காரியாபட்டி, ஜன. 22-
அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக காரியாபட்டி ஒன்றியத்தில் மாங்குளம், கள்ளங்குளம், ஆலங்குளம், இலுப்பைகுளம், சூரனூர், மறைக்குளம், கரிசல் குளம், கிழவனேரி, சத்திரம் புளியங்குளம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றுவிழா நடை பெற்றது. கட்சி நிறுவனர் பி.டி.அரசக்குமார் கொடி ஏற்றி வைத்து பேசினார்.
காரியாபட்டியில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில அவைத்தலைவர் ராசபாண்டியன் தலைமை வகித்தார். பி.டி.அரசக்குமார் பேசியதாவது:- தென் மாவட்டங்களில் ஏற்படும் ஜாதிக் கலவரங் களுக்கு காரணமாக இருப்பது இப்பகுதியில் போதிய வேலை வாய்ப்பு இல்லாமைதான்.
அதனால் மத்திய, மாநில அரசு தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற் படுத்த வேண்டும். மேலும் வன்கொடுமை சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து முறையாக சட்டத்தை பயன்படுத்த காவல் துறை யினருக்கு உத்தரவிட வேண்டும்.
மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும். மதுரையை தலைமையிட மாக கொண்டு மதுரை துணை தலைமை செயலகம் அமைக்க வேண்டும். மதுக் கடைகளால் ஏராளமான இளைஞர் சமுதாயம் பாதிக்கப்படுகின்றனர்.
மதுரைக்கடை வேலை நேரத்தை குறைக்கவும், விடுமுறை நாட்களில் கடையை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார். கூட்டத்தில் மாநில பொருளாளர் கருப்பையா, மாவட்ட தலைவர் துர்க்கை பாண்டியன், வீரையா, சரவணன், முத்துவேல், சூரனூர் சக்திவேல், சுரேஷ், மகளிர் அணி தலைவி இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment