, barely few minutes before his convoy passes through the place of agitation at Periyar Statue, here this evening.






Led by party's Karaikudi Town Coordinator "Sayal" Ram, the agitators assembled near the Periyar Statue, raised slogans against Congress-led UPA Government at the Centre for allegedly attempting to shield Srilankan government despite of war crimes and attempted to show black flags to Chidambaram. They also condemned the Centre for giving training to Srilankan soldiers and playing a "mute spectator" role on the attacks against innocent Tamil fishermen by Srilankan navy. Police swung into action, detained the protesters and removed them from the spot.





Meanwhile, enraged over the black flag demonstration, a large number of Congress volunteers resorted to a roadroko agitation, demanding the police to take stern action against the activists. On the intervention of senior police officials, the Congress men withdraw their stir and lodged a complaint against the Naam Tamilar Movement activists.





Chidambaram was in his home-turf to attend a series of programmes, including the consultative meeting of Congress Functionaries and a public meeting to explain the 2013-14 Union budget, here tonight.