Thursday, October 16, 2014

‘Purampokku’ wants solo release for Jan 2015


Vijay Sethupathi, Arya, Shaam and Karthika starring Purampokku is UTV's next Tamil film being planned to be released solo in 2015 January. UTV's next Tamil movie Purampokku starring Arya, Vijay Sethupathy, Shaam and Karthika Nair is making brisk progress and it is in last leg of shooting and taking fast shape in the hands of director SP Jhananathan. The director is presently shooting for a long schedule in Chennai. The Peranmai director is introducing a new music director Varshan with Purampokku. "SP Jhananathan has shot two songs on Vijay Sethupathi and are super gana dance numbers. Loved them", said UTV's Dhananjayan. He also revealed that Purampokku audio launch is being planned in the third week of November, while the film's teaser will be uploaded to youtube today. "Purampokku will be a major solo release. Whichever day it releases, it will not pitch against any major film in January 2015", he concluded. A huge Jail set was constructed in Binny Mills in Chennai recently and a major part of the movie's shoot happened there. Rest of the movie was shot all over North India. The teaser of the movie is planned to release today, while the audio of the movie is set to release during the third week of November.

Wednesday, October 15, 2014

தீபாவளியன்று வெள்ளைக்கார துரை டீசர் வெளியீடு


கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு ஆகிய நான்கு தொடர் வெற்றி படங்களை கொடுத்த விக்ரம் பிரபு, தற்போது நடித்து வரும் படம் ‘வெள்ளைக்கார துரை’. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். மேலும் சூரி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை எழில் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு சூரஜ்நல்லு சாமி ஒளிப்பதிவை செய்கிறார். காமெடி மற்றும் கமர்சியல் படமாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரம் பிரபு காமெடி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் டீசரை தீபாவளி அன்றும், இசையை அக்டோபர் 25-ம் தேதியும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகன் டீசர் தீபாவளிக்கு வெளியீடு


தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக அமிரா தஸ்தூர் என்ற புதுமுகம் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. நீண்டகால தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை வரும் தீபாவளிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். மேலும், தீபாவளிக்கு பிறகு ஆடியோ வெளியீட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும், சங்கர் மகாதேவன், பவதாரணி உள்ளிட்ட முன்னணி பாடகர்களும் இப்படத்தில் பாடியுள்ளனர். ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய்: கண் மருத்துவ நிபுணர் விளக்கம்


சென்னையில் வேகமாக பரவி வரும் கண் நோய் குறித்து, சென்னை விஜயா கண் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் பாபு ராஜேந்திரன் கூறியதாவது:- சென்னை நகரம் முழுவதும் ஒரு வகையான கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இது எந்த வகை கண் நோய் என்றில்லாமல், பொதுவாக மெட்ராஸ்-ஐ என்று கூறுகின்றனர். ‘மெட்ராஸ்-ஐ’ என்பது ஒரு வைரஸ் பாதிப்பாகும், வைரஸ் பாதிப்பாக இருந்தாலும் கூட, இது பாக்டீரியா பாதிப்பாக மாற வாய்ப்பு உள்ளது. கண் நோய் பரவியவர்கள் மற்றவர்களுடன் தொடர்பை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது காற்றில் பரவும் நோயாகும். எனவே, கண் நோய் பரவிய பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அலுவலகங்களில் பணி புரிபவர்கள் கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அலுவலகங்களுக்கு செல்லக்கூடாது. பொதுவாக, கண் நோய் பரவாமல் இருக்க கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும், கண் நோய் பரவியவர்கள் பயன்படுத்திய துண்டு, தலையணைகளை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும், கண் நோய் பரவியவர்கள், மருந்து கடைகளில் சென்று ஏதாவது ஒரு மருந்தை வாங்கி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். கண் நோய் பாதிப்புள்ளவர்கள் ‘ஸ்டீராய்டு’ மருந்துகளை போட்டால் பாதிப்பு ஏற்படும். கண் நோயால் பாதித்தவர்கள், கண்களை சுத்தமான நீரில் நன்கு கழுவிக் கொண்டு நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். கண் நோய் அதிகரித்தால், உடனடியாக டாக்டர்களை அணுகுவது நல்லது. இது போன்ற கண் நோய் எந்த வைரசால் வருகிறது என்பது முதன் முதலில் சென்னையில் கண்டு பிடிக்கப்பட்டதால், இதற்கு மெட்ராஸ்-ஐ என்று பெயர் சூட்டினார்கள். பொதுவாக இந்த நோய் மழைக்காலங்களில் வரும். குறைந்தது 3 முதல் 5 நாட்கள் இந்த நோய் பாதிப்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

THILAGAR MOVIE DIRECTOR - PERUMAL PILLAI


கோவிலில் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் ::


1. பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது. 2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. 3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது. 4. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. 5. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது. 6. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. 7. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது. 8. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது. 9. தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும். 10. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது. 11. மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது. 12. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது. 13. கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது. 14. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது. 15. கோவில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது. 16. அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. 17. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது. 18. தெய்வ வழிபாடு ஈர துணி கூடாது. 19. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது. 20. சந்நிதியில் தீபம் இல்லாமல் தரிசனம் செய்யக் கூடாது. 21. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான் கழுவிக்கொள்ள வேண்டும் 22. கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிக சிறந்ததாகும். 23. கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம். 24. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது. 25. கோவில் உள்ளே உரக்க பேசுதல் கூடாது. 26. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாடையோ, தியானத்தையோ இடையுறு செய்ய கூடாது.

முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு:


மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி எனினும் அறிவியல் அந்த மர்மத்தை கண்டுக்கொள்ள மிக நீண்டதொரு சிரமத்துடன் பயணக்கிறது.அப்படிப்பட்ட பயணத்தில் ஒரு ஆச்சிரியத்தை கண்டுப்பிடித்தது! மரபணு சோதனை: ஒரு இனத்தின் பிறவிடத்தையும் அவர்கள் வம்சாவிழிகளையும் அறிய உதவும் அறிவியல் நுட்பம் தான் மரபணு சோதனை எனப்படுவது. M130 - என்பது உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு. உலகளவில் மரபணு ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடந்துவரும் நிலையில் இந்தியாவும் FamilyTree DNA என்ற அமைப்பு மூலம் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டுள்ளது. தமிழகத்தில் மரபணு ஆராய்ச்சி: Family Tree DNA அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பேராசிரியர்.பிச்சையப்பன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்). மதுரை அருகிலுள்ள உசிலம்ப்பட்டி கல்லூரி மாணவர்களிடம் இந்த மரபணு சோதனையை மேற்க்கொண்டார்.அந்த மரபணு ஆராய்ச்சியில் ஒரு உண்மையை பேராசிரியர் அறிந்தார்.M130 எனும் முதல் மனிதன் மரபணு வகை ஆண்டித்தேவரின் மகன் விருமாண்டியின் மரபணுவோடு ஒத்திருந்தது. உற்சாகம் அடைந்த பேராசிரியர். பிச்சையப்பன் அவரை சேர்ந்த டில்லியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்துகிறார்.இது உலகில் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தியா தெரியபடுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்: மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாயிருந்த ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் திரு. ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) இந்த முடிவைப் பார்த்ததும் உற்சாகம் கொண்டார். விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் திரு.ஸ்பென்சர் வெல்ஸ் மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மறுபரிசீலனை: முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது. சோதிமாணிக்கம் (உசிலம்ப்பட்டி கிராமம்): விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் (உசிலம்ப்பட்டி கிராமம்) திரு.ஸ்பென்சர் வெல்ஸ் (Dr. Spencer Wells) மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மரபணு இத்தனை யுகங்கள் கடந்தும் கலப்பற்று இருப்பதை அறிந்து வியந்தார். அவர் எழுதிய மரபணு சோதனைப் பற்றிய புத்தகத்தில் (Deep Ancestry) விரும்மாண்டி ஆண்டித்தேவர் பற்றி குறிப்பிட்டு எழுதினார்.முக்குலத்தோர் D.N.A சேகரிப்பு மேலும் நடந்துக்கொண்டிருக்கிறது.. அதிகாரபூர்வமான அறிவிப்பு: 2010 சூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். முதல் தமிழ்குடி: முக்குலத்தோர்கள் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம். முதலில் உருவான மொழி தமிழ்மொழி. முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நீங்களும் முயற்சிக்கலாம் உங்களையும் மரபணு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். தகவலுக்கு இந்த இனைய முகவரி செல்க..http://www.familytreedna.com/y-dna-compare.aspx --ஆர்.தியாகு வீரதந்தை நேதாஜி பவுண்டேசன் முக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வு: மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி எனினும் அறிவியல் அந்த மர்மத்தை கண்டுக்கொள்ள மிக நீண்டதொரு சிரமத்துடன் பயணக்கிறது.அப்படிப்பட்ட பயணத்தில் ஒரு ஆச்சிரியத்தை கண்டுப்பிடித்தது! மரபணு சோதனை: ஒரு இனத்தின் பிறவிடத்தையும் அவர்கள் வம்சாவிழிகளையும் அறிய உதவும் அறிவியல் நுட்பம் தான் மரபணு சோதனை எனப்படுவது. M130 - என்பது உலகில் தோன்றிய முதல் மனித இனத்தின் கலப்பற்ற மரபணு. உலகளவில் மரபணு ஆராய்ச்சிகள் மிக தீவிரமாக நடந்துவரும் நிலையில் இந்தியாவும் FamilyTree DNA என்ற அமைப்பு மூலம் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டுள்ளது. தமிழகத்தில் மரபணு ஆராய்ச்சி: Family Tree DNA அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பேராசிரியர்.பிச்சையப்பன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்). மதுரை அருகிலுள்ள உசிலம்ப்பட்டி கல்லூரி மாணவர்களிடம் இந்த மரபணு சோதனையை மேற்க்கொண்டார்.அந்த மரபணு ஆராய்ச்சியில் ஒரு உண்மையை பேராசிரியர் அறிந்தார்.M130 எனும் முதல் மனிதன் மரபணு வகை ஆண்டித்தேவரின் மகன் விருமாண்டியின் மரபணுவோடு ஒத்திருந்தது. உற்சாகம் அடைந்த பேராசிரியர். பிச்சையப்பன் அவரை சேர்ந்த டில்லியில் இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியப்படுத்துகிறார்.இது உலகில் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தியா தெரியபடுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்: மனித இனத்தின் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாயிருந்த ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் திரு. ஸ்பென்சர் வெல்ஸ்(Dr. Spencer Wells) இந்த முடிவைப் பார்த்ததும் உற்சாகம் கொண்டார். விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் திரு.ஸ்பென்சர் வெல்ஸ் மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மறுபரிசீலனை: முதல் மனிதன் ஆப்பரிக்க கண்டத்தில்தான் தான் தோன்றினானன் அங்கிருந்து தான் மற்றப் பகுதிகளுக்கு சுமார் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தான் என்பது ஆராய்ச்சியாளர்கள் முடிவு இன்று மறுபரிசீலனை செய்யப்படுகிறது. இந்த முதல் தமிழ் மனிதனை தேடி தமிழ் மண்ணில் ஆராய்ச்சியாளர்கள் வரவு தொடர்கிறது. சோதிமாணிக்கம் (உசிலம்ப்பட்டி கிராமம்): விருமாண்டியின் சொந்த ஊரான சோதிமாணிக்கத்தில் (உசிலம்ப்பட்டி கிராமம்) திரு.ஸ்பென்சர் வெல்ஸ் (Dr. Spencer Wells) மற்ற முக்குலத்தோர்களையும் ஆய்வு செய்ததில் அதே M130 மரபணு இருப்பதை அறிந்தார்கள். மரபணு இத்தனை யுகங்கள் கடந்தும் கலப்பற்று இருப்பதை அறிந்து வியந்தார். அவர் எழுதிய மரபணு சோதனைப் பற்றிய புத்தகத்தில் (Deep Ancestry) விரும்மாண்டி ஆண்டித்தேவர் பற்றி குறிப்பிட்டு எழுதினார்.முக்குலத்தோர் D.N.A சேகரிப்பு மேலும் நடந்துக்கொண்டிருக்கிறது.. அதிகாரபூர்வமான அறிவிப்பு: 2010 சூன் மாதம், இங்கிலாந்திலுள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில், மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் செய்தியை அனைவருமறிய அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். முதல் தமிழ்குடி: முக்குலத்தோர்கள் முதலில் தோன்றிய நிலம் தமிழ்நிலம். முதலில் உருவான மொழி தமிழ்மொழி. முதலில் உருவாக்கப்பட்ட பண்பாடு தமிழ்ப்பண்பாடு என்ற வரலாற்று உண்மை, விருமாண்டியின் மூலம் நிரூபணமாகியுள்ளது. நீங்களும் முயற்சிக்கலாம் உங்களையும் மரபணு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளலாம். தகவலுக்கு இந்த இனைய முகவரி செல்க..http://www.familytreedna.com/y-dna-compare.aspx --ஆர்.தியாகு வீரதந்தை நேதாஜி பவுண்டேசன்

Tuesday, October 14, 2014

ரஜினி, அஜீத் பாணியில் விவேக்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முதலாக 'வள்ளி' படத்தில்தான் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் இந்த ஹேர் ஸ்டைலை அஜீத், 'மங்காத்தா, ஆரம்பம் மற்றும் வீரம் ஆகிய படங்களில் பயன்படுத்தினார். தற்போது நடித்து வரும் கவுதம் மேனன் திரைப்படத்திலும் இந்த சால்ட் அண்ட் பெப்பர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினி, அஜீத் ஆகியோர்களை அடுத்து சால்ட் அண்ட் பெப்பர் வேடத்தில் நடிக்க விவேக் முன்வந்துள்ளார். அடுத்ததாக விவேக் நடிக்கவுள்ள ஒரு திரைப்படத்தில் அவர் இந்த ஹேர்ஸ்டைலில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேடத்திற்காக நிஜமாகவே அவர் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. கோலிவுட் திரையுலகில் மிகச்சில நடிகர்களே இமேஜ் குறித்து கவலைப்படாமல் தைரியமாக நரைத்த முடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் வேடத்தை ஏற்க முன்வருவதுண்டு. இந்த வரிசையில் ரஜினி, அஜீத்தை அடுத்து விவேக் இமேஜ் குறித்து கவலையில்லாமல் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றுகிறார். நகைச்சுவை நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து சின்னக்கலைவாணர் என்ற சிறப்பு பெற்ற விவேக்கை புதிய தோற்றத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அவருக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

தமிழ்நாடு மக்கள் கழகம்


அண்ணன் பூபாலனின் நவரச மாத இதழில் வந்த சேதியை வைத்து சிலர் உடப்ரிவ் பேசுகின்றனர் இது கண்டிக்கதக்கது கள்ளர்,மறவர் ,அகமுடையார் சேர்ந்தால் தால்தான் பெருமை. "அண்ணன் பூபாலனின் நவரச மாத" இதழ்க்கு எங்களின் தமிழ்நாடு மக்கள் கழகம் என்றும் ஆதரவாக செயல்படும் இவன் தமிழ்நாடு மக்கள் கழகம்

AALAMARAM - RUNNING SUCCESSFULLY