தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஆகிய இடங்களில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு விழா தொன்று தொட்டு நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அவனியாபுரத்தில் தான் முதன்முதலாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறும்.
அதன்படி வருகிற தைப் பொங்கல் தினத்தன்று (14-ந்தேதி) காலை 10 மணி அளவில் அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இதில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்பட சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்கின்றன. உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தலைமை தாங்குகிறார். மேயர் ராஜன் செல்லப்பா, ஆணையாளர் நந்தகோபால் மற்றும் காவல்துறை உயர் அதிகாரி கள் முன்னிலை வகிக்கின்றனர். இந்த விழாவில் தி.மு.க. பிரமுகர் எஸ்.ஆர்.கோபி, காவேரிசொக்கலிங்கம், கவுன்சிலர் முனியாண்டி, வாசுதேவன், ஜெயபாலன், சேதுராமச்சந்திரன், வக்கீல் ஸ்ரீதர், விழா கமிட்டி யாளர்கள் கண்ணன், சோலைமலைபிள்ளை, மாயாண்டி, பெரியசாமி, ராமசாமி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர் களுக்கு தங்கக்காசுகள், கிரைண்டர், மிக்சி, சைக்கிள், உள்பட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment