அரசு விடுதியில் மாணவர்கள் சேர்ப்பு பிரச்சினை குறித்து, பசும்பொன் தேவர் கல்லூரி மாணவர்கள், இன்று( வியாழக்கிழமை) மாலையில் திடீர் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-கோட்டைமேட்டில் பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்காக அரசு விடுதி துவங்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 88 மாணவர்கள் வரையிலும் சேர்த்துக் கொள்ள அனுமதி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு விடுதியி்ல் புதிதாக சேர்க்கப்ட்டுள்ள வெளியூர் மாணவர்களில் சிலருக்கு இடம் கிடைக்கவில்லையா ம். அதே சம்யம் உள்ளூர் மற்றும் மிகவும் பக்கத்து ஊர்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளதாம். எனவே விடுதியி்ல் இடம் கிடைக்காத வெளியூரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் திரண்டு வந்து, கோட்டைமேட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, மூன்று சாலைகள் சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் போராட்டம் குறித்து தகவல் கிடைத்த உடனே கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன், வட்டாட்சியர் சி.இந்திர வள்ளி, காவல் ஆய்வாளர் ஆனந்தன், சார்பு ஆய்வாளர்கள் ஜான்சி ராணி, அப்துல்லா ஆகியோர் போலீஸாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கல்லூரி விடுதி வார்டன்(பொறுப்பு) ராமமூர்த்தி என்பவரை அதிகாரிகள் அழைத்து, விடுதி மாணவர்கள் சேர்ப்பு விவரங்கள் குறித்து விசாரித்தனர். விடுதியில் தற்போது மேலும் 10 வெளியூர் மாணவர்களைச் சேர்க்கலாம் என்று வார்டன் ராமமூர்த்தி தகவல் தெரிவித்தார். இதன் பின்பு மாணவர்களிடம் உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், வட்டாட்சியர் இந்திர வள்ளி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி விடுதியில் 10 வெளியூர் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment