சென்னை; தமிழ் ஊடக உலகின் சக்ரவர்த்தியாக விளங்கும் தினத்தந்தி என்டிடிவி தொலைகாட்சியுடன் கைகோர்த்து களம் இறங்கி உள்ளது.
சன்குழுமத்தில் இருந்து தினகரன் நாளிதழ் வாங்கப்பட்டபொழுதே ஊடக உலகில் பல அதர்ச்சி அலைகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. தொலைகாட்சி ஊடகமானது அச்சு ஊடகத்தை வாங்கலாமா? என்றும், ஊடக ஆதிக்கம் அதிகரிக்குமே என்ற கேள்விகளும் எழத்தொடங்கியது.
நீண்டநாட்களாக சர்ச்சைகள் நீடித்து வந்தது. சன்குழுமத்துக்கும்-தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பத்துக்கும் பிரச்னைகள் எழுந்தபோது தினந்தந்தி குழுமம் பெரும் மகிழ்ச்சியில் திளைத்த்து என்னவோ உண்மை.
அப்போதே தினந்த ந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தனுக்கு ஒரு தொலைகாட்சி ஊடகம் தொடங்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. ஆனால் அதற்கான உரிமம் தரும் இடத்தில் தி.மு.க. அமைச்சர்களே அங்கம் வகித்ததால் அவரது கனவு நனவாகவில்லை.
இந்நிலையில் அ.தி.மு.க. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் அண்மையில் முதல்வர் ஜெயல லிதாவை சந்தித்த தினந்த ந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் சந்தித்துப்பேசினார்.
தான் என்.டி.டி.வி, ஊடகத்துடன் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளும் கட்சிக்கு ஆதரவு என்ற நிலை தொடரும் என்றும் உறுதி அளித்தார். ஆட்சியாளர்கள் தரப்பிலும் ஆதரவு குறித்த ஆசி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த ஒருமாதமாகவே என்டிடிவி-ஹிண்டு தொலைகாட்சியை வாங்குவதற்கான முயற்சிகளில் சிவந்தி ஆதித்தன் ஈடுபட்டார். இந்த பேச்சு தொடங்கிய போதே என்டிடிவியின் பங்குகள் சந்தையில் மளமளவென உயரத்தொடங்கியது.
இந்நிலையில் புதுடெல்லி டெலிவிஷன் லிமிடெட் (என்டிடிவி) மற்றும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் (தி ஹிண்டு) ஆகியோரின் இணை நிறுவனமான மெட்ரோநேஷன் சென்னை டெலிவிஷன் லிமிட்டெட் நிறுவனத்தை தினந்த ந்தியின் நிறுவனமான கல்வி அறக்கட்டளை கம்பெனி பிரைவேட் லிமிடெட்ட் நிறுவனத்துக்கு ரூ.15 கோடிக்கு விற்பனை செய்வதாக கடந்த 6-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ரூ.10 கோடி செலவில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் நஷ்டத்தை நோக்கி சென்றதால் இதனை விற்க நேர்ந்த தாக என்டிடிவி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விற்பனை குறித்து மும்பை பங்கு சந்தையிலும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதம் கழித்து அதாவது பொங்கல் முதல் தினந்தந்தியின் ஊடகம் ஒளிபரப்பை தொடங்கும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment