Wednesday, December 11, 2013

இணைந்து செயல்பட்டால்தான் முழு வெற்றி கிடைக்கும்: கருப்பசாமிபாண்டியன்

திருநெல்வேலி மாவட்டத்தில் திமுகவினர் இணைந்து செயல்பட்டால்தான் மக்களவைத் தேர்தலில் முழு வெற்றியைப் பெற முடியும் என, மாவட்டச் செயலர் வீ.கருப்பசாமி பாண்டியன் கூறினார். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், டிசம்பர் 27, 28-ஆம் தேதிகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தொடர்பான திருநெல்வேலி மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவர் கிரஹாம்பெல் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமிபாண்டியன் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் மக்களவைத் தேர்தலில் முழு வெற்றியைப் பெற முடியும். ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். திமுகவைபோல வெற்றி, தோல்வியை வேறு எந்தக் கட்சியும் சந்தித்ததில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான அணிதான் பலமான கூட்டணி. அதில் எந்த சந்தேகமும் இல்லை. தனித்துப் போட்டியிட்டால் 35 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். கூட்டணி அமைத்து சந்தித்தால் நிச்சயம் 25 தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என தலைமையை திருநெல்வேலி மாவட்ட திமுக வலியுறுத்தும். தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் கட்சித் தேர்தலில் தலைமை அறிவிக்கும் எந்தப் பொறுப்பாக இருந்தாலும் ஏற்று பணி செய்வேன் என்றார் அவர். ஏற்காடு தொகுதியில் திமுகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது, ஏற்காடு தொகுதியில் 4 தினங்கள் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா. ஆவுடையப்பன், டி.பி.எம். மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மாவட்டப் பொருளாளர் ஷேக்தாவூது, மாவட்ட துணைச் செயலர்கள் நவநீதகிருஷ்ணன், உமாமகேஷ்வரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ. பிரபாகரன், கா. முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞரணிச் செயலர் எம்.எஸ்.எஸ். ஜார்ஜ்கோசல், மாநகர இளைஞரணிச் செயலர் எஸ்.வி. சுரேஷ், மாநகர் மாவட்டச் செயலர் மு. அப்துல்வஹாப், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், மாநில மகளிரணி துணைச் செயலர் ராஜம்ஜான், தணிக்கைக்குழு உறுப்பினர் சுப. சீதாராமன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் போர்வெல் கணேசன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் ஜோசப் ஆரோக்கியராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அப்துல்காதர், பத்தமடை பரமசிவம், ஒன்றியச் செயலர்கள் ராமையா, தங்கபாண்டியன், ஆ.க. மணி, பேரூராட்சித் தலைவர்கள் க. இசக்கிபாண்டியன், ஆர். லெட்சுமணன், நகரச் செயலர்கள் கே.கே.சி. பிரபாகரன், சு. முருகன்சுப்பிரமணியன், எஸ்.பி. மாரியப்பன், எம். செல்வராஜ், விவசாய அணி துணை அமைப்பாளர் துர்கைதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் இரா. ராஜகுமாரி, ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். .

"தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது'.

ஆரம்பத்தில் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்தக் கட்சியின் செயல்பாட்டால் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. அதிமுக திமுகவுக்கு மாற்றாக தேமுதிக இருக்க வாய்ப்பு இல்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு அசோக்நகரில் உள்ள இல்லத்தில் தினமணிக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: தேமுதிகவில் இருந்து விலகியது திடீர் முடிவு இல்லை. திட்டமிட்டு எடுத்த முடிவுதான். கடந்த ஞாயிற்றுக்கிழமையே (டிச.8) விலகல் முடிவை அறிவிக்க நினைத்திருந்தேன். தேர்தல் முடிவுகள் வெளியான நாள் என்பதால் அன்று அறிவிக்கவில்லை. தேமுதிகவில் இருந்து விலகுவது தொடர்பாக விஜயகாந்த்திடம் நான் எதுவும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் விலக வேண்டாம் என்று அவர் நெருக்குதல் அளிப்பார். அதனால் சொல்லவில்லை. பதவியை ராஜிநாமா செய்த பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவில்லை. தற்போது எனக்கு வயது 77. சிந்தனையின் செயல்பாடு சிறப்பாக இருந்தாலும், உடல் நலம் ஒத்துழைக்கவில்லை. மருத்துவரும் ஓய்வு எடுப்பது அவசியம் என்று அறிவுரைத்துள்ளார். அதன் காரணமாகவே ஓய்வை அறிவித்துள்ளேன். எனக்கு அடுத்து வயதில் மூத்தவராக கருணாநிதி உள்ளார். அவரால் உழைக்க முடிகிறது. வாழ்த்துகள். தேமுதிகவில் இருந்து விலகியதற்கு உடல் நலத்தைத் தவிர வேறு காரணம் ஒன்றுமில்லை. எனக்கு அங்கு அவமரியாதை ஒன்றுமில்லை. ஏற்காடு இடைத்தேர்தல், தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று நான் கூறினேன். ஏற்காடு முடிவை ஏற்றனர். ஆனால் தில்லியில் போட்டியிடுவது என்று முடிவு எடுத்தனர். அப்படி ஏன் முடிவு எடுத்தனர் என்று தெரியவில்லை. ஒரு கருத்தைச் சொல்லலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் தலைவரின் முடிவுதான். தேமுதிகவில் இருந்து நான் விலகியதால் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லமுடியாது. தேமுதிகவின் தலைவராக விஜயகாந்த் உள்ளார். அவர் கட்சியை நடத்துவார். ஆலந்தூர் மக்கள் என்னைவிட இளைஞரான ஒருவரை தங்கள் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பர். சுமையை ஓரளவுக்குத்தான் தாங்க முடியும். முடியவில்லை என்றால், விலகி பிறகுக்கு வழிவிட வேண்டும். அதிமுக உள்பட எந்த இயக்கத்துக்கும் போகப்போவதில்லை. ஓய்வு என்று அறிவித்துவிட்ட பிறகு வேறு எங்கும் செல்ல மாட்டேன். அதிமுக எதிர்ப்பு சரியில்லை: அதிமுக - தேமுதிக கூட்டணிக்கு இரவுபகலாக பாடுபட்டதில் எனக்கும் பங்கு உண்டு. தேர்தலில் அமோக வெற்றிபெற்று அதிமுக ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சி வரிசையில் தேமுதிக அமர்ந்தது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் அதிமுக கூட்டணியால் வந்தோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று கூறி, அதிமுகவை தேமுதிக எதிர்ப்பதால் அது திமுகவுக்கே சாதகமாக அமையும். இதை கூறினால் அதை அவர்கள் ஏற்கவே இல்லை. இதுவே தேமுதிகவுக்கும் எனக்கும் ஏற்பட்ட ஆரம்ப பிரச்னை எனக் கொள்ளலாம். தேமுதிக மாற்று இல்லை: அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தேமுதிக இருக்க வாய்ப்பு இல்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிரான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணா வந்தார். அதன் பிறகு எம்ஜிஆர். வந்தார். அதுபோல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தேமுதிகவால் (விஜயகாந்த்) வரமுடியாது. ஆரம்பத்தில் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்தக் கட்சியின் செயல்பாட்டால் தேமுதிக மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. குடும்ப ஆதிக்கம்: குடும்ப அரசியல் எல்லாக் கட்சிகளிலும் இருக்கத்தான் செய்கிறது. எம்ஜிஆர் இருந்தபோது ஜானகியம்மாளை அரசியலுக்குள் கொண்டு வரவே இல்லை. குடும்பத்தினர் அரசியல் இருந்தாலும், முடிவுகள் எடுக்கும்போதும் குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதே தலைமையின் பண்பாகும். எம்ஜிஆர் தலைமை: எம்ஜிஆர் தலைமை எங்கே, விஜயகாந்த் தலைமை எங்கே... எம்ஜிஆரே எனக்கு எப்போதும் சிறப்பானவர் என்றார் அவர். எதிர்காலத்தில் தேமுதிகவே இருக்காது: அதிருப்தி எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் எதிர்காலத்தில் தேமுதிக என்ற கட்சியே இருக்காது என்று, அந்தக் கட்சியின் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராஜமாணிக்கம் (படம்) தெரிவித்தார். தேமுதிகவில் இருந்து அதன் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் விலகிவிட்டார். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், சேந்தமங்கலம் தொகுதி தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. சாந்தி ராஜமாணிக்கம் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியது: தேமுதிகவின் கூடாரம் இனி காலியாகும். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இன்னும் வெளியேறுவார்கள். தேமுதிகவில் யாருக்கும் மரியாதை இல்லை. அந்தக் கட்சியில் ஜனநாயகம் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவார் என நாங்கள் எதிர்பார்த்ததுதான். கட்சியின் மூத்த தலைவரான அவரது பேச்சைக் கட்சியில் யாரும் மதிப்பதில்லை. அவர் கட்சியில் புறக்கணிக்கப்பட்டார். ஐ.நா. சபையில் பேசும் அளவுக்குத் தகுதியுடைய பண்ருட்டி ராமசந்திரன் நல்ல தலைவர். மனம் நொந்து வெளியே வந்திருக்கார் என்றால், இது அவராக எடுத்த முடிவாக இருக்காது. அவர் விரட்டியடிக்கப்பட்டுதான் வெளியே வந்துள்ளார். இனி எப்படி தேமுதிக வளர்ச்சியடையும் என எண்ணிப் பார்க்க வேண்டும். இனி அந்தக் கட்சி வளர்ச்சியடையாது. உழைப்பவர்களுக்கு அங்கு மரியாதை இல்லை. குறிப்பாக, சொல்ல வேண்டுமென்றால், அந்தக் கட்சியில் உள்ள மூவர் அணிதான் கட்சியைச் சீரழிக்கிறது. அவர்களால்தான் 7 எம்எல்ஏ-க்கள் வெளியேறினர். இப்போது பண்ருட்டி ராமச்சந்திரனும் வெளியேறியுள்ளார். அவர் நல்ல நேரத்தில் நல்ல முடிவை எடுத்துள்ளார் என்றார் சாந்தி ராஜமாணிக்கம். .

Tuesday, December 10, 2013

நடிகர் மயில்சாமியை மிரட்டியவர் அடையாளம் தெரிந்தது


தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமியை மிரட்டியவரை போலீஸôர் கண்டறிந்தனர். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் மயில்சாமி, ஞாயிற்றுக்கிழமை மாலை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தாராம். அப்போது அவர் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாம்.அதில் பேசிய நபர், தான் போலீஸ் என்றும், அண்மையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஒரு கும்பலை பிடித்தபோது, அந்த கும்பலைச் சேர்ந்த சில பெண்கள் மயில்சாமி பெயரை கூறியதாகவும், மேலும் அவர்களிடம் மயில்சாமியின் செல்போன் எண் இருந்ததாகவும் அந்த நபர் தெரிவித்தனராம். மேலும் அந்த நபர், பாலியல் தொழில் உள்ளவர்களிடம் மயில்சாமிக்கு இருக்கும் தொடர்பை வெளியே சொல்லாமல் இருப்பதற்கு ரூ. 50 ஆயிரம் வேண்டும் என கேட்டு மிரட்டினாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியைடந்த மயில்சாமி, அந்த நபரிடம் மறுத்து பேசியதாக தெரிகிறது. அப்போது அந்த நபரிடமிருந்து அருகே இருந்த ஒரு பெண்ணும், மயில்சாமியை மிரட்டும் வகையில் செல்போனில் பேசினாராம். பின்னர் இருவரும் செல்போன் இணைப்பை தூண்டித்துவிட்டனராம்.இதனால் அதிர்ச்சியடைந்த மயில்சாமி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விருகம்பாக்கம் எழில்நகரைச் சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணின் செல்போனில் இருந்தே மயில்சாமிக்கு மிரட்டல் வந்திருப்பது தெரியவந்தது.

நான் ஈ சுதீப் இப்போ பேரரசுவுடன்


நான் ஈ படத்தில் நடித்த சுதீப், அதற்கப்புறம் நேரடியாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசைக்கு தீனி போடுகிற மாதிரி பிரபல நட்சத்திர இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவரை சந்தித்தார். இருவரும் சந்திக்க துவங்கிய சில நாட்களிலேயே இருவரும் இணைந்து ஒரு அற்புதமான படத்தை தமிழில் வழங்கப் போவதாக மீடியாக்களில் செய்தி கசிந்தது. இதை கே.எஸ்.ரவிகுமாரும் மறுக்கவில்லை. சுதீப்பும் மறுக்கவில்லை. இந்த நிலையில் சுதீப்பின் தமிழ்ப்பட பிரவேசத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் இங்கே. இவர்களின் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்கிற அளவிலேயே முடிந்து போய்விட்டதாகவும் கூறுகிறார்கள். இதற்கிடையில் சுதீப் தமிழில் பேரரசு இயக்கிய சில கமர்ஷியல் படங்களை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டதாம். இவ்வளவு பரபரப்பாக ஒரு படத்தை இயக்கிய இயக்குனர், இப்போது தமிழில் அதிகம் படம் பண்ணுவதில்லையா? ஏன்? அவரது தற்போதைய நிலைமை என்ன? என்றெல்லாம் அடுக்கடுக்காக விசாரித்தவர், பேரரசுவை நேரில் வரழைத்து பேசியதாக கோடம்பாக்கத்தில் தகவல் கசிகிறது. ஆக்ஷன் சுதீப்புக்கு எந்த ஊரை ஒதுக்கி வைத்திருக்கிறாரோ பேரரசு?

Uproar in West Bengal assembly over attack on ex-minister

The West Bengal Assembly today witnessed uproarious scenes over the attack on All India Forward Bloc leaders in Hoogly district earlier this week. Speaker Biman Banerjee rejected the calling attention moved by AIFB MLA Tajmul Hussain on the attack on AIFB leader and former Left Front minister Naren De and former MLA Ajit Patra on Sunday. When Hussain raised the matter once again during mention hour instead of the one he was allowed, Deputy Speaker Sonali Guha switched off his mike. This led CPI(M) member and Leader of the Opposition Surya Kanta Mishra to raise a point of order demanding a response from ruling Trinamool Congress. Banerjee, who had returned to the House, then said the issue was raised by the same MLA and the LF members had staged a walk out yesterday. The Speaker said the House was perfectly in order and so Mishra's point of order was subsequently rejected. After this, all Left Front members when asked to speak during the mention hour on their individual issues raised the same matter leading to switching off their mikes one-by-one. The Left Front members then shouted slogans inside the House following which it was adjourned for the first half.

Vikram Prabhu promises more action, less talk in 'Ivan Vera Mathiri'

With his second flick Ivan Vera Mathiri (IVM) releasing this week, actor Vikram Prabhu is both anxious and excited. “A hit like Kumki as a debut film does raise the pressure quotient. After working on IVM for a year, I’m avidly waiting to see the results this week,” the actor says in a chat with CE. Directed by M Saravanan, IVM will showcase Vikram in an urban set up, as a man of action, quite literally. “I play a viscom student named Gunasekaran,” he discloses. “He applies for a job. The story is about what happens when certain incidents take over his life. As the title suggests, he does things differently,” he says. So did he prepare himself for the role in any way? “Saravanan gave me a bound script, so I broadly knew what he was looking for. I didn’t prepare too much as I wanted to follow his instructions. The role has less dialogues and conveys more with expressions and actions,” he says. The action scenes have been much talked about during the making. Vikram seems to be experiencing the aftermath, but with a smile. “There are some high-octane stunts between Vamsi and me and we’ve shot in some tough locations. The fights will be talked about. Sakthi’s camera has caught the action beautifully. I did bear injuries all over, only my face escaped with minor scratches! But the risks we take add to the cinematic value of the final product,” he says with a grin. With a torn shoulder muscle and a few bumps and bruises, Vikram is still undergoing physiotherapy. He says he would try to keep the mood light while shooting scenes with Vamsi so that the pressure of what they were about to undertake would not get to them. “Being jovial helps in refreshing the mind, which in turn has an enhancing effect on your work,” he explains. The challenge for Vikram lay in keeping the mood of the film intact for a year. He says, “We started the project in October 2012. The toughest part was to maintain the same look physically, despite the injuries. But I enjoyed all of it because I had faith in the final product. Every day on the sets is a pleasure and every movie feels like my first. The sheer magic of the movies is what keeps me going!”

பி.ஆர்.பி. நிறுவனம்

மதுரை பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான கிரானைட் குவாரிகளை மூடுமாறு கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து அந்த நிறுவனம், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது. பி.ஆர்.பி. நிறுவனம் சார்பிலான வக்கீல் ஹரிஷ்சால்வே வாதாடுகையில், பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். எந்தவித ஆதாரமும் இல்லாமல் குவாரியை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படவில்லை. தமிழக அரசு தவறாக ஆய்வுகளை நடத்தி உள்ளது. வேண்டுமானால் மத்திய அரசு தலைமையில் ஒரு குழுவை நியமித்து ஆய்வு மேற்கொள்ளலாம். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் பி.ஆர்.பி. நிறுவனமும் ஒன்று. எனவே உடனடியாக குவாரிகளை திறக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.

Vidarbha bandh gets mixed response in Yavatmal

The one-day Vidarbha bandh call by All India Forward Bloc on Monday to demand statehood received mixed response in Yavatmal. The bandh was total in the city market as the shopkeepers did not open their shutters throughout the day. The bandh was peaceful and there was no untoward incident reported from anywhere in the district, informed Lalji Raut, the district president of Vidarbha Janata Congress. He has also condemned the arrest of the separate Vidarbha protagonist and former MP Jambhuwantrao Dhote by Nagpur police and said they would meet the challenges let loose by the Western Maharashtra political lobby accordingly. Normal life was hit as autorickshaw drivers' union joined the bandh. Most of the transport vehicles remained off the road throughout the day to support bandh. According to the unions, over 17,000 auto drivers joined the bandh in the district. The petrol pump dealers also joined the bandh and kept their outlets closed till noon, informed Petrol Pump Owners Sanghatana president Paresh Lathiwala. Schools and colleges, too extended support to the daylong bandh.

Monday, December 9, 2013

நடிகர் மயில்சாமிக்கு பாலியல் கும்பல் பணம் கேட்டு மிரட்டல்: போலீஸார் விசாரணை


நகைச்சுவை நடிகர் மயில்சாமிக்கு செல்போனில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் விருகம்பாக்கம் போலீஸில் புகார் செய்தார். நேற்று மாலை போன் அழைப்பு ஒன்று அவருக்கு வந்துள்ளது. அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், "நான் ஒரு போலீஸ்காரர், நாங்கள் ஒரு பாலியல் தொழிலாளியை கைது செய்தோம்; அவரின் செல்போன் எண்ணில் உங்கள் செல்போன் எண் இருக்கிறது. அவர் உங்களிடம் தொடர்பு கொண்டுள்ளார். நீங்கள் ரூ. 50 ஆயிரம் தந்தால் இந்த விவகாரத்தை முடித்துவிடுவோம். இல்லை என்றால் வழக்கம்போல் உங்களுக்கான தொடர்புள்ள செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பி விடுவோம். இன்று மாலைக்குள் ரூ.50 ஆயிரத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் இதை தவிர்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார். அவர் சொன்ன செய்தியை ஆமோதிப்பது போல், ஒரு பெண் போலீசார் பேசுவதுபோல் ஒரு பெண் இதே தகவலைக் கூறியுள்ளார். இதை அடுத்து விருகம்பாக்கம் போலீஸில் புகார் செய்தார் மயில்சாமி. இது தொடர்பாக முதல் கட்ட விசாரணை மேற்கொண்ட போலீஸார், அந்த மிரட்டல் நபரின் செல் எண்ணுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டனர். ஆனால், செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.

விவேக்கும் சுற்று சூழலும்


சுற்று சூழல் பற்றி பல வருஷமாக பேசிக் கொண்டேயிருக்கிறார் நடிகர் விவேக். வெறும் நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல் எல்லா நேரமும் சமூகத்தை பற்றிய அக்கறையும் கொண்டிருக்கிற நடிகராக திகழ்வதுதான் விவேக்கின் ப்ளஸ். அதே நேரத்தில் மைனஸ்சும் கூட. விவேக் படம்னா அட்வைஸ் ஜாஸ்தி இருக்கும் என்று அலுத்துக் கொள்பவர்களும் உண்டு. ஆனால் எது பற்றியும் கவலைப்படாமல் தன் பிரசாரத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டேயிருக்கிறார் அவர். தமிழகம் முழுக்க சுற்றி சுழன்று பத்து லட்சம் மரக்கன்றுகளை நட்ட பெருமை விவேக்குக்கு மட்டுமே உரிய சாதனை. இந்த நிலையில் அவர் பால் ஈர்ப்பு கொண்ட கல்லுரி மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்லுரிகளில் பேச அழைக்கிறார்கள். அவரும் நடிக்கிற நேரம் போக மற்ற நேரங்களில் அதையும் செய்து கொண்டிருக்கிறார் விடாப்பிடியாக. இன்று சென்னையிலிருக்கும் பிரபல கல்லுரியான லயோலா காலேஜில் விவேக் பேச அழைக்கப்பட்டிருக்கிறார். கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு குளோபல் வாமிங். பொறுத்தமான கல்லுரி. பொறுத்தமான விவேக். அவரது பேச்சை நேரில் கேட்க ஆசைப்படுகிறவர்கள் மாலை நான்கு மணிக்கு லயோலா காலேஜுக்கு செல்லலாம்.