Monday, August 31, 2015

கார்த்திக் படம் அடுத்த மாதம் ஆரம்பம்!

கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்ரியா மற்றும் பலர் நடித்த அமரன் படம் 1992ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கழித்து அமரன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் கே.ராஜேஷ்வர், கார்த்திக் ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கோவாவில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். வெளிநாடுகளில் படப்பிடிப்பு அதிகம் நடத்த வேண்டி இருப்பதால் அமரன் 2 படம் முடிவடைந்து வெளிவர எப்படியும் ஒரு வருடம் ஆகிவிடும் என்கிறார்கள்.

Friday, August 28, 2015

PULI THEVAR - 300




குங்குமம் வார இதழ் கட்டுரை:
பெரிய காலடி கடமை வீரனப்பா காலாடி வீரனப்பா சூராதி சூரனப்பா..
சூழ்ச்சியில் வல்லவனப்பா தாயகம் காத்தே தாணி புகழடைந்தானப்பா தார்வேந்தன் பூலி பட்டயம் பெற்றானப்பா."
பார்துலங்க பூலி மன்னன் பேர்துலங்க வெண்ணி பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே பரங்கியர் தலைகளை வெட்டியே காலடி பாங்காய் ககுவித்திட்டான் மலைபோலே.
எத்தனை பட்டாளம் வெட்டினானடா வெண்ணியை எதிர்க்கவும் ஒரு ஆள் கூட இல்லையடா செங்குருதி நனைத்து புலித்தேவன் வண்ணச்சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க..
காலடி உயிருக்கோர் காலன் வந்திட்டான் கால் நொடியில் காற்றாய் பறந்தானே.
பழிகள் பாவங்கள் வந்தெறெனக்கூறி பார்வந்தன் புலித்தேவன் கதறியழ

(புலித்தேவன் சிந்து)
மறத்தமிழர்களே செப் 1 தேதி மாமன்னர் மாமறவர் முதல் சுதந்திர வேங்கை புலித்தேவர் 300வது ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு மாவீரனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்
உண்மை சிரிக்கட்டும் கயவர்களை கருவறுக்க மறவர் படையான வா
மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்கம் செயல் மறவன் S.செல்வத்தேவர் அவர்களுடன் இணைத்து அகில இந்திய மறவர் முன்னேற்றக் கழகம்
அழைக்கிறோம்....
இதை அனைவரும் பகிருங்கள்...

Thursday, August 27, 2015

நடிகர் சூரிக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து!

நடிகர் சூரியின் பிறந்த நாளுக்கு (27.8.15) வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:
நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரைப் பதித்திருக்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் பெருமைமிகு கலைஞன். வட்டார வாழ்வியலையும் தமிழ் மண்ணின் வழக்கங்களையும் நகைச்சுவை ததும்ப வைக்கும் உடல் மொழியில் வெளிப்படுத்தி, தமிழ் மண்ணின் தவிர்க்க முடியாத பெருங்கலைஞனாகத் தன்னை நிரூபித்து வருகிறார் தம்பி சூரி. கிராமத்து வாழ்வியலையும் குறும்புகளையும் அட்டகாசமான மொழி நடையில் வெளிப்படுத்தி, மாபெரும் நகைச்சுவைக் கலைஞர்களாக வலம்வந்த நாகேஷ், கலைவாணர், சந்திரபாபு வரிசையில் தன்னை மெய்ப்பித்து வருகிறார் சூரி. மண்ணின் கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்தி இருக்கும் தம்பி சூரிக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாடகக் காலம் தொட்டே நகைச்சுவைக் கலைஞர்களின் ஊடாகவே சுதந்தரம் தொடங்கி சுரண்டல் வரையிலான அத்தனை பிரச்னைகளும் மக்களின் கவனத்துக்குச் சென்றிருக்கின்றன. மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரையே தனது நகைச்சுவை திறமையால் சதுரம் நடுங்க வைத்தார் சார்லி சாப்ளின். அந்த விதத்தில் நாட்டின் நல்லது கெட்டதுகளை மக்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் ஆகப்பெரும் கடமை நகைச்சுவை கலைஞர்களுக்கு இருக்கிறது. தம்பி சூரி தமிழ்க் கலாசாரத்தின் அடையாளமாகவும், தமிழ் வாழ்வியலின் அப்பட்டமான சாட்சியாகவும் ஒவ்வொரு படத்திலும் தன்னை நிரூபித்து வருகிறார். மூன்றாம் தமிழின் அரிய கலைஞனாக, மக்களின் சோகங்களை மறக்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக விளங்கும் தம்பி சூரி, தமிழ் மண்ணின் அரிய சொத்து. வளைந்து நெளியும்  உடல்மொழியும் அருமையான வட்டார மொழியுமாய் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் சூரி, தமிழ்த் திரையுலகில் இன்னும் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தி தமிழ் மக்களைக் குளிர்விக்க நாம் தமிழர் கட்சி வாழ்த்துகிறது.
திரைத்துறைத் திறமையிலும் தனிப்பட்ட குணத்திலும் தன்னை ஆகச்சிறந்தவராக நிரூபித்து லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை ஈர்த்து இதயக்கூட்டில் வைத்திருக்கும் சூரி, தமிழ் மண்ணுக்கான நகைச்சுவை அடையாளமாகக் காலம் முழுக்கத் தன்னை நிரூபிக்க வேண்டும். அதற்கான பக்க பலமாக, ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுமிக்க ஆதரவாக  நாம் தமிழர் கட்சி எந்நாளும் விளங்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

கோரிப்பாைளயத்தில் பதற்றம்

தேவரின தலைவர்களின் அனைத்து கட்சிகளின் மாவட்ட மதுரை மாவட்ட நிர்வாகிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை ஒப்புதல்
முடிவுக்கு வந்தது ஆர்ப்பாட்டம்...

இந்த சம்பவம் காலை 12.30 மணியளவில் நடைபெற்றது உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போராடி "பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்" அவர்களின் சிலையில் ஏற்பட்ட அனைத்து சேதங்களையும் சரி செய்து தருகிறோம் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் ஒப்பதல் தரும் வரை போராடிய

தேவர் தேசிய பேரவை
முக்குலத்தோர் எழுச்சி கழகம்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
பசும்பொன் தேசிய கழகம்
பாரதிய பார்வர்ட் பிளாக்
முக்குலத்தோர் புலிப்படை
மக்கள் முன்னேற்ற கழகம்
முகநூல் முக்குலத்தோர் நன்பர்கள்
உசிலை வட்டார செய்திகள் நன்பர்கள்
அகில இந்திய தேவர் கூட்டமைப்பின் நன்பர்கள் அனைவருக்கும்   நெஞ்சார்ந்த நன்றிகள் பல ....


THANKS : தேவர் FM


 

#‎ஜெயா‬ ரோடுவேஸ் தன் கட்டுப்பாடை மீறி ஒரு கேபிள் கம்பத்தில் முட்டி பெண்கள் மீது மோதாமல் இருக்கு வாகன ஓட்டுனர் கமலக்கண்ணன் இடது பக்கம் திருப்புகிறார். காக்கும் தெய்வமாக கோரிப்பாளைத்தில் வீற்றிருக்கும் தெய்வீக திருமகனாரின் பீடத்திற்கு கீழே உள்ள நடைமேடை மற்றும் படிக்கட்டு தூணில் இடித்து ரோட்டின் மறுபக்கம் விழுகிறது.
இதில் அதிசயம் என்னவென்றால் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த லாரியின் வேகத்தை தன்னுள் வாங்கி கொண்டு நடக்க இருந்த பெரும் உயிர் இழப்புகளை தடுத்து விட்டார் நம் தெய்வம்.
 

முதுகு நலமாயிருக்க 10 வழிகள்"...

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.
2. அமரும்போது வளையாதீர்கள்.
3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்
4. சுருண்டு படுக்காதீர்கள்।
5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.
6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.
8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.
9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.
10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.

நடிகர் சிவாஜிக்கு அரசு சார்பில் மணிமண்டபம் : ஜெ., அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்றைய (ஆக.,26) கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா, நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார். சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல; அவர் நாட்டுக்கே சொந்தம் என புகழ்ந்துரைத்தார்.
ஜெ., அறிவிப்பு :

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் 110 விதியின் கீழ் பேசிய ஜெ., சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்.
தமிழக நடிகர் சங்கம் சார்பில் அவருக்கு நினைவிடம் அமைப்படுவதாக இருந்தது. ஆனால் அப்பணிகள் தாமதமாகி வருவதால் மணிமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. செவாலியே உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற சிவாஜியின் கலை சேவையை போற்றும் விதமாக அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்ட உள்ளது. நடிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காரசார விவாதம் :

சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டும் அறிவிப்பிற்கு எம்.எல்.ஏ.,க்கள் கதிரவன், தனியரசு மற்றும் நாராயணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். அப்போது எழுந்த காங்., எம்.எல்.ஏ., விஜயதாரணி, சிவாஜி காங்கிரஸ்காரர் என தெரிவித்தார்.
விஜயதாரணியின் பேச்சுக்கு பதிலளித்த ஜெ., சிவாஜி எந்த கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. அவர் நாட்டுக்கே சொந்தக்காரர் என தெரிவித்தார். இதனால் அதிமுக மற்றும் காங்., உறுப்பினர்களிடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவாஜி காங்கிரஸ்காரர் இல்லை. அவர் காங்., கட்சியே வேண்டாம் என்று சென்று, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியை துவங்கியவர் என்றார்.

Saturday, August 22, 2015

Vijay Sethupathi joins Rajini, Prabhu and Karthick

It is quite rare when the name of the hero is also the title of the film in which he is acting. In recent memory Superstar Rajinikanth has starred in a film titled ‘Anbulla Rajinikanth’, Illayathilagam Prabhu in ‘Piriyamudan Prabhu’ and Navarasa Nayagan Karthick in ‘Mr. Karthick’.
Now Vijay Sethupathi joins the above distinguished stars as his new film directed by Arun Kumar of ‘Pannaiyarum Padminiyum’ fame has been titled ‘Sethupathi’. The cop story reunites Vijay Sethupathi and Remya Nambeesan the hit pair of ‘Pizza’ after four years. ‘Sethupathi has music by Nivas Prasanna and is produced by Vasan Movies.

Thursday, August 20, 2015

டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை


டேப்லட் இன்றைய நாளில் அனைவரும் பயன்படுத்தும் சிறிய கணினி சாதனமாக உள்ளது. எங்கும் எந்நேரமும் அலுவலக மற்றும் கல்வி சம்பந்தமான விஷயங்களை பணிகளை செய்ய டேப்லட் உதவி புரிகிறது.

டேப்லட் தற்போது அவரவர் பயன்படுத்தும் நோக்கில் வகைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆயினும் டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன... அவை...

எத்தகைய பணிக்கு ஏற்ற டேப்லட்:

அலுவலக பணிக்கான, அலலுவலகம் சார்ந்த, தொழில்முறை சார்ந்த தேவைக்கு எனும்போது முழு அளவு அதாவது 8.9 இன்ச் அல்லது அதைவிட பெரிய திரை கொண்ட டேப்லட் பயன்படும். இதில் கீ போர்டு வெளிப்புற இணைப்பாக இருப்பது அவசியம். ஒவ்வொரு டேப்லட் தயாரிப்பு நிறுவனமும் அலுவலக பணி சார்ந்த இணைப்புகளை கொண்டவாறு டேப்லட்டை உருவாக்கி தருகின்றன. உதாரணமாக, விண்டோஸ் 8.1, டேப்லட்- மைக்ரோ சாப்ட் ஆபீஸ் உடன் ஐ பேட் ஏர்-2வில் ஐ வொர்க் சூட் போன்றவையுடன் வருகின்றன.

விளையாட்டிற்கு ஏற்ற டேப்லட்:


ஆப்பிள் ஐபேடு விளையாட சிறந்த டேப்லட். அதுபோல் ஆண்ட்ராய்டு டேப்லட்டில் உள்ள ஸ்நாப்டிராகன் 805 மற்றும் டெக்ரா ரி1சிறிஹி சிறந்த கிராபிக்ஸ்க்கு உதவி புரிகிறது. டை- ஹார்ட் விளையாட விரும்புபவர்களுக்கு நிவிடியா ஷீல்டு டேப்லட் நல்ல பலனை தருகிறது.

குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சத்துடன் நிறைய குடும்ப பகிர்வுகளை கொண்ட டேப்லட் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் அமேசான் பையர் டேப்லட் நன்மை பயக்கும். அமேசான் பையர் 6 மற்றும் 7 பிஞி ரிவீபீs எடிஷன் அதிக வாரண்டி மற்றும் குழந்தைகளுக்கேற்ற பல சிறப்பம்சம் கொண்டது.

டேப்லட் காட்சி திரை அளவுகள்:

நமக்கு எந்த அளவு காட்சி திரை வேண்டும் என்பதை தீர்மானித்திட வேண்டும். 7 இன்ச் என்பது நமது கையில் அடக்கிவிட கூடிய அளவு.  8 இன்ச் அளவு என்பிதல் அதிக ஆப்ஸ், கேம்ஸ் மற்றும் படங்கள் கொண்டதாக உள்ளது. 10 இன்ச் என்பது பெரிய அளவாக உள்ளது. எடை 1 முதல் 1.6 பவுண்ட் என்றவாறு இருப்பது டேப்லட். எடை குறைவான டேப்லட் எடுத்து செல்ல வசதியாக இருக்கும்.

இயங்கு தளங்களில் அணி வரிசை: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் 8, விண்டோஸ் 8.1 என்ற இயங்கு தளங்களை கொண்டவாறு டேப்லட் வருகிறது. இதில் நமக்கு தேவையான இயங்குதளத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இயங்கு தளங்களை கொண்டே சில டேப்லட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுவதுடன், புதிய தொழில்நுட்ப அம்சங்களும் நிறைய இருக்கும்.

எந்த வகையான ஆப்ஸ்கள் வேண்டும்:

ஆப்ஸ் ஸ்டோர்களை தேர்ந்தெடுப்பது நமது கையில் ஆப்பிள் ஆப்ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர், அமேசான் ஆன் டிமாண்ட் இவற்றில் எது நமது ஆப்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யுமோ அதனை கொண்ட டேப்லட்டை தேர்ந்தெடுங்கள்.

ரேம் வசதி:


டேப்லட்கள் 2ஜிபி ரேம் கொண்டு இருப்பது சிறந்தது. சில டேப்லட் 3 ஜிபி ரேம்-உடன் வருகின்றன. டேப்லட்களை தேர்ந்தெடுக்குபோது மேற்கூறியவைகளை கவனித்து வாங்கவும்.

TAMIL MILITARY CASTES - KALLAR, MARAVAR & AGAMUDAYAR


1.குற்றப் பரம்பரை 2.பட்டத்து யானை புத்தகம்

இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887.
VPP அல்லது Professional Couriers.
1.குற்றப் பரம்பரை
வேல ராமமூர்த்தி
ரூ.400
மனித குலத்தின் வரலாறுகளை வரலாற்று ஆசிரியர்கள் மட்டுமே எழுதிவிட முடியாது மனிதர்களின் வாழ்கையை தலைமுறைகளின் வல்வை இலக்கியம் மட்டுமே உண்மையாய் பிரதிபலிக்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன் மார்க்வெஸின் ஒரு நூற்றாண்டு தனிமையும் மற்ற லத்தின் அமெரிக்க இலக்கியங்களையும் நான் படித்து பிரமித்திருக்கிறேன். குற்ற பரம்பரை நமக்கு ஒரு நூற்றாண்டு வல்வை நமக்கு உயிரோட்டமாய் உணர்த்துகிறது.
2.பட்டத்து யானை
வேல ராமமூர்த்தி
ரூ.280
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போரிட்ட ஒரு வீரனின் வீர வரலாறுதான் இந்த ‘பட்டத்து யானை’. வெள்ளையர்களுக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவன் ‘சித்திரங்குடி மயிலப்பன்’! துரதிருஷ்டவசமாக பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான போரில் மயிலப்பன் இறந்துவிடுகிறான். ‘வீரர்கள் புதைக்கப்படுவதில்லை; விதைக்கப்படுகிறார்கள்’ என்ற கூற்றுக்கு ஏற்ப மயிலப்பனின் ரத்தம் சிந்திய பூமியில் இருந்து முளைத்தெழுகிறான் பெருநாழி ரணசிங்கம் என்றொரு மற்றொரு மாவீரன். ரணசிங்கம் தனக்கென ஓர் இளைஞர் படையை உருவாக்குகிறான். அவர்களுக்கு போர் பயிற்சி அளிக்கிறான். வெள்ளையர்களை அழிக்க அவர்களுடன் ஆக்ரோஷமாக மோதி, அவர்களின் ஆயுதங்களையே சூறையாடுகிறான். ஒருநாள், பிரிட்டிஷ் படை அதிகாரிகளுடன் ரணசிங்கம் நேரடியாக மோதும் சூழ்நிலை வருகிறது. இருவருக்கும் இடையிலான போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை வீரம் செரிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர் வேல ராமமூர்த்தி. ஜூனியர் விகடனில் இந்தக் கதை தொடராக வெளிவந்தபோதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்போது, அந்த வரலாற்றுப் பொக்கிஷம் உங்களுக்காக ஒரே நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது.