உசிலம்பட்டி கள்ளர் கல்வி
கழகத்தின் நிர்வாகக்குழு தேர்தல் வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அன்றுமாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல்
அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
உசிலம்பட்டி கள்ளர் கல்வி கழகத்துக்கு தலைவர், செயலர்,
பொருளாளர் மற்றும் 13 நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்கத்தின் பொதுக்குழு
உறுப்பினர்களால் ஓட்டுப்பதிவு முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
தலைவர் பதவிக்கு பி.கே.எம். செல்லக்கண்ணன்,
பி.சின்னிவீரன், எம்.ஜெபமணி, எஸ்.மாசாணம் மற்றும் கே.ஏ. முருகன் ஆகியோரும்,
செயலர் பதவிக்கு பி.பாலசுப்பிரமணியன், ஓ.சின்னசாமி, பி.கல்யாணசுந்தரம்,
பி.பாண்டியன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஓ.சந்திரன், ஏ.தேவராஜன்,
டி.மணிகண்டன், மஞ்சு கணேஷ், திலகர் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர்
பதவிக்கு 57 பேரும் போட்டியிடுகின்றனர்.
நவம்பர் 29-ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல்
மாலை 5 மணி வரை நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
தெடங்கும்.
வாக்களிக்க வரும் உறுப்பினர்கள் அவர்களின்
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வரவேண்டும். அடையாள அட்டை
இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்தலில் பிரச்னை ஏற்படுத்தும் உறுப்பினர்கள்
காவல்துறையினர் மூலம் வெளியேற்றப்படுவர். தலைவர், செயலர், பொருளர் பதவிக்கு
போட்டியிடும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டும்
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு
அனுமதிக்கப்படுவர்.
தேர்தலன்று கல்லூரி வளாகத்திற்குள் யாரும் பிரசாரத்திலோ
வாக்கு சேகரிப்பிலோ ஈடுபடக்கூடாது, என தேர்தல் அதிகாரி பத்மநாபன்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment