Friday, July 31, 2015

Singampuli proves he is a good comedian and has more in store

Actor Singampuli who has acted in a role that is almost to that of a hero in the last week’s solo release ‘Naalu Policum Nalla Irundha Oorum’ started as a supporting actor and he was slowly started getting noted as a good comedian.
Singampuli’s first acting attempt was in director Bala’s 2009 film ‘Naan Kadavul’. Then he played the role of a grown up kid in ‘Mayandi Kudumbathar’ that turned heads towards him as an actor. He slowly developed as a notable comedian with his performance in films ‘Goripalayam’, ‘Eththan’ etc which are mostly set up in rural background. In Ezhil directed ‘Manam Kothi Paravai’ his performance as a friend of Sivakarthikeyan who gets into the hands of villains for the hero’s mistake brought the roofs down and helped Singampuli cement his position as a comedian. Then he became a regular cast member in Ezhil films and his comedy in ‘Desinguraja’ and ‘:Vellaikaradurai’ evoked huge laugher in theatre halls.
Singamupuli has acted in many films in the last couple of years including Vikram Prabhu’s ’Sigarama Thodu’. In most of these films he appeared in just one or two scenes and made an impact with his brand of comedy.
Singampuli possesses a unique dialogue delivery, tone and a body language the traits essential for achieving big in comedy. Though his mainstay seems to be innocent and slapstick comedy, he has showed his ability to mouth satirical verses with the right punch and make people laugh.
His most recent film ‘Naalu Policum Nalla Irundha Oorum’ has proved that he can carry even the emotional and serious scenes very well a rare attribute that was seen with veteran comedians Nagesh and Vadivelu.
And it would be surprising to note that Singampuli did not enter the film industry as an actor. He worked as an assistant director to Sundar.C and Bala. He has also directed two films with Ajith and Suriya.

5 doses over days, keep rabies away


Doctors say misconceptions about dog bites linger, more awareness needed in the community

Several years ago, a dog bite meant getting 16 shots of an anti-rabies vaccine on the abdomen. Today, with advanced care, the shots are down to just four or five to prevent the onset of rabies, a deadly viral disease. But misconceptions surrounding what to do when bitten by a dog still linger.
“Many people continue to follow old remedies that are ineffective. Some apply erukkam paal, coffee powder, mud and cow dung on the dog bite. Some tie a piece of cloth above the wound thinking it will arrest the spread of infection. The only thing to do is wash the wound with soap under running water for 15 minutes. Antiseptic solution can then be applied, but medical help must be sought immediately,” said S. Raghunanthanan, professor of medicine, Madras Medical College (MMC) and Rajiv Gandhi Government General Hospital (GH).
Globally, 55,000 people die every year due to rabies. Sixty per cent of these are aged 15 years or below. In India, rabies causes 20,000 deaths every year.
At GH, 95 per cent of animal bite cases are dog bites. The hospital receives 50 to 70 cases of animal bites a day, Dr. Raghunanthanan said.
To prevent rabies, four to five doses of anti-rabies vaccine are administered on the 0, 3, 7, 14 and 28 days of a bite.
“We abandoned the 16-dose vaccine years ago. The present vaccine is safe and it’s the only way to prevent rabies. Rabies is fatal, but 100 per cent preventable. People should not wait to see if the dog lives for 10 days as is done in many cases,” Dr. Raghunanthanan added.
In a study undertaken among school and college students and the adult population in the community, MMC’s Institute of Community Medicine found that among school students, 37.3 per cent thought that rabies could spread through an animal’s licks.
While 42.8 per cent knew rabies was a killer disease, only 15 per cent knew that it cannot be cured. In the community, 33 per cent were aware of the mode of spread and 47 per cent knew it was a killer disease.
No treatment is required if a person feeds or touches a rabies-affected dog or if the dog licks intact skin, said Dr. Raghunanthanan.
“If the dog causes a skin injury or licks the mucus membrane like in the mouth, eyes and nose, vaccination is must. If it bites and a muscle is injured, then vaccination and immunoglobulin should be administered,” he said. He stressed the need for patients to complete the course even if the wound healed.



Your Guide To Increasing Sperm Count And Improving Fertility


KALLA CHOLAN KALVETTU


Thursday, July 30, 2015

பூலித்தேவர் 300 : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

செப்1பூலித்தேவர் 300 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ் 16 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டு காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆரம்பத்தில் மறுத்த காவல் துறை தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் வருகிற ஆக 16 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெறுவது உறுதியாகியுள்ளது. ஆகஸ் 16 அன்று மாலை தாலையுத்து பேருந்து நிலையம் அருகில் மாலை5 மணிக்கு நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சண்முகையாப்பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் . விழா தொடர்புக்கு: 7708372105

பரவை முனியம்மாவுக்கு நடிகர் விஷால் நிதி உதவி

நாட்டுப்புற பாடகியும், சினிமா நடிகையுமான பரவை முனியம்மாவின் மருத்துவச் செலவை ஏற்பதாக, நடிகர் விஷால் கூறியுள்ளார்.பரவை முனியம்மா, 72, 'துாள், வீரம், மான் கராத்தே' உட்பட 25 தமிழ் சினிமாக்களில் நடித்துள்ளார். 'துாள்' படத்தில், இவர் பாடிய 'சிங்கம் போல...' என்ற பாடல், பட்டி தொட்டியெல்லாம் பிரபலம் அடைந்தது. சினிமா வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து, வருமானம் இல்லாமல் தவித்தார். உடல் நலமும் பாதிக்கப்பட்டது. இதனால் முன்போல, திருவிழா கச்சேரிகளுக்கும் செல்ல முடியவில்லை. மருத்துவச் செலவுக்குக் கூட, பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்.இந்த தகவல், நடிகர் விஷாலுக்கு தெரிய வந்தது. உடனே, பரவை முனியம்மாவுடன் போனில் பேசினார். உடல்நலம் குறித்து விசாரித்த விஷால், மருத்துவச்
செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.இதையடுத்து, பிரபல மருத்துவமனையில், பரவை முனியம்மா சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார்.

Wednesday, July 29, 2015

நாடாளுமன்றத்தில் உள்ள ‪#‎அய்யா‬ வின் சிலை - திறந்து வைத்தவர் --டாக்டர் .A.P.J.அப்துல் கலாம்



தவதிரு ஸ்ரீபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை

சிலையின் உயரம் -- 9 அடி

சிலை வைக்கப்பட்டுள்ள இடம் --waiting Hall .4.

சிலை திறக்கப்பட்ட நாள் --01--10--2002

சிற்பியின் பெயர் --ஶகிஷோர் J.நாச்சப்பா

திறந்து வைத்தவர் --டாக்டர் .A.P.J.அப்துல் கலாம்
இந்திய குடியரசுத்தலைவர்

BJP to take up Thevars’ cause

The BJP is leaving no stone unturned in ensuring that it expands its support among all major communities in Tamil Nadu.

The State unit is now preparing to step up its campaign in support of long-held demands of the Thevars, a backward community with a decisive vote bank in the southern districts.
This would include backing the campaign to name the Madurai airport after Muthuramalinga Thevar. “We believe many facets of BJP ideology syncs with Pasumpon Muthuramalinga Thevar’s ideals. We totally support his view that spirituality and nationalism should be our two eyes,” said a Tamil Nadu BJP leader.

Professor at the Madras Institute of Development Studies, C. Lakshmanan, says targeting the Devendra Kula Velalars seems to be a specific strategy.
“On the ground, we see that the community is quite rigid when it comes to the practice of the Hindu tradition. Also, unlike the other sub-sects such as Pallars and Paraiyars, they still do not have a large political party to represent them. Hence, the BJP might think they could be taken into its fold,” opined Mr. Lakshmanan. While the Dalits and Thevars have had serious differences in the Southern districts, those in the RSS state they have co-existed well in their organisation. This could be a reason why the BJP backing both the communities simultaneously is not taken as a contradiction.
N. Sadagopan, media co-ordinator of the RSS, sought to dispel the notion that Dalits refused to be part of the Sangh, saying both Thevars and Dalits had been working closely with it.

 In the early 1980s, Southern Tamil Nadu saw polarisation on religious lines after Rama Gopalan organised Hindu Awakening Conferences. Nadars and Thevars are the two communities that identified closely with the RSS and the BJP. For many years V. Rangasamy Thevar, originally a close associate of Rajaji in the Swatantra Party, functioned as the state leader of the RSS. After the RSS divided Tamil Nadu into North and South for administrative purposes, A. Adalarsan, a scion of the Ramnad royal family, has become the secretary of the South Tamil Nadu.
We believe many facets of BJP ideology syncs with Pasumpon Muthuramalinga Thevar’s ideal: BJP leader

Here are the top 10 ways to get rid of dark circles fast.

1. Almond Oil

Almond oil is a great natural ingredient that is very beneficial for the delicate skin around your eyes. Regular usage of almond oil will help fade your under eye circles. In addition to almond oil, you can use vitamin E oil to eliminate dark circles under the eyes.
  1. Before going to bed, apply a little almond oil over the dark circles and gently massage it into the skin.
  2. Leave it on overnight.
  3. The next morning, wash it off with cold water.
  4. Follow this remedy daily until the dark circles disappear.

2. Cucumber

Cucumbers have skin-lightening and mild astringent properties that help fix those raccoon eyes naturally. Plus, they have a soothing and refreshing effect.
  • Cut a fresh cucumber into thick slices and chill them in the refrigerator for 30 minutes. Put the slices onto the affected skin area for about 10 minutes. Wash the area with water. Repeat twice daily for about a week or more.
  • Another option is to mix cucumber juice with lemon juice in equal amounts. Use a cotton ball to apply the mixture on the affected skin. Leave it on for 15 minutes and then wash it off with water. Follow this remedy daily for at least one week.

3. Raw Potato

There are natural bleaching agents present in potato that can help lighten dark circles and get rid of puffiness around the eyes.
Get Rid of Dark Circles Using this Potato Home Remedy
  • Grate one or two raw potatoes to extract the juice. Soak a cotton ball in the juice and place it over your closed eyes. Make sure the juice covers the dark circles under your eyes as well as the eyelids. Allow the juice to sit for 10 to 15 minutes. Rinse your eyelids well with cool water. Repeat once or twice daily for a few weeks.
  • Instead of potato juice, you can also use thick potato slices to remove dark circles.

4. Rose Water

Rose water has incredible ingredient for skin care. It rejuvenates the skin and has a soothing effect on tired eyes. Due to its mild astringent properties, it also works as a good skin toner.
  1. Soak cotton eye pads in pure rose water for a few minutes.
  2. Put the soaked pads on your closed eyelids.
  3. Leave them on for about 15 minutes.
  4. Follow this remedy twice daily for a few weeks.

5. Tomato

Tomatoes have bleaching properties that can lighten skin to a great extent.
  • Mix one teaspoon of tomato juice with one-half teaspoon of lemon juice. Gently apply this mixture on the dark circles and allow it to sit for 10 minutes. Rinse it off with water. Follow this remedy twice a day for a few weeks. Simply using tomato juice will also work.
  • You can also drink a glass of tomato juice with some mint leaves, lemon juice and salt. For maximum results, be sure to drink this juice immediately after making it. Drink it once or twice a day for about a week.

6. Lemon Juice

The vitamin C present in lemon juice can also help remove dark circles under the eyes, thanks to its skin-lightening properties.
  • Use a cotton ball to apply fresh lemon juice around your eyes. Leave it on for about 10 minutes and rinse it off. Do this once daily for a few weeks.
  • Another option is to make a thick paste by mixing one tablespoon of lemon juice, two tablespoons of tomato puree, a pinch of gram flour (besan) and turmeric powder. Apply this thick paste gently around your eyes. Rinse it off with clean water after 10 to 15 minutes. Repeat two or three times every week.
Note: If the lemon juice causes a burning sensation then discontinue its use.

Tuesday, July 28, 2015

தமிழகத்தில் நாளை மறுநாள் பொது விடுமுறை: அரசு அறிவிப்பு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் ராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.  

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை மறுநாள்( வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திற்கும் பொது விடுமுறை விடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களை பற்றி மேதகு அப்துல் கலாம்


கேபிஎன் நிறுவன பலத்தில்


இரண்டு நாட்களாக காலையில் முதல் வேலை வீட்டிற்கு வரும் ஹிந்து, டைம்ஸ், தினகரன் ஆகிய மூன்றிலும் அந்த செய்தியை தேடுவதுதான். நேற்றும் இல்லை இன்றும் இல்லை. அதற்கு முன்னாள் தொலைக்காட்சிகளில் வரிச் செய்தியாக ஓடியது, பின்னர் அதுவும் நின்று போனது.
கேபிஎன் நிறுவன பலத்தில், பத்திரிக்கை தர்மம் கூட விபத்து நடந்த பேருந்தின் அடியில் நசுங்கிப் போய்விட்டது போல.
அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லையோ என்று கூட ஒரு கணம் நினைத்தேன். ஆனால் முகம் நசுங்கி இறந்து போன ஒன்று விட்ட தம்பியை புதைத்து விட்டு வந்த கல்லறைத் தோட்ட மணம் அதை மறுக்கிறது.
இருபது பேர் சாவு, குழந்தை சாவு, புது மாப்பிள்ளை சாவு என்று தினந்தோறும் கண்ணில்படும் விபத்துச் செய்திகளை வெறுமே கடந்து சென்றாலும், இறப்பின் வலி நம் முகத்தின் மேலேயே அறைகையில் அவ்வளவு எளிதில் ஒதுக்க முடியவில்லை.
பத்து வருடம்! கல்யாணமாகியல்ல காதலித்து அதுவும் சொந்த அத்தை பொண்ணை. போன வாரம்தான் திருமணம் நிச்சயமாகியது. பெண் கொழும்பு. இங்கு நடந்த ஒரு திருமணத்தில் முதன் முதலில் பார்த்து பிடித்துப் போய் திருமணம் மதுரையிலா கொழும்புவிலா என்ற இழுபறியில் பத்து ஆண்டுகள் ஓடிப் போய் ஒரு வழியாக நிச்சயமானதை, சித்தப்பா ‘இந்தியா இலங்கை ஒப்பந்தம் – மோடியால் அல்ல இந்த டாடி’யால்’ என்று தனது முகநூலில் பதிந்திருந்த நிலைத்தகவலைப் பார்த்து ரசித்த புன்னகை கூட இன்னும் மிச்சமிருக்கிறது.
இவ்வளவு நாட்களாக வாட்ஸப்பில் பார்த்ததோடு சரி. ‘டிசம்பரில்தானே கல்யாணம். நிச்சயமான அன்றும் கூட்டத்தில் பேச முடியவில்லை’ என்று வெள்ளிக்கிழமை கொழும்பு கிளம்பிக் கொண்டிருந்த பெண்ணை ஒரு மணி நேரமாவது பார்த்து தனிமையில் பேச விரும்பி வியாழன் ராத்திரி பெங்களூரில் இருந்து கிளம்பி வந்தவனை பயணிகளோடு சேர்ந்து தானும் தூங்கிப் போன கேபிஎன் டிரைவர் கரூர் தாண்டாமலேயே முடித்து வைத்து விட்டார்.
‘உன் கையை கூட நான் பிடிச்சுப் பாத்ததில்லையே’ என்று பத்து வருடங்களாக அவனை காதலித்து வந்தவள் அழுததாக சொன்னார்கள். இனி அந்த வார்த்தைகள் என்னைத் துரத்தும்…
தொடர்ந்து பெரிய விபத்துகளைப் பார்த்து விட்டாலும் விபத்து பற்றிய செய்திகளை பத்திரிக்கைகளில் வர விடாமல் செய்து விட்ட கேபிஎன்’ நிர்வாகத்தையும் துரத்தட்டும்.
Prabhu Rajadurai
 
 

டாக்டர்.நா.சேதுராமன் இரங்கல்:-

தென்கோடியில் அவதரித்து வடக்கே சென்று உயிர்த்து இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கையாக இருந்த கலாமின் இழப்பு குழந்தைகளையும் அழச்செய்யும்.
என்னுடன் நெருங்கி பழகி அவ்வப்போது அலோசனைகளை கூறி வந்த அப்தூல் கலாம் என்ற என் அண்ணனை இழந்துவிட்டேன்" - என்று மூவேந்தர் முன்னனி கழக தலைவர் டாக்டர் நா.சேதுராமன் தன் இரங்கலை தெரிவித்துள்ளார்

Monday, July 27, 2015

கவியரசு கண்ணதாசன் அவா்கள் பசும்பொன் தேவா் அய்யா அவா்களைப் பற்றி எழுதிய ஒரு கவிதை.

நீதியில் மறவன்;
நல்ல நோ்மையில் மறவன்;
நாட்டில்ஆதிநாள் தொட்டே போாில்
அருஞ்செயல் புாிந்த செம்மல்;
சாதியில் மறவன்;
எங்கள் தமிழ்முத்து ராமலிங்கம் !
வாதிடும் திறமைக்கெல்லாம்
வரலாற்றில் ஒருவன் அன்னான்!
நல்லறம் வளா்த்துக் காத்த
நைச்டிக பிரம்மச்சாாி!
இல்லறம் இல்லை;
ஆனால் ஏற்காத அறமே இல்லை!
கல்லையும் பணியச் செய்யும்
கனிவுறும் அறத்தில் மிக்க
வல்லவன் பசும்பொன் நாதன்
வளா்புகழ் வளா்க மாதோ !

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் காலமானார்

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காலமானார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,82 , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஷில்லாங் நகரில் உள்ள பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து ராணுவ டாக்டர்கள் விரைந்து வந்து தீவிர சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இரவு காலமானார். அவருக்கு வயது 82.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 –  சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது


ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

  1. அக்னி சிறகுகள்
  2. இந்தியா 2012
  3. எழுச்சி தீபங்கள்
  4. அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

வீரமிகு பசும்பொன்நேதாஜி அறக்கட்டளை வேலைவாய்ப்பு செய்தி


என் மகன் - சிவாஜி கணேசன் - Dialague

நான் ஜாதியில தேவர்டா......


https://www.youtube.com/watch?v=z_kcqrPvBO8

Sunday, July 26, 2015

பதினைந்தே நாட்களில் வெள்ளையாக வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!

இன்றைய மாசடைந்த சுற்றுச்சூழலில் நாளுக்கு நாள் நம் சருமத்தின் ஆரோக்கியம் கெட்டுப்போவதோடு, சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறேன் என்று கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோர் அதிகம். அதுமட்டுமின்றி, சருமமும் கருமையாகிக் கொண்டே போகிறது.

பொதுவாக வெள்ளையான சருமத்தின் மீது பலருக்கும் ஆசை இருக்கும். நாமும் நடிகர் நடிகைகளைப் போல் வெள்ளையாக வேண்டுமென்று, கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அந்த க்ரீம்களை பயன்படுத்துவதாலும் சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதனால் தான் நடிகர் நடிகைகளை மேக்கப் இல்லாமல் பார்க்க முடிவதில்லை.

எனவே நீங்கள் உங்கள் சருமத்தினை ஆரோக்கியமாகவும், வெள்ளையாகவும் பராமரிக்க இயற்கை வழிகளைப் பின்பற்றுவது தான் சிறந்த வழி. அதிலும் கீழே கொடுத்துள்ளவற்றை பின்பற்றி வந்தால், நிச்சயம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நிறத்தையும் அதிகரிக்கலாம்.

முட்டை ஃபேஸ் பேக்

எமுட்டையின் வெள்ளைக் கருவுடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சூரிய வெளிச்சம் படும் இடத்தில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

தக்காளி

தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் தக்காளியில் உள்ள லைகோபைன் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். மேலும் இந்த ஃபேஸ் பேக் மூலம் எவ்வித பக்க விளைவும் ஏற்படாது.

கடலை மாவு, தேன் மற்றும் மஞ்சள் தூள்

இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து, முகம், கழுத்து, கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மைசூர் பருப்பு

மைசூர் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை ஒன்றாக அரைத்து பொடி செய்து, அதில் சிறிது முல்தானி மெட்டி, மஞ்சள் தூள், பப்பாளி கூழ் சேர்த்து கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வர, நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை தினமும் முகம் மற்றும் கருமையாக உள்ள இடத்தில் தடவி, உலர வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமம் பொலிவோடும், ஆரோக்கியமாகவும் காணப்படும்

சீரகம்

1 டீஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரால் தொடர்ந்து 15 நாட்கள் முகத்தை கழுவி வந்தால், சருமத்தின் நிறத்தில் மாற்றத்தைக் காண முடியும்.

கேரட் மற்றம் அவகேடோ

கேரட், அவகேடோவை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, முகம், கழுத்தி, கை மற்றும் கால்களில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சரும ஆரோக்கியம் மட்டுமின்றி நிறமும் மேம்படும்.

Gurusaami ayaa - article


Friday, July 24, 2015

ஒரு இரங்கல் செய்தி !

தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் P.T. அரசகுமார் அவர்களின் தாயார் 23/07/2015 அன்று காலமாகிவிட்டார் என்ற துயரச்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரது குடும்பம் துயரத்தில் ஆழ்திருபதற்கு நம் ஆருதலைச் சொல்வோம்.

Thursday, July 23, 2015

51 Life Hacks That Are So Simple, You'll Kick Yourself For Not Knowing Them! - DONT MISS

“பாகுபலி” படத்திற்கு எதிர்ப்பு: மதுரை தியேட்டரில் பெட்ரோல் குண்டுவீச்சு 7 பேர் போலீசில் சரண்

பாகுபலி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் சினிமா தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

பாகுபலி படத்திற்கு எதிர்ப்பு

 அந்த படத்தில் அருந்ததியர் இனத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.

மதுரை-நத்தம் சாலையில், ஆயுதப்படை குடியிருப்பு அருகே உள்ள தமிழ்-ஜெயா தியேட்டர்களில், ஒரு தியேட்டரில் பாகுபலி படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று காலை 11.20 மணிக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் இந்த தியேட்டருக்கு வந்தனர். திடீரென்று அவர்களில் இருவர் 2 பெட்ரோல் குண்டுகளை எடுத்து தியேட்டர் மீது வீசினார்கள்.

அதில் ஒரு குண்டு காம்பவுண்டு சுவர் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அங்கு கிடந்த பேப்பர்கள் மட்டும் தீயில் எரிந்தன, வேறு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.

தப்பி ஓட்டம்

இதைக் கண்ட தியேட்டர் ஊழியர்கள் வெளியே ஓடி வந்து, பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை பிடிக்கச் சென்றனர். அதற்குள் அவர் கள் மோட்டார் சைக்கிள் களில் ஏறி தப்பி விட்டனர். அவற்றில் ஒரு மோட்டார் சைக்கிளின் நம்பரை மட்டும் தியேட்டர் ஊழியர்கள் குறித்து வைத்துக்கொண்டு, தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தல்லாகுளம் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு வீசியவர்கள் அந்த பகுதியில் ஒரு காகிதத்தை வீசிச் சென்றிருந்தனர். அதில், “தமிழக அரசே, தலித் சமூகத்தை இழிவுவாகப் பேசும் ‘பாகுபலி’ படத்தை தடை செய் புரட்சிப்புலிகள் இயக்கம், மதுரை மாவட்டம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார், தியேட்டர் ஊழியர்கள் தெரிவித்த மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அது கரும்பாலை பகுதியை சேர்ந்த ஒருவரின் வண்டி என்று தெரியவந்தது.

7 பேர் சரண்

இந்நிலையில், தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு மதியம் 2½ மணி அளவில் கரும்பாலை பகுதியை சேர்ந்த புரட்சிப்புலிகள் அமைப்பினர் சந்துரு, உலகநாதன், மூக்கன், முத்துமாணிக்கம், இந்திரன், நாகராஜன், அழகர் ஆகிய 7 பேர் வந்தனர்.

அவர்கள் தாங்கள்தான் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியதாகக்கூறி, போலீசாரிடம் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, 7 பேரையும் கைது செய்தனர்.

#‎காமாராஜர்_பொற்கால_ஆட்ச்சியின்_சாதனைகள்‬, ‪#‎காமராஜர்_எழுச்சி_மற்றும்_வீழ்ச்சி‬ -

காமராஜர் பொற்கால ஆட்ச்சிக்கு போவதற்கு முன் உங்களை நீங்களே ஒரு அறிவார்ந்த சுய ஆய்வு கேள்வி கேட்டுகொள்ள்ளுங்கள் மூதறிஞர் ராஜாஜி படித்தவர், இந்தியாவிலேயே சிறந்த அறிவாளி என்று அதே காங்கிரஸ் கச்சியில் இருந்த உயர்மட்ட தலைவர்கள் முதல் இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய மனிதர்கள் சொல்வார்கள், முக்கிய அரசியல் நிகழ்வுகளில் ராஜாஜியின் ஆலோசனை இல்லாமல் செயல்படமாட்டார்கள், சிக்கலான பாகிஸ்தான் பிரிவினையை கூட "CR" பார்முலா என்று சொல்லும் ஒரு செயல்வடிவம் அமைத்துகொடுத்தவர் ராஜாஜி, விடுதலைக்குப் பின்னர் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும், அதன் பின் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பாற்றினார் அதற்க்கு பின்பு 1951 முதல் 1952 வரை இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார், அவ்வளுவு பெரிய அறிவாளியை விட படிப்பறிவு இல்லாத இந்திய வரைபடம் கூட தெரியாத நபரா சிறந்த ஆட்ச்சியை அளித்து விட்டார்...???
https://en.wikipedia.org/wiki/C._R._formula
=====================================================
சரி வாங்க போவோம் போர்கால ஆட்ச்சியை பார்க்க -
=====================================================
காமராஜரை அரியணை ஏற்றிய "சானார் மகாஜன சங்கம் "
===================================================
காங்கிரசில் சொல்ல கூடிய ஒரு தலைமை நிலையை காமராஜர் அடைந்தவுடன் காமராஜர் "சானார் மகாஜன சங்கத்தின் " முழு கட்டுபாட்டுக்குள் பொய் விட்டார், அவர்கள் என்ன ப்ளான் போட்டு தருகிறார்களோ அதை செயல்படுத்துவது மட்டுமே காமராஜர், இப்போது ஆட்ச்சியை கைப்பற்ற வேண்டும் என்ன செய்வது, ஆட்ச்சி சிறந்த அறிவாளி ராஜாஜியுடம் உள்ளது, அவரை வீழ்த்தினால் மட்டுமே ஆட்ச்சிகைக்கு வரும் என்ற நிலை,
எதிரிக்கி எதிரி நண்பன் என்பது போன்று பிராமணர் ராஜாஜியை வெறுத்த திராவிட கும்பல்கள் உடன் ரகசிய உறவு, அப்போது வழுவான அரசியல் தளம் இல்லாத திராவிட இயக்கங்களுக்கு ஒரு பிடிமானம் தேவைப்பட்டது, அந்த வாய்ப்பை காமராஜர் வழங்கினார், காங்கிரசில் தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிகொண்டார், இந்த கொடுமைகளை கண்ட ராஜாஜி நேரிடையாக காமராஜரை "அந்த கருப்பு அண்டங்காக்கையை விரட்டிவிட்டால் மற்ற காக்கைகள் ஓடிவிடும்" என்றார் ,
--------------------------------------------------------------------------------------------
மூதறிஞர் ராஜாஜி ஆட்சிபறிப்பு -
===========================
மூதறிஞர் ராஜாஜி படிப்புடன் ஒரு தொழிலையும் கற்று கொள்ள சொல்லி "குலகல்வி" என்ற திட்டத்தை கட்ச்சிகுள் உள்ள மாநில தலைவர்களுடன் விவாதித்தார், எதிர்காலத்தில் மாணவர்கள் படித்த படிப்பினால் வேலை இல்லாமல் போனால் தெரிந்த தொழிலை கொண்டு தகுந்த வேலை கிடைக்கும் வரை கற்றுக்கொண்ட தொழிலை செய்து பிழைத்து கொள்ளலாம் என்பதே அதன் நோக்கம், உதாரணமாக ஒரு பொற்கொல்லர் மாணவன் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலைக்கு காத்து இருக்கும் காலத்தில் பொற்கொல்லர் வேலை செய்து தன்னை காத்துகொள்ளலாம், நாட்டில் வேலைவாய்பு பிரச்சனை குறையும், நாட்டின் பொருளாதாரம் உயரும்,
ஆனால் இந்த விசயம் திராவிட இயக்கங்களுக்கு சொல்லப்பட்டது இதுதான் சரியான சந்தர்ப்பம் குல கல்வி என்பது குலவழி தொழில் செய்யசொல்கிறார் பிராமணர் ராஜாஜி, என்று தவறான பிரச்சாரம் காமராஜர் என்னபடியே மக்களிடம் செய்தார்கள், மக்கள எதிர்ப்பின் காரணமாக ராஜாஜி தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை, நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய இடத்திற்கு மற்றும் ஒரு நல்ல தலைவர் சி.சுப்பிரமணியத்தை முதலமைச்சராக்க கேட்டுகொண்டார், இன்னொரு முக்கிய தலைவர் எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார். ஆனால் காமராஜர் மற்றும் சானார் மாகஜன சபா கடுமையாக உழைத்து எலோரையும் சரிகட்டும் விதத்தில் சரிகட்டி காமாராஜரை அரியணையில் உட்காரவைத்துவிட்டது, இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி, இதற்க்கு பிறகுதான் சாணார்களின் பொற்கால ஆட்ச்சி அந்த சமூகத்திற்கு, வெளியில் இமேஜை தக்கவைக்க பல நாடகங்கள் எளிமை இனிமை என்று கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் கொட்டம் போட்டார்கள், எல்லை மீறுவதை உணர்ந்த ராஜாஜி மீண்டும் அரசியலுக்கு வந்தார் தேவர் திருமகனுடன் கூட்டணி வைத்து 1967ல் ஒரு கல்லூரி மாணவனிடம் தோற்று ஓடினார் காமராஜர்,
=========================================================
பொற்காலக ஆட்ச்சியின் பல வேதனைகளில் சில -
============================================
பிராமணர் மற்றும் இந்து மத விரோத சக்த்திகளின் வளர்ச்சி -
=============================================
மூதறிஞர் ராஜாஜி ஆட்சியில் மறுபக்கம் இந்தி எதிர்ப்பு, திராவிட தனிநாடு உள்ளிட்ட பல தேச விரோத பிராமணர், இந்து மத எதிர்ப்பினை மக்கள் மனதில் திராவிட இயக்கங்கள் தூவிகொண்டிருந்த காலம் கலக்கம், காமாராசும் அவருக்கு பின்னால் இருந்த சானார் மகஜன சங்கமும் திட்டம் போட்டு அனுபவம் வாய்ந்த சிறந்த நிர்வாகி ராஜாஜியை கவிழ்க்க அந்த சக்திகளுக்கு மறைமுகமாக துணை நின்றார்கள், காங்கிரஸ் கட்ச்சியில் நடக்கும் ஆட்சி ஆலோசனைகள் அவர்களுக்கு ரகசியமாக சென்று கொண்டு இருந்தன காமராஜர் வழியாக, அதன் படியே ராஜாஜியின் குலகல்வி திட்டம் ஊதி பெரிதாக்கி தவறாக போருள்கொல்ள்ள செய்து இன்று வரை திராவிட இந்து எதிர்ப்பு இப்போது அது தமிழ் தேசியமாக வளர்ந்து நம் கண் முன்னாள் நிற்கின்றன,
