வல்லநாடு சித்தர் சிதம்பர சுவாமிகள்தான் தேவருக்கு ஈமசடங்குசெய்தார். 10க்கு10 குழிதோண்டி அதில் தேவரின் உடலை பத்மாசனம் என்ற யோகநிலையில் கிழக்கு நோக்கி அமரவைத்து அடக்கம் செய்யபட்டார். சித்தர்கள் மந்திரங்களை சொல்லிகொண்டே அடக்கத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு கொன்டிருந்தனர் அப்போது உட்காரவைக்கபட்டிருந்ததேவரின் தலை சற்று சாய்ந்த நிலையில் இருந்தது. சித்தர் தேவரின் தலை நிமிர்ந்துஇருக்கவேண்டும் என்று நினைக்கிறார் அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் அதிரக்கூடிய சம்பவம் நடந்தது. தேவரின் உடலை பார்த்து சித்தர்"முத்துராமலிங்கம் தலை சாயலாமா" என்று கூறி தேவரின் கன்னத்தில் சத்தென்று ஒரு அடி அடித்தார். இதை பார்த்த மக்களின் ஐயா ஐயா என்ற அழுகுரல் சத்தம் வானை முட்டியது. பின்பு தேவரின் தலை அடக்க வேலைகள் முடியும்வரை சிங்கம் போல் நிமிர்ந்து நேராக நின்றது. பின்பு விபூதி, கற்பூரம் 18 வகையான மூலிகைகள் கொட்டப்பட்டு அடக்க வேலைகள் நிறைவு பெற்றது. தேவரின் உயிரற்ற உடல் கூட தலைகுனிந்து இருப்பதை யாரும் விரும்பாத அளவிற்கு மானமே உயிராக வாழ்ந்த உத்தமர் தேவர் திருமகனார.
No comments:
Post a Comment