Sunday, March 17, 2013

கவிஞர் வைரமுத்துவின் தந்தை மரணம் : வடுகபட்டியில் இன்று இறுதிச் சடங்கு நடைபெறு

கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமித்தேவர் நேற்று பகல் 12.30 மணியளவில் சொந்த ஊரான வடுகபட்டியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82. 

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிறுநீரகச் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலிருந்து வடுகபட்டிக்குக் கொண்டுவரப்பட்டார். வீட்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்தது. 

மறைந்த ராமசாமித்தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், கவிஞர் வைரமுத்து -பாண்டியன் (காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்) என்ற இரண்டு மகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். தகவல் அறிந்த கவிஞர் வைரமுத்து குடும்பத்தினருடன் வடுகபட்டி விரைந்தார். 

வைரமுத்துவின் சொந்த ஊரான பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு இறுதிச் சடங்கு நடக்கிறது.

Saturday, March 16, 2013

'Amaidhi Padai 2' hits the screens on April 14th


Veteran director Manivannan is busy with his 50th directorial venture, titled 'Nagaraja Cholan MA MLA', which is a sequel to 'Amaidhi Padai', released way back in 1994. The film stars Sathyaraj, Seeman, Raghuvannan, Mrudula and Komal Sharma, among others; this is Sathyaraj's 200th film.
The satellite rights of this film has been bought over by Zee TV and the movie is all set to hit the screens as a Tamil New Year gift, on the 14th of April. The music for the this film is scored by James Vasanthan. 'Nagaraja Cholan MA MLA' is will be a full-length commercial entertainer that speaks of contemporary politics. However, it does not hurt any sentiments. It will be a typical Manivannan classic that we grew up to.

தமிழக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தாலும் மாணவர்களின் போராட்டம் தொடரும்

தமிழக அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்தாலும் தங்களின் போராட்டம் தொடரும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர் குற்றவாளி என அறிவிக்க கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, ஐ.நா. கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி மாணவர்கள் இன்றும் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் இலங்கைக்கு இந்தியா பொருளாதார தடைவிதிக்க வேண்டும், போர் குற்றவாளியான ராஜபக்சேவிற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தில் சென்னையில் நந்தனம் கல்லூரி மாணவாகள் 2வது நாளாக இன்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இராஜகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் 22 மாணவர்கள் 2வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.



இதனிடையே மாணவர்களின் போராட்டம் காரணமாக தமிழக அரசு நேற்று கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அளித்தது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் மார்ச் 20ந் தேதி, தமிழகம் முழுவதும் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என தெரிகிறது. மாணவர்களின் இந்த போராட்டங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட், தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.



ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: சீமான் பேச்சு

உலக நுகர்வோர் தினவிழாவையொட்டி தென்இந்திய நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சிலின் சார்பில் மாநில மாநாடு மற்றும் நுகர்வோர் சிறப்பு விருதுகள் வழங்கும் விழா மதுரை காந்தி மியூசியத்தில் நடந்தது. முதலில் தென்மாவட்ட செயலாளர் ரவிபாண்டியன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி கோரிப்பாளையம் பகுதியில் தொடங்கி மாநாடு அரங்கை அடைந்தது. மாநாட்டிற்கு தென் இந்திய தலைவர் வக்கீல் கு.மணவாளன் தலைமை தாங்கினார்.




தென்இந்திய பொதுச்செயலாளர் வக்கீல் சிங்கராசு முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் ஈரோடு வீரபத்திரன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-



நமது நாட்டில் எதுவும் தரமாக கிடைப்பதில்லை. கல்வி, மருத்துவம், பஸ், விமானம் என்று தரம் கெட்டு தான் கிடைக்கிறது. நமது நாட்டில் நமக்கு எந்த உரிமை இருக்கிறது. சொந்த மொழியில் வழக்காட முடியுமா? நாம் தமிழன் என்று பெருமிதம் கொள்ள உரிமை இல்லை. அப்படி சொன்னால் நம்மை தமிழ் தீவிரவாதி என்கிறார்கள்.



கடலில் மீன்பிடிக்க காவேரி, முல்லை ஆற்றில் மீன்பிடிக்க உரிமை இல்லை. நாம் உரிமை இழந்து அடிமையாகி உள்ளோம். டெல்லியில் பெண் கற்பழித்து இறந்த சம்பவத்தில் மந்திரிகள் முதல் அனைவரும் கொதித்து எழுந்தனர்.



ஆனால் இலங்கையில் 30 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு இறந்த சம்பவத்தை கேட்க இங்கு யாருக்கும் நாதியில்லை. ஐ.நா.வில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானம் இல்லை, அவமானம். அந்த அறிக்கை இலங்கைக்கு எதிராக இருக்காது. எனவே ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.



இவ்வாறு அவர் பேசினார்.



கூட்டத்தில், ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா இலங்கை மீது கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரித்து கொடூரன் ராஜபச்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது உள்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



இதில் மாநில இளைஞரணி அமைப்பாளர் கப்பலூர் சரவணன், மாநில அமைப்பு செயலாளர் சாகுல் அமீது, மாநில இணைச் செயலாளர் தியாகராஜன், தென்மாவட்ட செயலாளர் ரவிபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வன் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளை - தொடர் பயிற்சி வகுப்பு

தெரிந்த தேவர் - நேதாஜி,
                                     தெரியாத வீர வரலாறு




இடம் : கொளப்பாக்கம்,



தேதி : 17.03.2013



நேரம் : காலை 9.30 மணியளவில்



Facebook Link: http://www.facebook.com/VeeraThanthaiNethajiFoundation








உறவினர்களே அனைவரும் இந்த தொடர் பயிற்சி வகுப்பில் மறவாது கலந்து கொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.....





நன்றி !





Thanks & Regards

வீரத்தந்தை நேதாஜி அறக்கட்டளை

G.ஐயப்பன்

9884448002

9884928504

College tales for Gautham Karthik


After debuting with Mani Ratnam's Kadal, Gautham Karthik is all set to start work on his next. The actor will be seen playing the lead in director Saravanan's next.



Confirming the news, Saravanan says, "Gautham had heard close to 25 scripts after Kadal. He got excited when I narrated my script to him. He wanted to start shooting for this flick immediately."



He adds, "This film will be very different from my previous venture, Silambattam. It will, primarily, be a youth entertainer. The film is set in the backdrop of a college. We will start shooting for the film from April."



Saravanan tells us that he's yet to finalize the title, and the rest of the cast and crew. He says, "We've almost zeroed in on the female lead as well. Since we are going on floors from next month, we're looking at someone who can start shooting immediately."

தேவர் கல்லூரி மாணவர்கள் உண்ணா விரதம் – அகில இந்திய பார்வர்டு பிளாக் இரண்டு நாளாகதந்துகொண்டு ஆதரவு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பசும்பொன் திரு உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரியில் இன்று இரண்டாவது நாளாக இலங்கை அரசை, ராஜபக்சேவை கண்டித்து தொடர் உண்ணா விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் இரண்டு நாளாக கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகிறது.


Friday, March 15, 2013

இலங்கை தமிழர் பிரச்சினை: மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்கக்கூடாது - சீமான் வலியுறுத்தல்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-




அனைத்துக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும். தன்னெழுச்சியாக அரசியல் சார்பில்லாமல் போராடும் மாணவர்களை மாநில அரசு எந்த வடிவத்திலும் ஒடுக்கக்கூடாது என்றும் எவ்விதமான நிர்பந்தங்களுக்கும் உள்ளாக்கக்கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.



மேலும் அறவழியில் போராடிவரும் தமிழக மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் களத்திலும் முழுமையாக துணை நிற்கும் என்றும் உறுதியாக தெரிவித்து கொள்கின்றேன்.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளன், தொழிற்கல்வி தேர்வில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தொழிற் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த, மகாத்மாகாந்தி சமுதாய கல்லூரி மூலமாக இந்த கல்விப்பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இதன் மூலம் தொழில் கல்வி கற்ற 185 கைதிகள் தேர்வு எழுதினார்கள்.




அவர்களில் 175 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் சிறப்பு அம்சமாக, 5 கைதிகள் அதிக மதிப்பெண்கள் வாங்கி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். அவர்களில், அருளானந்தம், சமையல்கலை டிப்ளமோ தேர்விலும், வீரபாரதி, கார் போன்ற 4 சக்கர வாகன மெக்கானிக் டிப்ளமோ தேர்விலும், வேலூர் சிறைக்கைதிகள் பேரறிவாளன், பவானிசிங் ஆகியோர் டி.டி.பி. (கம்ப்யூட்டர் தட்டச்சு) டிப்ளமோ தேர்விலும், கடலூர் கன்னியப்பன் டி.எச்.இ. டிப்ளமோ தேர்விலும் தங்கபதக்கம் பெற்றுள்ளனர்.



இவர்களில் பேரறிவாளன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சிறைத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UP Assembly to discuss Subhash Chandra Bose's disappearance

The mystery surrounding the death of Subhash Chandra Bose and the true identity of Gumnami Baba alias Bhagwanji of Faizabad found an echo in the Uttar Pradesh Assembly today as the Speaker allowed an hour's debate on it in the House.




Opposition members demanded formation of an inquiry committee to clear the air on the matter, saying that the High Court has already ordered to constitute an inquiry commission.



The matter came up through adjournment notices of Akhilesh Kumar Singh of Peace Party and Anugrah Narain Singh of Congress.



They also raised the issue of constitution of an inquiry committee to identify Gumnami Baba (whom many believed to be Netaji) on the directive of Allahabad High Court on the petition of Lalita Bose, Netaji's neice on January 31.



The Lucknow Bench had, on January 31, directed the UP government to form a panel to probe identity of Gumnami Baba.



The bench had also directed the state government to consider establishment of a museum at Faizabad where the articles of late Gumnami Baba as well as other ancient items may be kept.



Referring to the various commissions set up at different times to unravel the mystery of Netaji's death, Akhilesh cited the report of the Mukherji commission, which had ruled out that Netaji was killed during the second world war on August 18, 1945 in Taiwan in a plane crash on the basis that there had been no incident of an air crash there in that year.



Referring to the recovery of letters and some other things from the room of Gumnami baba in Faizabad after his demise and speculations that he was Netaji, Akhilesh said the court had asked for constituting a committee within three months but no step has been taken even after passage of one-and-a-half month since then.



Anugrah Narain Singh, Hukum Singh (BJP) and Leader of Opposition Swami Prasad Maurya (BSP) also stressed on constituting a committee for finding the true identity of Gumnami Baba.