Tuesday, October 18, 2011

GUD ONE

Monday, October 17, 2011

கூடங்குளம் பாதுகாப்பு: அப்துல்கலாம் அறிவுரையை ஏற்க வேண்டும்; டாக்டர் சேதுராமன் கருத்து

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மக்களின் சந்தேகங்களுக்கு விரிவாக விளக்கம் தர அப்துல்கலாம் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. அப்துல்கலாம் அணுசக்தி துறையில் நீண்ட காலம் அணுபவமிக்கவர். மக்கள் மீது அதிக அன்பு கொண்டவர். அப்துல்கலாம் அறிவுரையை ஏற்று கூடங்குளம் அணுமின்நிலையம் செயல் பாட்டை அரசு தீர்மானிக்க வேண்டும். அரசு அவரின் அறிவுரையை ஏற்பதைப் போல, இடிந்த கரை பகுதி போராட்டக்குழு வினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு: சோ.அய்யர் பேட்டி

சென்னை மாநகராட்சி 137-வது வார்டுக்கு உட்பட்ட நெசப்பாக்கம் ஏரிக்கரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் இன்று ஓட்டு போட்டார்.

பின்னர் அவர் பேட்டி அளித்தபோது, சட்டம் ஒழுங்கை பொறுத்த வரையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலைப் போல் இல்லாமல், இந்த உள்ளாட்சி தேர்தல் எந்தவித சலனமும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது.

வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்கு எண்ணும் அனைத்து மையங்களிலும் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறினார்.


NOTE : சோ.அய்யர் BELONGS TO MUKKULATHOR CASTE

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டு போட முடியாமல் நடிகர் செந்தில் ஏமாற்றம்

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வந்த நகைச்சுவை நடிகர் செந்தில் வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. இன்று காலை இவர் ஓட்டுப் போடுவதற்காக மனைவி மகன்களுடன் சாலிகிராமம் காவேரி பள்ளி கூடத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்றார். வாக்காளர் அடையாள அட்டையையும் கொண்டு சென்று இருந்தார்.

ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது பெயரோ, குடும்பத்தினர் பெயரோ இல்லை. இதனால் செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்காளர் பட்டியல் புத்தகம் முழுக்க அலசி தேடிப்பார்த்தார்கள். ஆனால் பெயர் இல்லை. ஒரு வேளை பக்கத்து வாக்கு சாவடியில் பெயர் இருக்கும் என அதிகாரிகள் கூறினார்கள். இதனால் செந்தில் பாரதிதாசன் தெரு வாக்கு சாவடிக்கு சென்று பார்த்தார். அங்கும் அவரது பெயர் இல்லை.

2 மணிநேர அலைக்கழிப்புக்கு பிறகு நடிகர் செந்தில் ஓட்டுபோட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். இதுபற்றி நடிகர் செந்தில் கூறியதாவது:-

நான் முதல்-அமைச்சர் அம்மாவின் தீவிர விசுவாசி. அ.தி.மு.க.வுக்காக தேர்தலில் பிரசாரம் செய்து வருகிறேன். இப்போதும் தாம்பரத்தில் பிரசாரத்துக்காக செல்கிறேன். பிரசாரத்துக்கு முன்பு ஓட்டு போட்டு விட்டு செல்ல வந்தேன். ஆனால் எனது பெயர் இல்லை. இது எனக்கு வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது எனது பெயரை வேண்டுமென்றே நீக்கி உள்ளனர். எனது குடும்பத்தின் 5 ஓட்டுகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போய் விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Steps for Thevar Jayanthi reviewed

District Collector U. Sagayam has appealed to the volunteers participating in the Thevar Jayanthi to follow the instructions on the routes to be taken by the different outfits and among others which would ensure the events passed off peacefully on October 30.

Bursting crackers during the procession is banned. The rally followed by public meetings on the occasion should be wound up by 10 p.m.

All the four-wheelers participating in the events would be permitted only when the roof-top carriers are removed. The volunteers should stop their vehicles at check-posts while entering the city. The timings specified for each group shall be strictly adhered to by the leaders. Any let up in it should be avoided. All sensitive locations have been identified and it would be given adequate strength, the police officers told the meeting.

No padayatra

While the officials have made it clear that permission would not be given to any outfit to take out a padayatra from the city to Pasumpon village, vehicles too would have to follow the routes earmarked by the authorities. From Madurai, they shall take Silaiman, Manamadurai, Parthibanoor, Abiramam. In the return direction, they may take Kamudhi, Kannarpatti junction, Keezhamaramathupatti, Mandapa salai, Aruppukottai, Kariapatti, Ring Road and enter city.

It had been decided to deploy more number of police in colonies where adi-dravidars resided. Similarly, a kind of visible police presence at all vantage locations would instil confidence among the common man.

Recovery vehicles and fire tenders would be positioned throughout the event as a precautionary measure.

தி.மு.க. கோஷ்டி மோதலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ரித்தீஷ் எம்.பி.-சுப.தங்கவேலன் உள்பட 100 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் நகரசபை தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் நாகநாதசேதுபதி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் எம்.எல்.ஏ., ரித்தீஷ் எம்.பி. ஆகியோர் தி.மு.க.வினருடன் அண்ணாநகர் பகுதியில் வாக்குகள் சேகரித்தனர். அப்போது அங்கு நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ஜி.ரத்தினமும் தி.மு.க. வினருடன் வந்தார். அவர்களுக்குள் திடீர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் அது கோஷ்டி மோதலாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கல் மற்றும் சோடா பாட்டிலால் தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் ஆர்.ஜி. ரத்தினத்தின் தங்கை கலாராணி, சரவணன் ஆகியோரும் ரித்தீஷ் எம்.பி.யின் ஆதரவாளர் 8-வது வார்டு கிளை செயலாளர் செல்லப்பாண்டியனும் காயம் அடைந்தனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு மாலையில் ரித்தீஷ் எம்.பி., முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனுடன் ராமநாதபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தேர்தல் பணி குறித்து பேசி கொண்டு இருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டை ரித்தீஷ் எம்.பி. வீட்டில் வீசினர். மேலும் சோடாபாட்டில், கற்களை வீசினர். ரித்தீஷ் எம்.பி.யின் தந்தை குழந்தைவேலுவின் கார் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சாயல்குடி தி.மு.க. பிரமுகர் ராமர் ஆகியோரின் கார்கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு- பதட்டம் ஏற்பட்டது. மோதல் தொடர்பாக காயம் அடந்த ஆர்.ஜி. ரத்தினத்தின் தங்கை கலாராணி ராமநாதபுரம் பி-1 போலீசில் புகார் செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், ரித்தீஷ் எம்.பி., கார்மேகம், நகரசபை தி.மு.க. வேட்பாளர் நாக நாதசேதுபதி, தி.மு.க. துணை செயலாளர் அகமது தம்பு, அழகிரி உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரித்தீஷ் எம்.பி.யின் ஆதரவாளர் செல்லப்பாண்டியன், கொடுத்த புகாரின்பேரில் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.ஜி.ரத்தினம், மருமகன் திலீப்குமார், சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலில் மொத்தம் 100 பேர் மீது இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்- இன்ஸ்பெக்டர் தினகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அமெரிக்க கோர்ட்டு உத்தரவால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு புதிய நெருக்கடி

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் முப்படைகளின் தலைவர் என்ற முறையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

ஆனால், இந்த கோர்ட்டுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் சம்மனை பெற்றுக்கொள்ளாமல், இலங்கையின் அதிபர் மாளிகை அலுவலகம் திருப்பி அனுப்பி வந்தது.

இந்த நிலையில், இலங்கையில் இருந்து வெளிவரும் இரண்டு முன்னணி பத்திரிகைகளிலும், `தமிழ்நெட்' இணைய தளத்திலும் அந்த சம்மன் பற்றி முதல் பக்கத்தில் பிரசுரிக்க உத்தரவிட வேண்டும் என்று, கொலம்பியா கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழர்கள் சார்பில் ஆஜராகும் வக்கீல் புரூஸ் பெயின் யோசனைப்படி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை நீதிபதி கோ டெல்லி பிறப்பித்தார்.

அதன்படி இலங்கையில் இருந்து வெளியாகும் இரு பத்திரிகைகளிலும், இணைய தளத்திலும் சம்மன் பற்றிய விவரங்கள் பிரசுரிக்கப்பட்டு உள்ளன. இதனால், இதுவரை சம்மனை புறக்கணித்து வந்த ராஜபக்சேவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

Mukkulathor Muzhakkam

Mukkulathor Muzhakkam, an album, was released by politician Subramania Swamy on 13th October, 2011 at the Thevar Arangam, T Nagar in Chennai. Kalaipuli S Dhanu received the first copy from him.



Karunaas has done the voice over for this album which is about Muthuramalinga Thevar and Mukkulathor Samugam. Professor Kavya Shanmugam has penned the lyrics.

Bala’s choice is a novel

Bala’s next film is based on a Malayalam novel, say our sources in Kollywood. The ace director is looking to direct a family drama this time and has already zeroed in on late actor Murali’s son Adharva.

This Malayalam novel that Bala is said to be eyeing has been translated in Tamil and the director wants to make a script out of it. He is now said to be working on recruiting the other cast and crew for this venture. An announcement from Bala’s side will be made very soon, adds our source.