--------------------------------------------------------------------------------------------
கல்வி -
======
1947 விடுதலைக்கு பின்பு போட்ட "1951 ல் இருந்து 1956" முதல் ஐந்தாண்டு திட்டங்களில் நாடு முழுவதும் பள்ளிகள், உட்பட பல உட்கட்டமைப்பு வசதிகள் கட்டுமானங்கள் தொடங்கின, அதன் படியே வந்தது அன்றி படிப்பறிவில்லாத ஒருவரின் நிர்வாகத்தால் அல்ல, கேரளா 100% படிப்பறிவு அங்கே எந்த காம...ராசு போய் கல்வி கண்ணை திறந்தார்...? இதை போல நாடு முழுவதும் குறிப்பாக தென்னக மாநிலங்கள் கல்வி கட்டுமானத்தில் முன்னணியில் வந்தது, ஆங்கிலேயர் ஆட்ச்சிகாலதிலேயே தமிழகத்தில் பெரிய கல்வி நிறுவனங்கள் தோன்றிவிட்டன, அப்போதே இந்தியாவில் முதல் முதலில் பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை தன் சொந்த செலவில் தொடங்கியவர் வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி.தியாகராய செட்டியார் அவரால் பயன் உற்ற மக்கள் அவரை பெருந்தலைவர் என்று அழைத்தனர், இதையே காமராசு பின்னாளில் எடுத்துகொண்டார் அல்லது திருடிகொண்டார், அறிவாளிகள் சிந்திக்க வேண்டும் எப்படி ஆந்திரா,கேரளா, கர்நாடகாவில் நம்மை விட கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் என்று அங்கு யாரு கல்வி கண்ணை திறந்து விட்டது...???
உட்கட்டுமானம் -
==============
அணைகள் விசயத்தில் தமிழகத்தில் கல்லணை இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட மேட்டூர் அணை மற்றும் பென்னிகுக் கட்டிய முல்லை பெரியாறு அணைகள் ஏற்கனவே இருந்தவை, இவைகளே இன்றும் தமிழகத்தின் பிரதான அணைகள்,காமாரசு ஆட்ச்சிகாலத்தில் கட்டப்பட்டது சில சிறிய அணைகள் மட்டுமே அதிலும் பல்வேறு ஊழல்கள், அந்த அணைகள் கான்ட்ராக்ட் அவர் சார்ந்த சமூகத்தினரிடமே கொடுக்கப்பட்டது, அந்த அணைகள் விரைவில் பழுதாகி ஒழுகியது, ஏதாவது ஒரு முக்கிய பாசன அணையை காமராஜர் கட்டியது என்று காட்டசொல்லுங்கள், பெல் உட்பட நிறுவனகள், பல தொழிற்ச்சாலைகள் மத்திய அரசால் வந்தவை அன்றி அதில் காமராசுக்கு பங்கில்லை,
ஊழல் -
=====
மூதறிஞர் ராஜாஜி ஆட்சி காலத்தில் ஒரு ஊழல் புகார் இல்லை, தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் என்ற ஓன்று காமராஜர் ஆட்ச்சியில் இருந்துதான் ஆரம்பித்தது,
காமராஜர் தனக்காக சொத்து சேர்க்கவில்லை ஆனால் தான் சார்ந்த சமூகத்தவர் கள்ளநோட்டு சிவகாசியில் அடிக்கவும், விருதுநகரில் உணவு பொருட்களில் கலப்படம், பதுக்கல்கள் செய்து பிழைத்தவர்கள், இந்த ஊழல் புகார்கள் இந்திய நாடுளுமன்றத்தில் எதிரொலிக்க நேரு வேறு வழியில்லாமல் காமராஜரிடம் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லிக்கு காமராஜரை அழைத்துகொண்டார் , கஜானா காலி ஆனதும் காமராஜர் ஆட்ச்சியில் தான், தமிழகம் அன்று தொடங்கிய கடன் இன்றும் தொடர்கிறது...
-----------------------------------------------------------------------------------------
கோவில் சொத்துக்கள் கொள்ளை -
=============================
கோவில் சொத்துகளை, ஐம்பொன் சிலைகளை திருடி காமாரசு ஆட்ச்சிகாலத்தில் தான் பல சானாரர்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனார்கள், பல கோவில் சொத்துக்கள் வெள்ளாமை நிலங்கள் கானா பொய் விட்டடன, அல்லது பட்டா போட்டு அவர் சமூகத்தவர்க்கு தொழில் செய்ய சென்று விட்டன,
==============================================
விடுதலை போராட்ட வீரர்கள் புறகணிப்பு -
===================================
நேதாஜி INA படையில் இருந்தவர்கள், வீர வாஞ்சி, திருப்பூர் குமரன் குடும்பத்தவர்க்கு பென்ஷன் கொடுக்க மறுத்துவிட்டார், பலர் இது குறித்து சட்டசபையில் கேட்டு போராடியபோதும் மறுத்துவிட்டார், ( அப்போது நேருவின் திட்டப்படி தேச விடுதலையில் INA வீரர்களின் தியாகங்களை மறைக்கும் செயலாக அவர்களை விடுதலை வீரர்களாக அப்போது ஏற்றுக்கொண்டு பென்ஷன் கொடுக்க மறுக்கப்பட்டது காமராஜர் செவ்வனே அதை சிறப்பாக செய்தார் அதையும் தாண்டி தன் பிராமண எதிர்ப்பு கொள்கைகாரனமாக INA படையில் இல்லாத வாஞ்சிநாதன் குடும்பத்துக்கும் பென்ஷன் குடுக்க மறுத்தார்)
==============================================
ஜாதி கலவரங்கள் -
================
1899ம் ஆண்டு சிவகாசியில் உள்ள கோவிலில் நுழைய அனுமதிகேட்ட பிரச்சனை மற்றும் சானார்களுக்கு உதவிய தேவர்குல எதிரிகள் பிரிடிஷார், இதனை கண்டு வெகுண்டு தேவர்கள் படையாக சசென்று சாணார்களின் கிராமங்களை சூறையாடியது இதற்க்கு பின்பு ஜாதிகலவரங்கள் என்ற ஓன்று பெரிதாக இருந்தது இல்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் ஆனால் அரசியல் ஆதாயத்திற்கு 1957ல் காமராஜரால் அரசியலுக்கு அழைத்துவந்து மர்மமான முறையில் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரன் கொலை சம்பவம், மற்றும் அதனை தொடர்ந்தே தென்னகத்தில் இன்றுவரை ஜாதிகலவரங்கள் நடந்து வருகின்றன, முதுகுளத்தூரில் தூண்டிய ஜாதி கலவரம் காமராஜரால் திட்டமிடப்பட்டது....இன்றுவரை அது தொடர்கிறது,
http://sip.sagepub.com/content/1/1/69.abstract
=============================================================
கடன் -
=====
தமிழக அரசுக்கு மூதறிஞர் ராஜாஜி ஆட்சிகாலம் வரை ஒரு ரூபாய் கடன் இல்லை, திறமையாக கடன் இல்லாமல் எதிர்கால தொலைநோக்கு பார்வையுடன் ஆட்சி செய்தார், காமராசு வந்ததும் பல பல பளக்கும் இன்றைய இலவச மிக்சி, கிரைண்டர் போன்று மக்களை மயக்கும் திட்டங்களுக்கு கஜானாவை காலி பண்ணி விட்டு உலக வங்கியிடம் கடன் கேட்டு போய் நின்றார்,
=======================================================
சீமை கருவேலமரம் -
==================
காஜானா காலி ஆனவுடன் என்னசெய்ய கடன்தான் , நிலத்தை நீரை உறிஞ்சி நஞ்சாக்கும் "சீமை கருவேலம்" விதைகளை ஆஸ்திரேலியாவில் வாங்கி வந்து விமானத்தில் இருந்து ராமநாதபுரம்,மதுரை, தேனீ பகுதிகளில் தூவப்பட்டன காரணம் விமானத்தில் இருந்து உலக வங்கிக்காரன் பார்த்தா பச்சையா இருந்தான் கடன் கொடுப்பானாம், இன்று வரை அந்த சீமை கருவேலம் மரத்துடன் மக்கள் போராட்ட்ம்செய்து வாழும் வாழ்வாதார நிலைதான் ...
===================================================================
தமிழகம் இழந்த பகுதிகள் -
=======================
வழமான முக்கியமாக தென் தமிழகத்தின் வாழ்வாதார முல்லை பெரியார் அடங்கிய தமிழர்கள் அதிகம் வாழும் பூர்வீக தமிழக இடிக்கி மாவட்டத்தை கேரளாவிற்கு கொடுத்துவிட்டு, தேவிகுளம் பீர்மேடு பகுதிகள் அது குறித்து அபோது கேட்டபோது " பள்ளமாவது, மேடாவது எல்லாம் இந்தியாவில் தானே இருக்கு" என்று சொல்லிவிட்டு தன் ஜாதி மக்கள் வாழும் குமரி பகுதிகளை முனைப்பாக இருந்து தமிழகத்துடன் இணைத்தார்....
============================================================
தமிழகத்தில் இருந்து விரட்டப்பட்ட காமராசு "அகில இந்திய காங்கிரஸ் கட்ச்சியின் தலைவராக செய்த சாதனை -
=========================================================
பசுவதை தடுப்பு சட்டம் முடக்கிய காமராஜர் -
======================================
'1966 நவம்பர் 2 அன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் இந்திய அரசியல் அமைப்பில் குறிப்பிட்டு உள்ளதுபோல் இந்தியாவில் பசுவதை தடைச்சட்டம் கொண்டுவருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது அதை கடுமையாக எதிர்த்த அகில இந்திய காங்கிரஸ் கச்சியின் அப்போதய தலைவராக இருந்த காமராஜர், பிரதமர் இந்திராவிடம் சிறுபான்மை ஓட்டு வங்கி கணக்கை சொல்லி அப்படியொரு தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தார்.
இதனால் வெகுண்டு எழுந்த இந்து அமைப்புகள் 1966 நவம்பர் 7 அன்று போராட்டம் செய்தார்கள்,அறவழியில் . சங்கராச்சாரியர் உள்ளிட்ட பலர் இதன் பொருட்டு உண்ணா விரதம் மேற்கொண்டனர்.
அப்போது ஜன சங்கம் சார்பில் டில்லியில் இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் லட்சக்கணக்கானவர்கள் திரளும் போராட்டத்தை நடத்தினார்கள். இதில் 10,000 ஆயிரம் சட்டம் படித்த வழக்கறிஞர்கள் அடுங்குவர், அங்கே திரண்டவர்கள் ஆத்திரத்தில் அருகில் இருந்த காமராஜரின் வீட்டைத் தாக்கினார்கள். தீயிட்டுக் கொளுத்தினார்கள். அப்போது அங்கே காமராஜர் உள்ளே ஓய்வில் இருந்தார். காமராஜரை வெளியே விடாமல் பாதுகாத்தனர் அவரது உதவியாளர்களும், காங்கிரஸ் தொண்டர்களும், அவர்கள் தாக்கபட்டார்கள், அவர்கள் கையில் கிடைத்திருந்தால் காமராஜர் கொலை செய்யப்பட்டு இருப்பார் என அவரது நண்பர் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
இதனை பாராட்டி காமராஜருக்கு பாராட்டு விழ எடுத்தார் சொறியார் -
===========================================================
சேலத்தில் 11/12/1966 அன்று சொறியார் காமராசுக்கு வெற்றி விழா எடுத்தார், அங்கு பேசிய காமாரசு " என்னைய என் வீட்டை கொளுத்தினது பாபான்னும் rss இயக்கமும், இப்படி சொன்னது வேற யாரும் அல்ல காமாரசுதான், இதை கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாக 15/12/1966 அன்று "நவசக்தி" இதழில் விரிவாக வந்தது,
======================================================
நேதாஜி இல்லாத இந்தியா அல்லவா....எப்படி இருக்கும்
----------------------------------------------------------------------------
அதிகாரத்தில் உள்ள ஒருவர் தும்மினால் செய்தி, இருமினால் செய்தி, ஏனென்றால் அனைவரின் பார்வையும் அவர்கள் மீது இருக்கும், இன்று அவர்கள் செய்வது நாளை வரலாறு , எதையும் பகுத்தாயும் அறிவு இல்லாமல் கல்வி கண் திறந்தார், கக்கனுக்கு வெட்டி வாங்கி கொடுத்தார் என்று மக்களை முட்டாள் ஆக்கும் செயல்கள்,
கள்ளநோட்டு குறித்து சட்டசபையில் நடந்த விவாதத்தில் ஒரு முதலமைச்சராக ஒரு சமாளிப்பு பதிலை கூட சொல்லவில்லை வாய்மூடி மவ்நியாக நின்றார் காமராஜர் - அதை இப்போது பேசினால் ஜாதி மதம் சாயம் பூசுவது,
அப்பறம் ஏன் வேலைக்காரன் கட்டின முல்லைபெரியாரை சொல்லி பெருமை படாமல் ஆங்கிலேயர் ஆட்ச்சியின் கொடுமையாக படிக்கிறோம்...ஓ ஆங்கிலேயர்கள் இங்கு இல்லையா...அவர்கள் ஒட்டு தேவை இல்லை....ஓகே
==========================================================

BY : பகலவன் வாண்டையார் தேவர்

Wednesday, July 22, 2015

ஒரே நாளில் வெளியாகும் மூன்று திலகங்களின் படம்

விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் ‘இது என்ன மாயம்’. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் அம்பிகா, ராதிகா உள்ளிட்டோர் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரொமான்டிக் மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ள இப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகவுள்ளது.

அன்றைய தினத்தில் விக்ரம் பிரபுவின் அப்பாவான பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’ படம் வெளியாகவுள்ளது. இதில் ஜெயம் ரவி, சூரி, திரிஷா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மேலும் அதே தினத்தில் விக்ரம் பிரபுவின் தாத்தாவும் பிரபுவின் அப்பாவுமான சிவாஜி நடித்த ‘கட்டபொம்மன்’ டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ் செய்யவுள்ளனர்.

ஒரே நாளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று திலகங்களின் படங்கள் வெளியாவது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைவரும் படிக்க வேண்டிய நூல்...


தேவர் இன முக்குலத்தின் அகமுடையார் பங்காளிகள் இரண்டாவது எழுச்சி மாநாடு

மன்மதன் வருடம் மார்கழி மாதம் 4ம் தேதி ஞாயிறுக்கிழமை சுபயோக ரேவதி நட்சத்திரத்தில் 20.12.2015 அன்று தமிழக தலைமை அகமுடையார் சங்கத்தின் இரண்டாவது அகமுடையார் எழுச்சி மாநில மாநாடு திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற இருக்கிறது.
தேவர் இனமே திரண்டுவா ....வீர மருது பாசரைக்கி , அனைத்து முக்குலத்து சொந்தங்களும் முழு ஆதரவு தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இன்று முதல் மாநாடு வேலைகள் ஆரம்பமாகின்றன.
தகவல் :- ஸ்ரீபதி.செந்தில்குமார், நிறுவனர், தமிழக தலைமை அகமுடையார் சங்கம்.
===============================================
இந்த பகலவன் வாண்டையார் தேவர் அய்யா ஸ்ரீபதி.செந்தில்குமார் - அவர்களுக்கு வைக்கும் கோரிக்கை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்ட வீரன் அழகுமுத்து சேர்வையையும், அகமுடையார் பெண் மருது INA வேலுநாச்சி - ஸ்ரீ ஜானகி தேவர் மற்றும் கருப்ப சேர்வை அவர்களையும் கவ்வரவபடுத்த படுத்த வேண்டும் - நன்றி
=======================================================
உரிமையை மீட்க்க முக்குலத்தில் உள்ள எவர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ மேற்கொள்ளும் அரசியல் சமூக நிகழ்சிகளுக்கு அனைத்து தேவர் இனமும் ஓன்று கூட வேண்டும்.....ஏன்னா நீ ஜெயிச்சா நான் ஜெயிச்ச மாறின்னு நினைத்தால் உள் வீட்டுசன்டைகள் ஒழியும்...
==============================================================
வெற்றிவேல் வீரவேல் - ஜெய் ஹிந்த்!

Thanks - Pagalavan vandayar thevar

Thevar bhavan- thanks:Brother R.Thyagu



சிவாஜி ஒரு சகாப்தம் :- THANKS - MARUTHU TV

விழுப்புரம் சின்னையாகணேசன் என்பது இவரது இயற்பெயர். சிவாஜி கணேசன் அவர்கள் முக்குலத்தோர் சமுகத்தை சார்ந்தவர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
‘சிவாஜி’ கணேசன், சின்னையா மன்றாயர் – ராஜாமணி அம்மாள் ஆகியோரு க்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவர் மனைவி பெயர் கமலா; மகன்கள், ராம்குமார் மற்றும் பிரபு; மகள்கள், சாந்தி மற்றும் தேன்மொழி.
‘சிவாஜி’ கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடைநாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனி ன் நடிப்புத் திறனை மெச்சிய ஈ.வே.ராமசாமி, அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத் திலும் நடித்துள்ளார். நல்ல குரல் வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத்திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார்.
இவர் நடித்த மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். பாசமலர், வசந்தமாளிகை போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி யிருந்தார்.
திரைதுறையில் பல்வேறு நட்சத்திரங்கள் மின்னினாலும் ஒரே சூரியனாக திகலும் சிவாஜி கனேசன் அவர்களுக்கு நமது நினைவஞ்சலி...

Sunday, July 19, 2015

மூவேந்தர் முன்னணி கழகம் சட்டசபை தேர்தலில் போட்டி: பொதுக்குழுவில் தீர்மானம்

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்தது.
பொதுக்குழு கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் எஸ்.ஆர்.தேவர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 750–க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் கட்சி தலைவராக டாக்டர் சேதுராமன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* தேசிய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் சாதிவாரி விவரங்களை வெளியிடாததை கண்டிக்கிறோம். தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் போன்ற பிரிவுகளை ஒருங்கிணைந்து தேவரினம் என்ற ஒரே தொகுப்பாக வெளியிட வேண்டும்.
* மாமன்னன் புலித்தேவன் 300–வது பிறந்த நாள் விழாவை செப். 1–ந் தேதி நெல்லையில் நடத்திட பொதுக்குழு அங்கீகரிக்கிறது.
* ஆர்.கே.நகர் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கிறது.
* 2016 சட்டமன்ற தேர்தலில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் அரசியல் அங்கீகாரம் பெறும் வகையில் தேர்தலில் போட்டியிடுவது என்றும், இதில் அனைத்து முடிவுகள் எடுக்க நிறுவன தலைவருக்கு அதிகாரம் வழங்குகிறது.
* பசும்பொன்னில் நிரந்தர அன்னதான மண்டபம் அக்டோபர் 30–ந் தேதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் திரளாக பங்கேற்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் மா.குருசாமி, செந்தில், சுப்பையன், முத்துசாமி, முத்துராமலிங்க தேவர், சுப்பிரமணியன், மணிவேல், ராமமூர்த்தி உள்பட பலர் பேசினார்கள்.