Yesterday one picture with some naked people went viral in Indian social media accused that police has stripped a dalit family and made them naked. But in real, this family conducted naked protest against police to take their complaint for en query.
ஆனால் இதையெல்லாம் கூர்ந்து கவனிக்கும் பொறுமை இல்லாத சமூக ஊடகங்கள் காவல்துறையின் அட்டூழியம் குறித்தும், தலித்துகள் மீதான பழிவாங்கல் குறித்தும் பேசின. ஊடகங்களுக்கும் பொறுமை என்பதே இல்லாமல் என்ன நடந்தது என்று விசாரிக்காமல் டிஆர்பிக்காக இந்த சம்பவம் குறித்து செய்தியை வெளியிடத்துவங்கின.
இந்த சம்பவம் குறித்த காணொளியின் முழுமையையும் பார்க்கும்போது அதில் சம்பந்தப்பட்ட தம்பதிகள் தமது உடைகளை தாமே களைந்து கொண்டனர். அங்கே இருந்த காவலர்கள் இவர்களின் ஆடைக்களைவை தடுத்து நிறுத்த முயன்றனர். இந்த காணொளியில் இருந்த தலித் தம்பதியினர் காவல் நிலையத்தில் அளித்த தங்களின் புகாரைக் காவலர்கள் பதிய மறுத்ததை எதிர்த்து தங்களின் ஆடைகளை அவர்களே களைந்ததாக உள்ளூர் செய்தித்தாளான அமர் உஜாலா செய்தி வெளியிட்டிருந்தது.
தற்போது முழு உண்மையும் வெளியாகியுள்ளது, காவல்துறையினர் தங்கள் புகாரை விசாரணைக்கு எடுக்கவில்லை என்று இந்த தம்பதியினர் தாங்களாகவே ஆடைகளை களைந்து நிர்வாணமாகி போராடியுள்ளார்கள்.
கீழே உள்ள வீடியோவில் பெண்ணின் உடையை கழற்றுவது அந்த குடும்பத்தை சேர்ந்தவரே போலிஸ் அல்ல, இந்த வீடியோ இன்று தான் வெளியானது, நேற்று வீடியோவின் ஒரு சில காட்சிகளை மட்டுமே வெளியிட்டு போலிஸ் மீது குற்றம் சாட்டினார்கள்
http://www.satrumunnews.com/2015/10/blog-post_9.html#sthash.JsXyCtN9.dpuf
No comments:
Post a Comment