Wednesday, March 27, 2013

ஏப்ரல் 1 முதல் ஆம்னி பஸ்களும் வேலை நிறுத்தம்

இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் லாரிகள், சுற்றுலா வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.




தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.அப்சல், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளுக்கு ஒன் இன்டியா, ஒன் பெர்மிட் என்ற முறை உள்ளது. ஆனால், ஆம்னி பஸ்களுக்கு அவ்வாறு வழங்குவதில்லை, இதனால் ஆம்னி பஸ்களுக்கு பெர்மிட் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டியுள்ளது. அதேபோல் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் ஒவ்வொரு விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தத் தொகை அதிகரிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.



எங்களது கோரிக்கை தொடர்பாக அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி) அமைப்பினர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசும் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகக் கூறி வருகிறது. இதில் உடன்பாடு ஏற்படவில்லையென்றால், ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை ஒரு லட்சம் சுற்றுலா கார்கள், ஆயிரம் ஆம்னி பஸ்கள் மற்றும் லாரிகளும் நிறுத்தப்படுகின்றன என்றார் அவர்.

.

No comments: