Saturday, October 4, 2014

THIYAGA DEEPAM PERAVAI - 30/10/14 INVITATION


Friday, October 3, 2014

Bala, Seeman & Mysskin Launches Chezhian’s ‘The Music School’


The complete ambiance of Saligramam was spangled with the musical aroma with the presence of many versatile personalities from film and arts industry launching ‘The Music School’ owned by critically acclaimed cinematographer-writer Chezhian’s wife Prema Chezhian. Filmmaker Bala, Mysskin, Seeman, Artist Marudhu, playback singer Mano, poetess Thamizhachi and many others were present for the occasion. Hailing from the most blessed family of music and arts, the young chap Sibi, the son of Chezhian-Prema couple amused everyone playing mellisonant tunes on piano. Speaking on the occasion, director Seeman said, “Arts and music are something that breaks the language barriers and boundaries. But it is disappointing to know that Tamil film industry has abandoned its essence and as a result, our region is dominated by outsiders. But I’m happy that the renaissance of music and arts is happening at a greater magnitude. Isaignani Ilayaraja heading all the way from a small village of Pannaipuram made a revolutionary breakthrough. Apparently, Chezhian hailing from the town of Sivagangai is spearheading with the concept of sharing his musical knowledge with the present generation through this music school.” Poetess Thamizhachi on her turn said, “Music has been proved scientifically as a cure for many mental and physical sicknesses. Music connects and unites people beyond religion, language, community and regions. I am happy that Chezhian sir and his wife, my close friend Prema for the success of this great mission of spreading musical knowledge.” Chezhian is ennobled as the prominent cinematographer and writer. He has created a medium of new visual language through his lens in films like Kalloori and National award winning films like Thenmerku Paruva Kaatru and Paradesi followed by Bala’s upcoming film ‘Thaarai Thappattai’. ‘The Music School’ located #111, Durai Arasan Street, Saligramam, Chennai – 600093 is equipped with the facility of rendering musical tuition of all instruments.

MUKKULATHOR PULIPADAI


Sivaji in Russian, fighting the good fight against alcohol


Great actors never die; they continue to live through their movies. And their work, over the years, crosses boundaries and is interpreted in diverse ways. A case in point is thespian Sivaji Ganesan, whose movie will soon be dubbed in Russian to create awareness about the ill-effects of drinking. P. Thangappan, secretary-general of Indo-Russian Chamber of Commerce and Industries and his team will do the dubbing for the film. The movie they have chosen is Pudhiya Paravai, which was released in 1964. “The film conveys a strong message about drinking and its evils. Russia too faces problems of alcoholism like any other country. This film has dealt with the subject daringly and will help create awareness,” says Mr. Thangappan. Indian movies first became popular through the work of actor Raj Kapoor and were much-loved during the Soviet Union’s existence. “After 1991, the screening of Indian films has come down. But, Russians love Indian films even now. I am also planning to dub the mythological films of Sivaji Ganesan into Russian,” he says. Besides, a digital library called ‘Sivaji Archives’ is also being planned jointly by the Russian Cultural Centre and Indo-Russian Cultural and Friendship Society. Photos and footage of his expressions and actions for various situations will be stored. “His acting skills still inspire people. Those interested can touch on a particular emotion and study how Sivaji enacted it,” Mr. Thangappan adds. This project will be supervised by editor and director B. Lenin. “We will make it in Tamil, English and Russian,” he says. Mr. Thangappan recalls Sivaji Ganesan’s three-decade-long association with Indo-Russian Cultural and Friendship Society. “Whenever a Russian cultural delegation visited Chennai, he would honour them with a reception at his residence. This happened even when he was ill. He used to say that his house was always open for artistes,” recalls Mr. Thangappan. He recalls how a Russian delegation, that met him years after Thillana Mohanambal was released, thought he could really play the nadaswaram. “They were surprised when he told them that it was just acting,” he says, adding that Sivaji always spoke his heart out.

Thursday, October 2, 2014

வெள்ளைக்கார துரையில் காமெடி ஹீரோவாக நடிக்கும் விக்ரம்பிரபு


கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு ஆகிய நான்கு தொடர் வெற்றி படங்களை கொடுத்த விக்ரம் பிரபு, தற்போது நடித்து வரும் படம் ‘வெள்ளைக்கார துரை. இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். மேலும் சூரி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, மதன்பாப், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தை துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, பெண்ணின் மனதை தொட்டு, மனம் கொத்தி பறவை போன்ற வெற்றி படங்களை கொடுத்த எழில் இயக்குகிறார். டி.இமான் இசையமைக்கிறார். சூரஜ்நல்லு சாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஒரே பிரச்சினையில் சிக்கி தவிக்கும் விக்ரம் பிரபுவும் ஸ்ரீதிவ்யாவும் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டு காதலில் ஒன்று சேருவதே படத்தின் மைய கருவாக வைத்து அதில் காமெடி மற்றும் கமர்சியல் படமாக உருவாக்கி வருகிறார் எழில். விக்ரம் பிரபு இப்படத்தில் காமெடி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை ஆயிரம் படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்


தென்கொரியாவின் இஞ்சானில்ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீச்சை நடத்தின். இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. பெனால்ட்டி ஷூட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இந்தியா இந்த சாதனையைப் படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தங்கம் வென்று உள்ளது. ஆசியப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் வரும் 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நேரடியாக பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளது.

Wednesday, October 1, 2014

முன்னால் முதல்வர் காமராஜரின் சதி மற்றும் ஜாதி வெறி :


காங்கிரஸ் கட்சிக்கும் பார்வட் ப்ளாக் கட்சிக்கும் உள்ள உறவு என்ன என்பது அனைவரும் அறிந்ததே ..! 1952 - ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் " பசும்பொன் ஸ்ரீதேவர் அவர்கள் வெற்றி பெற்றார் என்பதற்காக ... 1957 - ம் ஆண்டு தேர்தலுக்குள் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மட்டும் நீக்கி அதை ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக மாற்றினார் திரு.காமராசர் ... அதாவது அருப்புகோட்டை தொகுதியில் முக்குலத்தோர் வாக்கு அதிகம் என்பதால் நாடார் மற்றும் பள்ளர் சமூக வாக்கு அதிகமுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை உருவாக்கினார் இதனால் ஸ்ரீதேவர் அவர்கள் தோழ்வியை சந்திப்பார் என்ற சதி .! ஆனால் 1957 - ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி மாலை சூடி மக்கள் தலைவர் என்பதை பசும்பொன் ஸ்ரீதேவர் அவர்கள் மீண்டும் நிருபீத்தார் காட்டினார் ... அன்று முதுகுளத்தூரில் தொடங்கி இன்று தென்மாவட்டம் முழுவதும் பள்ளர் vs முக்குலத்தோர் எதிர்மறையாக இருப்பதற்கு காமராஜர் ஒருவரே காரணமாக உள்ளார் என்பதை அரசியல் மேதைகள் அறிவர் .! ஜாதிக்கு பாடுபட்டவர் இன்று தேசதலைவர் ..? ஸ்ரீதேவர் அவர்களோ ஜாதி தலைவர் .? ஸ்ரீதேவர் அவர்களின் மக்கள் செல்வாக்கை என்றுமே அழிக்க முடியாது .! வரலாற்றை மறைக்கவும் முடியாது ... ! எம்.கே.மகேஷ்வர் ...

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? நீதிபதி குன்கா தீர்ப்பு முழு விவரம்


ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது ஏன் என்பதற்கு தனது தீர்ப்பில் நீதிபதி குன்கா விளக்கம் அளித்துள்ளார். தீர்ப்பு முழு விவரம் ரூ.66 கோடியே 65 லட்சம் சொத்து குவித்ததாக ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இதுதொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா அளித்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி உள்ளது. தீர்ப்பில் அவர் கூறி இருப்பதாவது:– கடந்த 1991–ம் ஆண்டு முதல் 1996–ம் ஆண்டு வரையில், ஜெயலலிதாவின் வருமானம் ரூ.9 கோடியே 91 லட்சம் என்றும், செலவுத்தொகை ரூ.8 கோடியே 49 லட்சம் என்றும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இந்த 5 வருடங்களில், ஜெயலலிதா தனது பெயரிலும், மற்ற 3 குற்றவாளிகள் பெயரிலும், தங்கள் நிறுவன பெயர்களிலும் ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு அசையா சொத்துகள் வாங்கி குவித்ததாகவும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. இந்த வருமானத்துக்கு ஜெயலலிதாவால் திருப்திகரமாக கணக்கு காட்ட முடியவில்லை. ஜெயலலிதாவின் வருமானத்துக்கு பொருந்தாத வகையில், குற்றவாளிகள் 4 பேரும் சொத்துகளை குவிக்கும் நோக்கத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டு, ரூ.53 கோடியே 60 லட்சத்துக்கு சொத்து சேர்த்திருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை குவிப்பதற்கு ஜெயலலிதாவுக்கு உள்நோக்கத்துடன் உதவி செய்ததன் மூலம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றம் புரிய தூண்டுகோலாக இருந்து இருப்பதையும் அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது. 4 ஆண்டு ஜெயில் எனவே, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றத்துக்காக, ஜெயலலிதாவுக்கு 6 மாத கால சாதாரண ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையை அவர் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றச்சதியில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 6 மாதம் சாதாரண ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். குற்றவாளிகள் ஏற்கனவே அனுபவித்த சிறைவாச காலம், தண்டனையில் கழித்துக்கொள்ளப்படும். சொத்து பறிமுதல் குற்றவாளிகளின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்பு நிதி மற்றும் ரொக்க கையிருப்பை அபராத தொகைக்காக பிடித்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். அதன்பிறகும் அபராத தொகையை ஈடுகட்ட முடியாவிட்டால், குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டு, கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளை ரிசர்வ் வங்கிக்கோ, பாரத ஸ்டேட் வங்கிக்கோ அல்லது பொது ஏலம் மூலமாகவோ விற்க வேண்டும். மீதி நகைகளை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும். ஜெயலலிதா சம்பந்தப்பட்ட 6 நிறுவனங்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மற்றும் இதர சொத்துகளை மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டும். கோடநாட்டில் உள்ள 900 ஏக்கர் நிலம், ரூ.7 கோடியே 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. இதர விவசாய நிலங்கள், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு அந்த நிலம் அமைந்துள்ள கிராமம் முழுவதையுமே ரூ.53½ கோடிக்கு வாங்கி விடலாம். இந்த 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பை நாமே கற்பனை செய்து கொள்ளலாம். வசூலிக்கப்படும் அபராத தொகையில், விசாரணை செலவுக்காக கர்நாடக அரசுக்கு ரூ.5 கோடி வழங்க வேண்டும். கடும் தண்டனை ஏன்? குவிக்கப்பட்ட சொத்துகளின் அளவை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இந்த கடுமையான தண்டனை தேவைப்படுகிறது. அதிகாரமும், சொத்து குவிப்பும் சேர்ந்த கலவைதான், இந்த வழக்கின் அடிப்படை. குறுகிய காலத்தில் ஜெயலலிதாவும், இதர குற்றவாளிகளும் சொத்துகளை குவித்து இருப்பது, சட்டவிரோத சொத்துகளை குவிப்பதற்கு ஆட்சி அதிகாரம் எப்படி பயன்படும் என்பதற்கு தெளிவான உதாரணம். இது, ஜனநாயக அமைப்புக்கு உண்மையான ஆபத்தாகும். இவர்கள் செய்த குற்றங்கள், அதிகபட்ச தண்டனையில் (7 ஆண்டு) பாதிக்கு மேல் வழங்கத்தக்கவை. கடுமையான தண்டனை மூலம் ஊழலை ஒழிக்க பாராளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. அதன் நோக்கத்தை நிறைவேற்றுவது கோர்ட்டின் கடமை. உயர் பதவியில் இருப்போர் செய்யும் ஊழல்கள், கீழ்நிலைகளில் இருப்போரையும் ஊழல் செய்ய தூண்டி விடுவதுடன், அவர்கள் மீது உயர் பதவியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தி விடும். இவ்வாறு நீதிபதி குன்கா தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.

தமிழச்சி (Tamizachi)


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கான கடமையைச் செய்ய ஒப்பாரியும் அழுகையும் புலம்பலுமாக வருபவர்களுக்கு எதற்கு பதவி பிரமாணம்? பலவீனமான இதயமுடையவர்கள் எல்லாம் எதற்காக ஆட்சி செய்ய வருகிறீர்கள்? சபை நாகரிகம் தெரியாத மக்கள் பிரதிநிதிகள் தங்களை அசிங்கப்படுத்திக் கொள்வதோடு மக்களையும் மக்களாட்சியையும் அல்லவா இழிவுபடுத்துகிறார்கள்? https://www.facebook.com/video.php?v=757675660966770 - தமிழச்சி 29/09/2014

அரசியலில் நடிக்கத் தெரியாத சிவாஜி - இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள்! -


திருச்சி சங்கிலியாண்டவர்புரத்தில் சின்னையா மன்றாடியார்-ராஜாமணி தம்பதியருக்கு நான்காவது மகனாக 1928 அக்., 1ல் பிறந்தார் சிவாஜி. கணேசமூர்த்தி என பெற்றோர் பெயர் வைத்தனர். அவர் பிறந்த போது, தந்தை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். சங்கிலியாண்டவர்புரத்தில் பள்ளிப்படிப்பை துவங்கிய சிவாஜிக்கு படிப்பு மீது நாட்டம் இல்லை. அக்கம் பக்கத்து தெருக்களில் நடந்த பாவைக்கூத்துகளும், புராண நாடகங்களும், சிறுவன் சிவாஜியை கவர்ந்தன. அருகில் வசித்த காக்கா ராதாகிருஷ்ணனுடன் இணைந்து திருச்சி தேவர்ஹால் நாடகக்குழுவில் சேர்ந்தார். பின் பொன்னுச்சாமி பிள்ளையின் நாடகக்குழுவில் காக்கா ராதாகிருஷ்ணன், சிவாஜியை சேர்த்து விட்டார்.சில நாடகங்களில் நடித்த சிவாஜிக்கு திருப்பமாக அமைந்தது அண்ணாத்துரை எழுதிய, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகம். சென்னையில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் கணேசனாக இருந்தவர், சிவாஜியாக நடித்தார். அண்ணாத்துரை காகப்பட்டராக நடித்தார். நாடகத்திற்கு தலைமை வகித்து ரசித்த பெரியார், கணேசனை பாராட்டி, சிவாஜிகணேசன் என பெயரிட்டார். முத்தாய்ப்பாய் முதல் படம்துவக்கத்தில் திராவிட இயக்கத்தில் இணைந்த சிவாஜி, பராசக்தி நாடகத்தில் நடித்தார். அதன் பெருமை அறிந்த நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் முதலியார், ஏ.வி.மெய்யப்பசெட்டியாருடன் இணைந்து படமாக எடுக்கவும், அதில் சிவாஜியை நடிக்க வைக்கவும் முடிவு செய்தார். ஏதையும் ஆராய்ந்து முடிவு செய்யும் ஏ.வி.மெய்யப்பசெட்டியாருக்கு புதிய நடிகரான சிவாஜியை வைத்து சினிமா எடுத்தால் ஓடுமா என்ற சந்தேகம் எழுந்தது. அன்றைய சூழலில் பிரபலமாக இருந்த கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை கூறினார். அதை ஏற்க மறுத்த பெருமாள்முதலியார், சிவாஜியே நடிக்கட்டும் என்ற உறுதியுடன் 1951ல் அப்படம் எடுக்கப்பட்டது. முதல் வசனமாக சக்ஸஸ் என சிவாஜி பேசிய இடம் இன்றும் ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் நினைவு சின்னமாக திகழ்கிறது.காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள்காலத்தால் அழியாத பராசக்தி படம், அன்றைய அரசின் அவலங்களை கூறியதால் படத்தை தடை செய்ய பல முயற்சிகள் நடந்தன. அதைமீறி வெற்றிகரமாக ஓடியதால் சிவாஜிக்கு சினிமா வாய்ப்புகள் பெருகின. உத்தமபுரத்திரன், மனோகரா, மகாகவி காளிதாஸ், காத்தவராயன், புதையல், சித்தூர் ராணி பத்மினி, தூக்கு தூக்கி, குறவஞ்சி போன்ற புராணப் படங்கள் சிவாஜிக்கு புகழை தந்தன. கதாபாத்திரமாகவே ஒன்றி நடித்தததால், அவை இன்றும் மக்கள் மனதில் நிற்கிறது. சிவாஜிக்கு பாஎம்.ஜி.ஆருக்கு தாய்க்கு பின் தாரம், தாயை காத்த தனயன், தாய் சொல்லை தட்டாதே என தா என்ற எழுத்தில் துவங்கும் படங்கள் வெற்றியாக அமைந்தது போல, சிவாஜிக்கு பா வரிசையில் அமைந்த படங்கள் வெற்றியை தந்தன. அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் பாசமலர், மகளுக்கும் தந்தைக்கும் உள்ள பாசத்தை விளக்கும் பார் மகளே பார், படித்தால் மட்டும் போதுமா, பாலும் பழமும், நிச்சய தாம்பூலம் போன்ற படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. மறக்க முடியாத படங்கள்வீரபாண்டிய கட்டபொம்மனாக, கப்பலோட்டிய தமிழனாக, பாட்டுக்கொரு புலவன் பாரதியாக, கர்ணனாக சிவாஜி நடித்தது வரலாற்றின் பதிவு. கட்டபொம்மன் இப்படி இருப்பார் என்று சிவாஜியின் நடிப்பை பார்த்து தானே தெரிந்து கொண்டோம். திருமால் பெருமை, திருவருட்செல்வர், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்கள் அவர் நடிப்பின் பெருமை கூறுபவை. திரிசூலம், வசந்த மாளிகை, டாக்டர் சிவா, புதிய பறவை, சிவந்த மண் போன்றவை அவரின் நடிப்பு பரிணாமத்தை காட்டின. சிவாஜி நடித்த தெய்வமகன் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்ட முதல் தமிழ் படம். தமிழில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். வாழ்நாளின் இறுதிவரை தொழில் பக்தி, நேரம் தவறாமை போன்ற குணங்களால் போற்றப்பட்டார்.தனி கட்சி துவக்கம்துவக்கத்தில் திராவிடக்கழகத்தில் இருந்தாலும், பின் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை துவக்கினார். பிறகு 1989ல் அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்து, கட்சியை இணைத்து கொண்டார். தமிழக ஜனதா தள தலைவராகவும் திகழ்ந்தார். திரையுலகில் நடிக்க தெரிந்த சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லை.சக நடிகர் மீதும் மதிப்புசிவாஜி ரசிகர் என்ற அடிப்படையிலும், சிவாஜி குடும்பத்தில் உதவியாளராக என் சகோதரர் திருப்பதி ஆறுமுகம் பணிபுரிந்ததன் அடிப்படையிலும் அவருடன் பழகும் வாய்ப்பை பெற்றேன். 1972ல் மதுரை முள்ளிபள்ளம் பகுதியில் பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு நடந்தது. பள்ளியில் படித்த நான், சிவாஜி மன்றத்தினருடன் சேர்ந்து அவரை பார்க்க சென்றேன். வைகையாற்றில் இரு கதாநாயகிகளுடன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சிவாஜி கிராம ஜமீன்தார் வேடத்தில் இருந்தார். பச்சைக்கலர் பெல்ட் அணிந்து, கொண்டை வைத்த தலைமுடியுடன் காட்சியளித்தார். அவரை பார்த்தபோது, டே பசங்களா அங்கே ஒரு அம்மா உட்கார்ந்திருக்கு. அங்கேயும் சென்று பார்த்து சொல்லுங்கள், என்றார். அங்கு அமர்ந்திருந்தவர் ஜெயலலிதா. தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களையும் மதிக்கத் தெரிந்தவர் சிவாஜி என இது காட்டியது. தேடி வந்த விருதுகள் கருணாநிதியின் வசனம், கண்ணதாசனின் எழுத்து, டி.எம்.சவுந்திரராஜனின் குரல், எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை ஆகியவற்றால் சிவாஜியின் படப்பாடல்கள் இன்றும் பட்டிதொட்டிகளில் அன்றாடம் ஒலிக்கின்றன. கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதாசாகிப் பால்கே விருதுகள் அவருக்கு பெருமை சேர்த்தன. வீரபாண்டிய கட்டபொம்மன் படம், ஆப்ரிக்கா உலக திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்டது. 1962 ல் அமெரிக்கா நியூயார்க் மாகாண நயகரா நகரின் ஒரு நாள் மேயர் சிறப்பு அந்தஸ்தை பெற்றார். 2001ல் அவர் மறைந்த போது, மத்திய அரசு தபால் தலை வெளியிட்டது. சிவாஜி என்ற மிகப்பெரும் நடிகரின் சுவடுகள் தமிழ் மண்ணிலும், தமிழர் மனதிலும் என்றும் பதிந்துருக்கும். ஏ.எஸ்.பி.சிவசுந்தரம்,சமூக ஆர்வலர், மதுரை. 94433 48284. -