பாகுபலி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரையில் சினிமா
தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 7 பேர் போலீசில்
சரண் அடைந்தனர்.
பாகுபலி படத்திற்கு எதிர்ப்பு
அந்த படத்தில் அருந்ததியர் இனத்தை இழிவுபடுத்தும் வசனங்கள் இருப்பதாகவும், அவற்றை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.
மதுரை-நத்தம் சாலையில், ஆயுதப்படை குடியிருப்பு அருகே உள்ள தமிழ்-ஜெயா தியேட்டர்களில், ஒரு தியேட்டரில் பாகுபலி படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று காலை 11.20 மணிக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் இந்த தியேட்டருக்கு வந்தனர். திடீரென்று அவர்களில் இருவர் 2 பெட்ரோல் குண்டுகளை எடுத்து தியேட்டர் மீது வீசினார்கள்.
அதில் ஒரு குண்டு காம்பவுண்டு சுவர் பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அங்கு கிடந்த பேப்பர்கள் மட்டும் தீயில் எரிந்தன, வேறு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.
தப்பி ஓட்டம்
இதைக் கண்ட தியேட்டர் ஊழியர்கள் வெளியே ஓடி வந்து, பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை பிடிக்கச் சென்றனர். அதற்குள் அவர் கள் மோட்டார் சைக்கிள் களில் ஏறி தப்பி விட்டனர். அவற்றில் ஒரு மோட்டார் சைக்கிளின் நம்பரை மட்டும் தியேட்டர் ஊழியர்கள் குறித்து வைத்துக்கொண்டு, தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தல்லாகுளம் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு வீசியவர்கள் அந்த பகுதியில் ஒரு காகிதத்தை வீசிச் சென்றிருந்தனர். அதில், “தமிழக அரசே, தலித் சமூகத்தை இழிவுவாகப் பேசும் ‘பாகுபலி’ படத்தை தடை செய் புரட்சிப்புலிகள் இயக்கம், மதுரை மாவட்டம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார், தியேட்டர் ஊழியர்கள் தெரிவித்த மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அது கரும்பாலை பகுதியை சேர்ந்த ஒருவரின் வண்டி என்று தெரியவந்தது.
7 பேர் சரண்
இந்நிலையில், தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு மதியம் 2½ மணி அளவில் கரும்பாலை பகுதியை சேர்ந்த புரட்சிப்புலிகள் அமைப்பினர் சந்துரு, உலகநாதன், மூக்கன், முத்துமாணிக்கம், இந்திரன், நாகராஜன், அழகர் ஆகிய 7 பேர் வந்தனர்.
அவர்கள் தாங்கள்தான் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசியதாகக்கூறி, போலீசாரிடம் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி, 7 பேரையும் கைது செய்தனர்.

No comments:
Post a Comment