Thursday, August 13, 2015

வல்லபர் நாட்டார் வரலாறு:


நமது சுற்று வட்டாரங்களைச் சுற்றி இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள
கல்வெட்டுகள் மற்றும் அதில் உள்ள தகவல்கள்:

அதில் இன்றும் நம் வல்லம்பர் நாட்டாரில் பயன்படுத்தி வரும் குலப்பட்டங்கள் சில பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

நம் வல்லம்பர் நாட்டாரில் உள்ள பல குடும்பங்களின் குலதெய்வங்கள் யார்? அனைத்திதற்கும் பதில் இந்த பதிவில் இருக்கின்றது.
இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

நம் வரலாறு மற்றும் நாம் யார் என்பதனை வெளி கொண்டு வர.....
படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.

பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்றுகல்வெட்டுகள்

விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),
மலையாலங்குடி க.என்(402,403),
பெருங்குடி க.என்(364,712).
இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).
படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).
இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிறது.
புதுக்கோட்டை கல்வெட்டுகளில் கானப்படும் கல்வெட்டுகளில் படைப்பற்றுகளை பாண்டிய நாட்டு எல்லைக்கு உட்பட்ட படைப்பற்று என்றும் சோழ நாட்டு படைப்பற்று என்றும் இருவகை படுத்தலாம்.

‪#‎பாண்டியர்_எல்லை_படைப்பற்று‬:
1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
‪#‎சோழர்_எல்லை_படைப்பற்று‬:
1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
‪#‎சோழகோன்‬,‪#‎நரசிங்கதேவர்‬,‪#‎பல்லவராயர்‬,‪#‎கோனாட்டு_பேரரையர்‬,‪#‎ஆவுடையார்‬,‪#‎பஞ்சவராயர்‬
I.P.S.21.புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் மேலப்பனையூர் ஞானபுரீஸ்வரர் கோவில் மகாமண்டபத்தில் கீழை படிக்கட்டில் தெற்கில் உள்ள கல்வெட்டு
“பனையூர் மறவரில் வளத்து வாழ்வித்தான் ஆன தெள்ளியர் உள்ளிட்டாரும்,நரசிங்கத்தேவர்,பஞ்சவராயர்,பல்லவராயர் உள்ளிட்டாரும் வத்தாயரானை திருமேனியர் அடைக்கலங்காத்தன் உள்ளிட்டாரும் ஆக இந்ததாலுவகை பேரரையரயர் மேற்படியூர் மறவரில் சோழகோன் ஆன கோனாட்டு பேரரையர் உள்ளிடாரும் ஆவுடையான் ஆன வகைப்பேரும் உள்ளிட்டாரு மோம் நம்மில் இசைந்த பிரமானம் பன்னிக் கொண்டபடி செம்மயிர் விரோதம் இரண்டு வகையில் அழிவில்….உண்டான……..”
நரசிங்கத்தேவன் இந்த பகுதியில் உள்ள ஒரு குறுநிலை மன்னன் கட்டலூர் பகுதியை ஆண்ட மறவர் குலத்தை சார்ந்தவன் என விராலிமலை கல்வெட்டு கூறுகின்றது.
‪#‎அடைக்கலம்_காத்தனான‬ நரசிங்கதேவன்” என நாயக்கர் காலம் வரை ஆண்டுள்ளார்.
மேற்படியூர் மேற்படி கோவில்
மேற்படி மண்டபத்தில் கிழக்கு வரிசை உத்திரத்திலுள்ள கி.பி. நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு
“இந்த உத்திரம் இவ்வூரில் மறவரில் காத்தரான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டாரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைய திருமேனியரான ஆவுடையார் தன்மம்” என்று கூறுகின்றது.
மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் நுழைவு
‪#‎மறவனான_வேளான்_அனுக்க_பேரரையன்‬:
மறவனுக்குப் பேரரயனாயின ‪#‎கடம்பன்‬ வேளான் வரகுணன் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.
திருத்தாரிப் படாரக்கு ந விளக்கெரிப்பதர்க்காக
நிறைகுறையாப் பழங்காசு பதினைந்து கொடுத்திருக்கின்றார்.
இக்காசிலிருந்து வரும் வட்டியை கொண்டு நந்தா விளக்கெரிக்க ஏற்பாடு செய்து ஒரு நிலைவிளக்கும் கொடுத்துள்ளார்.இவரே பள்ளி தாமத்துக்காக நிறைகுறையாப் பழங்காசு பதினைந்து கொடுத்துள்ளார்.
"இருவிரல் அகலத்து இரண்டிரண்டு நறும்பூ இட்டுத் தொடுத்தன,இரு முழ நீளத்தன,ஒரேவடமாக
நியதி பதினைந்து விடம் இடுவதாகத் திருப்பத்தூர் சபையரிடத்தில் உடன் படிக்கை செய்து கொண்டார்.(137-1908)
‪#‎கிழவன்‬:
I.P.S(53) மேற்படி கிராமம் சிகாநாத சுவாமி கோவில் இரண்டாம் பிரகாரம் தென்சுவரில் சாசனம் ஸ்வஸ்தி ஒல்லையூர் கூற்றத்து நெருஞ்சிக்குடி கோப்பரகேசரி பன்மருக்கு யாண்டு 10வது இவ்வூர்களுக்கு என்னை திருநலக்குன்றத்து மகாதேவர் பண்டாரத்துக்கு இரு பொன் கழஞ்சு மேற்படியூர் கலந்துது ……………. பொன் கழஞ்சும் மேற்படியூர் கிழவன் மறவன் இரு நாழி நெய் ஆட்டங்கொண்ட……..
‪#‎வையன்_சொக்கனார்‬:
காலம்:முதலாம் இரசராசன்(கி.பி.10 ஆம்நூற்றாண்டு) 5.வது ஆண்டு
I.P.S.(93) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் தென்புரம் சுவரில் உள்ள சாசனம் செல்வியும் காந்தளூர் சாலை காலமறுத்தருளி……………ராஜராஜ கேசரி கேரளாந்தக வளநாட்டு……சிற்றையூர் இருக்கும் பனையூர் மறவன் சொக்கனார்.
………………….
பனையூர் சிவன் கோவில் கல்வெட்டு.
‪#‎சாமந்தர்‬:
“போரில் வென்று மாலையிட்டானான சாமந்தர் கருத்தாண்டானான மறவனான………
பாண்டியனின் மறவர் படையை வென்ற குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தி:
I.P.S.(163) திருமையம் சேரலூர் வம்சோத்தூரர் கோவில் கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்………. வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு காஞ்சி தரித் தென்மதுரை புறம் நினைத்தரு நெடும்படை….
குடுமியான்மலை சிகாநாதர் சுவாமி கோவிலில் உள்ள இரண்டாம் பிராகரத்து சுவரில் I.P.S(166)ஸ்வஸ்தி ஸ்ரீ புயல் வாழ்த்து மணவாளர் புலியானையும் சக்கரம்………… வென்னிலக்கொடி படைவீரர் புன்னரில் புக்கிழந்து தாக்கி விருதர் மூக்கிழந்து முகமழிய மறப்படையுடன் ஏழகப்படை சிறைப்பட்டு
‪#‎சத்ருகேசரி‬:
காலம்:இரண்டாம் குலோத்துங்கன் 10-வது ஆண்டு.
I.P.S.(218) திருமையம் தாலுகா பேரையூர் நாகநாத சுவாமி கோவிலில் முன்பாக பாறையிலுள்ள சாசனம்: ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜகேசரி…சோழத்தேவர்க்கு யாண்டு 15ஆம்…………..ஸ்வரமுடைய மகாதேவருக்கு மறவரில் பெற்றான் குவான் சத்ருகேசரி பேரரையனை இரா………….
ஒல்லையூர் மதுரை மறவர்கள்:
காலம்:12 ஆம் ஆண்டு.
I.P.S.(309)திருமையம் தாலுகா இடையாத்தூர் சுயம் பிரகாசமூர்த்தி கோவிலில் சுவாமி கோவிலில் வடபுரம் ஸ்வஸ்தி கோமாற பன்மறான திரிபுபுவன சக்கரவர்த்தி சோனாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து விஜாபிசேகம் பன்னியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு ……………….. …………திசகண்ட தேவர்க்கு இக்கூற்றத்து ஒல்லையூர் மதுரை மறவரோம். ஊராயிசைந்த நாங்கள் விலைபிரமானம்.…………………………….
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
I.P.S.(346)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்.
‪#‎நம்பி_ஐநூற்றுவ_பெரியான்‬:
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….குடுத்த பரிசாவது….. முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்…………… இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்…………………………
‪#‎மாத்தன்_மக்கள்‬,‪#‎உய்யவந்த_தேவர்‬:
I.P.S.(421)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்………………….இப்படிக்கு இவ்வூர் மறவன் நாராயன உய்யவந்த தேவர் தற்குறியும் இவ்வூர் மறவன் மாத்தன் மக்கனாயன் தற்குறியும்....இப்படிக்கு ஐநூற்றுவ பேரரையன் தற்குரியும்….
‪#‎பொன்னம்பலம்_கட்டிய_நயினான்‬:
I.P.S.(501) திருமையம் தாலுகா சித்தூர் திருப்பூமிஸ்வரர் கோவிலில் வடபுறம் சுவரில் உள்ள சாசனம்
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியத்தேவர்க்கு யாண்டு 3வது………..இந்நாயனார் கோவில் கெற்பகிரகம் இசைபித்தன் இவ்வூர் மறவரில் கோவனூர் கூட்டத்து பொன்னம்பல கட்டியாங்கன் தன்மம்……….
I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு ………….விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டியங்கானுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச……..
‪#‎நாடாள்வான்_விஜயாலயத்தேவன்ஆதளையூர்‬ ‪#‎நாடாள்வான்_பொன்னனான_விஜாயலயத்தேவர்‬ கி.பி(1219):
I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு…….திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் ‪#‎மாங்குடி_மறவன்_அவையன்_சாத்தன்‬ நாட்டானான அதளையூர் நாட்டுப்பேரரையன்……………………….
I.P.S(527) செம்பாடூர் திருவாருடையார் திருக்கோவில் கீழ்புரம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்……………………..உப்பமுதும் மிளகமுதும்…….மறவன் வயக்காலும்…. …….மறவன் வயக்கால் கினற்றின் பாதியும்…………………
‪#‎பெருங்குடி_மறவராயர்கள்‬:(கி.பி 1270):
I.P.S.(554) ஆலங்குள தாலுகா திருவரங்குள உறதிஸ்வரர் கோவிலில் சுவாமி கோவிலில் சுவாமி முன் மண்டபத்து தென்புறம் சுவரில்
ஸ்வஸ்திக் ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலசேகரத் தேவருக்கு யாண்டு இரண்டாவது கானாட்டு பெருன் கரைக்குடியான திருவரங்குள நல்லூர் ஊராயிசைந்த ஊரோம் நாங்கள் பெருங்குடி மறவரையர்கள் பக்கல் விலையும் ஒற்றியுங்கொண்டுடைய…………
‪#‎நாட்டரசு_கொண்ட‬ (அரையர், பேரையர்,நாட்டார்)‪#‎நாடாள்வார்கள்‬(அரசு உயர் அதிகாரியான மறவர்கள்)
I.P.S.(395)
படைப்பற்று குடியிருப்பின் அரையர்களே ஊரவையராக செயல்பட்டனர்.கீழக்குருந்தன்பிறை,மேலக்குருந்தன்பிறை ஆகிய ஊர்களில் மறவர்களே குடியிருப்புகளில் அரையர்களே மாறன் சுந்தர பாண்டியனின் ஆதனூர் கல்வெட்டில் குறிப்பிடபடுகின்றனர்.அரையர்களின் பெரியானான அரசு மிகா நாடாள்வான்,கேரளன் கன்னிறைந்தனான அங்கராயன்,பெருமாள் அரசனான வென்றுமுடிகொண்ட நாடாள்வான் ஆகியோரும்,மேலக்குருந்தன் பிறை ஊரசைந்த சோண்டனான இலங்கேஸ்வர நாடாள்வான்,அரசன் கண்ணிறைந்தனான இராசசிங்க நாடாள்வான்,காளையக்காள நாடாள்வான் தேவன் வில்லியான நாடாள்வான் இவர்கள் அனைவரும் படைப்பற்றின் அரையர்களாக ஆதனூர் சிவன் கோயிலில் காரான் கிழமைக்கு நிலம் வழங்கியதாக கொடை விளங்குகிறது. மறவர்கள் இப்பகுதியில் படைபற்றுஅம்பலம்,ஊரவையர்,நாடாள்வார்,அரையர்,பேரரையர்,நாட்டரசு கட்டியவர்களாக கல்வெட்டுகளில் கானப்படுகின்றனர்.
I.P.S.(565) குளத்தூர் தாலுகா குடுமியான் மலை மேலிருக்கும் பாலசுப்பிரமனிசுவாமி கோவில் தென்புறம் கல்வெட்டு
ஸ்வஸ்திக் ஸ்ரீ எம்மண்டலமும் கொண்டருளிய பெருமாள் ஸ்ரீ குலசேகரத்தேவருக்கு கடலைஅடையா இலங்கை கொண்ட சோழவளநாட்டு இரண்டு கரைனாட்டு நாட்டவரோம் இன்னாட்டு கடலூர் நாட்டு பனையூர் குளமங்கள அரையர்களுக்கு தரம் பன்னிக்கொடுத்து பரிசாவது இவர்களுக்கு நாட்டரசுகட்டி இவர்.…………..ஐங்கல வெல்லும் சிலந்திவனப்பெருமாள் பாதம்.....
I.P.S.(639) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேலச்சுவரில்
‪#‎மக்கள்_நாயன்‬:
ஸ்ரீ கோச்சடை பன்மறான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 34வது ஆண்டு………. இன்நாட்டு மடமையிலாப்பூர் மறவரில் மக்கள் நாயனுக்கு பிரமானம் பன்னி குடுத்த பரிசாவது…………………
I.P.S.(640) குளத்தூர் திருவேங்கை வாசல் வியாபுரீஸ்வரர் கோவில் மேற்படி சுவரில் ஸ்ரீ கோச்சடை பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சீவல்ல தேவர்க்கு யாண்டு 31வது ஆண்டு………….
……வேங்கைவாசல் உடைய நாயினார் கோயிலுக்கு………………………….சிகாரி……..இன்நாட்டு மக்கள் நாயன் மறவனா……………
I.P.S.(644)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
ஸ்வஸ்தி ஸ்ரீ சீவல்லவ தேவருக்கு யாண்டு 13ஆவது ஆண்டு ………….விரையாச்சிலை மறவரில் நயினான் பொன்னம்பலங் கட்டியங்கானுக்கு மேற்ப்டியூரில் அரசு மக்களில் இராசராச…….
I.P.S.(821)மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் வடபுறம் சுவரில்
‪#‎உடையான்_பாண்டவதூதன்‬,‪#‎சேரபாண்டிய_தேவர்‬,‪#‎வாண்டாயத்_தேவர்‬:
சுபஸ்மஸ்த சகாத்தம் 1405 இதல் மேல் செல்லா நின்ற கல்வாசல் நாட்டு நெல்வாசல் ஊராக அமைந்த ஊரவரோம் பூங்குன்ற நாட்டு வேலங்குடி மறவரில் உடையான் எப்போதும் மதியானான பாண்டவர் தூதனுக்கும் நல்லூர் உடையார் ஆன வேனாவுடையார் உலகனுக்கும் அழகன் உள்ளிட்டாருக்கும் சாத்தார் காத்தார் சேர பாண்டிய தேவர் உள்ளிட்டாருக்கும் அகத்தி ஆண்டார் காத்தாரான வாண்டாயத் தேவனுள்ளிட்டாருக்கும் இவ்வனைவருக்கும் பாடிகாவல் விலைப் பிறமானம் பன்னிக்கொடுத்தார் விசயாலத்தேவர் காலமாய்…………………….
I.P.S.888) குளத்தூர் தாலுகா பெருமாநாடு கிராமத்துக்கு அருகாமையில் ரஸ்தாவில் பக்கமாக நடப்பட்ட கல்லில் ‪#‎பகரவாளெடுத்த_வெற்றிமாலையிட்டான்‬,#வெத்திவாளெடுத்த_வெற்றிமாலையிட்டான்
வெற்றிமாலையிட்டன் கதை புறநாநூறில் வரும் தந்தையும்,கனவனையும்,மகனையும் இழந்த மறக்குடி மாதரின் பாடலான ஒக்கூர் மாசாத்தியார் பாடலை ஒத்தது.
சாலிவாகன கன சார்த்தம் 17 74 கலியுக ஸ்காத்தம் 4993………………… வயல கானாடு புல்வயலில் யிருக்கும் மறவரில் மொதலாவது பகரவாளெடுத்த மாலையிட்டான் அம்பலக்காரன் வெத்தி வாளெடுத்த வென்று மாலையிட்டன் பெரிய வெள்ளைதேவன் அம்பலக்காரன் தெண்காசிப் பாளையத்தில் பட்டவன் பூசை மாலையிட்டான் அம்பலக்காரன் போறத்துக் கோட்டையில் பட்டவன் மேல்படி மகன் உலகப்ப மாலையிட்டான் கீழாநெல்லி பாளையத்தின் பட்டவன் மகன் பழனின்றி மாலையிட்டான் மகன் துரைச்சாமி மாலையிட்டன் பன்னி வச்ச விநாயக……………..
மாராயன்-உசிதன் அரச கம்பீர மாராயன் புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா நெருஞ்சிக்குடி உதய மார்தாண்டர் கோவில் கருவரையில் மேற்கு வெளிப்புற சுவரில் வடக்கு பகுதியிலுள்ள கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனசக்கரவர்த்தி ராஜ ராஜ தேவர்க்கு யாண்டு சோழவள நாட்டு ஒல்லையூர் கூற்றத்தில் நெருஞ்சிக்குடி ஊரவரோம் புறமலை நாட்டு பொன்னமராவதி மறவன் உசிதன் இராச இராசனான அரசகம்பீர மாராயன் இவ்வூர் வயலில் நிலம் அரைமாவும் இல் வயக்கல் விலை கொண்டு இவ்வூர் மகாதேவர் உதயமார்த்தாண்ட ஈஸ்வரமுடையார்க்கு தேவதனமாக குடுத்தோம் அரசகெம்பீரன் ………………
#ஐநூற்றுவ_பேரரையன்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா விரையாச்சிலை தேவவயல் தென்னி வயலுக்கு பொதுவான ஆலமரத்து தெற்கு வரப்பிற்கு பகுதியிலுள்ள கல்வெட்டு.
ஸ்ரீ குலசேகர தேவர்க்கு ஸ்வஸ்தி ஸ்ரீ கல்வாயில் நாட்டு சுந்தர பாண்டிய புரத்து அரவத்துடைய பிள்ளை திருமாலிஞ்சோலை தாதர் சோதியர் மூவர்க்கு விரையாச்சிலை மறவன் நம்பி ஐநூற்றுவ பேரரையர் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்ட தேவர் குளமும்……………
#ஆசிரியம்_தீத்தார்_வெள்ளந்தாங்கிய_காடவராயன்_சித்திரகுப்பத்_தேவன்:
கி.பி.13 ஆம் நூற்றாண்டின்: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் புல்வயல் காந்துப்பட்டி வயலில் வாகடி குன்றின் தென்வரப்பிலுள்ள பலகை கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு கரந்தூர் வெள்ளந்தாங்கினான் குப்பன் கண்டன் வயகல் கினறும் செய் பாதியும் புல்வயல் மறவன் காடவராயன் மகன் சுந்தரபாண்டியனுக்கு ஆசிரியம்…………………………….
#துவாரபதி_பேரரையன்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா வாழைக்குறிச்சி பழைய சிவன் கோவிலில் தெற்கு சுவரில் வாசற்படிக்கு அருகில் உள்ள கல்வெட்டு.
ஸ்வஸ்தி ஸ்ரீ கூடலூர் நாட்டு பனையூர் மறவரில் பரமன் உய்யவந்த தேவனான துவராவதிப் பேரரையன் தன்மம்………
#ஆவுடையார்_குஞ்சரத்தன்:
திருமையம் தாலுகா கோனாட்டு நாயகி அம்மன் பழைய கோவிலில் இருந்த பிரித்து எடுக்கப்பட்ட தற்போதைய கோவிலுக்கும் போட்டுள்ள பலகை கல்லில்:
இந்த பக்கல் இவ்வூர் மறவரில் ஆவுடையார் குஞ்சரத்தன் தன்……………….
#எதிர்முனை_சினப்_பேரரையன்:
மேலப்பனையூர் சிவன் கோவிலில் சுவாமி அர்த்தமண்டபத்தில் வடக்கு சுவர் ஓரமுள்ள தின்னைக்கு மேலுள்ள கரை கல்வெட்டு:
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சந்தன பிரம்மனான எதிர்முனை சினப்பேரரையன் தன்மம்……………….
#எட்டி_பொன்னான_சுந்தரபாண்டிய_பேரரையன்:
மேற்படி கோவிலில் மண்டபத்தில் உள்ள நடுத்தூனில் உள்ள கல்வெட்டு.
இந்த தூன் இவ்வூர் மறவரில் எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன் தன்மம்
பரியேறு தேவன்மேற்படி கோவிலில் மண்டபத்தில் மேற்கு சுவர் இனைந்துள்ள கரை கல்வெட்டு
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் பரியேறு சேவுக தேவன் தன்மம்………..
மேற்படி கோவிலில் அர்த்த மண்டபத்தில் திருநிலைகாலில் உள்ள கல்வெட்டு
#ஆதனமான_சோழகோன்:
இந்த திருநிலைக் கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்……………
ஷை.. வாமி கோயிலில் மகாமண்டபத்தில் வாயிர்படிக்கு அருகிலுள்ள தூனின் மீது உள்ள பொதிகையில் உள்ள கல்வெட்டு:
#வல்ல_கண்ட_பேரரையன்:
இப் போதிகை இவ்வூர் மறவரில் #வல்லா_கண்டன்_பேரைரையன் தன்மம்………
மேற்படி கோவிலில் உள்ள தெற்கு வெளியில் உள்ள கரை கல்வெட்டு
இப்பாக்கலுள்ள இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டன் ஒற்றையில் வெட்டி தன்மம்………..
மேற்படி கோவிலில் உள்ள மண்டபம் தெற்கு படிக்கட்டுக்கு பக்கத்தில் உத்திர கல்வெட்டு
#வாள்வீசிக்காட்டினான்,#சோழசிங்கப்_பேரரையன்,#இரங்கல்_மீட்ட_மழவராயன்,#வளத்தான்:
இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் #அடைக்கலம்_காத்தாரான வாள்வீசி காட்டியான் தன்மம்………..
மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் நடுவரிசையில் கிழக்குத்தூன் மீது போடப்பட்டுள்ள உத்திரத்தில் உள்ள கல்வெட்டு
இந்த உத்திரம் மேற்படி குளமங்கலத்து மறவரில் அவையன் சோழ சிங்கப் பெரியான் உள்ளிட்டாரும் இரங்கல் மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதி மேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்………..
மேற்படி கோவிலில் உள்ள மண்டபத்தில் கிழக்கு வரிசைதூன் மீதுள்ள கஜலெட்சுமி சிலைக்கு இரு பக்கமும் உத்திரக் கல்வெட்டு
#தெள்ளியர்,#ஆவுடையார் #வென்றார்,#நரசிங்கதேவன்:
இந்த உத்திரம் இவ்வூர் மறவரில் காத்தனான தெள்ளியர் உள்ளிட்டாரும் திருமேனியரான நரசிங்க தேவன் உள்ளிட்டரும் ஆவுடையார் மூவர் உள்ளிட்டாரும் இளைதிருமேனியர் ஆவுடையார் உள்ளிட்டரும் இளைய திருமேனியர் ஆவுடையார் வென்றாரும் தன்மம்…….
குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் கரையில் உள்ள கல்வெட்டுக்கல் சில,
#திருவாண்டான்:
பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் வீரமுடி திருவாண்டான் சதா சேர்வை…………
குளமங்களம் சிவன் கோயிலில் மகாமண்டபத்தில் மற்றோர் கல்வெட்டு.
#மழவராய_சின்னதிருமேனியர்:
பனையூர் குளமங்கலத்திலிருக்கும் மறவரில் மழவராய சின்னதிருமேனியர் சதா சேர்வை…………மழவராயர் என்னும் பட்டம் தனக்கு மட்டுமே உள்ளது என்று புலம்பும் நபர்களுக்கு. இங்கு கானாடு,கோனாடு பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட கல்வெட்டில் மழவராயர் மறவர் என கூறப்பட்டுள்ளது.
மேற்படி மண்டபத்தில் மேற்கு சுவரில் வாசற்படிக்கு மேற்கிலுள்ள கல்வெட்டு
இந்த முதல் காற்படை ஒரு படையுட திருநிலை காவலுக்கு தெற்கு கொடிக்கு வடக்கு இவ்வூர் மறவரில் பரியேறு சேவுகன் தன்மம்………………………
மேற்படி தாலுகா மேலப்பனையூர் அகிலாண்டேஸ்வரி கோவில் முன்புள்ள கலங்காத கண்ட விநாயகர் கோவில் தூன் கால்:
இத திருநிலைக் கால் பனையூர் மறவரில் கண்டு போகா சித்திரகுப்பன் சாத்தன் சாத்தமகா தன்மம்………….
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் பொன்னமராவதி ராஜேந்திரசோழீஸ்வரர் கோவில் முகமண்டபத்தில் உள்ள கல்வெட்டு
#மீனாட்சி_கோத்திரம்_கொண்ட_மறவர்கள்:
சாலி வாகன சகாத்தம் 18 12க்கு மேல் செல்லா நின்ற விரோதி வருடம் மறமன்னறாகிய சேதுகாவலர் மீனாட்சிக் கோத்திரத்து பழனியப்ப அம்பலக்காரனுக்கு பொன்ன்மராவதி நகரத்தார்………………………
இவை அனைத்தும் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் அரசு கல்வெட்டு ஐ.பி.எஸ். என்று அங்கீரிக்கபட்டது.
இந்த கல்வெட்டுகளை பல ஆண்டுகளாக சேர்த்தவர் #திரு_இராசேந்திரன் அவர்கள் மேலைபனையூரில் ஆசிரியராக பனியாற்றி ஒய்வு பெற்றவர்.

THANKS :Kannan Thevar Sembiah



1 comment:

Information said...


மிகவும் அருமை