மட்டன் - ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
பெரிய வெங்காயம் - 6
தக்காளி - 6
பச்சை மிளகாய் - 6
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேசைக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 10
ஏலக்காய் - 15
அன்னாசி மொக்கு - 2
மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தயிர் - 1 கப்
எலுமிச்சை - ஒன்று
புதினா - ஒரு கப்
கொத்தமல்லி - ஒரு கப்
உப்பு - 3 மேசைக்கரண்டி
நெய்-5 ௩கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
ரம்பை இலை=
கலர் பொடி
செய்முறை
அரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் மெல்லிய நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள வாக்கில் கீறி வைத்துக் கொள்ளவும்.
புதினா கொத்தமல்லி தழைகளை கழுவி வைக்கவும்.
கறியினை சுத்தம் செய்து மஞ்சத் தூள் போட்டு கழுவி வைக்கவும்
அதில் தயிர் பாதி இஞ்சி, பூண்டு விழுது மிளகாய் தூள் கிலரி வைக்கவும்
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு போட்டு பொரிய விடவும். உடனே நறுக்கின வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கீறின பச்சை மிளகாய் போட்டு 3 நிமிடம் வதக்கவும். பிறகு நறுக்கின வெங்காயம் தக்காளி, கறியை போட்டு வதக்கவும். தக்காளி நன்கு வதக்க வேண்டும்.
புதினா கொத்தம்ல்லி போட்டு வதக்க வேண்டும்.
இதனுடன் கறி துண்டங்களைப் போட்டு மசாலா கறி துண்டங்களை சேரும்படி நன்கு பிரட்டி விடவும். அதில் ரம்பை இலை தயிர் கரம் மசாலா சேர்த்து அதிக தீயில் வைத்து கிளறவும்.
பிறகு 6 கப் தண்ணீர் சேர்த்து கலர் பொடி உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி மூடி விடவும்.
சுமார் 15 நிமிடம் கழித்து, கொதித்து வாசனை வந்ததும் அரிசியை களைந்து போட்டுக் கிளறி விடவும்.
பரிமாறும் அளவு 7நபர்களுக்கு
=============================================================
ஆம்பூர் பிரியாணி -2
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி -ஒருகிலோ
ஆட்டுகறி -ஒன்றரைகிலோ
தக்காளி -அரைக்கிலோ
வெங்காயம் -அரைக்கிலோ
பச்சைமிளகாய் -200கிராம்
பட்டை -ஒருதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -3
ரம்பைஇலை ௩துண்டு
அன்னாசிப்பூ -ஒன்று
ஜாதிப்பூ -ஒன்று
மல்லி -ஒருகட்டு
பொதினா -ஒருகட்டு
எண்ணெய் -100கிராம்
நெய் -100கிராம்
தயிர் -250கிராம்
இஞ்சிபூண்டு விழுது -300கிராம்
எலுமிச்சை பழம் -இரண்டு
உப்பு -ஒருகரண்டி
செய்முறை
வெங்காயம் தக்காளியை வெட்டிக்கொள்ளவும்
கறியை சுத்தம் செய்து துண்டுகள் போட்டு தயிரில் கால்மணி நேரம் ஊறவைக்கவும்
அரிசியை ஒன்றுக்கு ஒன்று தண்ணீர் ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் இலை போட்டு தாளித்து வெங்காயம் தக்காளி போட்டு வதக்கி கறியை போட்டு கிளறி இஞ்சி பூண்டு பொதினா மல்லிக்கீரையை போட்டு கிளறி இரண்டுகப் தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேகவைக்கவும்
கறி வெந்ததும் வேகவைத்த அரிசியை போட்டுக்கிளறி பத்து நிமிடம் தம்மில் போட்டு வெந்ததும் அடுப்பை அனைக்கவும்
==============================================================
முட்டை பிரியாணி
தேவையான பொருட்கள்
முட்டை -5
பிரியாணி அரிசி -அரைகிலோ
வெங்காயம் -இரண்டு
தக்காளி -மூன்று
இஞ்சி பூண்டு விழுது -இரண்டுகரண்டி
மிளகாய்தூள் -ஒருகரண்டி
கரம்மசாலாதூள் -ஒருகரண்டி
மஞ்சள்தூள் -ஒரு டேபிள்ஸ்பூன்
தயிர் -150கிராம்
தேங்காய்பால் -150கிராம்
உப்பு -இரண்டுடேபிள்ஸ்பூன்
எண்ணெய்+நெய்-100கிராம்
பட்டை சிறியதுண்டு
கிராம்பு ,ஏலக்காய் -தலா இரண்டு
செய்முறை
அரிசியை உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும்
முட்டையை வேகவைத்து தோல்களை உரித்துக்கொள்ளவும் அதை லேசாக கீறிக்கொள்ளவும்
வெங்காயம் தக்காளியை வெட்டிக்கொள்ளவும்
பச்சைமிளகாயை இரண்டாக கீறிக்கொள்ளவும்
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு மிளகாய்தூள் மஞ்சள்தூள் மசாலாதூள் போட்டு கிளறி முட்டையை போட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும் பின் தேங்காய்பால் தயிர் ஊற்றி ஒருகப் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் வேகவிடவும் பின் உதிர்த்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறி தம்மில் போடவும் கடைசியில் எல்லாம் சேர்ந்தால் போல் வந்ததும் மேலே மல்லிக்கீரை தூவி அடுப்பை அனைக்கவும்
பரிமாறும் அளவு 3நபர்கள்
==============================================================
வேலூர் பிரியாணி
சுவைமிக்க இந்த பிரியாணியைப் பார்த்தாலே பரவசம்! ருசித்தாலோ நவரசம்!
தேவையான பொருட்கள்
ஆட்டிறைச்சி 1 கிலோ
வெங்காயம் 1/4 கிலோ
தக்காளி 200 கிராம்
இஞ்சி விழுது 50 கிராம்
பூண்டு விழுது 50 கிராம்
பச்சை மிளகாய் 4
மிளகாய்த் தூள் 4 தேக்கரண்டி
தயிர் 200 மிலி
பட்டை 1 துண்டு
கிராம்பு 4
ஏலக்காய் 2
கொத்தமல்லித் தழை நறுக்கியது 6 மேஜைக்கரண்டி
புதினா 4 தேக்கரண்டி.
எலுமிச்சை 1 பழத்தின் ஜூஸ்
ரிஃபைண்டு கடலை எண்ணெய் 1/4 லிட்டர்
அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாசுமதி) 1 கிலோ
உப்பு தேவையான அளவு
செய்முறை
ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணைய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும்வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.
இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.
மிளகாத்தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.
தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி ,புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் ப்ரஷர் குக் செய்ய வேண்டும்.
அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.
அதில் அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேகவிட வேண்டும்.
எலுமிச்சை சாறு விடுவதால் அரிசி உடையாது.
இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சை சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணைய் மேலே வரும்வரை சூடாக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் சன்னமாக கிளற வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில் ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும்.
தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம்.
'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.
அப்புறம் என்ன, வெட்ட வேண்டியதுதான்!
குறிப்பு:
'மைக்ரோவேவ் அவன்' உள்ளவர்கள் 'தம்' போடுவதற்கு பதிலாக, மைக்ரோவேவ் பாத்திரத்தில்,கலவையைப் போட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் 'குக்' செய்தால் சுவையான, நறுமணம் கமழும் வேலூர் பிரியாணி தயாராகி விடும்.
பரிமாறும் அளவு 8 பேர்
==============================================================
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி
தேவையான பொருட்கள்
சிக்கனுடன் பிரட்டி வைக்க:
சிக்கன் - 1/2கிலோ
மஞ்சள்த்தூள்- 1ஸ்பூன்
தயிர்- 1/2கப்
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
பமிளகாய்- 5 (இரண்டாக நறுக்கி போடவும்)
இஞ்சி பூண்டு விழுது- 1 1/2ஸ்பூன்
கரம் மசாலாத்தூள்- 1ஸ்பூன்
எலுமிச்சை - 1
உப்பு- தேவைக்கு
பொடியாக நறுக்கிய புதினா, கொ.மல்லி - 2ஸ்பூன்
கரம் மசாலா:
ஷாஜீரா - 25கிராம்
பட்டை- 25கிராம்
ஏலக்காய்- 25கிராம்
மிக்ஸீயில் அரைத்து தேவைக்கு பயன்படுத்தவும்
பாஸ்மதி அரிசி- 1/2 கிலோ
ஷாஜிரா- 1ஸ்பூன்
பட்டை- 1
கிராம்பு- 2
ஏலக்காய்- 4
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 4கரண்டி
பல்லாரி- 3
எலுமிச்சை- 1
கேசரி மஞ்சள் கலர்- 1சிட்டிகை
செய்முறை
அகல சட்டியில் சிக்கன்னுடன் பிரட்டி வைக்க கூடிய பொருட்களை எல்லாம் சேர்த்து விரவி 1மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீட்டமாக அரிந்த வெங்காயம் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஷாஜீரா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும் கொதி வரும் பொது அரிசியை சேர்க்கவும்.
அரிசி 1/2பாகம் வெந்தவுடன் வடிகட்டி உதிரியாக சாதத்தை எடுக்கவும்.
சிக்கன் பிரட்டி வைத்த அதே பாத்திரத்தில் சிக்கன் கலவைக்கு மேலே பொறித்த வெங்காயத்தை தூவவும். சுற்றி வரை பாதி எண்ணெய் ஊற்றவும். அதன் மேலே சாததைய் போடவும் மேலே மீதி பொறித்த வெங்காயம் எண்ணெய்யை சுற்றி வரை தூவவும்.
1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
கேசரி கலர்வுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றாவும்.
எலுமிச்சை சாரை சுற்றிவரை பிழிந்து விடவும்
பிறகு நன்றாக இறுக்கமான மூடி போட்டு அதிக தணலில் வைக்கவும்.
ஆவி வெளி வரும் பொது குறைந்த தணலில் 15நிமிடம் வைத்து இறக்கவும்.
மூடிக்கு மேலே எதாவது கனமான பொருளை வைத்தால் ஆவி அதிகம் வெளி போகாமல் தம்மில் இருக்கும்.
பரிமாறும் அளவு 4members
============================================================
மட்டன் பிரியாணி
அரிசி & 1 கிலோ
மட்டன் & 1 கிலோ
இஞ்சி & 40 கிராம்
பூண்டு & 20 கிராம்
லவங்கம் & 10 கிராம்
கொத்தமல்லி & 1 கட்டு
புதினா & 1 கட்டு
எலுமிச்சைப்பழம் & 2
தயிர் & கால் கப்
நெய் & கால் கிலோ
ஏலக்காய், பட்டை, சீரகம், கிராம்பு & 10 கிராம்
பச்சை மிளகாய் & 100 கிராம்
வதக்கிய வெங்காயம் & 50 கிராம்
செய்முறை : மட்டனை கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். புதினா, கொத்தமல்லி, பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயம் மற்ற எல்லா மசாலாப் பொருட்களையும் அரைத்து மட்டனுடன் கலந்துவிடுங்கள். இதனுடன் தயிர் சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவையை அரைமணி நேரம் வைத்துவிடுங்கள். இதற்கிடையில் ரெண்டு லிட்டர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைத்து அரிசியைப் போடுங்கள். பாதி வெந்த சாதத்தை ரெண்டு இழைகளாக மட்டனில் கலந்துவிடுங்கள். மிச்சமுள்ள சாதத்தையும் மொத்தமாக மட்டனுடன் கலந்துவிடுங்கள். ஒரு கப் வெந்நீரில் நெய்யை கலந்து பிரியாணி மீது தெளிக்கவும். பிரியாணி பாத்திரத்தை தட்டுப்போட்டு மூடிவிடுங்கள். அடுப்பில் 20 நிமிடம் வேக வைத்து எடுத்தால் பிரியாணி ரெடி! எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து பரிமாறலாம்.
------------------------------------------------------------------------------------------------
நாட்டுக் காய்கறி பிரியாணி
தேவையானவை:
கத்தரிக்காய், அவரைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், உருளை போன்ற காய்கறிகள்(எல்லாம் சேர்த்து) - ஒரு கிலோ
பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ
வெங்காயம் - 400 கிராம்
தக்காளி - 400 கிராம்
புதினா - ஒரு கட்டு
கொத்துமல்லி இலை - ஒரு கட்டு
தயிர் - ஒரு கப்
இஞ்சி, பூண்டு (அரைத்தது) - 100 கிராம்
பட்டை - 2
லவங்கம் - 2
பிரிஞ்சி இலை - 2
பச்சை மிளகாய் - 8
தனியா தூள் - 2 குழிக்கரண்டி
செய்முறை:
* காய்கறிகள், தக்காளி, புதினா, கொத்துமல்லி இலை போன்றவற்றை நறுக்குங்கள்.
* குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் இலை தாளித்து புதினா, கொத்து மல்லி இலை, இஞ்சி - பூண்டு அரைத்ததையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
* அதிலேயே தக்காளி, வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்குங்கள்.
* அத்துடன் பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறுங்கள்.-
* அதன் பின்பு, அரிசி, மல்லித்தூள் சேர்த்துக் கிளறி விடுங்கள்.
* இப்போது தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* குக்கரில் இருந்து 3 விசில் சத்தம் வந்ததும் அடுப்பிலேயே 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடுங்கள்.
அவ்வளவு தான்...நாட்டுக் காய்கறி பிரியாணி ரெடி.
============================================================
இடியாப்ப பிரியாணி
தேவையான பொருட்கள்
இடியாப்பம் -10
கொத்துக்கறி -200கிராம்
வெங்காயம் -1
தக்காளி -2
தேங்காய் பால் -1கோப்பை
இஞ்சி பூண்டு விழுது -1கரண்டி
கேரட் -2
வேகவைத்த பட்டாணி -ஒரு கோப்பை
கரம்மசாலாதூள் -1கரண்டி
மிளகாய்தூள் -1கரண்டி
மஞ்சள்தூள் -ஒருடேபிள்ஸ்பூன்
முட்டை -இரண்டு
எண்ணெய் -5கரண்டி+3கரண்டி
உப்பு -தேவையான அளவு
செய்முறை
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கறியை இஞ்சி பூண்டு மசாலாதூள் போட்டு வேகவைத்துக்கொள்ளவும்
கேரட்டை துருவியில் துருவிக்கொள்ளவும்
இடியாப்பத்தை தேங்காய் பாலை ஊற்றி உதிர்த்துக்கொள்ளவும்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை போட்டு வதக்கவும் பின் அதில் கேரட் பட்டாணியை போட்டு இரண்டு நிமிடம் போட்டு வதக்கவும் பின் மிளகாய்தூள் மஞ்சள்தூளை போட்டு கிளறி கறியை போட்டு மூன்று நிமிடம் கழித்து உதிர்த்து வைத்த இடியாப்பத்தை போட்டு நன்கு கிளறி முட்டையை தனியாக வேறு சட்டியில் ஊற்றி பொரித்து அதன் மேலே போட்டு மல்லிக்கீரை தூவி சூடாக பரிமாறவும்
==============================================================
தம் கறி பிரியாணி
தேவையான பொருட்கள்
கறி - 1 கிலோ
பாஸ்மதி அரிசி - 1 கிலோ ( 7 கப் )
தண்ணீர் - 7 கப்
நெய் - 100 கிராம்
எண்ணெய் - 200 கிராம்
பட்டை - 2
ஏலக்காய் - 4
கிராம்பு - 3
ரம்பயிலை - 1
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
பல்லாரி - 1/2 கிலோ
தக்காளி - 1/4கிலோ
கொ.மல்லி - 1 பெரிய கட்டு
புதினா - 1 கட்டு
உப்பு - தேவைக்கு
கேசரி கலர் - கொஞ்சம்
எலுமிச்சை - 1
செய்முறை
பல்லாரி, தக்காளி கொ.மல்லி, புதினாவை நறுக்கி வைக்கவும்.
கறியுடன் மிளகாய்த்தூள், உப்பு, தயிர் போட்து விரவி வைக்கவும்.
தாளிக்க:
குக்கரில் நெய், எண்ணெய், ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பயிலை, போடவும். 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு கொஞ்சம் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தயிர், சேர்த்து தாளிக்கவும்.
2 நிமிடம் கழித்து மீதியிருக்கும் வெங்காயம், தக்காளி, கொ.மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
குக்கர் மூடி போட்டு 20 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
பின்பு ஒரு அகல பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன்
குக்கரில் உள்ள கறியை தவிர மற்றதை தண்ணீரில் சேர்க்கவும்.
பின்பு அரிசியை சேர்க்கவும். இதோடு வேக வைத்த கறி, உப்பு சேர்த்து 2 நிமிடம் அதிக தணலில் வைக்கவும்.
எலுமிச்சை சாறு, கேசரி கலர் கலந்து சேர்க்கவும்.
ஒரு முறை கிண்டி விட்டு பிறகு 15 நிமிடம் குறைந்த தணலில் வைத்து இறக்கவும்
குறிப்பு:
பழய அரிசியாக இருந்தால் 5 நிமிடம் ஊற வைக்கவும்.
பரிமாறும் அளவு 6 members
============================================================
மட்டன் பிரியாணி - 2
தேவையான பொருட்கள்
மட்டன் - முக்கால் கிலோ
பிரியாணி அரிசி - ஒரு கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
எண்ணெய் - 400 மி.லி.
ஏலக்காய் - 5
கிராம்பு - 7
பட்டை - ஒரு அங்குலத் துண்டு
பெரிய வெங்காயம் - 300 கிராம்
தக்காளி - அரைக் கிலோ
பச்சை மிளகாய் - 8
புதினா, மல்லி - ஒரு கப்
எலுமிச்சம்பழம் - 2
தயிர் - ஒரு கப்
கறி மசாலா - 5 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
டால்டா - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் இஞ்சியையும் பூண்டையும் சுத்தம் செய்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீள வாக்கில் அரிந்து கொள்ளவும். தக்காளி மற்றும் புதினா, மல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசியை சுத்தம் செய்து, தண்ணீர் விட்டு ஊறவிடவும். மட்டனை தேவைகேற்ப நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
பிறகு குக்கரில் கறியைப் போட்டு, அதனுடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுதினை சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து வேகவைக்கவும். கறி வெந்தவுடன் அடுப்பு தீயைக் குறைத்துவிடவும்.
பின்பு வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் சிறிது போடவும்.
பிறகு ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும். வதங்கியபிறகு பச்சை மிளகாய், மல்லி, புதினா போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர், கறி மசாலா, தனியாத் தூள், மிளகாய்த்தூள் போட்டு வேக வைத்த கறியைக் கொட்டி எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும்.
ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து அடுப்பை குறைந்த தீயில் எரிய விடவும்.
ஒரு கிலோ அரிசி வேகும் அளவிற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பாத்திரத்தின் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பை எரிய விடவும்.
தண்ணீர் கொதி வந்த உடன் கேசரிபவுடர், உப்பு சேர்க்கவும். ஊற வைத்த அரிசியை களைந்து கொதிக்கும் நீரில் போடவும்.
கஞ்சி இல்லாமல் சோற்றினை முக்கால் வேக்காட்டிற்கு வடித்துவிடவும். இந்த சோற்றுடன் வேக வைத்துள்ள கறி மசாலாவைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
பின்பு மேலே ஒரு பேப்பரைப் போட்டு ஆவி வெளியேறாமல் மூடி விடவும்.
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து டால்டாவை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் எலுமிச்சை சாற்றையும் சோற்றில் கொட்டி நன்கு கிளறிவிட்டு இறக்கிவிடவும்.
============================================================
சிக்கன் பிரியாணி (எளிய முறை)
தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி - 500 கிராம்
சிக்கன் - 500 கிராம்
நெய் - 75 கிராம்
எண்ணெய் - 100 கிராம்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
பல்லாரி - 2
தக்காளி - 3
மிளகுப்பொடி - 10 கிராம்
சீரகப்பொடி - 10 கிராம்
மஞ்சப்பொடி - அரை தேக்கரண்டி
கலர் பவுடர் - இரண்டு சிட்டிகை
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
தேங்காய்பால் - 250 கிராம்
பட்டை கிராம்பு - ஒரு தேக்கரண்டி அரைத்தது
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லி - கொஞ்சம்
செய்முறை
முதலில் அரிசியை சாதம் வடிப்பது போல் முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடித்து எடுத்து கொள்ள வேண்டும்.
வடிக்க போகும்முன் கலர் பவுடர், முந்திரி இரண்டையும் போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய்யும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
பிறகு கோழிக்கறியை போட்டு, 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
பிறகு தேங்காய் பால் 250 மில்லி தண்ணீர் 100 மில்லி விட்டு நன்றாக வேக வைக்கவும்.
இது திக்காக வந்ததும், வடித்த சாதத்தை சிறிது சிறிதாக போட்டு நன்றாக கலந்து விட்டு 5 நிமிடம் தீயைக் குறைத்து மூடி வைத்து வேக விடவும்.
பிறகு எடுத்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
==============================================================
தில்குஷ் பிரியாணி
தேவைப்படும் பொருட்கம்:
* பிரியாணி அரிசி - 2 கப்
* ஆட்டிறைச்சி - 500 கிராம்
* நெய் - முக்கால் கப்
* நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 கப்
* கிராம்பு - 12
* ஏலக்காய் - 7
* கருவாப்பட்டை - 6 துண்டுகம்
* பூண்டு அரைப்பு - 1 மேஜைக்கரண்டி
* இஞ்சி அரைப்பு - அரை மேஜைக்கரண்டி
* மல்லி பொடி - அரை மேஜைக்கரண்டி
* மிளகாய்த்தூம் - அரை தேக்கரண்டி
* தக்காளித்துண்டுகம் - அரை கப்
* புளிக்காத தயிர் - கால் கப்
* தேங்காய் அரைப்பு - கால் கப்
* வற்றக்காய்ச்சிய பால் - கால் கப்
* அரைத்த கிஸ்மிஸ் - 1 மேஜைக்கரண்டி
* அரைத்த முந்திரி பருப்பு - 1 மேஜைக்கரண்டி
* உப்பு - தேவைக்கு
* மல்லி இலை - அரை கப்
* புதினா இலை - கால் கப்
* நேராகக் கீறிய பச்சை மிளகாய் - 4
* எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
குருமா தயார் செய்யும் விதம்:
முக்கால் கப் சூடான நெய்யில், பெரிய வெங்காயத்தைக் கொட்டி இளம் சிவப்பு நிறத்தில் வெந்து போகாத அளவுக்கு வறுக்கவும்.
லேசாக தீயை எரிய விட்ட படி கிராம்பு, ஏலக்காய், கருவாப்பட்டை, இஞ்சி- பூண்டு அரைப்பு, மல்லித்தூம், மிளகாய்த்தூம் ஆகியவைகளை அதில் ஒன்றன் பின் ஒன்றாகக் கொட்டி கிளறுங்கம். அதில் தக்காளி துண்டு களையும் சேர்த்து வறுக்கவும்.
நெய் தெளிந்து வரும் போது இறைச்சியை சிறு துண்டுகளாக்கி அதில் சேருங்கம். தேங்காய் அரைப்பு முதல் உப்பு வரையும்ள அனைத்து பொருட்களையும் தயிரில் கலக்குங்கம். இறைச்சி லேசாக வெந்து வரும் போது இதனை ஊற்றிவிடுங்கம். தேவைக்கு தண்ணீரும் சேர்த்திடுங்கம்.
பாத்திரத்தை மூடி, பாத்திரத்தின் அடியில் பிடித்துவிடாத அளவுக்கு கிளறி விட்டு வேகவையுங்கம். இறைச்சி வெந்து வரும்போது மல்லி இலை, புதினா இலை, பச்சை மிளகாய் போன்றவைகளை சேர்த்துவிடலாம்.
அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்னால் எலுமிச்சை சாறை சேர்த்திடுங்கம். குருமாசாறு அதிகம் கெட்டியாகிவிடாத அளவில் இருக்கவேண்டும்.
சாதம் தயாராக்கும் விதம்:
தண்ணீரை கொதிக்கவிடுங்கம். கொதிக்கும் போது கழுவிய அரிசியைக் கொட்டி, சாதாரண சாதம் வேகவைப்பது போல் தயாராக்குங்கம். சாதம் பொடிந்து போகாமல் பாதி பக்குவத்திற்கு வேகும் போது, சிறிதளவு உப்பும், எலுமிச்சை சாறும் கலந்து சாதத்தை வடித்தெடுங்கம்.
சூடான குருமாவில் இருந்து ஒரு கப் சாறு எடுத்து மாற்றிவைக்கவும். அடிப்பகுதி கெட்டியான பாத்திரத்தில் நெய் பூசுங்கம்.
அதன் மேல் சிறிதளவு சாதத்தைக் கொட்டுங்கம். அதற்கு மேல் இறைச்சி துண்டுகளை எடுத்துப்போடுங்கம். அதற்கும் மேல் சாதத்தைக்கொட்டிவிட்டு, சாறினை ஊற்றுங்கம். அதற்கு மேல் மீதம் இருக்கும் சாதத்தைக் கொட்டுங்கம்.
சிறிதளவு ஜிலேபி கலர் பொடியை பாலில் கலக்கி பிரியாணிக்கு மேல் பகுதியில் தெளித்துவிடவும். நணைந்த துணி ஒன்றினை பிரியாணியின் மீது விரித்துப்போடுங்கம். அதனை மூடி விட்டு, பாத்திரத்தின் மேலும், கீழும் தீக்கனல் போட்டு வேகவிடுங்கம்.
அரை மணி நேரத்தில் டில்குஷ் பிரியாணி ரெடி.
============================================================