தீக்குளித்து பலியான மணியின் உடலுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து இன்று தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் மதியம் 12 மணியளவில் மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் ஈழத் தமிழர்கள் நலனுக்காகவும், ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கக் கோரியும் தனது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கடலூர் மணிக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஐ.நா. சபையில் கொண்டு வந்துள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்திதான் மணி தீக்குளித்து மடிந்துள்ளார். தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தியுள்ளன.
எனவே மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை ஆதரிக்க முன் வர வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் கடுமையான விளைவுகள் ஏற்படும்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இதுவரை மணியுடன் சேர்த்து மொத்தம் 21 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் 3 பேர் வெளிநாட்டு தமிழர்கள். இவர்கள் பிரிட்டன், பிரான்ஸ், மலேசியாவில் வசித்தவர்கள்.
எனவே இலங்கை பிரச்சினைக்காக தமிழ் இளைஞர்கள் யாரும் தீக்குளிக்க கூடாது. அனைவரும் ஒன்று பட்டு போராடி தமிழ் ஈழம் பெறுவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரம்பூர் தொகுதி எம்.எ.ல்.ஏ. சவுந்தர்ராஜன், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செய லாளர்கள் ஜீவன், வேளச் சேரி மணிமாறன், நாம் தமிழர் கட்சி சார்பில் வக்கீல் தடா சந்திரசேகர், அன்பு தென்னரசன், ஆவல் கணேசன், அமுதா நம்பி, கடலூர் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் கடல் தீபன் மற்றும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் உள்ளிட்டோரும் மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத் தினர்.
பின்னர் மதியம் 12.30 மணியளவில் மணியின் உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் தகனம் செய்யப்படுகிறது.
தீக்குளித்து பலியான மணிக்கு வைகோ, சீமான் ஆகியோர் இரங்கல் தெரி வித்துள்ளனர். வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்ப தாவது:-
“தமிழ் இனக்கொலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; தமிழ் ஈழம் தனி நாடாக வேண்டும்” என்று அறிவித்து மணி தன் உயிரை அர்ப்பணித்து உள்ளார். அவருக்கு எனது வீரவணக்கம்.
பேரிடி தலையில் விழுந்த நிலையில், கதறித் துடிக்கும் அவரது துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.
தமிழ் ஈழ விடியலுக்காக வாழ்ந்து போராட வேண்டிய இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:-
சிங்கள பேரினவாத அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், தமிழீழ நாட்டினை சர்வதேச சமூகம் அமைத்து தரக் கோரியும்,கடலூர் சுனாமி குடியிருப்பு கட்டிடப் பணிகளில் நடந்த முறை கேடுகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க கோரியும் தீக்குளித்த இல.மணி நாம் தமிழர் கட்சியின் கடலூர் பகுதி ஒன்றிய ஒருங்கிணைப் பாளராக களமாடியவர். எமது அமைப்பின் பெருமை மிக்க தளபதியாக விளங்கிய இல.மணியின் தீக்குளிப்பு என்னை முழுமையாக உருக்குலைத்து விட்டது.
நம் இனத்தை அழித்த சிங்கள பேரின வாத அரசினை தமிழ்த் தேசிய இனம் சினம் கொண்டு, வன்மம் சுமந்து உலகச் சமூகத்தின் முன் நிறுத்தி பழிதீர்த்துக் கள மாட வேண்டிய இக்காலக் கட்டத்தில் இல.மணியின் தீக்குளிப்பு தவிர்க்கபட்டி ருக்க வேண்டிய ஒன்றா கவே நான் கருது கிறேன். எம்மை ஆற்றொ ணாத் துயரி லும், கண்ணீரி லும் ஆழ்த்தி இருக்கிற இல மணியின் தீக்குளிப்பு போன்ற தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் செயல் களில் தமிழின இளைய சமூகம் ஒரு போதும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் அறிக்கை யில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment