இலங்கை இனப்படுகொலையை எதிர்த்து நடைபெறும் மாணவர்களின் போராட்டம் தூய்மையானது என்று நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை விடுத்து இருக்கிறார்கள்.
கூட்டறிக்கை
நடிகர் சத்யராஜ், டைரக்டர் மணிவண்ணன் ஆகிய இருவரும் கூட்டாக விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– குருதிச்சேற்றில் தங்கள் உறவுகளையும், வாழ்வையும், உரிமைகளையும் புதையக் கொடுத்துவிட்டு, முள்வேலி கம்பிகளுக்குள் பசித்த வயிரோடு பரிதவித்து நிற்கும் ஈழத்து உறவுகளின் உரிமைகலையும், உடைமைகளையும் மீட்டுத்தர, பசியையே ஆயுதமாக்கி போராடும் எங்கள் எதிர்கால நம்பிக்கை வெளிச்சமாய் உதயமாகி இருக்கும் தமிழக மாணவச்செல்வங்களுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
தூய்மையான போராட்டம்
சுயநலமும், அரசியலும் கலக்காத சமூகத்துக்கான சமூக மனிதர்களின் தூய்மையான போராட்டமாக மாணவர்களின் போராட்டம் அமைந்திருக்கிறது. ஒன்றிணைந்த மாணவர் சக்தி பெரும் வெற்றிகளை குவித்திருக்கிறது என்பதே இதுவரை உலக வரலாறு. அதற்கு தமிழகமும் ஒரு சான்றாக விளங்குகிறது. இந்த மாணவர்களின் பட்டினிப்போராட்டமும், ஈழத்தில் நடந்தது போர் குற்றமல்ல, இனப்படுகொலை என்ற உண்மையான உன்னதமான குரலை ஓங்கி ஒலிக்கிறது. இந்த குரல் உலகத்தின் செவிப்பறைகளை கிழிக்கும். கொடுங்கோலன் ராஜபக்சேவை கூண்டில் நிறுத்தும். ஈழ உறவுகளுக்கு நீதி பெற்று தரும் என்பது தின்னம்.
உள்நோக்கமற்ற அறம் நிறைந்த மாணவர்களின் இந்த தூய்மையான போராட்டத்துக்கு எங்கள் செவ்வணக்கம்.’’ இவ்வாறு அந்த அறிக்கையில் சத்யராஜ், மணிவண்ணன் ஆகிய இருவரும் கூறியிருக்கிறார்கள்.

No comments:
Post a Comment