Thursday, September 3, 2015

ஜிந்தாவில் பந்தாவாக களம் இறங்கும் கார்த்திக்

தமிழ் சினிமாவில் தன்னுடைய நவரச நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திக். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இதில் வில்லனாக நடித்த கார்த்திக்கை ரசிகர்கள் பெருமளவு வரவேற்றனர். தற்போது இவர் ‘ஜிந்தா’ என்னும் படத்தில் பந்தாவாக களம் இறங்கியிருக்கிறார்.

ஜிந்தா படத்தில் நாயகனாக வைபவ் நடிக்கிறார். நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் நடித்த சுஷ்மா ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்தில் பெரும் பங்காக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

இந்த படத்தை எஸ்.ஏ.எப்.சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் சார்பாக எஸ்.ஏ.ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் வசந்திடம் பணியாற்றிய எஸ்.கே.வெற்றி செல்வன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் சகோதரியின் மகன் ஹசார் காசிப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

உற்சாகமும் துள்ளலும் நிறைந்த கதையாக இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கதையை எழுதும்போதே கார்த்திக் மற்றும் வைபவ்வை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறார். இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று இயக்குனர் வெற்றி செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்


AFTER ANEGAN …

  
Karthik begins his next flick Jindhaa
After his noteworthy performance in Anegan as the antagonist, Navarasa Nayagan Karthik will be back in Jindhaa to be directed by S K Vetri Selvan, a former associate of director Vasanth. Jindhaa will be produced by SAF Raja and will also have Vaibhav and Sushma Raj of India Pakistan fame. K Dinesh will be the cinematographer and K M Riaz Mohammed will be the editor.

The film went on floors today, the 3rd September in Chennai with a small pooja. Talking about Jindhaa, the director says, “This film is of a new genre - dark gangster comedy. It is an energy oriented script and even as I was writing this script, Karthik sir and Vaibhav sat into that. I'm sure they will bring life and energy to my characters”.






முகம் மற்றும் கழுத்து கருமையை போக்கும் வழிமுறைகள்

முகத்தில் ஆங்காங்கு கருமையாக இருந்தால், அவர்களின் அழகையே அது கெடுத்து விடும். குறிப்பாக சிலருக்கு கழுத்தில் கருமையாக இருக்கும். இப்படி அழகைக் கெடுக்கும் வகையில் உள்ள கருமையைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் கருமையைப் போக்கலாம்.

• எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் நிறைந்துள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையைப் பின்பற்றிய பின், 24 மணிநேரத்திற்கு வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

• ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து, அதனை கருமையாக உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், கருமையான தழும்புகளை நீக்கிவிடும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.

• ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1/2 எலுமிச்சையை பிழிந்து, பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி 10 நாட்களுக்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

jintha movie - navarasa nayagan karthik


Tuesday, September 1, 2015

கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்

சினிமா நடிகர் , நடிகைகளின் பக்கங்களை லட்சக்கணக்கில் லைக் செய்துள்ளீர்கள்! கேலி கூத்தடிக்கும் பக்கங்களை பல லட்சம்பேர் லைக் செய்து கருத்துக்களை பரிமாறி வருகின்றீர்கள்!
ஆனால் கடந்த 3 வருடங்களாக நமது தாய் மண்ணிலிருந்து சீமை கருவேலமரங்களை அகற்ற போராடும் எங்களை 20 ஆயிரம் பேர்கூட லைக் செய்து உங்கள் கருத்துக்களை பரிமாற முன்வரவில்லை.
நீங்கள் லைக் செய்தால் என்ன ஆகப்போகிறது என்ற எண்ணம் வேண்டாம். ஒவ்வொரு லைக் கும் எங்களுக்கான அங்கீகாரம். எங்கள் பணிகள் இன்னும் வேகமாக மக்களுக்கு சென்றடைய உங்களது ஒரு லைக் உதவும்.
இந்த பதிவினை அப்படியே உங்கள் பக்கத்தில் பகிருங்கள். நண்பர்களை அழையுங்கள்! நமது இயக்கத்தில் பணிபுரியும் அனைவரையும் மகிழச்செய்யுங்கள்!
லைக் செய்ய வேண்டிய இணைப்பு : https://www.facebook.com/karuvelamaram
நன்றி!
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்
தமிழ் நாடு.
உறுப்பினராக இணைய : http://www.aaproject.org/membership-form

சென்னையில் பூலி தேவரின் 300-வது பிறந்தநாள் விழா

பூலி தேவரின் 300-வது பிறந்தநாளை முன்னிட்டு தியாகராயநகர் பசும்பொன் தேவர் மண்டபத்தில் பசும்பொன் நுண்கலை கழகம், பசும்பொன் அறகட்டளை, மற்றும் அனைத்து மறவர் நல சங்கம் சார்பாக பூலி தேவரின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.. இதில் பி.மணிமாறன், எஸ்.அன்பழகன், வேலுத்தேவர், சண்முகசுந்தரம், எஸ்.காந்தி, எஸ்.சக்திவேல், பாலவாக்கம் ராமன், முத்துசாமி, சிவலிங்கம், அண்ணாதுரை, குழந்தைவேலு, வில்வக்குமார், தர்மராஜ், மண்ணை வி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பணி

பிரசார் பாரதி பொதிகை தொலைக்காட்சியின் மண்டல செய்திப்பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செய்தி வாசிப்பாளர்
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில் நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி: செய்தியாளர்
வயதுவரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில் நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: ஏதாவதொரு தொலைக்காட்சியில் அல்லது பத்திரிகை நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உதவி செய்தி ஆசிரியர்
வயதுவரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: ஏதாவதொரு தொலைக்காட்ச்சியில் அல்லது பத்திரிகை நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு நிலை 3 நிலைகளைக் கொண்டது. பொது வாசிப்புத் தேர்வு, ஒளிபரப்பு நிலை முகத்தோற்றத் தேர்வு மற்றும் நேர்காணல் (பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கானது)
செய்தியாளர் மற்றும் உதவி செய்தித் தொகுப்பாசிரியர் பதவிகளுக்கு நேர்காணல் (பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கானது) மற்றும் மொழிபெயர்ப்புத் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மாதத்தில், தேவையின் அடிப்படையில் அதிகபட்சமாக 7 நாட்கள் மட்டுமே பணி வாய்ப்பு தரப்படும்.
இந்த விளம்பரம் எவ்விதத்திலும் பணி உத்தரவாதம் தரக்கூடியதல்ல, இந்தப் பணிகளுக்கான பட்டியலில் இடம்பெறுபவர்கள் தினக்கூலி, தற்காலிக, நிரந்தரப் பணியாளர் போன்ற எவ்வித உரிமையும் கோர இயலாது.
அனைத்து நிபந்தனைகளும், விதிகளும் அவ்வப்போது மாறுதலுக்குட்பட்டவை.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான விண்ணப்ப படிவத்தை http://www.ddpodhigai.org.in/Forms/NewsReaderAPPLN15.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அல்லது தட்டச்சு செய்து. பூர்த்தி செய்து, தகுதிச் சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தனித்தனி விண்ணப்பம் சமர்பிப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தலைவர் (செய்திப்பிரிவு)
சென்னைத் தொலைக்காட்சி நிலையம்,
சுவாமி சிவானந்தா சாலை,
சென்னை - 600005
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ddpodhigai.org.in/Forms/RNUADVT15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்

பூலித்தேவர் 300

இந்தியாவில் முதல் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீர பாண்டிய கட்டபொம்மனோ அல்ல.
ஜான்சிராணிலக்குமிபயோ அல்ல.
சிப்பாய் கலகமும் அல்ல.
தென்னகத்து பூலித்தேவர் தான்.
ஏனோ வரலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.
மாவீரன் பூலித்தேவர் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன் தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையின் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்...
நெற்கட்டன் செவ்வதைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கேர்கொச்சிய பாளையக்காரனாவார்...
தன்பாளையத்திற்கு மட்டுமின்ற மேற்குப் பாளைத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர் வீரன் மாமறவர்...
இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதல் முதலில் "வெள்ளையனே வெறியேறு" என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவார்...
இவருடைய வீர வரலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெமுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்...
அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் குலக்கிய மாவீரன்...
இன்று மாமன்னர் மாமறவர் இந்தியவின் முதல் சுதந்திரா வேங்கை பூலித்தேவர் 300 பிறந்த நாள் விழா.
வீர தமிழனுக்கு வீர வணக்கம்...










சிவாஜி சிலை இடமாற்றம் செய்யப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்


தமிழக அரசால் புதிதாகக் கட்டப்பட உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில், சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிலை இடமாற்றம் செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜியின் சிலையை அகற்றக் கோரி கடந்த 2007ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில், சிவாஜி சிலையை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் கட்டப்பட உள்ள மணிமண்டபத்துக்கு சிவாஜி சிலை இடமாற்றம் செய்யப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று பதில் அளித்தது.
இதையடுத்து, சிலையை அகற்றும் பணிகள் எப்போது தொடங்கும் என நீதிபதிகள் கேட்டதற்கு, மணிமண்டபம்  கட்டப்பட்டவுடன் சிலை இடமாற்றம் செய்யப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.
அதுவரை சிலையின் நிலை என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்ப, இது குறித்து பதில் அளிக்க அரசு தரப்பு கால அவகாசம் கேட்டதால், 2 வார கால அவகாசம் அளிக்கப்பட்டது.


புலித்தேவர் விழாவுக்கு சென்ற வாகனங்கள் மீது கல் வீச்சு .

புலித்தேவர் விழாவுக்கு சென்ற வாகனங்கள் மீது கல் வீச்சு..
மாமன்னர் புலித்தேவர் விழாவுக்கு சென்ற நம் சொந்தகளின் வாகனங்கள் மீதும் , மற்றும் தென்னாடு மக்கள் கட்சி தலைவர் திரு.கணேச தேவர் அவர்களின் கார்களின் மீதும் தாக்க பட்டதாக தகவல் வருகிறது , காவல் துறையினர் முக்குலோதர்களை அனைவரையும் சங்கரன் கோயில் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வந்து உள்ளது , இன்னம் சில மணி நேரங்களில் முழுமையான தகவல் அளிக்கிறோம் ,


களத்தில் மருது டிவி.

MUKKULATHOR PULI PADAI- INVITATION

அண்ணன் கருணாஸ் அவர்கள் காஷ்மீர் ல் பட ஷூட்டிங்கில் இருந்து கிளம்பியபோது விமானம் தாமதானதால் நாளை நடைபெறும் மாமன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை 2ம் தேதி காலை 10மணியளவில் நெற்கட்டான்செவல் வந்து மாமன்னருக்கு மரியாதை செய்கிறார் அங்கிருந்து 1மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள பகதூர்வெள்ளையத்தேவர் மணிமண்டபத்தில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் நடைபெறும் 254வது ஜெயந்திவிழாவில் கலந்து கொண்டு உறையாற்றுகிறார் முக்குலத்து சொந்தங்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவண்:முக்குலத்தோர் புலிப்படை பகதூர்வெள்ளையத்தேவர் மாவட்டம்(தூத்துக்குடி)