இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு கோர்ட்டுகளில் முப்படைகளின் தலைவர் என்ற முறையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
ஆனால், இந்த கோர்ட்டுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் சம்மனை பெற்றுக்கொள்ளாமல், இலங்கையின் அதிபர் மாளிகை அலுவலகம் திருப்பி அனுப்பி வந்தது.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து வெளிவரும் இரண்டு முன்னணி பத்திரிகைகளிலும், `தமிழ்நெட்' இணைய தளத்திலும் அந்த சம்மன் பற்றி முதல் பக்கத்தில் பிரசுரிக்க உத்தரவிட வேண்டும் என்று, கொலம்பியா கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தமிழர்கள் சார்பில் ஆஜராகும் வக்கீல் புரூஸ் பெயின் யோசனைப்படி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை நீதிபதி கோ டெல்லி பிறப்பித்தார்.
அதன்படி இலங்கையில் இருந்து வெளியாகும் இரு பத்திரிகைகளிலும், இணைய தளத்திலும் சம்மன் பற்றிய விவரங்கள் பிரசுரிக்கப்பட்டு உள்ளன. இதனால், இதுவரை சம்மனை புறக்கணித்து வந்த ராஜபக்சேவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment