Friday, March 15, 2013

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளன், தொழிற்கல்வி தேர்வில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தொழிற் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த, மகாத்மாகாந்தி சமுதாய கல்லூரி மூலமாக இந்த கல்விப்பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இதன் மூலம் தொழில் கல்வி கற்ற 185 கைதிகள் தேர்வு எழுதினார்கள்.




அவர்களில் 175 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் சிறப்பு அம்சமாக, 5 கைதிகள் அதிக மதிப்பெண்கள் வாங்கி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தனர். அவர்களில், அருளானந்தம், சமையல்கலை டிப்ளமோ தேர்விலும், வீரபாரதி, கார் போன்ற 4 சக்கர வாகன மெக்கானிக் டிப்ளமோ தேர்விலும், வேலூர் சிறைக்கைதிகள் பேரறிவாளன், பவானிசிங் ஆகியோர் டி.டி.பி. (கம்ப்யூட்டர் தட்டச்சு) டிப்ளமோ தேர்விலும், கடலூர் கன்னியப்பன் டி.எச்.இ. டிப்ளமோ தேர்விலும் தங்கபதக்கம் பெற்றுள்ளனர்.



இவர்களில் பேரறிவாளன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சிறைத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: