முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும். தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை பெருக்கும் வகையில் பன்னாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அத்துடன் மதுரையில் துணை தலைமை செயலகம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் பி.டி.அரசகுமார்.
இவரது கட்சிக்கு இதுவரை இருந்து வந்த பெயர் திராவிட விழிப்புணர்வுக் கட்சி. இப்போது அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி என்று பெயரை மாற்றி விட்டனர்.
அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. அப்போது அக் கட்சியின் தலைவர் பி.டி. அரசகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது
எங்கள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம் மாவட்டம் தோறும் நடந்து வருகிறது.
வரும் பிப்ரவரி 16 ம் தேதி மதுரையில் தேவர் இன உரிமை பாதுகாப்பு பேரணி மற்றும் கோரிக்கை வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடைபெறும். இதில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் .
நாங்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் திராவிட விழிப்புணர்வு கட்சி என்ற பெயரில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து 5 இடங்களில் போட்டியிட்டோம். அப்போது போட்டியிட்டோம்.
தற்போது அதை அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் கட்சி என்று பெயர் மாற்றம் செய்துள்ளோம். எங்கள் கட்சியில் 5 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
தென் மாவட்டங்களில் கிராமங்களில் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தேவர் இனமக்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்.
முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும். இது குறித்து முதல்வர் கருணாநிதி பரிசீலனை செய்யப்படும் என்றார்.
அதே போன்று, திருமங்கலம் இடைதேர்தலின் போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கோரிக்கை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். ஆனால் இது வரை நிறைவேற்றப்படவில்லை.
தேவர் இன மக்களின் கோரிக்கைளை ஏற்க உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்போம்.
தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை பெருக்கும் வகையில் பன்னாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அத்துடன் மதுரையில் துணை தலைமை செயலகம் அமைக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment