சிவகங்கையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மூ.மு.க மாநிலப் பொருளாளர் எஸ்ஆர். தேவர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முத்துச்சாமி, பழனிக்குமார், ஏனாதிமுருகன், பிள்ளையார்பட்டி சுப. வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் எம். போஸ் வரவேற்றார். மூ.மு.க. நிறுவனர் தலைவர் டாக்டர் என். சேதுராமன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். இசக்கிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர் மா.குருசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் கேசி. கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர் கருப்பையா மற்றும் நிர்வாகி கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெ டுப்பு குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றி அறிவிக்கவேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன்தேவர் பெயரை சூட்ட வேண்டும், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றித்óதர மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
வரும் டிசம்பர் 25-ம் தேதி வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு நாளை முப்பெரும் விழாவாக சிவகங்கையில் கொண்டாடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment