Friday, May 8, 2009

EXCELLENT ARTICLE...DO READ

மனமே பெரிதென்ற கூட்டம் ஒன்று வேண்டி நிற்கிறது

இந்திய நாடு பல காலாச்சார நாடு, இதில் தமிழக கலாச்சாரமும் கலையும் விலைமதிப்பு மிக்கவை, நமது கரக ஆட்டம், பரத நாட்டியம், மற்றும் கோலாட்டங்கள் ஆரம்ப காலங்களில் கோவிகளில் மட்டும் தான் பார்க்க முடிந்தது. அதன் பிறகு பெரும் விழாக்களிலும் பொது அரங்ககளிலும் காண முடிந்தது. நம்முடைய பல கலைகள் அழிய இது ஒரு காரணம் என்றாலும் நமது மண்ணின் கலையை காசுக்கு விற்க்கமாட்டோம் என்ற ஒரு கொள்கையாக கொண்ட கலைஞர்களின் வைராக்கியம் தான் இதற்கு காரனம். ஆடிப்பிழைப்பவர்கள் தான் என்ற இழிச்சொல் நாம் கரக கலைஞர்களையோ, அல்லது பரதம் மற்ற கிராமிய கலைஞர்கலையோ நாம் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர்கள் தங்களில் வயிற்றுப்பசிக்காக ஆடவில்லை. கலையை மதிக்கும் அவர்கள் தேய்வத்திற்கு செய்யும் நேர்த்திகடனாக நினைத்துத்தான் ஆடுகின்றார்கள். தங்கள் ஆட்டத்தால் பிறறையும் மகிழ்விக்கின்றனர்.

இப்படி கலைஞர்களின் வைராக்கியத்தால் பல கலைகள் அழியும் நிலையில் இருக்கின்றன. அந்த கலைகளை மீண்டும் அழிவில் இருந்து காப்பாற்றவும் , அந்த கலைஞர்களுக்கு வாழ்வழிக்கவும் பல வழிகளில் சமூக சேவை மையங்களும் அரசு சார்ந்த மற்றும் அதை சாராத மையங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. கடந்த சில வருடங்களாக நடந்து வரும் சங்கமம் நிகழ்வும் இதே வகையை சார்ந்தது தான். அருத்தந்தை ஜெகத் கஸ்பர் போன்றோரின் முயர்சியால் கலைகள் சென்னை மற்றும் தமிழக நகரமெங்கும் திருவிழாக்காலங்களில் தமிழக மக்களை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.

ஆனால் வட இந்திய கலைகள் அப்படி அல்ல,
இதற்கு ஒரு உதாரணம் பங்கரா என்னும் பஞ்சாபிய நடனம் அருவடை முடிந்த பிறகு பைசாக் என்னும் திருவிழா காலத்தில் நடப்பது. இந்த அதாவது பெரிய பெரிய நிலச்சுவாந்தார்களின் வயல்வெளிகளுக்கு பங்கரா கலைஞர்கள் சென்று அந்த வயல்வெளிகளில் பணிபுரிந்த வேலையாட்களின் குடும்பங்கள், நிலச்சுவாந்தார்களின் குடும்பங்கள் அனைவரும் கூடி இருக்கும் போது அவர்களை மகிழ்விக்க நடனம் ஆடுவர். நிலச்சுவாந்தார்களும் இவர்களின் ஆட்டத்தில் மகிழ்ந்து பங்கரா கலைஞர்களுக்கு கோதுமை, பணம், நகைகள், மற்றும் ஆடு மற்றும் எருமைகளை பரிசாக தருவர்(பசுமாடு தருவது வழக்கத்தில் இல்லை) இதை கொண்டு அந்த கலைஞர்கள் வருடம் முழுவதும் காலத்தை ஓட்டிவிடுவர். இடையில் கூலிக்கு வேலைக்கு செல்வதும் உண்டு. ராஜஸ்தான் மாநில கிராமிய கலைகளோ பணக்காரர்களை நம்பி தான் இருந்தது. ராஜஸ்தான் ஜாட்டுக்களுக்கு தினமும் மாலை பொழுதுபோக்கு கட்டாயம் வேண்டும் ஆகையால் அவர்கள் தங்களின் வீட்டிற்கு அருகிலேயே நாட்டுப்புற பாட்டுபாடி ஆடும் கலைஞர்கள், பொம்மலாட்ட கலைஞர்கள் மற்றும் இதர கிராமியு கலைஞர்களை தங்க வைத்து அவர்களுக்கு தங்களது அரன்மனையிலேயே வேலையும் கொடுத்து மாலையில் பொழுதுபோக்காக அவர்களை ஆடச்சொல்லி மகிழ்ந்தனர்(முத்து படத்தில் வருவது போல்)
இதே போன்று கிழக்கே வங்காளத்திலும் இதே நிலைதான், வியாபாரிகளை மகிழ்விக்கவும், விருந்தினர்களை மகிழ்விக்கவும் கலைஞர்களை வீட்டின் அருகிலேயே தங்கவைத்து வந்தனர். உதாரனத்திற்கு மனிப்பூரி நடனத்தை எடுத்து கொண்டால் அந்த கலைஞர்கள் குடும்பம் காலம் காலமாக மன்னர், ஜமீன் தார்கள் அவர்களை நம்பித்தான் வாழ்ந்து வந்தார்கள். சுதந்திரத்திற்கு பிறகு இந்த கலைஞர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மாற்றி கொண்டு தங்களின் வருமானத்திற்காக பொது மேடைகள் சிறப்பு காட்சிகள் என கொண்டு ஆடிவந்தனர்.
தமிழகத்தின் அருகில் உள்ள மாநிலங்களின் கதகளி ஆட்டங்களும் கிட்ட தட்ட மேலே சொன்ன நிலைதான். மேற்கு கர்நாடக மாவட்டங்களில் வாரம் தோரும் கூடும் சந்தைகளின் முடிவில் இரவில் கதகளி ஆட்டம் நடைபெறும் சந்தையில் வரும் வியாபாரிகள், பொதுமக்கள் தங்களால் இயன்ற பணத்தை அவர்களுக்கு கொடுப்பார்கள். உடையில் பணம் குத்தம் பழக்கம் இங்கிருந்துதான் தமிழகத்தில் வந்தது. முதலில் சேலம் தர்மபுரி போன்ற பகுதியும் பணம் குத்தும் பழக்கம் நாளைடைவில் தமிழகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த பழக்கம் வந்து 20 வருடங்களுக்கு உள்தான் இருக்கும் என்கிறார், நசரேத்தை சேர்ந்த பம்பை ஆட்ட கலைஞர் ஒருவர்.

இப்படி கலைஞர்களா இருந்தாலும் மானமே பெரிதென்று வாழ்ந்த ஒரு இனத்தின் வேதனையை நேற்று விஜய் டிவியில் உங்களில் யார் பிரவு தேவா என்ற ஒரு நிகழ்ச்சியின் போது காண நேர்ந்தது.

ஈழத்தை சேர்ந்த பிரேம் கோபால் குடும்பம் சின்ன திரையில் முன்பு தொன்றி விடை கொடு எங்கள் நாடே என்ற பாடலுக்கு ஆடும் போது எனக்கு அந்த நிகழ்ச்சியை காணும் போது அவர்களின் பரிபாசையில் அபிநயத்தில் கொண்டு வந்த வேதனைகளை விட , நடன நிகழ்சி முடிந்ததும் அவர்களின் உறுக்கமான வேண்டுகோள் இருக்கிறதே உங்களை கால்களை பிடித்து கொஞ்சுகிறோம் எங்கள் மக்களை காப்பாற்றுங்கள் என்று கூறினார்கள்.

எங்காவது தெருக்களில் கரக ஆட்டக்காரர்கள் ஆடி காசு வாங்கியதுண்டா, எங்காவது தப்பை அடுத்து, பறைமுழக்கி காசுவாங்கியதுண்டா, ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் அதிகாமாக காணலாம் வட இந்தியா முக்கியமாக பீகார், ஒரிசா, மற்றும் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்கள், ஆடிக்கொண்டும் குழந்தைகளை கயிற்றில் நடக்க விட்டும் நம்மியம் தட்டு ஏந்தி நிற்பர். பட்டினியால் கிடந்தாலும் சாவோமே தவிர எங்கள் கலையை சல்லிகாசுக்காக விற்கமாட்டோம் என்று வைராக்கியத்துடன் வாழ்ந்த என் தமிழினம் இன்று டிவியின் முன் தோன்றி நடனமாடி வேண்டி நிற்கும் போது கதறி அழுவதை தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லையே. இதற்காத்தானா தமிழனாய் பிறந்தோம் என்ற வேதனை தோன்றியது. குறளின் அத்தனை வரியிலும் தேடி பார்த்தேன் இந்த வேதனைக்கு வள்ளுவர் ஒரு குறள் கூட கொடுக்கவில்லை. காரணம் அவர் தமிழனுக்கு இப்படி ஒரு நிலை என்றூம் வராது என்று நினைத்தாரோ என்னமோ.

ஆனால் அரசியல் பிழைத்தார் அறம் பிழைத்தார் என்ற கூற்றிற்கு ஏற்ப தன்தோன்றி த்தனமாக ஆட்சியாளும் ஆட்சியாளர்கள் கைகளில் சிக்குண்டு இந்த இனமே அழிந்து வருகிறதே என்று நினைக்கும் போது வேதனையை தவிர வேறு ஒன்றும் மிஞ்சவில்லை.

No comments: