Friday, November 16, 2018

'கவியரசு' கண்ணதாசன் பார்வையில் கள்ளர்கள்

வேலும் வாழும் தங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது!
எக்குலத் தோரும் ஏற்றிப்புகழ்வது எங்கள் பெருமையடா!
எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா! "
- என்று மண்ணின் மைந்தன் கவியரசு கண்ணதாசன் ‘சிவகங்கை சீமை’ திரைப்படத்தில் எழுதிய பாடல் வரிகள் இவை.
இதைப்பற்றி ஒருவர் அவரிடம் முக்குலம் என்பது சாதியை குறிப்பதல்லவா? என்று கேட்டதற்கு கவியரசு கண்ணதாசன் அவர்களின் பதில்.
முக்குலம் என்பது சாதியல்ல. கள்ளப்படை, மறப்படை, அகப்படை ஆகிய மூன்று படைகளை குறிக்கும். பகைவரின் பாசறைக்குள் ஊடுருவி உளவறிந்து வருவது கள்ளப்படை, நேர் சென்று போர் புரிவது மறப்படை. கோட்டையை காப்பது அகப்படை. இம்முப்படைகளே கள்ளர் - மறவர் - அகம்படியர் என்ற முக்குலமாக மாறின. தலைமறைந்து செல்வதை கள்ளத்தனம் என்றும், துணிந்து நிற்பதை மறத்தனம் என்று அழைப்பதை அறிவீர்கள். இவை, பின்னால் வந்த வழக்குகள். உளவறியும் கடினமான வேலையை செய்ததால்தான், கள்ளப்படைக் குலத்தினரை "அம்பலக்காரர்கள்" என்று மரியாதையோடு அழைக்கிறது மறவர் நாடு.

Wednesday, November 14, 2018

ஆபிஸ் போகாமலேயே ஆயிரக் கணக்கில் சம்பாதிக்க வைக்கும் சூப்பர் வெப்சைட்!!

Tuesday, November 13, 2018

10.11.2018 Thinathanthi


No automatic alt text available.

Sunday, November 11, 2018

மறக்குடியே பாண்டியர் குடி :13

புதுக்கோட்டை மறவர்கள் பெயரில், கரைகளில் கூட்டங்களில் , குலதெய்வ வழிகளில் பாண்டியர் வம்சத்தை, அதன் தொடர்புகளை, இப்போது காண்போம்.
இயற்பெயரில். ..
°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பற்றிய செய்திகளை சங்ககால இலக்கியங்களில் காணலாம். அந்த ஒல்லையூர் புதுக்கோட்டை வட்டாரமாகும். ஒல்லையூர் மறவருக்கு "மதுரை மறவர்" என்பது இயற்பெயராகும். ஒல்லையூர் அருகிலும் "மறவ மதுரை" என்றொரு ஊர் உள்ளது . பனையூர் மறவரின் இயற்பெயர் "சுந்தரபாண்டியன் " என்பதாகும். "ஒல்லையூர் மங்கலத்து ஊராயிசைந்த ஊரவராக மதுரை மறவரோம்" என மாறவர்மன் சுந்தரபாண்டிய தேவன் இடையாத்தூர் கல்வெட்டில்(க.எண்309) மறவர்குழுக்களின் பேரரையராக ஆறுபேரும், நாடாள்வாராக,(மறவர்) இருவரும் இடம் பெற்றுள்ளனர்.இங்கு சுட்டப்படும் அரையர்களும் நாடாள்வாரும் மறவர்களே. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் வழியினராக இந்த மறவர்களையே கருத இடமுண்டு.
கரைகளில். ...
°°°°°°°°°°°°°°°°°°
மறவர்கள் என்றாலே அவர்களின் உட்பிரிவுகள் கிளைவடிவம் கொண்டு விளங்குபவை, என எண்ணுவதே இங்கு பலரின் புரிதலாகும். ஆனால் மறவர்கள் கிளைப்பிரிவினராக மட்டுமல்ல கரை-கூட்டம் -பட்டம் -கோத்திரம் என பலவழிகளில் பிரிந்து கிடக்கின்றதை அவர்கள் அறிவதில்லை! தென்பாண்டிய நாட்டில் பிரிவாகவும், கிளையாகவும் பிரித்தறியப்படும் இந்த ஜாதியினர், புதுக்கோட்டை வட்டாரங்களில் கரைகள்- கூட்டங்கள்- பட்டங்களாக வகுத்தறியப்படுகின்றனர். அதில் பிரதானமாக கரைப்பிரிவினர் உள்ளனர். கரைக்குள் கூட்டம்,புறம், வகை என இவர்கள் பல பரிணாமங்களைப் பெற்றவர்களாவார்கள். இதில் பாண்டிய வழியோடு தொடர்புடையதாக...
பாண்டியர் கூட்டம்
° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
பனையூர் தெற்குத்தெரு வாழும் ஐந்தாவது கரைப்பிரிவினர் "பாண்டியா கூட்டம்" என்ற பெயரில் உள்ளனர். இவர்களின் குலதெய்வமாக,வெள்ளையாலடி கருப்பரும் -நல்லம்மாள் அம்மனுமாக, ஆண்-பெண் தெய்வங்களை ஒன்றுபட்டு வணங்கி வருகிறார்கள்.
செண்டுப்புலி. ..
°°°°°°°°°°°°°°°°°°°°
பாண்டிய அடையாளமாகிய இரட்டை மீன்களுக்கு நடுவில் காணப்படும் கோல் -சாட்டை போன்ற வடிவமானது ஆய்வாளர்களால், "செண்டு" என்று தீர்மானிக்கப்படுகிறது, செண்டானது ஓர் ஆயுதம். இது ஐயனார் எனும் சாஸ்தா கரத்தையும் அலங்கரிக்கிறது. இச் செண்டு பெயரில் "செண்டுப்புலி" என வழங்கப்பெறும் வகையறாக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில், செவலூர் ஊரில், வலங்கித்தெருவில் வாழ்ந்து வருகிறார்கள். வலங்கித்தெரு என்பது "வலங்கைப் படையினர்" வசித்த பகுதியாக இருந்திருக்கலாம். வலங்கைத்தெரு என்பதுதான் வலங்கித்தெரு என்றாயிருக்கவேண்டும். மேலும் இதே தெருவில், "கெண்டையன் தீத்தாரி" எனும் வகையறாக்களும் உள்ளனர். கெண்டையன் எனும் பெயர் கெண்டையாகிய கயல் மீனைக் குறிக்கிறது. தீர்த்தம் என்பது புனித நீரைக் குறிக்கிறது. தீர்த்தவாரி என்பது புனித நீராடலைக் குறித்த வாக்கியமாகும். இதில் புனித நீராடலைச் செய்துகொண்டிருக்கும் கெண்டையன் எனும் பொருளில் விளங்கப்பெறும் இந்த பெயர், பாண்டியனைக் குறிப்பிடுவதாக உணரமுடிகிறது. இவர்கள் பன்னிவீரனை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள். புதுகையானது முன்னாள் "பன்றிநாடு" என அழைக்கப்பட்டது. பன்றி வீரன் என்பது பன்றிநாட்டு வீரனையே குறிப்பதாகும். பன்றி மருவி பன்னி யாகி விட்டது . இந்த தெருவில்தான் அழகியபாண்டியனின் திரிபுச் சொல்லாக விளங்கும் "அழகாண்டான்" கரை மறவர்களும் வாழ்கின்றனர். இவர்கள் குலதெய்வம் "ராஜாக்கள்- மூதாக்கள்" சுவாமி ஆகும்.
கெண்டையன்
°°°°°°°°°°°°°°°°°°
செவலூர் வலங்கித்தெருவில் வாழும் கெண்டையன் தீத்தாரி என்போரைத் தவிர, மலையடிப்பட்டி ஊரில், "கெண்டையன் கரை" என தனியாக கரைப்பிரிவினர் உள்ளனர். இவர்களுக்கு செவலூர் மூதாக்கள் சுவாமியே குலதெய்வமாக உள்ளது. கெண்டை என்பது கயல் என்று முன்னர் விளக்கப்பட்டுள்ளது. மேலுள்ள கெண்டையன் தீத்தாரி மற்றும் கெண்டையன் ஆகியோர் ஒரே மூலத்தை உடையவர்களாக இருக்கவேண்டும் என்பது இருவருக்கும் ராஜாக்கள் மூதாக்கள் என வரும் ஒரே குலதெய்வ வணக்கத்திலிருந்து அறியமுடிகிறது.
பாண்டியா அம்பலம் வகை
° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
விரையாச்சிலை ஊரில் பாண்டியா அம்பலம் வகையினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குறித்து ஆராயந்திட இயலவில்லை.
பொதியன் வீடு
° ° ° ° ° ° ° ° ° ° ° °
விரையாச்சிலை ஊரில் உள்ள "பொதியன் வீடு" வகையறாக்கள் தன் பெயரிலேயே பாண்டியனின் மற்றொரு பெயராக விளங்கும் பொதிகையன் எனும் பெயரில் விளங்குவது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது. பொதிய மலைக் குரியவன்--பாண்டியன் (கலித். 36.) பொதியன் எனும் பெயர் பாண்டிய குல குருவான அகத்தியரையும் குறிக்கும் என தமிழகராதி சொல்கிறது.
பாண்டியனுக்குரியவையாக முத்துடன் பொதிகைச் சந்தனமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விலக்காடிய ஐயனார் இவர்கள் குலதெய்வமாக விளங்குகிறது. இதே ஊரில் ஏழாம் கரையினராக மற்றொரு "பொதியன்" வகையறாக்கள் உள்ளனர். இவர்களின் குலதெய்வமாக "திருமயம் கோட்டை- முனி" இருக்கிறது.
பஞ்சவராயன்
° ° ° ° ° ° ° ° ° ° °
விரையாச்சிலை ஊரில் பஞ்சவராயன் என ஓர் மறவர் குடும்பத்தினர் வாழ்ந்து வாரிசில்லாமல் மறைந்ததை, திரு: ஐயா. மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இக்குடும்பத்தவர் பாதிக்காரன் என மற்றொரு பெயரில் வழங்கப்பட்டதையும் அவர் தெரிவிக்கிறார். பஞ்சவராயன் என்பது பஞ்சவராகிய பாண்டியனின் மறுபெயராகும். இப் பஞ்சவராயர்கள் மகுடத்தில் சூடும் அணிகலனாகிய செம்மயிருக்காக மோதிக்கொண்டோருள் ஒருவராக புதுக்கோட்டை கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.
{I.P.S.21.புதுக்கோட்டை மாவட்டம்}
திருமயம் வட்டம், மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோயில் மகாமண்டபத்தில் கீழ்ப் படிக்கட்டில் தெற்கில் உள்ள கல்வெட்டு....
"பனையூர் மறவரில் வளத்து வாழ்வித்தான் ஆன தெள்ளியர் உள்ளிட்டாரும்,நரசிங்கத்தேவர்,"பஞ்சவராயர்",பல்லவராயர் உள்ளிட்டாரும் வத்தாயரானை திருமேனியர் அடைக்கலங்காத்தன் உள்ளிட்டாரும் ஆக இந்நாலுவகை பேரரையரயர் மேற்படியூர் மறவரில் சோழகோன் ஆன கோனாட்டு பேரரையர் உள்ளிடாரும் ஆவுடையான் ஆன வகைப்பேரும் உள்ளிட்டாரு மோம் நம்மில் இசைந்த பிரமானம் பன்னிக் கொண்டபடி செம்மயிர் விரோதம் இரண்டு வகையில் அழிவில்...." - என்று பஞ்சவராயர் எனும் பாண்டியன் பெயருடைய அரையர் ஒருவரைக் குறிப்பிடுகிறது.
பொதியன் - பஞ்சவராயன் ஆகிய இரு வகையறாக்களும் விரையாச்சிலையின் முதலாவது கரை மறவர்கள் ஆவார்கள்.
இவ்வூரில் நான்காம் கரையினராக, "பாண்டியனம்பலக்காரர்" வகையினர் உள்ளனர். இவர்களுக்கு தெற்கு வாசல் கருப்பராகிய "முத்துக்கருப்பர்" குலதெய்வமாக விளங்குகிறது.
அன்பன்: கி.ச.முனிராஜ் வாணாதிராயன்

************கள்ளர் குல மன்னர்************

*****கட்டலூர்,பெரம்பூர் நரசிங்க தேவர்*****
புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான விராலிமலையில் உள்ள ஊர்களான கட்டலூர்,பெரம்பூர் ஊரை மையமாக கொண்டு சோழர்,பாண்டியர் காலம் முதல் பிரிட்டீஸ் ஆரம்ப காலம் வரை ஆட்சி புரிந்த கள்ளர் குல சிற்றரசர்களை நாம் இப்போது காணலாம்.
சங்க இலக்கியமான புறநானூறில் குறிப்பிட்ட ஆவூர் கிழார் பாடல்களில் வரும் ஆவூர் இந்த பெரம்பூர்,கட்டலூர் சிற்றரசர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி தான்.
இந்த கள்ளர் குல சிற்றரசர்களை பற்றி முறையான கல்வெட்டுகள் கிபி1391ஆம் ஆண்டில் கிடைக்கப்பெருகிறது. அந்த கல்வெட்டுகளில் பெரம்பூர் அரசர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ளது.
முதல் கல்வெட்டில் சிவன்கோவில் தெற்கே பொரித்துள்ள வாசகப்படி பெரம்பூர் அரசு நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.
இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவனான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.
இப்படியாக சோழர் காலம் தொட்டே பெரம்பூர் அரசை அரசாண்ட கள்ளர்குல சிற்றரசர் நரசிங்க தேவன் வழியினர்.
பிற்காலத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் சோழர்கள்,பாண்டியர்கள் வீழ்ச்சிக்கு பின்பு அரசர் இடத்தில் இருந்து பாளையக்காராக மாற்றப்படுகிறார்.
இந்த கள்ளர்குல நரசிங்க தேவன் வழியினர் கிபி1686ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்காக கிறித்துவர்களுக்கு தேவாலயம் அமைக்க ஆவூர் பகுதியில் அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் கட்டலூர்,பெரம்பூர் கள்ளர் அரசர் ஆவூரில் தேவாலயம் கட்ட அனுமத்தித்தார் என குறித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் புதுக்கோட்டை அரசு ஆவணத்திலும் பதிவாகியுள்ளது.
பிற்காலத்தில் இந்த பகுதி குளத்தூர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்படுகிறது.
பின்பு கிபி 1716ல் சொக்க நாத நாயக்கருக்கும்,குளத்தூர் தொண்டைமானுக்கும் ஏற்பட்ட போரில் நாயக்கர் படைகள் ஆவூரில் உள்ள தேவாலயத்தில் பதுங்கிய காரணத்தால் தொண்டைமானாரின் கள்ளர் படைகள் நாயக்கர் படையை விரட்டி,தேவாலயத்தையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.
இந்த சம்பவம் மத நல்லிணக்கத்தை விரும்பிய குளத்தூர் தொண்டைமானார் மனவருத்தமுற்று
மீண்டும் தேவாலயம் கட்ட இடமும்,அனுமதியும் அளிக்கிறார்.
இன்று கள்ளர் குல நரசிங்க தேவனின் ஆட்சிப்பகுதிகள் விராலிமலை சட்டமன்ற தொகுதியாக உள்ளது.
இந்த சட்டமன்ற தொகுதியில் கள்ளர் இனத்தை சேர்ந்த அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மழவராயர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
அன்றும்,இன்றும்,என்றும் இப்பகுதி கள்ளர் தலைவர்களின் ஆளுமைகளுக்கே கட்டுப்பட்ட கள்ளர் நாடாக உள்ளது.
மேலும் இங்கு புகழ்பெற்ற கள்ளர் நாட்டார்களால் நடத்தப்படும் தென்னலூர் ஜல்லிக்கட்டும் இங்குதான் நடைபெருகிறது👍
குறிப்பு: கெளலிகள் கண்களுக்கு இன்னும் இந்த மன்னர் புலப்படவில்லை😂
நன்றி
Saints,Goddess and kings by Dr.Susan Bally
Gazetteer of Tamilnadu Pudukottai
Tamilnadu archaeological department
மற்றும்
திரு.சியாம் சுந்தர் சம்மட்டியார்
திரு.சுதாகர் சம்மட்டியார்
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Image may contain: 1 person
Image may contain: textImage may contain: textImage may contain: textImage may contain: text

Saturday, November 10, 2018

,,,,,,,,,,,,,,,,,,,#கண்ணீர்_அஞ்சலி, ,,,,,,,,,,,,,,,


Image may contain: 3 people, people standing
நான் சிலமுறை ஐயா.பொன்னு அவர்களை பார்த்துள்ளேன். நான் சிறு வயதில் கமுதியில் முடிவென்ற சென்ற போது முதன்முதலாக பார்த்து வியந்து போனேன். அவர் கையில் தேவரின் படத்தை பச்சை குத்தியிருந்தை பார்த்து. எனக்கு முடிவெட்டியவர் அவர் தான்.
அவரது கடையிலும் தேவரின் படத்தை மாட்டியிருப்பார். நான் சமிபத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் இயக்கத்தில் சேர்ந்த பின் சில மாதங்களுக்கு முன் ஐயா.பொன்னு அவர்களை மீண்டும் பார்த்துள்ளேன். அப்போது பசும்பொன் தேவரை பற்றி குறிப்பிடும் போதெல்லாம் தலைவர் என்ற வார்தையை மட்டும் குறிப்பிடுவார். தலைவர்களிலே இவர் ஒரு மகான் என தேவரை புகழ்வார்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, புதுக்கோட்டை கிராமம் தான் இவரது பூர்வீக கிராமம். ஐயா. பொன்னு அவர்கள் இளம் வயதிலேயே பசும்பொன் தேவரின் மேடை பேச்சுகளால் கவரப்பட்டு பார்வர்ட் பிளாக் இயக்கத்தில் இணைந்தவர். அதன்பின் இன்று தான் மறையும் வரையிலும் தன் வாழ்நாள் முழுவதும் தேவர் திருத்தொண்டராகவே பார்வர்ட் பிளாக்கில் இருந்தவர். இயக்கத்திற்காக பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் முதன்முதலில் குரல் கொடுத்த இயக்கமான பார்வர்ட் பிளாக் இயக்கத்தின் தீவெட்டி போராட்டத்திலும் ஐயா.பொன்னு அவர்கள் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். ஒருமுறை பசும்பொன் வந்த போது ஊரில் மின்சாரம் இல்லாததால் , ஐயா.பொன்னுசாமி அவர்கள் ஒரு பனையோலையில் செய்த விசிறியை எடுத்து வந்து எம்.ஜி.ஆருக்கு வீச தொடங்கினார் . அந்த விசிறியை கொடு நீ வீச வேண்டாம் நானே விசிறிக்கொள்கிறேன் என எம்.ஜி.ஆர் அவர்கள் சொல்ல ஏன் ஐயா நான் என் கையால் விசிற வேண்டாம் என்கிறீர்கள் என கேட்க, அதற்கு எம்ஜிஆர் பசும்பொன்னார் மீது மதிப்பு வைத்துள்ள நீங்கள் பசும்பொன்னாரின் திருவுருவ படத்தை கையில் பச்சை குத்தியுள்ளீர்கள், நீங்கள் அந்த கையில் விசிறுவது எனக்கு அந்த பசும்பொன் திருமகனே விசுறுவது போல சங்கடமாக உள்ளது என கூறிய எம்.ஜி.ஆர். பின்பு விசிறியை ஐயா.பொன்னு அவர்களிடம் பெற்று தானே வீசினார் என்பது வரலாற்று நிகழ்வு.
இப்பேர்ப்பட்ட தேவரின் திருத்தொண்டர். இன்று (11-11-2018 )மதுரையில் தனியார் மருத்துவனையில் காலமானர். அவரது உடல் இன்று மாலை கமுதி கோட்டைமேட்டில் உள்ள தேவர் சிலை அருகே உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தேவர் திருமகனின் திருத்தொண்டருக்கு நாம் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவோம். நாளை 12-11-2018 ல் அவரது உடல் ஊர்வலமாக சென்று அடக்கம் செய்யபட இருக்கிறது.
வருத்தத்துடன்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
இராமநாதபுரம் மாவட்டம்

”தேவர் மகன்” என்று பெயர் வையுங்கள்

கமல்ஹாசனுடைய ஹிட் படங்களில் முக்கியமான ஒரு படமாக இருப்பது தேவர் மகன். கமல்ஹாசன், சிவாஜி, கௌதமி, ரேவதி, நாசர் என எல்லோருக்கும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த படம். இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் நம்மவர். ஆனால் இசையமைப்பாளர் இளையராஜா, இதற்கு "தேவர் மகன்" என பெயர் வையுங்கள் என கமலிடம் சொல்ல, அதை ஏற்றுக்கொண்டு பெயர்மாற்றம் செய்தார் கமல்ஹாசன்.

Devarattam

Watch Monday morning at 8 am SunTV  VanImage may contain: 1 person
akkamTamizha Director muthaiya is coming for the show

Kallar, Maravar and Agamudayar are the traditional military castes of the Tamil society.

Image may contain: textNo automatic alt text available.No automatic alt text available.

Friday, November 9, 2018

கிருஷ்ணசாமியை எச்சரிக்கும் கருணாஸ் எம்.எல்.ஏ..!

தேவர் மகன் 2 படம் எடுக்க கூடாது என கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் சேது.கருணாஸ் ..!
அந்த அறிக்கையில் கருணாஸ் தெரிவித்திருப்பது
"புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்ததார். தமிழகத்தில் யார் என்ன படம் எடுக்கணும், என்ன பெயர் வைக்கணும் என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை. தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே...ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா? தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமலஹாசன்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார்.அதன்படி பார்த்தால் சமீபகாலமாக சில டைரக்டர்கள் தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தும் விதமாகவே படம் எடுக்கின்றனர்.அச்சமயம் தங்களை போன்றவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருப்பது ஏன்?
தேவர் மகன் படத்தின் காரணமாக 25 ஆண்டுகளாக இரு சமூகத்தினரிடையே பகை தீராமல் இருப்பதாக பொய்யான கருத்தை விதைக்கும் நீங்கள் 1957ல் இருந்த காங்கிரஸ் அரசு இரு சமூகத்தினரிடையே தீராத பகையை ஏற்படுத்த காரணமாக இருந்ததை பற்றி பேச திராணி இருக்கிறதா? உங்களுக்கு...
புராணகதைதகளில் உள்ள வீரவாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல்முத்துராமலிங்க சேதுபதி, வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கும்.உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம்.யாரும் தடுக்க போவதில்லை.
தற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர்மகன்2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.